எளிய தமிழில் WordPress- 13

தலைப்பு (Header) 

சில தீம்களில் இவ்வசதி இருக்காது. இவ்வசதி உங்கள் தீமில் இருந்தால், உங்கள் தளத்தின் தலைப்பு குறித்த அமைப்புகளை (settings) மாற்றலாம். அதாவது தலைப்புப் படங்கள் (Header Images), தலைப்பு, tagline ஆகியவற்றை மாற்றலாம்.

header

பின்புலம் (Background)

தளத்தின் பின்புலத்தை மாற்றியமைக்க (பின்னணி நிறம் / படம்) இவ்வசதி உதவும்.

எடிட்டர் (Editor):

எடிட்டர் என்பது நாம் CSS PHP முதலான கணினி மொழிகளைப் பயன்படுத்தி தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம். அதற்கு அம்மொழிகள் குறித்த அடிப்படை அறிவு அவசியம். இதில் ஏதேனும் தவறான மாறுதல்கள் ஏற்பட்டால் அது தளத்தின் செயல்பாட்டை முடக்கும்.
editor

 

செருகுநிரல்கள் (Plugins):

செருகுநிரல்கள் என்பன விதவித செயல்பாடுகளைக் கொண்ட சிறிய நிரல்களாகும். அவை உங்களின் தளத்தின் செயல்பாடுகளை அதிகப்படுத்த, துரிதப்படுத்த பயன்படலாம்.

உதாரணமாக, Akismet எனும் செருகுநிரல் இயல்பாகவே (Default) இடம்பெற்றிருக்கும். அது தளத்திற்கு வரும் எரிதங்களை (எரிதம் என்பது Spam (Mail/Comments)) தடுக்கும்.

இவ்வாறான செயல்பாடுகள் உள்பட பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கான பல்வேறு விதமான செருகுநிரல்கள் அதிகாரப்பூர்வ வேர்ட்பிரஸ் தளத்தின் செருகுநிரல் பக்கத்தில் கிடைக்கும். (முகவரி: wordpress.org/plugins)

 

செருகுநிரல்களை தரவிறக்கிய பின், அதை இப்பக்கத்தில் (Dashboard-ல் Plugins பக்கம்) செயல்பட (Activate) அனுமதிக்கலாம்.

plugins

Activate செய்தால் மட்டுமே இவை செயல்படும். ஒருவேளை அவை தேவையில்லை எனில்  Deactivate செய்யலாம். Deactivate செய்தவற்றை சமயங்களில் Delete கூட செய்யலாம். (பி.கு: Deactivate செய்தவற்றை எப்போது வேண்டுமானாலும் Activate செய்யலாம். Delete செய்தால் மீண்டும் பயன்படுத்த, புதிதாக தரவிறக்க வேண்டும். )

%d bloggers like this: