Category Archives: wikisource

தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செய்யறிவு வளர்ச்சியும் – இணையவழிப் பயிற்சி முகாம் 01

வணக்கம், தமிழ் விக்கிமீடியாச் சமூகம், அனலி கலை மற்றும் இலக்கியப் பள்ளி, ‘இனம்’ பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், கணியம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் “தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செய்யறிவு வளர்ச்சியும்” (Tamil Wikisource Enhancement and AI Integration) திட்டத்தின் முதற்கட்ட இணையவழிப் பயிற்சி முகாமிற்குப் பதிவு செய்துள்ள உங்களுக்கு எங்களது மனமார்ந்த வரவேற்பும் நன்றிகளும்! தமிழ் மொழியின் அரிய செவ்விலக்கியங்களை எண்ணிம மயமாக்கி, எதிர்காலச் செயற்கை நுண்ணறிவு (Tamil AI / LLM) மாதிரிகளுக்கான திறந்தநிலைத் தரவுத்தொகுப்பாக… Read More »

விக்கிபீடியா எழுத்தாளர் கி.மூர்த்திக்கு விருது

விக்கிபீடியா தளமானது கட்டற்ற முறையில் உலகளாவிய தரவுகளை நம் விரல் நுனிகளில் கொண்டு வந்து சேர்க்கும் தரவு களஞ்சியமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க விக்கிப்பீடியா தளத்தில், தமிழிலும் 1,50,000 + கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் விக்கிபீடியா தளத்தில் முதல் நபராக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்த பெருமையை கொண்டவர் திரு.கி.மூர்த்தி அவர்கள். விக்கிபீடியாவில் இத்தகைய ஒரு சாதனையை நிகழ்த்தியதற்காக பல்வேறு தளங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுதல்கள் கிடைத்திருந்தன. பெரும் சாதனையை சலனமின்றி  நிகழ்த்திவிட்டு எளிமையாக பேசக்கூடிய பண்பை… Read More »

சத்திரத்தான் 10,000 கட்டுரைகள் | விக்கிப்பீடியா நாயகர்கள்

தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றில் மற்றும் ஒரு சாதனையாக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்து இருக்கிறார், விக்கிப்பீடியா எழுத்தாளர் சத்திரத்தான் அவர்கள் . உலக அளவில் தமிழின் பெருமையை கொண்டு செல்லும் நோக்கில், தன்னலம் கருதாத பல உள்ளங்கள் விக்கிபீடியா தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தகவல்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். திருத்திக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சிறப்பித்து வந்திருக்கிறோம். திரு. பாலசுப்பிரமணியம், திரு.சத்திரத்தான், திரு.தாஹா புகாரி, எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, திரு.மூர்த்தி என பலர்… Read More »

விக்கிபீடியா தினம்

இணைய உலகத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக திகழும், “விக்கிப்பீடியா”வின் சர்வதேச தினம் இன்றைக்கு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. விக்கிபீடியாவின் வரலாறு அதன் செயல்பாடு முறைகள் குறித்து கணியம் அறக்கட்டளையின் இணையதளத்தில், ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கட்டுரையின் இணைப்பை கீழே வழங்குகிறேன். kaniyam.com/wikipedia-an-opensource-library/ சரி ! விக்கிபீடியா என்பது எவ்வாறு செயல்படுகிறது? என்னதான் நடக்கிறது? விக்கிபீடியாவிற்குள், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எண்ணற்ற தரவுகள் குவியும் ஒரு ஆகச் சிறந்த தளமாக விக்கிபீடியா திகழ்வதற்கு காரணம் என்ன?… Read More »

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை. விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள். 1992… Read More »

விக்கி மூல பங்களிப்பாளர் திரு. புகாரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய பலர் குறித்தும் நாம் கட்டுரைகளில் பார்த்திருந்தோம். அந்த வகையில் திரு.தாஹா புஹாரி அவர்கள் குறித்து, விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றொரு பயனராகிய திரு.பாலாஜி அவர்களின் மூலம் அறிய நேர்ந்தது. நானும் எனக்குத் தெரிந்த வகையில் 10 கேள்விகளை தயார் செய்திருந்தேன். அந்தக் கேள்விகளை whatsapp வழியாக திரு.புஹாரி அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களும் ஒவ்வொரு கேள்விக்கும், தனது விலை மதிப்பில்லாத நேரத்தை செலவிட்டு முழு மனதோடு பதில் அளித்திருக்கிறார்கள். முழு மனதோடு கேள்விகளுக்கு பதிலளித்த… Read More »

விக்கி மாரத்தான்-2024

கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய!  விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று தொடங்குகிறது. அன்று காலை 6:00 மணியிலிருந்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை சரியாக 24 மணி நேரம்… Read More »

“சத்திரத்தான்” அவர்களின்- எட்டாயிரம் கட்டுரைகள் தொடக்கம்

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில், எண்ணில் அடங்காத தமிழர்களுக்கும் தரவு தரும் அயராத பணியை செய்யும், பல தன்னலமில்லாத மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் மிகவும் குறுகிய காலத்தில், விக்கிபீடியா தளத்தில் 8000 கட்டுரைகள் தொடக்கம் எனும் உயரிய நிலையை அடைந்திருக்கும் சாதனையாளர் தான் “திரு.சத்திரத்தான்“ மேலும், விக்கிப்பீடியா அமைப்பால் நடத்தப்பட்ட பெண்ணியமும் நாட்டுப்புறவியலும் எனும் கட்டுரை எழுதும் போட்டியில் சிறப்பு பரிசையும் பெற்றிருந்தார். அன்னாரை போன்றவர்களால் தான், உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால்… Read More »

இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA)

இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக  நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய கட்டமைப்பு தான் அதை இணைய உலகில் சிறந்த தரவுதளமாக நீடிக்க செய்திருக்கிறது. 870 க்கும்  விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய… Read More »

சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு

வணக்கம், தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் பங்களித்து விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேம்படுத்த வேண்டிய பணிகளின் பட்டியலும் திட்டப்பக்கத்தில் உள்ளன. அதன் பொருட்டும், பெருந்தொற்றுக்குப் பிறகான நேரடிச் சந்திப்பாகவும் செப்டம்பர் 17 ஆம் நாள் சென்னையில் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »