நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?

நாம் அனைவரும் நல்லவர்களா? நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா? இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7  ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு தெரியாமல், தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றீர்கள்.5000 ருபாய் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்க நான் என்ன டாட்டா வா பிர்லா வா என்று விதண்டாவாதம் பேசாமல், நீங்கள் நல்லவராக மாற என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசியுங்கள். விண்டோஸ் மட்டும் தான் இயங்குதளமா? இல்லையே. விண்டோஸ் அல்லாத பல இயங்குதளங்களை பற்றி நான் கணியத்தில்

ஏற்கனவே பார்த்து உள்ளோம். ஆனால் ஏன் நீங்கள் அவற்றுக்கு மாற வேண்டும் என்பதை பற்றி இப்போது பாப்போம்.

 

விண்டோஸ் வைரஸ்களுக்கான வாழ்விடம்
விண்டோஸ் இயங்குதளத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 230 கோடி என்று சொல்லுகிறது ஒரு கருத்துகணிப்பு. இந்த வைரஸ்கள் நம் வாழ்க்கையை மிகவும் கஷ்டபடுத்தும். நீங்கள் ஒரு படம் பார்க்க நினைத்தால் அதனை செய்ய இயலாது. ஏன், உங்கள் கணிப்பொறியை துவக்கவே பல நிமிடங்கள் ஆகலாம். இவை அனைத்தும் நமக்கு தலை வலியை தான் தரும். லினக்ஸ் மற்றும் மாக் போன்று இயக்குதளங்கள் மிகவும் அதிவேகமானவை, அவற்றுள் வைரஸ்களுக்கான பேச்சிற்கே இடம் இல்லை. இன்னும் ஏன் தயக்கம்? உடனே உபுண்டு வை பதிவிறக்கம் செய்யுங்கள்.

மென்பொருட்களும் இலவசம் தான்

விண்டோஸ் ஐ நிறுவிய பின் நான் பல்வேறு மென்பொருட்களை நிறுவ வேண்டியுள்ளது. MS ஆபீஸ், ஆண்டி-வைரஸ் என பல்வேறு மென்பொருட்களை நாம் பணம் கொடுத்தோ அல்லது சட்ட விரோதமான வழியிலோ நிறுவ வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் லினக்ஸ் ஐ நிறுவினால், அதன் கூடவே LibreOffice போன்ற பல்வேறு மென்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், நீங்கள் மேலும் பல புதிய மென்பொருட்களை இலவசமாக பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

லினக்ஸ் இல் வன்பொருள் முக்கியத்துவம் இல்லை.


விண்டோஸ் 7 பழைய, வயதான கணினிகளில் ஓடாது. ஏன் புதிய கணினிகளில் ஓடவே அது தயங்கும். ஆனால் லினக்ஸ் அப்படி இல்லை. மடிக்கணினியாக இருந்தாலும் சரி பெரிய வன்பொருட்களை கொண்ட கணினியாக இருந்தாலும் சரி, லினக்ஸ் இன் பயன்பாடு ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கும். அது அனைத்து தளங்களிலும் ஒரே மாதிரி தான் செயல் படும். எனவே, இனி நீங்கள் பழைய கணினியில் ஆமை வேகத்தில் செயல்படும் விண்டோஸ் ஐ வைத்து கொண்டு மாரடிக்க தேவையில்லை.

லினக்ஸ் நம்முடையது

விண்டோஸ் என்பது மூன்றாவது மனிதனை போல. நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு பணம் கொடுத்தாக வேண்டும். ஆனால் லினக்ஸ் அப்படியில்லை. அது நம்முடையது. நாம் உருவாக்கியது. நம்மை போன்று பல்வேறு கணினி பயன்பாட்டார்களும், வல்லுனர்களும் சேர்ந்து உருவாக்கிய ஒரு பொக்கிஷம் தான் லினக்ஸ். அதனை பயன் படுத்தவேண்டியது நம்முடைய கடமை.

 

 

 

ஸ்ரீராம் இளங்கோ

காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.
இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.
எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr

மின்னஞ்சல்  : sriram.04144@gmail.com

 

%d bloggers like this: