எளிய தமிழில் WordPress-8

Categories எனப்படும் (பதிவின்) வகைகளைப் பற்றிய எளிய அறிமுகம் ஏற்கனவே நமக்கு உண்டு. ஆதலால், இன்னும் கொஞ்சம் விரிவாக அதைப் பார்ப்பதில் சிரமம் ஏதுமில்லை.

பதிவின் வகையைத் தீர்மானிப்பது பதிவின் உள்ளடக்கம் தான் என்றாலும், தளத்தில் அதை நேர்த்தியாக tags-2தொகுக்க categories பக்கம் உதவும். அப்பக்கத்திற்குச் செல்ல

your_blog.wordpress.com//wp-admin/edit-tags.php?taxonomy=category என்ற முகவரியை உள்ளிட வேண்டும்.

your_blog எனுமிடத்தில் உங்கள் தளத்தின் பெயரை கொடுக்க வேண்டும்.
இந்த உரலி நீங்கள் log in செய்திருந்தால் மட்டுமே செயல்படும்.

இந்த முகவரியை நினைவில் கொள்வது கடினம். எனவே Dashboard-ல் Posts எனும் பிரிவைத் தேர்வு செய்தால் அதில் உட்பிரிவாக Categories இருக்கும். அதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மேற்கண்ட பக்கத்தை அடையலாம்.

 

புதிதாக வகைகளைச் சேர்க்க அப்பக்கத்திலேயே வழிகாட்டும் விதமாக குறிப்புகள் உண்டு.

Name: அந்த பதிவின் வகை எந்தப் பெயரில் இருக்கவேண்டும் என்பதை இங்கே பதியலாம்.

Parent: வகைப்பிரிவை உட்பிரிவாக கொடுக்கலாம் என விரும்பினால்  Parent-ல் பதியலாம். உதாரணமாக, இளையராஜா எனும் வகையை திரைப்பாடல்கள் எனும் Parent –ன் கீழ் உட்பிரிவாக கொடுக்கலாம்.

Description: வகை குறித்த குறிப்பை இங்கே பதியலாம். இது விருப்பத்திற்குட்பட்ட்து. சில தீம்கள் இவற்றை காண்பிக்கக் கூடும்.

categories

இதிலும் Edit, Quick Edit, Delete, View தேர்வுகள் உண்டு.

குறிப்பு:
நீங்கள் குறிப்பிட்ட வகைப்பிரிவை அழித்தால், அதன்கீழ் உள்ள பதிவுகள் அழியாது. மாறாக அவை Uncategorized பிரிவில் இணையும்.

அடுத்ததாக, பதிவு எழுதும்போதே வகைப்பிரிவுகளை கொடுப்பதைப் பார்க்கலாம்.
புதிய பதிவு எழுதும் இடத்திற்குச் சென்று பதிவினை முடித்தவுடன் வலப்பக்கம் படத்தில் கண்டவாறு ஒரு பெட்டி காணப்படும். ஏற்கனவே உள்ள வகைகளைக் கொடுக்க ’டிக்’ செய்யலாம் அல்லது புதிதாக அங்கேயே வகையை உருவாக்கவும் வசதி உண்டு. அதன் கீழே உள்ள பெட்டியில் புதிய வகையை உள்ளிட்டு Add new category எனும் பட்டனை அழுத்தினால் புதிய வகைப்பிரிவு உருவாகும். எந்த வகையையும் கொடுக்காவிடில் இயல்பாகவே Uncategorized தேர்வாகும். இதை எப்போது வேண்டுமானாலும்  மாற்றிக்கொள்ளலாம்.

 

 

வகைச்சொற்கள் (Tags):

வகைப்பிரிவுகளைப் போல வகைச்சொற்களும் ஒரு பதிவிற்கு முக்கியமானதாகும். தேடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான சொற்களை இங்கே கொடுக்கலாம். இதற்கு        your-blog-name.wordpress.com/wp-admin/edit-tags.php என்ற இணைப்பில் வகைச்சொற்களை இணைக்கலாம். அதற்கு பதிலாக Dashboard –ல் Posts எனும் பிரிவின் உட்பிரிவாக உள்ள Tags –ஐ கிளிக்கினால் இதே இணைப்பிற்கு எளிதாகச் செல்லலாம்.

வகைப்பிரிவுகளைப் போலவே இதிலும்

Name: அந்த பதிவின் வகைச்சொல் எந்தெந்த பெயர்களில் இருக்கவேண்டும் என்பதை இங்கே பதியலாம்.

Description: வகைச்சொல் குறித்த குறிப்பை இங்கே பதியலாம். இது விருப்பத்திற்குட்பட்டது.

ஆகியவற்றைக் கொடுத்து வகைச்சொற்களைக் கொடுக்கலாம். இதிலும் வழக்கமான Edit, Quick Edit, Delete, View ஆகிய தேர்வுகள் உண்டு.

tags

இதுதவிர பதிவு எழுதும் இடத்திலேயே நாம் வகைச்சொற்களை உள்ளிடலாம். முன்பு பார்த்த Categories பெட்டிக்கு அடுத்தாற்போல Tags பெட்டி உண்டு. அதிலும் வழக்கம்போல உள்ளிடலாம்.

Choose from the most used tags என்றொரு வசதி உண்டு. அதை கிளிக்கினால், (அதிகம்) பயன்படுத்திய வகைச்சொற்களை எளிதாக உள்ளிடலாம்.

%d bloggers like this: