தற்போது நாம் பயன்படுத்துவதை விட சிறந்த ஐந்து லினக்ஸின் கோப்பு மேலாளர்கள்

தற்போது சந்தையில் ஏராளமான வகையில் கோப்பு மேலாளர் பயன்பாடுகள் உள்ளன ஆனால் எந்தவொரு சிறந்த பயன்பாட்டினை கண்டவுடன், அதை பயன்படுத்திடுவதாற்காக முயற்சிசெய்திடாமல் இருக்க முடியாது. அதனால் அவ்வாறான பயன்பாட்டினை கண்டவுடன் அதனை பயன்படுத்திட துவங்கிடுவோம், ஏனேனில் சிலபயன்பாடுகள் மற்றவைகளை விட மிகச் சிறந்தவைகளாக நமக்குத்தோன்றிடுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு கோப்பு மேலாளர் பயன்பாடும் நம்முடைய மேசைக்கணினியில் நமக்குத்தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம், அவ்வாறான சூழலில் நாம் நமக்குத்தேவையானவாறு அதை மாற்ற நினைக்கின்றோம், அதற்காக நாம்கூடுதலான நேரத்தையும் முயற்சியையும் செலவிடவேண்டியுள்ளது இச்சூழ்நிலையில் லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற மேசைக்கணினியில் உள்ள கோப்பு மேலாளர் பயன்பாட்டிற்கான ஐந்து மாற்று வழிகள்கூட உள்ளன. இவற்றில் ஒன்றினை நமக்குப் பிடித்த லினக்ஸ் கோப்பு மேலாளராக செயல்படுத்தி பயன்பெற்றிடுக.
1. krusader
பல்வேறு வசதிகளை கொண்டkrusader ஆனது 2005 இலிருந்து ஒரு தளவமைப்பைக் கொண்டுள்ளது.அனைத்து பயனர்களுக்கு ஏற்றது பயனாளர் விரும்பியவாறு தன்னுடைய பணியைச் செய்கிறது. இந்த மேம்பட்ட கோப்பு மேலாளர் பிளாஸ்மா மேசைக்கணினிக்காக உருவாக்கப்பட்ட இரட்டை பலக பயன்பாடாகும், இருந்தபோதிலும் பெரும்பாலான விநியோகங்களில் இதனை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதில் உள்ளமைக்கப்பட்ட நமக்குப் பிடித்த வசதிகளில் ஒன்று வலைபின்னல் இணைப்பு வழிகாட்டி ஆகும், அங்கு FTP, SFTP, FISH, NFS, SMB , WebDAV ஆகியவற்றிற்கான இணைப்புகளை உருவாக்கலாம். நம்முடைய வலைபின்னல் பகிர்வுடன் இணைக்க மூன்றாம் தரப்பு மென்பொருளை நிறுவுகைசெய்வதற்குப் பதிலாக, நமக்குத் தேவையான அனைத்தையும் இதில் பெறமுடியும்.
மேலும் இது Krusaderஇன் விரிவான காப்பகக் கையாளுதல், ஒரு பயனர் செயலிகளின் கருவி (குறிப்பிட்ட கோப்பு வகைகளுடன் தானியங்கியாக இடைவினைகளை உருவாக்குவதற்கு), ஒரு சக்திவாய்ந்த தேடல் வசதி, தனிப்பயனாக்கக்கூடிய காட்சிகள், MountMan (இயக்கங்களை பதிவேற்றுவதற்கு/அகற்றுவதற்கு), வட்டு பயன்பாட்டு அறிக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த Krusader ஆனது பயனர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு கோப்பு மேலாளர்.ஆகும் Linux க்கு புதியவராக இருந்தால், இந்த OS ஐ நன்கு அறிந்து தெரிந்து கொள்ளும்வரை பயன்படுத்தாத பல்வேறுவசதிகளை இது கொண்டுள்ளது. இருப்பினும், இது ஒரு சிறந்த தேர்வாகும்.

படம்1
இதனை(krusader) நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo apt-get install krusader -y
Fedora-அடிப்படையிலான மேசைக்கணினியை பயன்படுத்துகின்றோம் எனில், நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo dnf krusader -y

2.Nemo
Nemo என்பது Cinnamon இன் மேசைக்கணினிக்கான இயல்புநிலை கோப்பு மேலாளர் ஆகும் ஆனால் பெரும்பாலான உபுண்டு அடிப்படையிலான மேசைக்கணினி விநியோகங்களில் இதனை நிறுவுகைசெய்திடலாம். Nemoஆனது இயல்புநிலைGNOME கோப்பு மேலாளரைப் போன்றே தோற்றமளிக்கலாம் — ஏனெனில் இதுGNOME கோப்புகளின் (aka Nautilus என அழைக்கப்படும்). இங்கே மிகத் தெளிவான வேறுபாடு:GNOME கோப்புகளில் கருவிப்பட்டியின் பட்டி அமைப்பு இல்லை, ஆனால் Nemo அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.GNOME கோப்புகளைப் போலன்றி, கருவிப்பட்டி, பக்கப்பட்டி, விசைப்பலகை குறுக்குவழி விசைகள் போன்ற சில தனிப்பயனாக்கங்களை Nemo அனுமதிக்கிறது. புதிய சாளரத்தில் (தற்போதைய சாளரத்திற்குப் பதிலாக) ஒரு கோப்புறையைத் திறக்க Nemo ஆனது நமக்கு உதவுகிறது.


படம்-2
இந்த பயனர் நட்புடனான கோப்பு மேலாளரை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, செயலிகள், உரைநிரல்கள் , நீட்டிப்புகளை செயல்படுத்துவதற்கான ஆதரவை Nemo ஆனது கொண்டுள்ளது. இந்த பயன்பாட்டிற்கு வெளியே, Add Desklets, Mount Archives, வால்பேப்பராக அமைத்தல், புதிய துவக்கியை உருவாக்குதல், மேசைக்கணினியின் பின்புலத்தை மாற்றுதல் காட்சி அமைப்புகளுக்கான செயல்களை Nemoஇல் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். Nemo File Roller நீட்டிப்பும் இயல்பாக நிறுவுகைசெய்யப்பட்டுள்ளது. இறுதியாக, விரைவான கோப்பு மாதிரிக்காட்சி இதில்உள்ளது, இது ஒரு கோப்பைத் திறக்காமலேயே அதன் முன்னோட்டத்தைப் பார்க்க நம்மை அனுமதிக்கிறது.
உபுண்டு அடிப்படையிலான விநியோகங்களில் பின்வருமாறான கட்டளைவரியுடன் இந்த Nemoஐ நிறுவுகைசெய்திடலாம்:
sudo apt-get install nemo -y
Fedora-அடிப்படையிலான மேசைக்கணினிபைப் பயன்படுத்துகின்றோம் எனில், நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo dnf install nemo -y

3. PCManFM
பொதுவாக யாரும் PCManFM எனும் பெயரின் பெரிய இரசிகனாக இருக்க விரும்புவதில்லை, ஆனால் இந்த கோப்பு மேலாளர் மிகவும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்றது. ஒரு காலத்தில், PCManFM ஆனது ஒரு காலாவதியான பயனர்இடைமுகப்பினைப்(UI)பயன்படுத்தியது.தற்போது, அது நம்முடைய மேசைக் கணினிக்கு இணக்கமாகசெயல்படலாம். உண்மையில், உபுண்டு 24.04 இல் PCManFM ஐ நிறுவுகைசெய்தபிறகு, கோப்பு மேலாளரைத் திறக்கும்போது OSஆனது அதைGNOME இன் கோப்புகளாக தவறாகப் புரிந்துகொண்டதாக நினைக்கத் தோன்றும்., ஏனெனில் GNOME கோப்புகளை நன்கு அறிந்திருப்பதாகும்.
PCManFM ஆனது முழு gvfs ஆதரவு, சிறுபடங்கள், மேசைக்கணினி மேலாண்மை, குறியியல்கள், தாவல்கள் செய்யப்பட்ட இடைமுகம், தொகுப்பு மேலாண்மை, தாவல்களுக்கு இடையில் இழுத்து விடுதல் — ஒரு கட்டளைக்குள் கட்டளையை இயக்கும் திறன் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.சாளரத்தில் ஒரு கட்டளையை இயக்க வேண்டும் என்பதை உணரும்போது அவ்வாறு செய்ய முனைம சாளரத்தைத் திறக்க விரும்பவில்லையென்றாலும் இந்த கோப்புறை எனும் வசதி நாம் செயல்படுத்த தயாராக கைக்கு கிடைக்கின்றது,
பெயர் அல்லது வடிவங்கள், கோப்பு வகை, உள்ளடக்கம், பண்புகள் போன்ற பலவற்றின் மூலம் தேட நம்மை அனுமதிக்கும் சக்திவாய்ந்த தேடல் கருவியை இந்த PCManFM கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, PCManFM மிக விரைவாக செயல்படக்கூடியது.

படம்-3.
உபுண்டு அடிப்படையிலான விநியோகங்களில் பின்வருமாறான கட்டளைவரியுடன் PCManFM நிறுவுகைசெய்திடலாம்:
sudo apt-get install pcmanfm -y
Fedora-அடிப்படையிலான மேசைக்கணினிபைப் பயன்படுத்துகின்றோம் எனில், நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo dnf install pcmanfm -y

4. Thunar
Thunar என்பது Xfce இன் கோப்பு மேலாளர் ஆகும், இதுசரியான அளவு வசதிகளை வழங்குகிறது. இது Xfce க்காக கட்டமைக்கப்பட்டிருந்தாலும், இது பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களில் நிறுவுகைசெய்து பயன்படுத்திகொள்ளலாம் .இது நாம் தேர்ந்தெடுத்த மேசைக்கணினிபின் தோற்றத்திற்கும் உணர்விற்கும் இணங்கி செயல்படுகின்றது.
தனிப்பயன் செயல்கள் (வலதுபுறபொத்தானை சொடுக்குதல் சூழல் பட்டியில் சேர்க்கப்படும் செயல்கள்), கோப்புகளை இணையாக மாற்றும் திறன் (விரைவாக செயல்படுவதற்கு), தனிப்பயனாக்கக்கூடிய விசைப்பலகை போன்ற சில நுணுக்கங்களை Thunar அதன் காப்புறைவரை கொண்டுள்ளது. குறுக்குவழிகள், நீலக்கற்றைபகிர்வு, மொத்தமாக மறுபெயரிடுதல் , காப்பகப்படுத்துதல், பல்லூடக குறிச்சொற்கள், பகிர்தல்கள் , VCS போன்றவற்றுக்கான செருகுநிரல்களை உள்ளடக்கிய ஒரு அனுப்பும் வசதியையும் கொண்டுள்ளது.
செருகுநிரல்களைப் பற்றி கவனிக்க வேண்டிய ஒன்று: அவை கைமுறையாக நிறுவுகைசெய்யப்பட வேண்டும், இது மிகவும் குழப்பமானதாக இருக்கலாம் (அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மிகவும் சிறிய உதவியைக் கொடுக்கின்றன). முக்கியமாக, நாம் விரும்பும் செருகிக்கான மூலத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைத் திறந்து, பின்னர் தொகுக்க வேண்டும். பெரும்பாலான பயனர்களுக்கு, இது சற்று அதிகமான செயலாகும். இருப்பினும், லினக்ஸைப் பற்றி நன்கு அறிந்திருந்தால், செருகுநிரல்களின் நிறுவுகையை மிகவும் அடையக்கூடியதாக இருக்கும். அந்த சிக்கலுடன் கூட, கோப்பு மேலாளர்களுக்கு Thunar ஒரு சிறந்த வழிமுறையாகும்.

படம் 4
Thunar ஐ நிறுவுகையைசெய்திடுவதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo apt-get install thunar -y
Fedora-அடிப்படையிலான மேசைக்கணினிபைப் பயன்படுத்துகின்றோம் எனில், நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo dnf install thunar -y

5. X எனும்கோப்பு உலாவி
X எனும் கோப்பு உலாவி (X File Explorer (XFE)) பழைய லினக்ஸில் மிகவும் வேரூன்றியுள்ளது. இந்த கோப்பு மேலாளர் கடந்த காலத்திலிருந்து துண்டிக்கப்பட்டதைப் போன்றே தோற்றமளித்து நடந்துகொள்கின்றது — ஆனால் அது ஒரு மோசமான செய்தி அன்று! XFE மிகவும் இலகுவானது (எனவே இது விரைவாக செயல்படக்கூடியது), மேலும் HiDPI திரையின் ஆதரவு, ஒரு ஒருங்கிணைந்த உரை திருத்தி, பட பார்வையாளர், RPM/DEB தொகுப்பு பார்வையாளர், symlinks, ஐ உருவாக்கும் திறன் , மிகவும் தனிப்பயனாக்கக்கூடியது.
வழிசெலுத்தியின் பயன்முறையை இயக்கலாம்/முடக்கலாம் (இது வழிசெலுத்தி பயனராக கோப்புகளை அணுக அனுமதிக்கிறது – நம்மிடம் வழிசெலுத்தியின் பயனர் கடவுச்சொல் இருந்தால் அது இயக்கப்பட்டிருக்கும் வரை). XFE இன் தனித்துவமான வசதிகளில் ஒன்று தேடுதல் கருவியாகும், இது குறைந்தபட்ச அளவு, கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது, பயனர், கோப்பு வகை, வெற்று கோப்புகள், உரை உள்ளடக்கம், மறைக்கப்பட்ட கோப்புகள் போன்ற வழக்கங்களை புறக்கணிக்க நம்மை அனுமதிக்கிறது. மற்றொரு வசதியாக பதிந்திடும்வசதி, தற்போதைய குப்பையானக் கோப்பின் அளவைப் பார்த்து, அதை பட்டியிலிலிருந்து நீக்கி காலி செய்யும் திறன் ஆகும். பயனர்இடைமுகப்பினை(UI) ஒற்றை பலகம், இரட்டை பலகம் அல்லது மூன்று பலகம் ஆகியவாறு மாற்றியமைத்திடலாம்.

படம் 5
உபுண்டு அடிப்படையிலான விநியோகங்களில் பின்வருமாறான கட்டளைவரியுடன் XFE ஐ நிறுவுகைசெய்திடலாம்
sudo apt-get install xfe -y
Fedora-அடிப்படையிலான மேசைக்கணினிபைப் பயன்படுத்துகின்றோம் எனில், நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo dnf install xfe -y
இந்த ஐந்து மாற்று கோப்பு மேலாளர்கள் லினக்ஸ் மேசைக்கணினிபில் முயற்சி செய்க. இவை அனைத்தும் கட்டணமற்றது இவற்றில் ஒன்றை முயற்சித்திடுக, இயல்புநிலையை நாம் விரும்பவில்லையா என்றும் சரிபார்த்து கொள்க.

%d bloggers like this: