shutter ஒரு வரப்பிரசாதம்
“ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆயிரம் வார்த்தைகளை கொண்டு ஒரு விஷயத்தை ஒருவருக்கு புரியவைப்பதை விட ஒரு புகைப்படம் கொண்டு வெகு சுலபமாக புரிய வைக்கலாம். எழுத்து பேச முடியாட பல இடங்களில் படம் மிக சுலபமாக பேசி விடும். உதாரணமாக நாம் blog செய்யும் போதே எவ்வளவு தான் பக்கம் பக்கமாக எழுதினாலும், அதில் ஒரு சிறிய புகைப்படம் சேர்த்து எழுதும் போது தான் மற்றவர்களுக்கு சுலபமாக புரிய வைக்க முடியும்.
நாம் நமது ubuntu -ல் பொதுவாக ‘screenshot’ எடுக்க வேண்டும் எனில் அதில்
default -ஆக வரும் ‘take screenshot’ எனும் application வைத்தே எடுப்போம். நாம் இதை முதன்முதல் பார்த்து/கேள்வி பட்டபோதே ஆச்சர்யம், மகிழ்ச்சி அடைந்து இருப்போம்.
ஆனால் ஒரே ஒரு application மூலம்,
-
நாம் முழு window
-
குறிப்பிட்ட பகுதி
-
முழு திரை
-
முழு web page போன்றவற்றை புகைப்படம் எடுக்க
-
எடுத்த புகைப்படங்களை edit செய்ய
-
email செய்ய
-
FTP வழியாக upload செய்ய
-
நமக்கு தேவையான படி profile preferences செய்து கொள்ளும் வசதி
-
புகைப்படத்தை compression செய்ய
-
format மாற்றி அமைக்க
-
குறிப்பிட்ட நேரம் கழித்து புகைப்படம் எடுக்க
-
எடுத்த புகைப்படத்தில் water mark போட
என பலவித வசதிகளும் செய்ய முடியுமா??????
அட இது அனைத்தும் ஒரே application மூலமாகவா?! ஆம் முடியும். அதுதான் நமது “shutter” application. இது ஒரு “feature rich screenshot program” என shutter இணையதளம் குறிப்பிடுகிறது.
நீங்கள் blogging -ஐ வழக்கமாக கொண்டிருப்பவரா? (அ) how-to பற்றி எழுதுபவரா? நமக்கெல்லாம் இந்த “shutter” ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
நீங்கள் அனைத்தும் terminal -லேயே செய்ய பிரியம் உடையவரா? அதற்கும் shutter வழிவகை செய்கிறது. “Shutter –selection”, “shutter –section”, “shutter –full” and “shutter –window” போன்ற கட்டளைகளைக் கொண்டும், terminal வழியாக நாம் நமக்கு தேவையான படி screenshot எடுத்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
நாம் ஒரு இணைய தள பக்கத்தை screenshot எடுக்க சிலர் browser -ல் சில add-Ons -களை Install செய்து எடுப்பர். ஆனால் browser -ன் version update செய்யும் போதோ (அ) add-ons update செய்யும் போதோ பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆனால் shutter மூலம் சில சொற்ப நொடிகளில் நாம் எந்த இணையதள பக்கத்தையும் சுலபமாக screenshot எடுக்க முடியும். மேலும் நாம் எடுக்கும் screenshot-ஐ நமது விருப்பபடி தேவையான folder -ல் save செய்து கொள்ள முடியும். சில் special wild-cards மூலம் சேமிக்கும் file-களின் பெயர்களை set செய்து கொள்ள முடியும்.
எடுக்கும் screenshot -ன் thumnails -ஐ generate செய்வது, எடுத்த screenshot களை edit செய்வது என்பதெல்லாம் shutter -ன் கூடுதல் சிறப்பு ஆகும்.
Edit -> preference -க்கு சென்று நமக்கு தேவையானபடி shutter preference ஐ set செய்து கொள்ளலாம். இங்கு நாம் reduce colors, thumnail size, keyboard -ன் default print, button, FTP server connection, plugins tab போன்ற முக்கிய settings ஐ காணலாம்.
Shutter -ல் default ஆக பல plugins install செய்யப்பட்டே வருகிறது. 3D reflection, 3D rotate, Nesate, Sepia, Graphscale, Jigsaw piece போன்ற plugins மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
மேலும் அதில் உள்ள watermark plugin மூலம் நாம் எடுக்கும் புகைப்படத்தில் watermark போட முடியும். இது போன்ற பல வசதிக்ள அனைத்தையும் shutter ஒன்றே தருகிறது.
Ubuntu ல் Install செய்ய:
$sudo apt-get install shutter
இணையதள முகவரி:
shutter-project.org த.சுரேஷ்