170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர்

170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர்

“இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் பயனுறும் வகையில் Open Source மென்பொருள்கள் பயன்பாடு அமையும்” என அப்துல் கலாம் ஒரு முறை சொல்லி இருந்தார். அவரது வார்த்தைகள் மெய்யாவது கல்வி நிறுவனங்கள் Free and Open Source மென்பொருள்களை பயன்படுத்த துவங்குவதில் தான் உள்ளது என பாஸ்கர் செல்வராஜ் கருதுகிறார், இந்த எண்ணமே அவரின் LinuXpert நிறுவனம் துவங்க அடிப்படை காரணமாக அமைந்தது. பாஸ்கர் செல்வராஜின் நிறுவனம் கல்விச் சாலைகளில் மாணாக்கர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு Open source மென்பொருள்களை குறித்து பயிற்றுவிக்கிறது. இளைஞர்கள் இடையே Linux பயன்பாட்டை ஊக்குவிப்பது இதன் நோக்கம். அவருடனான ஒரு பேட்டியின் தமிழாக்கம் இங்கே.

எப்போதிலிருந்து கட்டற்ற மென்பொருள்களை பயன்படுத்துகிறீர்கள்?

எனக்கு கட்டற்ற இயங்கு தளம் லினக்சின் அறிமுகம் மே 1998 ல் கிடைத்தது. ஒரு கணினி தொழில்நுட்ப மாதாந்திரி உடன் இலவசமாக வழங்கப்பட்ட Red Hat Linux 5.0 தான் முதல் அறிமுகம்.

இந்த அறிமுகம் எப்படி தீவிர ஆர்வமாகவும், உங்கள் தொழிலாகவுமே மாறியது?

முதலில் நான் system administrator என்ற பொறுப்பில் இருந்தேன். அதில் எனது பணி இயங்கு தளங்களை நிர்வகிப்பதும் அதில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்வதும் தான். கட்டண இயங்கு தளங்களில் உண்டான சிக்கல்கள், இலவச கட்டற்ற இயங்கு தளங்களில் இல்லாதிருப்பதை கண்டேன், பெரு வியப்புக்கு உள்ளானேன். தொடர்ந்து மென்மேலும் கற்றுக் கொண்டேன். இப்போது லினக்ஸ் தவிர முன்பு பயன்படுத்திய எந்த இயங்குதளங்களையும் பயன்படுத்துவதே இல்லை. இயங்கு தளங்களுடனான எனது எட்டு வருட பணி அனுபவமும், கட்டற்ற இயங்கு தளங்களில் இருந்த அறிதலும், ஆர்வமும் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து வெளியேறி LinuXpert நிறுவனத்தை துவங்கிடும் தைரியத்தை தந்தது.

உங்களின் ஆரம்ப கால பணிகள் எப்படி இருந்தது?

2003 ல் நிறுவனம் துவங்கிய புதிதில், என்னிடம் project செய்வதற்காக வந்த கல்லூரி மாணவர்களிடம் FOSS பற்றி அறிமுகப் படுத்தினேன். அவர்களின் கல்லூரியில் FOSS பற்றி விளக்க வகுப்புகள் நடத்தும் வாய்ப்புகளை கேட்டு பெற்றேன்.

எப்போதிலிருந்து தமிழக கல்லூரிகளில் FOSS வகுப்புகளை நடத்த துவங்கினிர்கள்?

முன் நடத்திய பயிற்று வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு, ஆர்வம் இருந்ததால் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் எனக்கு அழைப்புகள் தேடி வந்தது. எங்கள் நிறுவனத்தின் பெயரும் வளர்ந்தது. எங்களது சோதனை சாலைகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு FOSS மென்பொருள்களை பயன்படுத்தி அவர்களை பழகச் செய்வதை முக்கிய செயலாக கொண்டோம். கடந்த வருடத்தில் மட்டும் 170 தொழில்நுட்பக் கல்லூரிகளில் இது குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளோம். இதன் மூலம் 6500 கணினிகளில் FOSS இயங்கு தளம், மென்பொருள்களை நிறுவியுள்ளோம். அயல் நாட்டு மாணவர்கள் FOSS மென்பொருள்களை உருவாக்கி பங்களித்து வருகையில் நம் மாணவர்கள் அவை குறித்த அறிமுகமே இன்றி இருப்பது வருந்ததக்கது.

துவக்கத்தில் ஆதரவு எப்படி இருந்தது? என்னென்ன சோதனைகளை சந்தித்தீர்கள்? எப்படி அவற்றை சமாளித்தீர்கள்?

இப்போது உள்ளது போல் துவக்கத்தில் ஆதரவு இல்லை. ஆசிரியர்களை உடன்பட செய்வது பெறும் சவாலாக இருந்தது. மேலும் 2003 ஆம் ஆண்டில் இருந்த FOSS மென்பொருள்கள் கல்விச் சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கவில்லை. தேவைகள் தானே தேடல்கள். தொடர்ந்து FOSS கருவிகள் மேம்பாடு அடைந்த வண்ணம் உள்ளன. இப்போதைய கணினி தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளன. சில சமயங்களில் ஆசிரியர்களை பல முறை சந்தித்து பேச வேண்டியது இருக்கும். FOSS களின் பயன்களை விளக்கி, அவர்களின் ஐயங்களை தெளிவுபடுத்தி அதற்கான விளக்கங்களை தேடி என அதிக நேரம் செலவிட்டேன். AICTE பரிந்துரைத்த மென்பொருள்களின் பட்டியல் [PDF]. பயனுள்ளதாய் இருந்தது.

www.aicte-india.org/downloads/Commercial%20Software.pdf

உங்களின் முன்முயற்சி வெற்றி பெறும் என எப்படி எதனால் நம்பினிர்கள்?

கல்விச்சாலைகளில் இருந்து பரவலான ஆதரவு கிட்டியதும் எம் முயற்சி வெற்றி பெறும் , மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. கல்வியாளர்கள் மாணவர்கள் உடன் அதிக நேரம் செலவிடலானேன். இந்திய அளவில் பரவலாக்கும் நம்பிக்கை இருக்கிறது.

மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் FOSS பயன்படுத்த எப்படி ஊக்குவிப்பீர்கள்?

புதிய விசயங்களை கற்றுக் கொள்வதில் மாணவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. .எப்போது கல்வி நிலையங்களுக்கு சென்றாலும் கையோடு லினக்ஸ் CD/DVD கள், மற்றும் FOSS மென்பொருள்களை கொண்டு செல்வேன். ஒரு மாணவரை தேர்வு செய்து அவர் மூலம் அங்குள்ள ஏதேனும் ஒரு கணினியில் நிறுவ சொல்லித் தந்து மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்துவேன். FOSS மூலம் முந்தைய கல்வி நிலையங்கள் அடைந்த நன்மைகளை விளக்கி அதை நீங்களும் பெற வேண்டும் என ஆர்வமூட்டுவேன், FOSS ல் திறமைகளை வளர்த்துக் கொள்வது பற்றியும், வேலை வாய்ப்புகளை குறித்தும் தகவல்கள் பகர்வேன். நல்ல மாற்றங்களை காண்கிறேன்.

FOSS lab நடத்துவதற்கு என்ன மென்/வன் பொருள்கள் தேவை? எவ்வளவு செலவாகும்?

குறிப்பிட்ட தேவைகள் என்று எதுவும் இல்லை. இப்போது உள்ள Configurationகள் போதுமானவையே. Fedora repository இல் இருந்து 6400 மென்பொருள்கள் பதிவிறக்கவும், தொலைவிலிருந்து நிறுவவும் இயலும். ஒரு வேலை பழைய கணினிகள் எனில் LTSP (Linux Terminal Server Project) நிறுவலாம். கட்டண மென்பொருள்களுக்கு office, multimedia, Internet, development tools, databases, programming languages, scientific and engineering software இணையான, கல்வித்தேவைகளுக்குரிய அத்தனை மென்பொருள்களையும் FOSS மாற்று மென்பொருள்கள் கொண்டு பூர்த்தி செய்ய இயலும். முழு கல்லூரிக்குமான தேவைக்கு FOSS server தனை அனுமதி பெற்று நிறுவிக் கொள்ளலாம்.

இந்த FOSS களால் மாணவர்களுக்கும், கல்விசாலைகளுக்கும் என்ன நன்மைகள்?

  1. எல்லா தேவைகளும், ஐயங்களுக்கான தீர்வுகளும் இணையம் வழி எளிதாக பெறலாம். அதற்கான அணுகுமுறைகள் மிக எளிதானவை.
  2. FOSS இயங்கு தளத்தில் தீங்கு தரும் virus கள் பற்றிய கவலை வேண்டவே வேண்டாம்.
  3. FOSS lab server இயல்பாகவே DHCP, DNS, LDAP, Web server, QMail for Intranet mail, Samba server, DSpace with video streaming, என Network வசதிகள் அனைத்தும் உள்ளிடப் பெற்றது.

உங்களது அனுபவத்தில் யாரேனும் மீண்டும் கட்டற்ற இயங்கு தளத்திலிருந்து கட்டண மென்பொருள்களுக்கு மாறி உள்ளார்களா?

சொற்பத்திலும் சொற்பமாக.

மற்ற மாநிலங்களுக்கும் உங்கள் பணியை விரிவுபடுத்துவீர்களா?

நிச்சயமாக. உள்ளூர் லினக்ஸ் பயனர் குழுக்களின் உதவியுடன் மற்ற மாநிலங்களிலும் நடத்தும் எண்ணம் உள்ளது. தமிழகத்திலேயே 50 பல்கலைகழகங்கள், 500 பொறியியல் கல்லூரிகள், 300 க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்கள், 650 க்கும் மேற்பட்ட களை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அடுத்த மூன்று வருடத்தில் 500 FOSS labs களை நடத்துவது என்ற இலக்கு வைத்துள்ளோம். லினக்ஸ் பயனர் குழுக்களின் பங்களிப்பு அதிகரிக்கும் போது எங்களின் முன்முயற்சி நாடு தழுவிய அளவில் வெற்றி பெறும் என நம்புகிறோம்.

அரசு, அரசு நிறுவனங்களின் ஆதரவு உள்ளதா?

இல்லை. ஆனால் அண்ணா பல்கலை தன் பாடத்திட்டத்தில் FOSS தனை சேர்த்துள்ளதால் அதன் ஆதரவோடு 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் எங்கள் வகுப்புகளை நடத்தினோம்.

இளம் வயதில், FOSS பற்றி அறிவதால், மாணவர்களுக்கு என்ன பயன்கள் கிடைக்கும் ?

நிறைய இருக்கிறது. என்னுடைய மாணவர் ஒருவர் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் போது GNU/Linux , FOSS tools பற்றி கற்றிட ஆரம்பித்தார். இரண்டாம் ஆண்டில் பல மென்பொருள்களை வடிவமைத்து இருந்தார். அதை இப்போது நாங்கள் எங்கள் FOSS lab server களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். Fedora project இலும் பல பங்களிப்புகள் செய்துள்ளார். இப்போது தனியே ஒரு நிறுவனத்தை துவங்கி FOSS பற்றிய ஆலோசனைகள் வழங்கி வருகிறார். நாங்களும் அவரின் வாடிக்கையாளர்களில் ஒருவர். job seeker என்பதிலிருந்து entrepreneur என்ற நிலைக்கு FOSS மாற்றி விடுகிறது.

ILUG-C இல் தீவிர உறுப்பினராக உங்களின் பங்களிப்பு என்ன?

எங்களது நிறுவனம் 2005 லிருந்து ILUG-C ilugc.in இல் இணைந்துள்ளது. எங்களது முயற்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் ILUG-C மின்னஞ்சல் குழுமத்தில் இணைந்துள்ளார்கள், FOSS சமூகத்தின் தீவிர உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். ILUG-C உதவி இல்லாமல் எங்களது முயற்சி இத்தகு வெற்றி பெற்றிருக்க இயலாது. 2000 வருடத்திலிருந்தே ILUG-C தங்களின் உறுப்பினர்கள் மூலமாக கல்விச்சாலைகளில் FOSS தனை பரவலாக்கும் முயற்சியை செய்து வருகிறது.

 

என்னுடைய பார்வையில், FOSS ஆனது நமது கணினியை பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை தருகிறது. எதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சுதந்திரம் FOSS இல் உள்ளது. கட்டண மென்பொருள்களில் இந்த அறிவுசார் சுதந்திரம் இல்லை. ஆனால் FOSS பயன்படுத்தும் சுதந்திரம் முதலில் மாணவர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

தொடர்புக்கு : baskar@linuxpert.in

ஆங்கில மூலம்: www.linuxforu.com/2011/09/baskar-selvaraj-interview-foss-power-in-170-tamil-college-labs/

 

தூத்துகுடியில் வாழும் மீரான். டுவிட்டரில் @karaiyaan என செயல்படும் பிரபல டுவிட்டர். தமிழ் டுவிட்டர்களை ஒன்றிணைக்கும் twitamils.com எனற தளத்தை நடத்துபவர்.

 

மின்னஞ்சல் : karaiyaan@gmail.com

 

%d bloggers like this: