Category Archives: செயற்கை நுன்னறிவு

தன்னாட்சியுடைய செய்யறிவை(AI)  வலுப்படுத்துதல்: லினக்ஸில் Nvidiaஇன் OpenShellஇற்கான ஒரு வழிகாட்டி

அறிமுகம்- தன்னாட்சியுடைய செய்யறிவு(AI)  முகவர்கள் ஆனவை, பாரம்பரிய நிலையான மென்பொருளிலிருந்து ஒரு அடிப்படை மாற்றத்தைக் குறிக்கின்றன. குறிமுறைவரிகளை ஆய்வு செய்யவும், கணினி கட்டளைகளைச் செயல்படுத்தவும், கோப்புகளை மாற்றியமைக்கவும்,  வெளிப்புற முனையங்களை அழைக்கவும் திறன் கொண்ட இந்த முகவர்கள், கட்டளை வரி ஊடுருவல், எதிர்பாராத கோப்பு மாற்றம்,  நற்சான்றிதழ் வெளிப்பாடு போன்ற தனித்துவமான பாதுகாப்பு சவால்களை முன்வைக்கின்றன. Nvidiaஇன் OpenShell என்பது ஒரு திற மூல (அப்பாச்சி 2.0 உரிமம் பெற்ற) இயக்க நேரமாகும். இது, லினக்ஸின் உள்ளார்ந்த உருவாக்கமைய பாதுகாப்பு அடிப்படைகளின்… Read More »

செய்யறிவின்(AI) மூலம் எழுதப்பட்டதா எனக் கண்டறியும் கருவிகள்

பொதுவாக கட்டுரைகளைத் திருத்துவது, நிறுவனத்தில் பணியாட்களை தெரிவுசெய்வதற்காக வேலைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வது அல்லது இணையம் , சமூக ஊடகங்களில் உலாவரும்போது காணும் கட்டுரைகள் என எதுவாக இருந்தாலும், “இதை செய்யறிவு(AI) எழுதியதா?” என்று நாம் சிந்திக்கும் சூழல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இயல்பான செயலாகிவிட்டது. செய்யறிவின்(AI) எழுத்து நடைக்குச் சில தனித்துவமான அடையாளங்கள் (எடுத்துக்காட்டாக, ’em dash’ எனப்படும் நீண்ட கோட்டின் குறியீடு) இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய செய்யறிவுக்கே(AI) உரிய பாணிகளை வைத்து, ஒரு உரை… Read More »

செய்யறிவுஆனது மனிதர்களை நிர்வகிக்கத் தொடங்கும் போது என்ன நடக்கும்?

செய்யறிவு, அடிப்படைத் தன்னியக்கத்திலிருந்து ஒரு செயல்திறன் மிக்க நிருவாகப் பாத்திரத்திற்கு வேகமாக மாறி வருகிறது. இது சரக்குப் போக்குவரத்து, சில்லறை வணிகம், சுகாதாரம் , அலுவலகப் பணியிடங்கள் போன்ற துறைகளில் ஆள்சேர்ப்பு, பணி அட்டவணை, செயல்திறன் மதிப்பாய்வுகளைக் கையகப்படுத்துகிறது. தருக்க மேலாண்மை உற்பத்தித்திறனையும் புறநிலைத்தன்மையையும் உறுதியளித்தாலும், வளர்ந்து வரும் பல்வேறு ஆய்வுகள் பணியாளர்களுக்கு ஏற்படும் சிக்கலான உளவியல், பொருளாதார, பாதுகாப்பு ஆகிய தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. மறைக்கப்பட்ட செலவுகள்: தகுதிநிலை , ஊதியம் GPT-3 ஐப் பயன்படுத்திய ஆய்வுகள்… Read More »

திற மூல மென்பொருளைக் கொண்டு கலப்பின செய்யறிவின் (AI)-குவாண்டம் உள்கட்டமைப்பை உருவாக்குதல்

பெரிய மொழி மாதிரிகள் (LLMs) , குவாண்டம் கணினி ஆகிய இரண்டு தொழில்நுட்பப் புரட்சிகளும் நவீன எண்ணிம உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்து வருகின்றன. அதிகப்படியான குளிரூட்டும்வசதியின் தேவை காரணமாக நம்முடைய சாதாரன பயன்பாட்டு வளாகத்தில் குவாண்டம் கணினியை நிறுவுகைசெய்வது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால், இந்தத் துறை ஒரு கலப்பின முன்னுதாரணத்தை நோக்கி நகர்கிறது: அதாவது, மேககணினி API-கள் வழியாக, பாரம்பரிய CPU/GPU-க்களை தொலைநிலை குவாண்டம் கணினிசேவையாளர் (QCaaS) தளங்களுடன் இணைந்து செயல்படுவதாகும். திறமூலக் கருவிகள், குறிப்பாக … Read More »

செய்யறிவின்(AI) நுழைவுவாயில்களுக்கு திறமூலம் ஏன் முக்கியமானது

Portkey, Helicone, Cloudflareஎன்பனபோன்றநிர்வகிக்கப்பட்ட செய்யறிவின்(AI) நுழைவுவாயில்கள் பல்வேறு வசதிவாய்ப்புகளை வழங்குகின்றன, ஆனால் அதனோடு கூடவே அதன் அளவு, இணக்கம் ஆகியவை சவால்களையும் கொண்டு வருகின்றன. திறமூல நுழைவுவாயில்கள் அவற்றின் மூன்று முக்கிய நன்மைகளின் மூலம் இவற்றைத் தீர்வுசெய்கின்றன: தரவு இறையாண்மை: நம்முடைய சொந்த VPC-க்குள் நினைவூட்டத் தூண்டல்(prompt ) தரவின் மீது முழுமையான கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது. செலவுத் திறன்: ஒரு கோரிக்கை அல்லது ஒரு இருக்கைக்கான கட்டணத்தை அறவேநீக்கம்செய்கிறது, மூலக் கணக்கீட்டிற்கு மட்டுமே செலவாகும். தனிப்பயனாக்கம்: தனிப்பயன்… Read More »

மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவு(AI)ஆனது நமக்கு ஒரு உதவியாளர்ஆகும், மாற்று அன்று

மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின் பங்கு வேகமெடுத்து வருகிறது, ஆனால் மனிதனின் முடிவெடுக்கும் திறனுடன் இணையும்போதுதான் அதன் உண்மையான வலிமை வெளிப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அது வளர்ந்து வந்த காலகட்டத்தில், மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின்(AI) பங்கு ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது. அது அடிப்படையில் சிறிய பணிகளைத் தானியக்கமாக்குவதற்கான ஒரு துணைவனாகவே இருந்தது. இன்று, மென்பொருளைக் கருத்தாக்கம் செய்யும், உருவாக்கும் , மேம்படுத்தும் விதத்தை அது உண்மையில் மாற்றியமைக்கிறது. Zoho-வின் ZIA , Anthropic-இன் Model Context… Read More »

தன்னையே செயல்படுத்திகொள்கின்ற பைதானின் செயலி(Function)

ஆவணத்தின்சரம்(docstring) செயல்படுத்துவதாக இருக்கும் ஒரு பைதான் செயலியை எழுத முடிந்தால் என்ன செய்வது? உள்ளீடுகள், மீள்வு(return) வகையை வரையறுக்கின்றோம், மேலும் “correct” என்றால் என்ன என்பதை வரையறுக்கும் சரிபார்ப்பு தர்க்கத்தை எழுதுகின்றோம். மீதமுள்ளவற்றை செய்யறிவு(AI) ஆனது தானாகவே கையாளுகிறது. செய்யறிவு(AI) ஆனது செயலிகளுக்குப் பின்னால் உள்ள நிரலாக்க மாதிரி அதுதான், இது Strandsஎனும் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை நூலகமாகும். Strands ஆய்வகம் என்பது ஒரு புதிய GitHub அமைப்பாகும், அங்கு Strandsஇன்முகவரின் SDK இன் பரிசோதனை வசதிகள்… Read More »

சிறந்த ஐந்து திற மூல செய்யறிவு(AI)மாதிரி API வழங்குநர்கள்

அறிமுகம் Open‑weight எனும் மாதிரிகள்ஆனவை செய்யறிவின்(AI) பொருளாதாரத்தையே மாற்றி அமைத்துள்ளன. இன்றைய,மேம்படுத்துநர்கள் Kimi, DeepSeek, Qwen, MiniMax , GPT-OSS போன்ற சக்திவாய்ந்த மாதிரிகளைத் தங்களின் சொந்த உள்கட்டமைப்பில் முழுமையாக இயக்கி, தங்கள் அமைப்புகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு, அவற்றை வளாகத்தில் பயன்படுத்த முடியும். இருப்பினும், இந்தச் சுதந்திரம் ஒரு குறிப்பிடத்தக்க சமரசத்துடன் வருகிறது. அதிநவீன Open‑weight எனும்மாதிரிகளை இயக்குவதற்கு பொதுவாக மிகப்பெரிய வன்பொருள் வளங்கள் தேவைப்படுகின்றன; பெரும்பாலும் நூற்றுக்கணக்கான ஜிகாபைட் அளவுகளுடானான GPU எனும்நினைவகம்… Read More »

செய்யறிவினை(AI) வளாககணினியில் இயக்க பயன்படுத்தும் நான்கு திறமூலபயன்பாடுகள்

சமீபகாலமாக செய்யறிவு(AI) தளங்கள் திடீரென பெருகத் தொடங்கியபோது, ​​அவற்றை நமது பணிப்பாய்வுகளில் பயன்படுத்துவதில் சிலருக்கு அவ்வளவு விருப்பமில்லை. மேலும், அந்த உணர்வு இன்னும் மாறவில்லை, குறிப்பாக பெரும்பாலான மென்பொருள் , வன்பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளில் செய்யறிவினை திணிக்கிறார்கள். இருப்பினும், பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்லோரும் திணிக்க முயற்சிக்கும் செய்யறிவு(AI) பயன்பாடுகளைப் போலவே பெரிய மொழி மாதிரிகள், உருவப்படங்களையும் நாம் ஒரே குடையின் கீழ் தொகுக்க மாட்டோம். ஏனென்றால் LLMகள் ( நீட்டிப்பு… Read More »

GPT4All ஐ ஆய்வுசெய்தல், உள்ளூர் LLM மேசைக்கணினியின் செயலி

கற்காலம் முதல் தற்போதைய மின்னணு தகவல் காலம் வரை, வாழ்க்கையை எளிதாக்குகின்ற குறிப்பிடத்தக்க பல்வேறு வகைகளிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களை மனிதகுலம் கண்டுவருகின்றது. அவ்வாறான நிலையில் தற்போது பல்வேறு செய்யறிவு(AI) கருவிகள் நம் முடையவிரல் நுனியில் கிடைக்கின்றன,செய்யறிவு(AI) bots அல்லது உதவியாளர்கள் நமக்கு நினைவூட்டல்களை அனுப்புவதன் மூலமும், கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், மேலும் பலவற்றின் மூலமும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிட உதவுகின்றன. செய்யறிவு(AI) கருவிகளின் பயன்பாடுகளின் குறிப்பிடத்தக்க திறன்களில் மனிதனைப் போன்ற உரையை உருவாக்குதல், மொழி மொழிபெயர்ப்புசெய்தல்,… Read More »