எளிய தமிழில் WordPress- 12

Widgets:

கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும்.

என்ன மாதிரியான widgets இருக்கின்றன?

சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets ஆக சொல்லலாம். மின்னஞ்சல் சந்தா, ட்விட்டர் பேட்ஜ்களைக் கூட widgets ஆக பயன்படுத்தலாம்.

Widgets மெனுவில் Available Widgets எனும் பகுதியில் கிடைக்கும் widgetsகளில் நமக்குத்தேவையானவற்றை sidebar பகுதிக்கு drag-drop முறையில் இழுத்து விடலாம்.

 

widgets

அவ்வாறு முயன்றால், நமக்கான settings பிரிவு திறக்கும். அதில் தேவையான மாற்றங்களைச் செய்து, சேமிக்கலாம்.

Inactive widgets பகுதியில் பயன்படுத்தாத widgetsகளை தள்ளிவிடலாம். சேமிக்கப்பட்ட settings அழியாமல் இருக்கும். ஒருவேளை குறிப்பிட்ட widget பிடிக்கவில்லையெனில் அதை delete-ம் செய்யலாம்.

மெனுக்கள்:

மெனுக்களை புதிதாக சேர்ப்பதும், ஏற்கனவே உள்ள மெனுவை திருத்தி அமைப்பதும் குறித்த வசதிகள் இந்த மெனுவில் இருக்கும்.

Dashboard-ல் Appearance-ல் menu எனும் தெரிவை தேர்ந்தெடுத்தால் நாம் புதிதாக மெனுவைச் சேர்க்கவோ, மாற்றியமைக்கவோ இயலும்.

பொதுவாக உங்களின் வலைப்பூ பக்கத்தில் Home, About என்கிற மாதிரியான பக்கங்களுக்கான இணைப்புகள் கொண்ட Navigation bar-ஐ கட்டுப்படுத்தும் பக்கம் இதுவே.

இந்த Navigation bar தளத்தின் பெயருக்குக் கீழேயோ, பக்கவாட்டிலோ, அல்லது தளத்தின் அடிப்பகுதியிலோ இருக்கும், அது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தீம்ஐ பொறுத்தது.

Menu (Dashboard) பக்கத்தில் நுழைந்ததுமே, Create a new menu என்றொரு இணைப்பு இருக்கும். அதை சொடுக்கினால் வரும் உள்ளீட்டு பெட்டியில் (Input textbox) நீங்கள் விரும்பும் பெயரைக் கொடுத்தால் புதிய மெனு சேர்க்கப்படும்.

அவ்வளவுதானா?

இல்லை.

அதே மெனுவில் கீழே, தற்போதுள்ள மெனுக்களை வரிசைப்படுத்தியிருப்பர். அதில் நீங்கள் இடமாற்றம் செய்யலாம். அதை edit செய்ய முனைந்தால் கீழ்க்கண்ட தேர்வுகளை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

URL: மெனுவிற்கான இணைப்பைக் கொடுக்க வேண்டும்.

Navigation Label: இணைப்பிற்கான பெயர் எவ்வாறு தளத்தில் காட்சி தர வேண்டும் என்பதைக் குறிப்பிட.

Title: அந்த மெனுவை சுட்டியால் தொட முனைகையில் அதில் என்ன தலைப்பு காட்சி தர வேண்டுமென்பதைக் குறிப்பிடலாம்.

Link Target: அதே சாளரத்தில் (Window) இணைப்பு திறக்க வேண்டுமா? இல்லையா என்பதை தேர்ந்தெடுக்க.

(தவிர மற்ற தேர்வுகள் தவிர்க்கப்படுகின்றன.)

menus

 

மெனுவை நீக்க:

மெனு பட்டியலில் கீழ்நோக்கிய அம்புக்குறியை தேர்வு செய்தால் அதில் Remove செய்ய இயலும்.

எப்போதும் சேமிக்க மறக்காதீர்கள்.

%d bloggers like this: