CAD CAM CAE

எளிய தமிழில் CAD/CAM/CAE 22. பாகங்களின் பட்டியல் (Bill of Materials)

சரி, பாகங்களை வரைந்து விட்டீர்கள். அவற்றைத் தொகுத்துப் பார்த்து விட்டீர்கள். தொகுத்த பின் இயக்கியும் பார்த்து விட்டீர்கள். பொறியியல் பகுப்பாய்வு செய்தாகிவிட்டது. அடுத்து தயாரிப்பைத் தொடங்க வேண்டும் அல்லவா? ஆகவே, வடிவமைப்பு மற்றும் வளராக்கத் துறையிலிருந்து (design and development department) உற்பத்தித் துறைக்கு (production department) இந்தத் தயாரிப்பை வெளியீடும் செய்து விட்டீர்கள். பாகங்களின்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 21. 3D CNC நிரல் இயற்றல்

பலவிதமான சிஎன்சி இயந்திரங்கள் கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களை சுருக்கமாகக் கயெக (CNC) எந்திரம் என்று கூறலாம். சந்தையில் கீழ்க்கண்டவாறு பலவிதமான கயெக (CNC) இயந்திரங்களும் அவற்றுக்கான கட்டுப்படுத்திகளும் உள்ளன. கயெக துருவல் எந்திரங்கள் (CNC mills) கயெக கடைசல் எந்திரங்கள் (CNC lathes) இழுவை கத்தி எந்திரங்கள் (DragKnife Cutters)…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 20. 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation) தகடு, பலகை போன்ற தட்டையான கச்சாப்பொருட்களில் வெளி வடிவத்தை வெட்டுவதை பக்கத்தோற்ற வெட்டு (profile cutting) என்கிறார்கள். உள்பக்கத்தை வெட்டுவதை உட்பள்ள வெட்டு (pocket cutting) என்கிறார்கள். இம்மாதிரி வெட்டை சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) பயன்படுத்திச் செய்ய வேண்டுமென்றால் G நிரலில் நாம்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 19. சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். இவற்றுக்கு எவ்வாறு நிரல் எழுதுவது என்பது பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம் கயெக நிரலாக்கம் (CNC Programming). கயெக எந்திரங்கள் பற்றிய அடிப்படைகள் தெரிந்துகொள்ள என்னுடைய எளிய தமிழில் CNC மின்னூலை இந்த…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 18. எண்சார்ந்த பகுப்பாய்வு (Numerical Analysis)

உங்கள் முன்னிருக்கும் ஒரு பொறியியல் வடிவமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுக்கு ஒரு நூதனமான எண்ணம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கருத்துரு நடைமுறையில் செயல்படுமா என்பதை எவ்வாறு நிரூபணம் செய்வது? மேட்லாப் (MATLAB) போன்ற கணித ரீதியான “முன்மாதிரி” மற்றும் சிமுலிங்க் (Simulink) போன்ற அமைப்புகள் “கருத்துருக்கான ஆதாரம் (proof of concept)” அமைப்புகளை…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 17. சிறுகூறு பகுப்பாய்வு (Finite Element Analysis – FEA)

ஒரு பளு ஏற்றிய பாகத்தில் தகைவு (stress) மற்றும் அதன் விளைவுகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அல்லது ஒரு பாகத்தை ஓரிடத்தில் சூடாக்கும் போது அதன் வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை (temperature) எவ்வாறு மாறுபடும் என்று பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம்.  இவற்றை முழுமையான, சிக்கலான வடிவங்களாக இல்லாமல் எளிய…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 16. பொறியியல் பகுப்பாய்வு (CAE)

உங்கள் தயாரிப்பை வாடிக்கையாளர்கள் வாங்கி அவர்களுடைய வேலைகளுக்குப் பயன்படுத்தும்போது சில சமயங்களில் சில பாகங்கள் வளைந்தோ (bending), முறுக்கியோ (twisting), நுண் வெடிப்பு விட்டோ (hairline cracks) அல்லது முற்றிலும் உடைந்தோ (broken) சேதமாகலாம். உத்தரவாதக் காலத்தில் உங்கள் வாடிக்கையாளர்கள் இவற்றை உங்கள் விற்பனையாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்து இலவச மாற்றீடு (free replacement) தயாரிப்பு கேட்பார்கள்….
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 15. ஓபன்ஸ்கேட் (OpenSCAD) & பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio)

ஓபன்ஸ்கேட் நிரல் எழுதி 3D மாதிரி உருவாக்கும் திறந்தமூல CAD மென்பொருள். இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஓபன்ஸ்கேட் மற்ற CAD கருவிகள் போல ஊடாடும் (interactive) மாதிரியாக்கி அல்ல அளவுரு மாதிரியமைத்தல் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டு வரலாம். அதில் அம்சங்கள் அடிப்படை (Feature-based) அல்லது வரலாறு அடிப்படை (History-based) முறையில்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 14. வளைந்த மேற்பரப்பு (Curved surface) மாதிரியமைத்தல்

எல்லா விதமான 3D வடிவங்களையுமே திட வடிவம் உருவாக்கும் உத்திகள் மூலம் தயாரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கார் (car body), முடி உலர்த்தி (hair dryer), தலைக்கவசம் (helmet), மிக்சி (mixie) போன்றவற்றின் மேற்பரப்புகள் சீரற்ற (irregular) வடிவம் கொண்டவை. முன்னர் பார்த்தது போல அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைகளைப்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 13. 2D வரைபடமா அல்லது 3D மாதிரியா?

ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம் என்று முந்தைய கட்டுரையில் கூறினோம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும் என்றும் பார்த்தோம். இம்மாதிரி வரைபடங்களும் மாதிரிகளும் ஒரு நிறுவனத்தின் விலைமதிப்பற்ற அறிவுசார்…
Read more