விண்டோ இயக்க முறைமைக்கு மாற்றினை விரும்பும் கணினி அறிவியல் மாணவர்கள், ,நிரலாளர்கள் ஆகியோர்களால் இணைய தாக்குதலலிருந்து பாதுகாக்கின்ற மிகவும் சக்திவாய்ந்த, நெகிழ்வான, லினக்ஸ் எனும் திறமூல இயக்க முறைமை முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. துவக்கத்தில் மேசைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் லினக்ஸை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொண்டுவந்தனர்
தற்போது மிகவேகமாக முன்னேறி தொலைபேசிகள்,மகிழ்வுந்துகள், பொதுவானஉபகரணங்கள், IoT சாதனங்கள்,போன்ற எல்லாவற்றுக்கும் லினக்ஸானது பயன்படுத்தப்படுகிறது ஏனெனில், இது விண்டோவை விட நெகிழ்வானது, பாதுகாப்பானது.
லினக்ஸை நாம் விரும்பியவாறு எவ்வாறு வேண்டுமானாலும் வளைத்து பயன்படுத்த முடியும். ஆனால் போட்டியாளரை விட இது நெகிழ்வானது, நம்பகமானது, பாதுகாப்பானது அதுமட்டுமல்லாமல் இது மிகவும் வேடிக்கையானது. முடிந்தால் லினக்ஸை மற்றவர்கள் ஆச்சரியபடும்படி எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றியமைத்து நம்முடைய திறனை நிரூபிக்கலாம்
மேலும் போட்டியாளரான விண்டோ இயக்க முறைமையில் அத்தகைய சாதனையை செய்ய முடியாது என்பதைகூட நிரூபிக்கலாம்
நல்லஅழகான தோற்றமளிக்கும் மேசைக்கணினி சூழல்களுக்கு அப்பால், பிற இயக்க முறைமைகளால் செய்ய முடியாத மேசைக்கணினியில் மட்டுமே செய்யக்கூடிய வேறு சில அருமையான செயல்கள் யாவை? என்பதற்கான எட்டு முக்கியமான காரணங்கள்பின்வருமாறு.
1. தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்திடுக அல்லது அதை மாற்றிடுக
லினக்ஸ் அதிகவாய்ப்புகளை கொண்டது. தெரிவுசெய்வதற்காக அதிகப்படியான வாய்ப்புகள் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று சிலர் கூறலாம். உண்மையான செய்தி என்னவென்றால், பல லினக்ஸ் மேசைக்கணினி விநியோகங்கள் — எந்த உருவாக்கமையம்(kernel), எந்த bash shell, எந்த தொடக்க சேவை, எந்த வலைபின்னல் மேலாளர், எந்த தொகுப்பு மேலாளர் போன்ற கடினமான வாய்ப்புகளிலிருந்து நமக்கானதை தேர்வு செய்திடுமாறு அமைந்திருக்கின்றன. சில விநியோகங்கள் வேண்டுமென்றே அந்தத் தேர்வுகளை வரம்பிடுவதால், பயனர்கள் அவ்வாறான வாய்ப்புகளில் மூழ்கிவிடாமல் இருப்பார்கள். ஆனால் அந்த விநியோகங்களை கூட மாற்றியமைத்திடலாம்.
எடுத்துக்காட்டாக, உபுண்டு லினக்ஸை தேர்வுசெய்தால் ,நமக்கு GNOME பிடிக்கவில்லை என்றால், நாம் KDE Plasma, Xfce, Pantheon, Budgie, Enlightenment அல்லது எந்தவொரு லினக்ஸ் மேசைக்கணினி சூழல்களை நிறுவுகைசெய்திடலாம். அதுவும் லினக்ஸின் அழகான தோற்றத்தின் ஒரு பகுதியாக மாறியமையும்… நமக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றிடுக. அல்லது, வேறு மேசைக்கணினி சூழலுக்கு இயல்புநிலையாக இருக்கும் வேறு விநியோகத்தை தேர்வு செய்யலாம்.
சில நிமிடங்களில், மேசைக்கணினி சூழலை முற்றிலும் வேறுபட்ட ஒன்றை Windows சூழலிற்கு, ஒத்ததாக மாற்றையமைத்திடலாம்.
2.பழைய வன்பொருளை புதுப்பித்தல்
விண்டோஸ் 11 வெளியிடப்பட்டபோது நினைவிருக்கிறதா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கணினியை இயக்க முறைமையின் சமீபத்திய பதிப்பு ஆதரிக்காது என்பதை பலர் விரைவில் கண்டுபிடித்தார்கள்? லினக்ஸில் அவ்வாறு இல்லை. உண்மையில், லினக்ஸின் பதிப்புகள் (லுபுண்டு , லினக்ஸ் லைட் போன்றவை) பழைய வன்பொருளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டவை (அவை புதிய கணினிஎன்றாலும் இயங்கக்கூடியவை ).
மேலும்,தங்கள் மேசைக்கணினி அனுபவத்தை எளிமைப்படுத்தவும் வேகப்படுத்தவும் விரும்புவோருக்கு உதவுவதுமே லுபுண்டு லினக்ஸ் ஆகும்
நம்மிடம் ஒரு அலமாரியில் ஐந்து வருடங்களுக்குமுந்தை பழமையான ஒரு கணினி கிடக்கக்கூடும், அது மறுசுழற்சிக்கு செல்கிறது என்ற நிலையில். லினக்ஸின் இலகுரக பதிப்பைப் பெற்று, அந்த பழையகணினியில் அதை நிறுவுகை செய்தபின்னர், அது ஒரு முழுமையான புதிய கணினிபோன்று இயங்குவதை காணலாம்.
3. உள்நுழைவு செய்வது(lock-in) குறித்து ஒருபோதும் கவலைப்பட வேண்டாம்
விண்டோ இயங்குதளத்தில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று உள்நுழைவு செய்கின்ற பிரச்சினையாகும். விண்டோ 11 உடன், விண்டோ அனுமதிக்கின்ற வழியில் மட்டுமே நம்முடைய செயல்களைச் செய்கின்றோம். ஆனால் லினக்ஸில், நம்முடைய சொந்தவழியில் செயல்களைச் செய்கின்றோம் என்பதே உண்மையான களநிலவரமாகும்.
வேறு சொற்களில் கூறுவதானால், மேசைக்கணினி செயல்படும் விதத்தில் நமக்குப் பிடிக்காத ஏதாவது இருந்தால், நம்முடைய தேவைகளுக்கும் பணிப்பாய்வுக்கும் சரியாகப் பொருந்தும்படி அதை மாற்றியமைத்திடலாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு லினக்ஸ் விநியோகமும் அத்தகைய தனிப் பயனாக்குதலை அனுமதிக்கிறது. மூன்றாம் தரப்பினரின் திறமையான ஆலோசனையுடன் ஒத்துப்போவதை விட நம்முடைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் நாம் பணி செய்வதையே விரும்பிடுவோம். பெரும்பாலும், அவர்களின் செயல்திறன் பற்றிய ஆலோசனை நமக்கு இல்லை.
4. மறுதொடக்கம் இல்லாமல் மேம்படுத்துதல்
மறுதொடக்கத்தின் போது மேம்படுத்தல் உண்மையில் நிகழ்கிறது என்பதைக் கண்டறிய, Windows ஐ மேம்படுத்த எத்தனை முறை சென்றுள்ளோம்? பொதுவாக அதற்கான நேரத்தை உண்மையில் வேறு பயனுள்ளதாக செய்ய பயன்படுத்தி கொள்ள முடியும். போட்டியாளரை விட லினக்ஸ் சிறந்ததாக கருதுவதற்கு இது மற்றொரு மிகமுக்கியகாரணமாகும்.
லினக்ஸ் மூலம், மேசைக்கணினிபில் தொடர்ந்து பணி செய்யும் போது, முழு மேம்படுத்தலை நம்மால் செய்ய முடியும். உண்மையில், பல லினக்ஸ் விநியோகங்களில், உருவாக்கமையம்(kernel) மேம்படுத்தப்பட்டால் மட்டுமே, மேம்படுத்தப்பட்ட பிறகு நாம் மறுதொடக்கம் செய்ய வேண்டும், அதன் பிறகும், புதிய உருவாக்கமையம் பதிவேற்றப்பட்டு இயங்குவதை உறுதிப்படுத்த மறுதொடக்கம் மட்டுமே அவசியம். இல்லையெனில், மேம்படுத்தல் பின்னணியில் இயங்கும் போது OS ஐப் பயன்படுத்துவதைத் தொடருக. சில விநியோகங்கள் (ஃபெடோரா போன்றவை) மறுதொடக்கத்தின் போது புதுப்பிப்புகளை இயக்குகின்றன.
நிச்சயமாக, மேம்படுத்தல்களுக்கு GUI கருவியைப் பயன்படுத்தும் போது மட்டுமே இது பொருந்தும். அதே மேம்படுத்தல்களை sudo dnf மேம்படுத்தல் மூலம் இயக்கிடுக உருவாக்கமையத்தினை மேம்படுத்தப்படும் போது மட்டுமே மறுதொடக்கம் செய்ய வேண்டும். GUI ஐப் பயன்படுத்தி புதுப்பிப்புகளைச் சரிபார்க்கும்போது, தொகுப்பு மேலாளர் அவற்றைப் பதிவிறக்கம்செய்து, மறுதொடக்கம் செய்யும்படி நம்மைத் தூண்டக்கூடும், அதனால் புதுப்பிப்புகள் பயன்படுத்தப்படும். Pop!_OS போன்ற பிற OSகள் உள்ளன, புதிய நிலைச்சாதனத்தை நிறுவுகைசெய்திடும்போதும் புதிய பெரிய வெளியீட்டிற்கு மேம்படுத்திடும்போதும் மறுதொடக்கம் தேவைப்படும். நிலைச்சாதனத்தை நிறுவுகைசெய்து புதிய பெரிய வெளியீட்டிற்கு மேம்படுத்துதல்செய்து மீண்டும் துவக்கிடுக.
5. விண்டோ மென்பொருளை இயக்கிடுக
அதெல்லாம் சரி, லினக்ஸில் விண்டோவில் செயல்படுகின்ற மென்பொருளை இயக்கமுடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு எழும் நிற்க அவ்வாறு விரும்பு வோர்களுக்கும், லினக்ஸில் ஒரு வழி இருக்கிறது, அது Wine என்று அழைக்கப்படுகிறது. Wine என்பது விண்டோவில்செயல்படுகின்ற மென்பொருட்களை லினக்ஸில் நிறுவுகைசெய்து லினக்ஸில் இயக்க அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும். Wine பொதுவாக லினக்ஸில் இயல்புநிலையாக நிறுவுகைசெய்யப்படவில்லை, ஆனால் இது பெரும்பாலான விநியோகங்களின் இயல்புநிலை களஞ்சியங்களில் காணப்படுகிறது, இதனால் லினக்ஸில் கிடைக்கும் பல்வேறு பயன்பாட்டு தொகுப்புகளிலிருந்து அதை நிறுவுகைசெய்திட முடியும்.
6. ஏராளமான அளவு மென்பொருட்களை கட்டணமில்லாமல் நிறுவுகைசெய்திடுக!
லினக்ஸில் செயல்படுவதற்கு என லினக்ஸின் சொந்த மென்பொருள் எதுவும் இல்லை என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டிருக்கலாம். அவர்கள் தவறான செய்தியை அறிந்து கொண்டுள்ளார்கள் என தெரிந்துகொள்க லினக்ஸ் மூலம், Snap , Flatpak போன்றவற்றின் வாயிலான மேசைக்கணினிபில் உள்ள GUI பயன்பாடுகளின் தொகுப்புகளிலிருந்து நிறுவகை செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான கட்டணமில்லா மென்பொருட்களை காணலாம். அவற்றோடு Linux இல் எளிதாக Zoom, Spotify போன்ற தனியுரிமை பயன்பாடுகளையும் நிறுவுகைசெய்திடலாம்.
Windowsஇல் நிறுவுகைசெய்து பயன்படுத்துவதற்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன ஆனால் இவ்வாறு நிறுவுகைசெய்வதற்குக் கிடைக்கின்ற கட்டணமில்லா மென்பொருளை கிட்டத்தட்ட (விளம்பரங்கள் இல்லாமல்) தேர்வு செய்ய முடியாது. மேலும், நிறுவுகைசெய்யப்பட்ட மென்பொருளை நிர்வகிப்பது Linuxஇல் மிகவும் எளிதான செயலாகும் (கட்டளைவரி அல்லது GUI இலிருந்து). இன்னும் சிறப்பாக, இன்னும் கூடுதலான மென்பொருளை நிறுவுகைசெய்திட தொகுப்பு மேலாளரிடம் மூன்றாம் தரப்பு களஞ்சியங்களையும் சேர்க்கலாம். வேறு சொற்களில் கூறுவதானால், மென்பொருள் நிறுவுகையைப் பொறுத்தவரை லினக்ஸ் கணிசமாக அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
7. நண்பர்களை ஆச்சரியப்படுத்திடுக
துவக்கத்தில் குறிப்பிட்டது போன்று, லினக்ஸ் மூலம், நண்பர்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய மேசைக்கணினி சூழலை உருவாக்கலாம். , அறிவொளி சாளர மேலாளர்களை அவர்கள் எதிர்காலத்தில் இருந்து வந்தவர்கள் போன்று காணும் அளவிற்கு மாற்றியமைத்திடலாம் விண்டோவில் கேள்விப்படாத வெளிப்படைத்தன்மை , சாளர விளைவுகளைப் பயன்படுத்திடலாம், சில லினக்ஸ் மேசைக்கணினிகள் அவற்றைப் போலவே நெகிழ்வானவை என்றாலும், இன்னும் மேசைக்கணினிகள் ( Xfce, KDE Plasma, போன்றவை) உள்ளன, அவற்றை தொழில்நுட்ப கலைப் படைப்புகளைப் போன்று கட்டமைத்திடலாம். நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் பொறாமைப்பட வைக்க இது ஒரு சிறந்த வழி மட்டுமல்ல… இது மிகவும் வேடிக்கையானதுமாகும்.
8. கேள்விப்படாத நம்பகத்தன்மையை அனுபவித்திடுக.
லினக்ஸில் கடுமையான சிக்கல்களை மிக அரிதாகவே சந்தித்திடுவோம். நாம்சந்திக்கின்ற பெரும்பாலான சிக்கல்கள் சில நிமிடங்களில் சரிசெய்யக்கூடியவை. மேலும், அந்தச் சிக்கல்களைத் தீர்க்க நமக்குத் தேவையான அனைத்து சரிசெய்தல் கருவிகளையும் Linux வழங்குவதால், எந்தவொரு சிக்கலைத் தீர்ப்பதற்கான பொதுவாக ஒரு பதிவுக் கோப்பு இருக்கின்றது.
லினக்ஸ் அருமையாக செயல்படுகிறது. இது உண்மையில் மிகவும் எளிமையானது. ஆனால் மிக முக்கியமாக, அது தொடர்ந்து நன்றாக செயல்படுகிறது எனவே, வேடிக்கை, நெகிழ்வுத்தன்மை, பயன்பாட்டின் எளிமை ,நம்பகத்தன்மை ஆகியவற்றை மீண்டும் கணினியில் கொண்டுவருவதற்கான வழியை தேடுகின்றோம்எனில், லினக்ஸில் முயற்சித்திடுக.