scrum

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 15: மொய்திரளில் வேலையின் அளவை மதிப்பீடு செய்வது இன்னொரு வகையான சூதாட்டமா?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 15 மொய்திரள் (Scrum) செயல்முறையின் சக படைப்பாளரான ஜெஃப் சதர்லேண்ட் (Jeff Sutherland) கூறுகிறார், “நான் OpenView Venture Partners கூட வேலை செய்த பொழுது அவர்கள் எந்த ஒரு இயக்குநர் குழுமம் கூட்டத்திலும் சரியான கான்ட் விளக்கப்படம் பார்த்ததில்லை என்று கூறுவர். தங்கள் அணிகளின் உற்பத்தி திசைவேகம்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 14: பயனர் கதையை தெளிவாகத் தயார் செய்தால் பாதி வேலையை முடித்தது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 14   நாம் முன்னர் பார்த்தபடி, மென்பொருள் தேவைகள் பட்டியல் ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை. மென்பொருள் உருவாக்கி வாங்க விரும்புபவர்கள் அதை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்வது அவசியம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று சொல்கிறார்களே அம்மாதிரி ஆகிவிடும்.   70 –…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 13: தன்னமைவு மற்றும் பன்முக செயல்பாட்டுக் குழுக்களை ஊக்குவித்துத் தகவல் யுகத்துக்கு வந்து சேருங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 13 அப்பொழுது நான் ஒரு வணிக ஊடக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு அணியிலும் வடிவமைப்பாளர்கள், நிரலாளர்கள் மற்றும் சோதனையாளர்கள் இருந்தனர். இரண்டு வாரக் குறுவோட்டம், மொத்தம் பத்து வேலை நாட்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வடிவமைப்பாளர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை….
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 11: அருவி செயல்முறையிலிருந்து மொய்திரளுக்கு (Scrum) நிலைமாற்றம் செய்வது எப்படி?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 11   “இதெல்லாம் சரிதான். அருவி செயல்முறையைக் கைவிட நாங்கள் (ஒரு மாதிரி) தயார்! கான்ட் வரைபடம் இல்லாமல் திட்டத்தை எப்படியாவது ஓட்ட முயற்சிக்கிறோம்.  இப்போது நாங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) – க்கு எப்படி நிலைமாற்றம் செய்வது என்று ஒரு சாத்தியமான வழியைச் சொல்லுங்கள்.”…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை? இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது! ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9 நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 8: உற்பத்தித் திறனை மேம்படுத்த குமிழிகள் அனைத்தையும் 10-க்குத் திருப்புங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 8   கென்ட் பெக் (Kent Beck) 1996-ல் க்ரைஸ்லர் நிறுவனத்தின் சம்பள செயலியை மாற்றி எழுதும் மென்பொருள் திட்டத்தின் தலைவராக ஆனார். அந்தத் திட்டத்தில் அதீத நிரலாக்கத்தை (Extreme Programming or XP) ஆரம்பித்து செயற்படுத்தினார். 1999-ல் அவர் Extreme Programming Explained புத்தகத்தை வெளியிட்ட போது…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 7: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, மேம்பட்ட பாலிமர்கள் செய்யத் தெரிந்து கொள்ளுங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 7 எவ்வளவு முயன்றும் அருவி செயல்முறை எதிர்பார்த்த விளைவுகளைத் தராததால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கென் ஷ்வாபர் (Ken Schwaber) மொய்திரள் (Scrum) முறையை ஜெஃப் சதர்லாண்ட் (Jeff Sutherland)-உடன் சேர்ந்து உருவாக்கி செயல்படுத்தினார். அதைப் பயன்படுத்தியதில் திட்டங்கள் வெற்றிக்குப் பின் வெற்றியாக முடிந்தன. மென்பொருள் திட்டங்களுக்கு என்ன அடிப்படை…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 6: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, போர் விமானத்தை தரையிறக்கப் பழகுங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 6 புதிய உற்பத்திப்பொருட்கள் கண்டுபிடிக்கும் ஒரு குழு எந்த மாதிரி அணுகுமுறை பயன்படுத்தலாம் என்று 1986-ல் டாகெயூச்சி மற்றும் நோனாகா ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினர். வாகனம், நகலி மற்றும் அச்சுப்பொறி தயாரிப்பு நிறுவனங்களில் செய்த நேர் ஆய்வுகளின் அடிப்படையில் இதை எழுதினர். வழக்கமாகச் செய்யும் தொடர்நிலை அணுகுமுறைக்குப்…
Read more