நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள்

“திறமூலம்(open-source)” என்ற சொல் 1990-களின் பிற்பகுதியில் தான் புழக்கத்திற்கு வந்தது என்றாலும், 1950-கள் , 1960-களில் மென்பொருளின்நிரலாக்கம் பெரும் வளர்ச்சி கண்ட காலத்திலிருந்தே இந்தக் கொள்கை இருந்து வருகிறது. தொடக்ககால உருவாக்குநர்கள் தங்கள் குறிமுறைவரிகளையும் நெறிமுறை வடிவமைப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்; 1969-ல் இணையத்தின் வருகையுடன் இந்த செயல்முறை மேலும் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திறமூல மென்பொருள் எங்கெங்கும் பரவியுள்ளது; அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் மறைந்திருக்கிறது, அதே சமயம் திரைக்குப் பின்னால் ஒரு புகழ்பெறாத (பிரபலமாகாத) கதாநாயகனாகவும் செயல்படுகிறது.இங்கு விவரிக்கப் போகும் கருவிகள், அவற்றுக்கு உரிய ஏற்புகை அரிதாகவே கிடைத்தாலும், நமது அன்றாட வாழ்வின் பெரும் பகுதிகளான செயல்களுக்கு இவைஇன்றியமையாதவைகளாகும்.

Linux -இது விளையாட்டு பணியகங்கள் முதல் கைபேசிகள் வரை இது எல்லா இடங்களிலும் நீக்கமறநிறைந்துள்ளது.
இதைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நமது தற்போதைய வாழ்வில் லினக்ஸின் முக்கியத்துவத்தை எவ்வளவு கூறினாலும் அது மிகையாகாது. இது இன்னும் ஒப்பீட்டளவில் புதியதுதான்—1990-களின் நடுப்பகுதியில் தான் இதனை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது—இந்த இயக்க முறைமையானது, திறன்பேசிகளில் ஆதிக்கம் செலுத்தும் இயக்க முறைமையான ஆண்ட்ராய்டு வடிவத்தில் தான் தற்போது பொதுமக்களால் நன்கு அறியப்படுகிறது.
லினக்ஸ் என்பது மிகவும் நெகிழ்வான ஒரு அமைவு என்பதால், அதைத் துல்லியமாக வரையறுப்பது கூட கடினம்: சிலருக்கு இது ஒரு உருவாக்கமையமாகும், மற்றவர்களுக்கு இது ஒரு விண்டோவிற்கு பதிலான சூழலாகும், மேலும் இதை உணராத பலருக்கு இது ஒரு உட்பொதிக்கப்பட்ட மென்பொருள் (embedded software) ஆகும். இது இப்போது மிகவும் பரவலாகிவிட்டதால், ஒரு சாதாரண இணையக் கோரிக்கையானது, நம்முடைய மேசைக்கணினி தொடங்கி, பல பதிலாள்கள் வழியாக, இறுதியாக இணைய சேவையகம் வரை, லினக்ஸில் இயங்குகின்ற பல வெவ்வேறு கணினிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

Git -இதுநவீன மேம்பாடுகளில் பலவற்றிற்கு சக்தியளிக்கும் மென்பொருளாகும்
உலகையே மாற்றக்கூடிய ஒரு மென்பொருளை வெளியிடுவது நம்மில் பலருக்குப் போதுமானதாக இருக்கும், ஆனால் லினஸ் டோர்வால்ட்ஸுக்கு அப்படியில்லை. பின்லாந்து நாட்டவரான இவர், தனது அடுத்த கண்டுபிடிப்பான பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பான Git மூலமாகவும் இப்போது மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
இதன் சற்றே முரண்பாடான பெயரைத் தவிர்த்துப் பார்த்தாலும், இது ஒரு கவர்ச்சிகரமான கருவி அன்று—ஆனால், இப்போது பல மென்பொருள்கள், குறிப்பாக மற்ற திறமூலக் குறிமுறைவரிகள் (open-source code) எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதற்கு இது அடிப்படையானது. Gitஆனது, பல்வேறுபட்ட குழுக்கள் இணைந்து பணியாற்றவும், இறுதிப் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்குப் பங்களிக்கவும், மென்பொருள் உருவாக்குநர்கள் தங்கள் மென்பொருளின் வரலாற்றைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
மென்பொருள் உருவாக்கம், சமூக ஊடகங்களை ஒன்றிணைக்கும் ஒரு இணையச் செயலியான GitHub மீது இப்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஆனால் அதன் மையத்தில் Git இல்லையென்றால் அதன் வெற்றி என்பது ஒன்றுமில்லை.

