குழு

   1 ஸ்ரீனி
CollabNet எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை – ilugc.in இன் தற்போதைய தலைவர்.மின்னஞ்சல் : tshrinivasan AT gmail.com
வலை : goinggnu.wordpress.com
  2 ஆமாச்சு கட்டற்ற மென்பொருள் தழைத்தோங்க உழைப்பவன் –ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீசஸ் மூலம் கட்டற்ற மென்மக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்கிறேன் – கட்டற்ற முறையில் தமிழ்க் கணிமை வளர நாட்டம் கொண்டு இயற்றல், மொழிபெயர்த்தல், பயிற்றுவித்தல், நிரலாக்குதல், ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறேன்.

இவற்றை அடையும் பொருட்டு உற்றோருடன் யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையைத் yavarkkum.org தோற்றுவித்திருக்கிறேன். மின்னஞ்சல் : amachu AT amachu.com
3   விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள்.

வலைத்தளம்: vigneshnandhakumar.in

4 ..சூர்ய பிரகாஷ். ( $ U ¥ ∩ ) அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள்கள் (பரி மெ.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளேன். மேலும் விக்கியன்பு, விக்சனரி பார்!, தொடுப்பிணைப்பி ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.[1][2][3] தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.[4]. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 4 பட்டறைகளில் பேசியுள்ளேன்.[5][6][7][8] மேல்விக்கியில் திட்டப்பணி மொழிபெயர்ப்பையும் Translatewiki.netஇல் திறமூல மென்பொருள் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்து வருகிறேன்.[9]வலைப்பூ : firefoxsurya.blogspot.com 
5 .சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார்.


 வலை : root2linux.com

 

6 இரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.[glug-madurai.org] 

வலைப்பதிவு : rsubramani.wordpress.com
7 ஸ்ரீராம் இளங்கோகாரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.

எனது வலைத்தளம் www.sriramilango.co.nr


 

8 செல்வமணி சம்பத், இணைய தள வல்லுநர், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர். வலை : infobees.wordpress.com

 

9 என் பெயர் சதிஷ் குமார். நான் Collabnet என்னும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என் எழுத்துக்களை இங்கே பதிவு செய்த ஆசிரியருக்கு நன்றி. “தமிழன் என்ற கர்வம் கொள்வோம்”

வலைப்பதிவு: sathish5.blogspot.in/

 

10 ராஜேஷ் குமார் , கணிப்பொறி பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர். University College Of Engineering, விழுப்புரம் .
11 பிரியா, காஞ்சிபுரம், பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிக்கிறார்.

வலை sweettux.wordpress.com

 

12 பிரவீன் குமார் . காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்.

வலை : praveenlearner.wordpress.com

 

13

நடராஜன் இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலைபதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.

வலை பதிவு : science-of-good-living.blogspot.com

education-a-pain.blogspot.com

science-of-spirituality.blogspot.com
sprituality-is-knowledge.blogspot.com

14 நாகராஜன், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் B.E Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார்.வலை : knagarajanbtech.blogspot.com/
15  தூத்துகுடியில் வாழும் மீரான். டுவிட்டரில் @karaiyaan என செயல்படும் பிரபல டுவிட்டர். தமிழ் டுவிட்டர்களை ஒன்றிணைக்கும் twitamils.com எனற தளத்தை நடத்துபவர்.
16

மாணிக் இணைய நிரலராகப் பணி. திறவூற்று மென்பொருட்களிள் மிகுந்த ஆர்வம் உடையவர். தமிழா குழுமத்தில் இணைந்து திறவூற்று மென்பொருட்களை உருவாக்கி வருகின்றார்.

தளங்கள் manikk.in மற்றும் midaru.blogspot.com


17

லட்சுமிசந்திரகாந்த், கடந்த 6 ஆண்டுகளாக  linux admin –ஆக பணியாற்றி வருகிறேன். இப்போது Autodesk, Singapore  –ல் பணியாற்றி கொண்டும் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் SystimaNX IT Solutions Pvt, Ltd. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும்  உள்ளேன். 2003 –ம் ஆண்டு முதல் லினக்ஸ், FOSS மீது கொண்ட அன்பால் ஒரு கணினி நிறுவனம் அமைத்து, விரும்பும்படி வேலை செய்யவேண்டும் என்ற கனவை கடந்த 4 ஆண்டுகளாக நிஜமாக்கி உழைத்துக்கொண்டு உள்ளேன். ஓய்வுநேரங்களில்  தகவல் தொழில்நுட்பம், தமிழ் புத்தகம், புகைப்படம் எடுத்தல், சுவையாக சமைப்பதுகால்பந்து  பார்ப்பது , வலை பதிவுகள் என்று பொழுது போக்கிகொண்டு உள்ளேன்.

வலை பதிவு  : opennetguru.com

18 இரா.கதிர்வேல் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர். லினக்ஸ் ஆர்வலன், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.

வலை : gnutamil.blogspot.com

 

19 நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 –ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன்.

 வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

 

20

அருண்  S.A.G


வலை :zer0c00l.in


21 அருண்மொழி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொலைஉணர்வு (Remote Sensing ) முதுகலை பயிலும் மாணவர். கட்டற்ற மென்பொருள் சமாச்சாரங்களில் ஆர்வம் கொண்டவர்.
வலை : www.arunmozhi.in/
22 தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!!செந்தமிழ் மொழியினன் பாரத நாட்டினன்.ஆளுங்க என்கிற அருண்

www.aalunga.in

23

. அருளாளன்

நான் ஐ..டி. டெல்லியில் Python Programmer ஆக பணியாற்றி வருகிறேன்.

வலை பதிவு : tuxcoder.wordpress.com

24 சரவணன், காஞ்சிபுரம் பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரியில் B.Sc Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார்.
25 என் பெயர் மணிமாறன்.காஞ்சி லினக்ஸ் பயனர் குழுமத்தில் ஒரு அங்கத்தினன். இளங்கலை கணினி அறிவியலை பச்சையப்பன் கல்லூரியில் முடித்துவிட்டு சென்னையில் சேருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். குனு/லினக்ஸில் ஆர்வம்
கொண்டவன். குனு/லினக்ஸுடன் விளையாடுவதுதான் இப்போதைக்கு
பொழுதுபோக்கு, வேலை எல்லாம்.mani-g.blogspot.in/
26  அருண் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர், ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு
27 அன்னபூரணி
28 சுகந்தி வெங்கடேஷ்

 

%d bloggers like this: