Category Archives: Curated

உங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி

உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம் நீங்கள் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பு தொடங்க உதவும் திட்டமாகும். உங்கள் திறந்த மூல பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா?… Read More »

கூகிள் திறந்த மூலமாக வெளியிட்ட குறியாக்கியை வைத்து உங்கள் இணையதளத்தில் படங்களை சுருக்கலாம்

நீங்கள் சமீபத்தில் JPEG படங்களை மேலும் திறம்பட சுருக்குவதற்கான குறியாக்கியை (encoder) கூகிள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிட்டதைப் பற்றிய செய்தியைப் படித்திருக்கக் கூடும். அதை உங்கள் இணையதளத்துக்கு பயன்படுத்தினால் சேமிப்பிடம் மற்றும் பட்டையகலத்துக்காகும் (bandwidth) செலவைக் குறைக்கலாம். பயனர்களும் பக்கங்களை விரைவில் பார்க்க இயலும். ஆனால் பயன்படுத்துவது எப்படி? பிரச்சினைகள் ஏதாவது வருமா? உமேஷ் குமார் எழுதிய இந்தக் கட்டுரையில் உபுண்டு-வில் நிறுவுவது எப்படி என்று விவரமாக செய்படிகள் தருகிறார். மூன்று பிரச்சினைகளை விவரிக்கிறார்: ஒளிபுகு… Read More »