எளிய தமிழில் WordPress- 16

Tools

Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு.

Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில்,  அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும்.

tool

Categories and Tags Converter:

Categories and Tags Converter என்பது ஏற்கனவே உள்ள வகைகளை வகைச்சொற்களாகவும், வகைச்சொற்களை வகைகளாகவும் மாற்ற உதவும் எளிய கருவியாகும்.

 

Import

Import என்பது வேறொரு வலைப்பதிவு பக்கங்களை (உதாரணமாக – Blogger, Tumbler) வேர்ட்பிரஸ்-க்கு மாற்ற உதவும்.

import

Export

இது கிட்டத்தட்டஅப்படியே Import-ன் எதிர் செயல்பாடு. இன்னொரு வேர்ட்பிரஸ் தளத்திற்கு உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தின் பக்கங்களை, கமெண்ட்களை (ஏறக்குறைய அனைத்தையுமே) தனிக்கோப்பாக மாற்றிக் கொடுக்கும்.

export

இவ்விரண்டு செயல்களைச் செய்ய wordpress importer எனும் செருகுநிரலை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

%d bloggers like this: