வரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும்.
தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த மென்பொருள் சுமார் 3GB அளவு கொண்டது. மேலும் அதனை பயன்படுத்த நீங்கள் Rs . 4000 வரை செலவு செய்ய நேரிடலாம். ஆனால் அதே காரியங்களை செய்யகூடிய பல FOSS மென்பொருட்கள் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது.
இதோ, பொறியியல் மாணவர்களுக்கு உதவும் சில FOSS மென்பொருட்களை பற்றிய சிறு குறிப்புகள்.
1 . GNU Octave : நீங்கள் MATLAB இல் தொடங்கிய ஆவணங்களையும் இந்த GNU Octave இல் காண முடியும். MATLAB இல் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. MATLAB போலவே வரைபடங்களை இந்த மென்பொருளில் முப்பரிமாணத்தில் காணலாம். இந்த மென்பொருள் MATLAB ஐ காட்டிலும் சுமார் மூன்று மடங்கு கம்மியான இடத்தை தான் அடைக்கும் (500 MB மட்டுமே).
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் –
www.gnu.org/software/octave/download.html
GNU octave இன் முப்பரிமான output
2 . OpenSCAD : இன்றைய தினத்தில் CAD பயன்படுத்தாத பொறியியல் மாணவர்களை பார்ப்பது அரிது. இயந்திர பொறியாளர்கள் மட்டுமின்றி மின்னியல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர்களுக்கும் CAD ஒரு இன்றியமையாத மென்பொருளாக மாறி விட்டது.
OpenSCAD என்பது CAD வடிவமைப்பை துல்லியமாக, முப்பரிமாணத்தில் செய்ய கூடிய ஒரு மென்பொருள். நீங்கள் அளிக்கும் திட்ட செயலாக்கத்தை (script codes ) ஐ வைத்து OpenSCAD உங்களுக்கு முப்பரிமான வடிவமைப்பை தரும். இது Windows , Linux மற்றும் Mac ஆகிய அணைத்து இயக்கு தளங்களிலும் செயல்படும்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் – www.openscad.org/
OpenSCAD இன் இயந்திர வடிவமைப்பு
3 . Genius Maths Tool – கடினமான, நெடிய கணக்குகளை தீர்க்க நம்முடிய scientific calculator களே தடுமாறும். அந்த நேரத்தில் நமக்கு உதவியாக இருப்பது தான் இந்த Genius Maths Tool . இது “உபுண்டு (ubuntu )” இயக்கு தளத்தின் “software center ” இல் கிடைக்கும்.
கடினமான integration , differentiation மட்டுமின்றி முப்பரிமான படங்கள் மற்றும் statistics ஆகியவற்றை இயக்கம் திறமை கூட இந்த மென்பொருளுக்கு உண்டு.
இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லவும் – www.jirka.org/genius.html
Genis Math Tool இன் ஒரு function
ஸ்ரீராம் இளங்கோ
காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.
இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.
எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr
மின்னஞ்சல் : sriram.04144@gmail.com