Scribus கற்றலின் இந்த தொடரின் இறுதியில், ஒரு முழு அலங்கரிக்கப்பட்ட பதிப்பினை உங்களால் உருவாக்க முடியும். நிறங்களுடன் கூடிய புத்தகமோ (அ) கருப்பு வெள்ளை நிற செய்திக்கடிதமோ, இதில் உள்ள அடிப்படைகள் அனைத்தும் ஒன்றே. ஆதலால் நாம் முதலில் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வோம். இதற்காக நாம் scribus-ng என்ற மென்பொருளை இங்கே பயன்படுத்தியுள்ளோம்.
இங்கே நாம் புதிய document (அ) ஏற்கனவே உள்ள ஒன்றை திறக்கும் போது தோன்றும் உரையாடல்பெட்டியில் உள்ள அமைப்புகளை அப்படியே விட்டுவிட்டு Ok-ஐ அழுத்தவும்.
இது நம்முடைய பதிப்புகளை செய்யக்கூடிய காலியான பக்கமாகும். சிவப்பு நிற வெளிப்புறக்கோடானது பக்கத்தின் விளிம்புப்பகுதி ஆகும். நீலநிறக்கோடானது நம்முடைய தரவுகளை வைப்பதற்கான இடத்தினைக் குறிக்கின்றது. இந்த நீலநிறக்கோட்டிற்கு வெளியே எழதப்படும் தரவுகளை அச்சிடப்பட முடியாது. இது A4 காகிதத்தின் அளவினை குறிக்கின்றது.
இப்போது நாம் பயன்படுத்தத் தொடங்குவோம்.
முதலில் ஒரு தலைப்பு உரையைச் சேர்க்க, கருவிப்பட்டை(Toolbar)யில் உள்ள Insert Text Frame பணிக்குறியை தேர்ந்தெடுக்கவும். இப்போது mouse-ன் பொத்தானை அழுத்தி வேண்டிய இடத்தில் வரையவும்.
இதில் உரையை சேர்ப்பதற்கு/பதிப்பதற்கு, mouse-ன் இடது பொத்தானை இரு க்ளிக் செய்யவும். உரைப்பதிப்பை நிறுத்த உரைப்பெட்டியின் வெளிப்புறத்தில் க்ளிக் செய்யவும்.
உரையை தேவையான இடத்தில் நகர்த்த, அதன் மீது அழுத்தி நகர்த்தலாம். இப்போது உரைப்பெட்டியின் property-களை Window -> Properties – னை தேர்வு செய்யவும். பின் உரைப்பெட்டியை தேர்ந்தெடுத்து அதன் Properties-களை மாற்றி அமைக்கலாம்.
Text tab-ஐ கிளிக் செய்து, பெட்டியிலுள்ள உரையின் எழுத்துருக்களின் அளவு, நிறம் போன்ற பல்வேறு Properties-களை அமைக்கலாம். இதில் உரையை மையப்படுத்த, Align Text Center பொத்தானை கிளிக் செய்யவும்.
இன்னும் பார்க்க கொஞ்சம் சாதாரணமாக இருப்பதால், நாம் அங்கு ஒரு நிறத்தை தீட்டி பார்ப்போம். Color & Effects tab-ஐ க்ளிக் செய்து அருகில் உள்ள வண்ணப்பூச்சு பொத்தானை கிளிக் செய்து, தேவையான நிறத்தை தேர்ந்தெடுக்கவும். இப்போது நமக்கு ஒரு தலைப்பு கிடைத்துவிட்டது.
நமக்கு இப்போது உண்மையான பொருளடக்கம் கொண்ட உரை வேண்டும்.
‘எனவே மற்றொரு உரைப்பெட்டியை சேர்க்கவும், ஆனால் இந்த முறை பக்கத்தில் பாதி அகலம் மற்றும் அதிக உயரமாக வைக்கவும். உரை பெட்டியை நிரப்புவதில் நேரம் கழிப்பதைக் காட்டிலும், நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைப்பெட்டியில் நமக்காக Scribus உரையை பூர்த்தி செய்யும். இதற்கு Insert -> Sample Text-ஐ கிளிக் செய்யவும்.
இங்கே நாம் நமது நிரப்பி உரைக்கு தேவையான பத்திகள் மற்றும் பல மொழியை தேர்ந்தெடுக்க முடியும். நான் இங்கு நிலையான ஆங்கிலம் மற்றும் பத்து பத்திகள் தேர்ந்தெடுத்து உள்ளேன்
காத்திருக்க! ஆனால் அந்த பத்து பத்திகள் உரைப்பெட்டியில் இல்லை. ஏன் கட்டளை புறக்கணிக்கப்பட்டது? உரைப்பெட்டியின் அடிப்பகுதிக்கு வெளியே ஓடும்.
நீங்கள் வலது அடிப்பகுதிக்கு மிக அருகில் பார்த்தால், நீங்கள் அதில் ஒரு ‘X’-வுடன் கூடிய ஒரு சிறிய பெட்டியை பார்ப்பீர்கள்.
இந்த குறியீடு பெட்டியில் அனைத்து உரையையும் சேர்க்க போதுமான இடம் இல்லை என்று சொல்கிறது. நாம் அதை பெரிதாக்கவோ அல்லது மற்றொரு பெட்டியில் தொடங்கவோ வேண்டும. இல்லையென்றால், அதை பார்க்க முடியாது.
பக்கத்தின் வலது பாதியில் மீண்டும் ஒரு புதிய உரைப்பெட்டியை இழுத்து, அதை உயரமாக வைக்கவும்.
இங்குதான் மாயங்கள் நிகழ்கின்றன . உரையின் ஓட்டம் தொடங்கியிருக்கிற இடது நெடுவரிசைப் பெட்டியில் ஒருமுறை க்ளிக் செய்த பிறகு, கருவிப்பெட்டியில் உள்ள Link Text Frames பொத்தானை தேர்ந்தெடுத்து, வலது நெடுவரிசைப் பெட்டியில் க்ளிக் செய்யவும். இப்போது தானாகவே உரைகள் அதில் தோன்றும்.
கவனிக்கவும்! மீண்டும் Link Text Frames பொத்தானை க்ளிக் செய்ய மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால், நீங்கள் உரைப்பெட்டிகளை தொடர்ந்து இணைக்கப் போகிறீர்கள் என்று Scribus நினைத்துக்கொள்ளும்.
உரைப்பெட்டிகளின் அளவை மாற்றுவதன் மூலமாக, உரைகள் தானாக இடம் மாறுவதை காணலாம். சரி, இப்போது செய்த வேலைகளை ஓரிடத்தில் சேமிப்போம். File-> Save As கொடுத்து file-ன் பெயரை கொடுக்கவும். பிறகு, PDF(Portable Document Format)-ஆக மாற்ற File -> Export -> Save as PDF கொடுத்தால், Preflight Verifier Window தோன்றும்.
PDF-ஆக மாற்றுவதற்கு முன்பு, ஆவணத்தில் ஏதாவது பிழை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்று Scribus சோதிக்கும்.
இந்த ஆவணத்தில், நாம் கொடுத்த உரையானது முதல் பக்கத்தில் உள்ள இரு பெட்டியினுள் அடங்காததால், Text overflow என்ற பிழையை Scribus கூறுகிறது. இதன் மூலமாக, புத்தகத்தை அச்சிடப்படும் போது ஏற்படும் பிழைகளை இங்கேயே தவிர்க்கலாம். இங்கே நாம் Ignore Errors பொத்தானை அழுத்தி தொடர்வோம்.
Save as PDF window-ஆனது, PDF file எப்படி காட்சியளிக்க வேண்டும், அதில்
என்னென்ன அடங்கியிருக்க வேண்டும் போன்ற பல விருப்பத்தேர்வுகளைக் கொண்டிருக்கும். இப்போது file-ன் பெயரைக் கொடுத்து சேமிக்கவும்.
இனிவரும் தொடர்களில் இன்னும் பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம்.
இந்த கட்டுரை உங்களுக்கு தகவல் நிறைந்ததாக இருந்திருக்கும் என் நம்புகிறோம்.
செல்வமணி சம்பத், இணைய தள வல்லுநர், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.
மின்னஞ்சல் : selva.infobees@gmail.com
வலை : infobees.wordpress.com