Visual Studio Code -இது ஒவ்வொரு மென்பொருள் உருவாக்குநரின் விருப்பத்திற்குரிய IDEஆகும்
அனைத்து திறமூலக் குறிமுறைவரிகளும் (Open-source code) முதலில் எழுதப்படுவதற்காக, மிக அடிப்படையான உரைத் தொகுப்பிகள் (Text editors) முதல் சிக்கலான, செய்யறிவு(AI)-ஆற்றல் கொண்ட IDE-கள் வரை எனப் பலவிதமான தேர்வுகள் மென்பொருள் உருவாக்குநர்களுக்குக் கிடைக்கின்றன. இதில் சந்தேகத்திற்கு இடமின்றி, நவீன காலத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்வது VS Code ஆகும்.
விண்டோஸ், லினக்ஸ், மேக் , இணையம் போன்ற பல்வேறு தளங்களில் கிடைக்கும் இந்தச் செயலியை, Stack Overflow’s இன் 2025ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மேம்படுத்துநர்களுள் 75% நபர்கள் பயன்படுத்துகின்றனர்.
மைக்ரோசாப்டிற்கு திறமூலத்துடன் எப்போதும் சுமுகமான உறவு இருந்ததில்லை. மேலும், VS Code-இன் பொது வெளியீட்டில் தனியுரிமைக் குறிமுறைவரிகள் இருப்பதால், அதை திறமூலமானது என்று கூடக் கருதலாமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அதன் குறிமுறைவரிகளின் தளமான GitHub இல் உள்ளது, மேலும் இந்த செயல்திட்டத்தை MIT உரிமத்தைப் பயன்படுத்தும் வடிவத்தில் உருவாக்க முடியும். எனவே, நாம் இந்தவிவரங்களில் மூழ்கிவிட வேண்டாம்.

Nginx -இதுஇணைய சேவையகத் துறையில் புதிய திறமூல முன்னோடியாகும்
இந்தக் கட்டுரை ஒரு பத்தாண்டிற்கு முன்பு எழுதப்பட்டிருந்தால், இந்தப் பகுதி அப்பாச்சியைப் புகழ்ந்திருக்கும். ஆனால், அந்த இணைய சேவையகத்தின் நீண்ட கால ஆதிக்கம் கடந்த பத்து ஆண்டுகளில் பல தனித்தனி போட்டியாளர்களால் வேரோடு பிடுங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இவற்றுள் மிகவும் முக்கியமானது மற்றொரு திறமூல இணையசேவையகமான Nginx ஆகும், இது ஒரு தகுதியான வாரிசு ஆகும்.
ஒவ்வொரு முறையும் நாம்ஏதேனுமொரு இணையப்பக்கத்தைக் கோரும்போது, அதை நமக்கு வழங்குவதற்காக மறுமுனையில் ஒரு மென்பொருள் இயங்குகிறது, பெரும்பாலும்—அந்த மென்பொருள் Nginxயே ஆகும். திறமையான, நிகழ்வு-சார்ந்த கட்டமைப்பு ,குறைந்த நினைவகத் தடம் ஆகியவற்றைக் கொண்டு, Nginx ஆனது நிலையான தளங்கள், இயக்கநேர உரைநில்-சார்ந்த உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்க முடியும், மேலும் இதுஒரு எதிர்பதிலாளாக அல்லது நினைவக சமநிலையாகவும் செயல்பட முடியும்.

Docker -இதுசெயலி வரிசைப்படுத்தலின் பின்னணியில் உள்ள உந்து சக்தியாகும்
2000-களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை OS-நிலையின் மெய்நிகராக்கம் (அல்லது கொள்கலாணாக்குதல்) பிரபலமடைந்ததிலிருந்து, இந்தத் துறையில் ஒரு உண்மையான முன்னோடியாக இருந்து வருகிறது: அதுவே Dockerஆகும். பெரும்பாலான பொதுமக்கள் கேள்விப்படாத மென்பொருளுக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்றாலும், நவீன உலகின் செயல்பாட்டிற்கு இது இன்றியமையாததாகும்.
ஒரு செயலி இயங்குவதற்கு, கட்டுப்படுத்தப்பட்ட மென்பொருள் சூழலை வரையறுக்க இந்த Dockerஆனது நம்மை அனுமதிக்கிறது, இது கையடக்க மென்பொருளை விநியோகிப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அதன் அணுகுமுறை சூழலைத் தனிமைப்படுத்துவதால், சார்புநிலைகள் அல்லது பரந்த தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், செயலிகளை மிக விரைவாக பரிசோதிக்க இது நம்மை அனுமதிக்கிறது.

OpenSSL-இணையப் பயன்பாடு கிட்டத்தட்ட அனைத்தும் இதைச் சார்ந்திருப்பதால் இது மிகவும் முக்கியமானதாகும்.
OpenSSL என்பது ஒரு பாதுகாப்பான மறைகுறியாக்க நூலகமாகும். இது இணையத் தொடர்புகளுக்கு மிகவும் அடிப்படையானது என்பதால், இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு சாதனத்திலும் இதைக் காணலாம். அது நம்முடைய கணினியாக இருந்தாலும், விளையாட்டு சாதனமாக இருந்தாலும் அல்லது நம்முடைய குளிர்சாதனப் பெட்டியாகவே இருந்தாலும் — அது இணையத்துடன் இணைக்கப்படுகிறதென்றால், அது அநேகமாக SSL/TLS நெறிமுறையைப் பயன்படுத்திகொள்கிறது என்பது அதன்பொருளாகும்; மேலும், அது பெரும்பாலும் OpenSSL வாயிலாகவே அவ்வாறு செய்கிறது.
SSL , அதன் வாரிசான TLS இல்லாமல், வலைபின்னலின் போக்குவரத்து வெளிப்படையாக அனுப்பப்படுகிறது, எனவே உளவு பார்க்கும் எவரும் அதை இடைமறித்து அதன் விவரங்களைப் படிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த நெறிமுறைகளைப் பயன்படுத்தி, அத்தகைய தரவு பாதுகாப்பாக குறியாக்கம் செய்யப்படுகிறது, எனவே உண்மையான இரண்டு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே நேரடி அணுகல் உள்ளது.
OpenSSL இப்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அதன் பயன்பாட்டை Nintendo கூட, Switch-இன் உரிமத் தகவலில் (மற்ற பல OS மென்பொருள் எடுத்துக்காட்டுகளுடன்) ஏற்புகைசெய்திருப்பதைக் காணலாம்.

WordPress-இது ஒருமாற்று வழிகளை விஞ்சும் உள்ளடக்க மேலாண்மை அமைவு
WordPressஆனது ஒருபத்தாண்டிற்கும் மேலாக CMS சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, மேலும் அதன் நெருங்கிய போட்டியாளரை விட சுமார் பத்து மடங்கு சந்தைப் பங்கைக் கொண்டு, அதன் போட்டியாளர்களை விட உயர்ந்து நிற்கிறது. உண்மையில், WordPressஆனது மிகவும் ஆதிக்கம் செலுத்துவதால், அது CMS துறையின் உச்சவரம்பை உடைத்து, பொதுவாக இணையதள உருவாக்கத்தில் முற்றிரிமையைப் பெற்றுள்ளது, இது இணையத்தில் 43%-க்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்படுகிறது.
மூலக் குறிமுறைவரிகளை ஆராயாமல், இந்தWordPress மூலம் இயங்கும் ஒரு தளத்தைக் கண்டறிவது மிகக்கடினம் என்பதே இந்தச் செயலியின் நெகிழ்வுத்தன்மைக்குச் சான்றாகும். CMS மென்பொருளின் துவக்க நாட்களில், வடிவமைப்பிலும், செயல்பாட்டிலும் வெளிப்படையான குறைபாடுகள் இருந்ததால், நிலைமை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. இப்போதெல்லாம், நாம் இது WordPressவலைதளம் என உணராமலேயே ஒவ்வொரு நாளும் பல WordPress இணையதளங்களைப் பார்வையிடுகின்றோம்.பயன்படுத்திகொள்கின்றோம்.

React -Facebook’sஇன் விருப்பமான முதன்மைபக்க வரைச்சட்டமாகும்
2013-ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட Reactஆனது ஜாவாஉரைநிரலின் நூலகமாக, Meta’s இன் திறமூல வெற்றிக் கதையாகும். தகவமைவின் மேம்பாட்டை ஆதரிக்கும் கூறு அடிப்படையிலான பயனர் இடைமுகங்களை உருவாக்க, மற்ற அனைத்து மேம்படுத்துநர்களும் இப்போது Reactஐ விரிவாகப் பயன்படுத்துகின்றனர். இது அதன் போட்டியாளரான NodeJS-ஐ விட சற்றே குறைவான பிரபலம் பெற்றிருந்தாலும், Reactஆனது ஒரு முழுமையான திறன் கொண்ட மாற்றாகும். இது சேவையாளர் , வாடிக்கையாளர்பக்க செயலிகள் ஆகிய இரண்டிற்குமான குறுக்குத்தள மேம்பாட்டிற்கு ஏற்றது.

 

Leave a Reply