Command Line அற்புதங்கள்

உங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை உடனடியாக மறக்க வேண்டுமா ???

உங்களது டெர்மினல் ‘sudo’ கடவுச் சொல்லை  உடனடியாக மறக்க வேண்டுமா ???
நாம் டெர்மினலில் கடவுச் சொல்லை கொடுத்தப் பின்பும், பொதுவாக நிமிடங்கள்

நினைவில் வைத்துக்  கொள்ளும்
சில இக்கட்டான நிலைகளில் நாம் அதை மறக்கச் செய்ய வேண்டுமெனில், கீழ்கண்ட
அதற்க்கு கட்டளை உதவும்.

$ sudo -k

 

டெர்மினலில் அலாரம் தேவையா???

 

நம்மில் சிலர் டெர்மினலில் உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பித்தால் நேரம்
செல்வதே தெரியாமல் வேலை செய்கின்றோம்.”நேரம் சென்று கொண்டே  இருக்கின்றது
கிளம்புகள்” என்று அறிவுறுத்த யாரும் இல்லையா??
கவலை  வேண்டாம்.நமக்காகவே உள்ளது  “leave” எனும் கட்டளை. 😉

$ leave +15

 

Ex:

shrini@arul-desktop:~$ leave +5
shrini@arul-desktop:~$ Alarm set for Thu Sep 30 14:09. (pid 3092)
Time to leave!

Just one more minute!

Time to leave!

Time to leave!

Time to leave!

That was the last time I’ll tell you.  Bye.
 

Time to leave!

Time to leave!

 

லினக்ஸ் ப்ரோக்ராமேர்ஸ் கையேடு

லினக்ஸ் ப்ரோக்ராமேர்ஸ் கையேடு

 $ man hier

இது பைல் சிஸ்டம்-ன் அமைப்பை பற்றி விளக்குகிறது.
/bin, /usr/bin, மற்றும் /usr/local/bin போன்றவறிக்குள்ள வித்தியாசங்களை
கண்டறியவும் ,
/sbin dir-
னுள் என்ன உள்ளது?? போன்றவைகளை இந்த கட்டளையின் மூலம் காணலாம்.

history கட்டளைக்கு timestamp-ஐ சேர்க்க

history எனும் கட்டளை பொதுவாக நாம் செயல்படுத்திய கட்டளைகளின் வரிசை
எண்ணையும் கட்டளைகளையும் மட்டுமே காண்பிக்கும்.

பின்வரும் கட்டளையை டெர்மினலை திறந்து செயல்படுத்தினால், அது history
கோப்பில் நாம் எந்த நேரத்தில்(timestamp) கட்டளைகளை

செயல்படுத்தினோம்
என்பதையும்  சேர்த்து காண்பிக்கும்.

$ export HISTTIMEFORMAT=”%F %T ”

உதாரணம் :

 759  2010-08-24 21:42:14 ls -lct /etc | tail -1 | awk ‘{print $6, $7, $8}’
 760  2010-08-24 23:11:25 history
 761  2010-08-24 23:11:29 export HISTTIMEFORMAT=”%F %T ”
 762  2010-08-24 23:11:32 history

குறிப்பு: இந்த கட்டளை தற்காலிகமாக மட்டுமே செயல்படும். நிரந்தரமாக இதை
செயல்படுத்த செய்ய வேண்டும் எனில் .bashrc –ல் இந்த கட்டளையை சேமிக்க
வேண்டும்.

விம்-ல் ஒரு கோப்பை உருவாகும் போது கடவு சொல்லை சேர்க்க வேண்டுமா ?

விம்-ல் ஒரு கோப்பை உருவாகும் போது கடவு சொல்லை சேர்க்க வேண்டுமா ??

இதற்க்கு என்று தனி மென்பொருளின் தேவையோ அல்லது மிகுதியான வேலை பளுவோ இருக்காது.

டெர்மினலில் கிழ்கண்டவாறு திறக்கவும்

$ vim -x <FILENAME>

இப்போது உங்கள் கோப்பு மறைக்குறியீடாக்கம் செய்யப் பட்டு இருக்கும்.

 

 

%d bloggers like this: