விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்

கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ ஏறக்குறைய 13,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. எங்களிடம் 679 வழங்கிகளும் 95 பணியாளர்களும் உள்ளனர்.


 

உலகளாவிய இணையதளங்களில், விக்கிபீடியா 5 ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.

வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.

விக்கிப்பீடியா அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.

நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை லாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் வித்தியாசமான ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாங்கள் பல வருடங்களாக இதை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாங்கள் எங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுகிறோம். விரயமாக்குதல் பிறரது தொழில் – எங்கள் வழக்கமல்ல.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் இந்திய ரூபாய் 250 கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவருக்கும் அது சாத்தியம் அல்ல. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.

வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் இந்திய ரூபாய் 250/-, 500/-, 1000/- அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.

நன்றி,

ஜிம்மி வேல்ஸ்
விக்கிப்பீடியா நிறுவனர்

 

உங்கள் நன்கொடைகள் எங்கு செல்கின்றன

தொழில்நுட்பம்: வழங்கிகள், பட்டையகலம், பராமரிப்பு, மேம்பாடு. விக்கிப்பீடியா உலகின் #5 ஆவது பெரிய இணையதளம் ஆகும். இதனை நடத்த ஆகும் செலவு உலகின் பிற முதன்மை இணையதளங்களை நடத்த ஆகும் செலவோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு.

ஊழியர்கள்: பிற முதல் 10 இணையதளங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டுள்ளன. எங்களிடம் 100க்கும் குறைவானவர்களே உள்ளனர். இதனால் நீங்கள் அளிக்கும் நன்கொடை எங்கள் செயல்திறன் மிக்க இலாப நோக்கற்ற அமைப்பில் செய்யும் பெரும் முதலீடாக அமைகிறது.

 

donate.wikimedia.org/wiki/Special:FundraiserLandingPage?uselang=ta

%d bloggers like this: