Evaஎனும் ஒரு செநு(A.I ) உதவியாளர்

Eva என்பது பயனர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய உதவும் நோக்கத்தைக் கொண்ட ஒரு செநுவின்(A.I )உதவியாளர் ஆகும். மாற்றுத்திறனாளிகளும் கணினியை எளிதாகப் பயன்படுத்த உதவுவதே இதன் நோக்கமாகும். Eva எனும் அமைவு தொடர்பான , அமைவு அல்லாத பயன்பாடுகளைத் திறந்து செயல்படுத்தி பயன்பெற்றபின் அதனை மூடிவெளியேறலாம், இணையப் பயன்பாடுகளில் உள்ளடக்கத்தைத் தேடலாம், நேரஅளவுகளை மாற்றியமைக்கலாம் , திரைக்காட்சிகளை படமாக எடுக்கலாம். இதற்காக Eva இன் “Listen” அல்லது “Hey listen” என்று கட்டளையைத் தொடர்ந்து கூறிடுக.
[ UPDATE ] * பல்வேறு GPT மாதிரிகளுடன் தொடர்பு கொள்ளும் திறனை Eva இப்போது பெற்றுள்ளது
Eva இப்போது பல்வேறு GPT மாதிரிகளுடன் தொடர்பு கொள்கின்றது
Eva இப்போது ஒரு crop எனும் செயலியைக் கொண்டுள்ளது, இது பயனர்கள் பயன்பாட்டை குறைந்தபட்ச இடையூறுகளுடன் பயன்படுத்த அனுமதிக்கிறது
[NOTE] Evaஆனது விண்டோஸ் 10/11 சூழல் அமைப்பைச் சார்ந்தது. Eva இடமிருந்து கேட்பொலி எதுவும் கேட்கவில்லை அல்லது குரலொலி ஏற்புகை தோல்வியடைந்தால், நேரடி இணைய கேட்பொலி ஏற்புகை இயந்திரத்தை அளவீடு செய்ய முயற்சித்திடுக. சிக்கல் மேலும் தொடர்ந்தால், சிதைந்த கணினி கோப்புகளை சரிசெய்ய “sfc/scannow” எனும் கட்டளையைப் பயன்படுத்திடுக..
தொழில்நுட்பம்: Vosk In-proc கேட்பொலி ஏற்புகை இயந்திரம், மைக்ரோசாப்ட் நேரடிய இணைய கேட்பொலி ஏற்புகை இயந்திரம், .NET கட்டமைப்பு, விண்டோ விளக்கக்காட்சி அறக்கட்டளை (WPF) , உலக விண்டோஸ் இயங்குதளங்கள் (UWP) ஆகியன Eva இன் முக்கிய தொழில்நுட்பங்களின் உள்ளடக்கங்களாகஉள்ளன.
முக்கியவசதிவாய்ப்புகள்: அமைவு தொடர்பான , அமைவு அல்லாத பயன்பாடுகளைத் திறந்து மூடிடுக , இணையப் பயன்பாடுகளில் உள்ளடக்கத்தைத் தேடிடுக ,காலஅளவுகளை அமைத்திடுக , திரைகாட்சிகள் படம்பிடித்திடுக
பயன்பாடு
Eva இற்கு கட்டளைகளை வழங்க, “Listen” அல்லது “Hey listen” என்ற சொற்களை தொடர்ந்து நாம் விரும்பிய கட்டளையை கூறிடுக. எடுத்துக்காட்டாக, “Hey listen” என்று கூறுக, தொடர்ந்து Eva செயலிற்கு வந்த பிறகு, “search robots are cool on Google” என்று கூறுக.உடன் Eva இன் அறிவுறுத்தல் கையேட்டில் கட்டளைகள் , கட்டளை வடிவங்கள் , சரிசெய்தல் பற்றிய விரிவான வழிமுறைகளை காணலாம்.
கேட்பொலி ஏற்புகை உள்கட்டமைப்பு
இயற்கையான நாம் பேசுகின்ற மொழியை புரிந்துகொள்ளுதல்
Eva இரண்டு வழிகளில் இயற்கை மொழி செயலாக்கத்தைப் பயன்படுத்துகிறது, இவை கேட்பொலி ஏற்புகை, சூழல் கட்டளை , உள்ளடக்கத்தை பிரித்தெடுத்தல் ஆகிய பணிகளை செய்கின்றது . இதில் Vosk , Windows Online Speech Recognition ஆகிய இரு இயந்திரங்களும் எந்தவொரு கேட்பொலி ஊடகத்திலிருந்தும் சொற்களைப் பிரித்தெடுக்க இயற்கை மொழி செயலாக்கத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த வசதிகள் இரண்டு இயந்திரங்களிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
அவைகளின் உள்ளடக்கத்தை Eva புரிந்து கொள்வதற்காக பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் இயற்கை மொழியை புரிந்துகொள்கின்ற இயந்திரத்தால் உருவாக்கப்பட்டது.இந்த பயன்பாட்டின் இயற்கையானமொழியைப் புரிந்துகொள்கின்ற இயந்திரம், செயல்முறைகளின் தொகுப்பைப் பின்பற்றுவதன் மூலம் இதைச் செய்கிறது. முதலாவதாக, கட்டளையை இயக்க, அது என்ன செயல்முறையை செயல்படுத்த வேண்டும் உள்ளீட்டிலிருந்து என்ன கூடுதல் அளவுருக்கள் பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக சில அடையாளக்குறியை(tokenization) செய்கிறது. உள்ளீட்டை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், சொற்றொடருக்குள் ஒரு குறிப்பிட்ட குறிமுறைவரிகளில் இருக்க வேண்டிய சில முக்கிய சொற்களைத் தேடுவதன் மூலமும் இது செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கொடுக்கப்பட்ட கட்டளை “open chrome”, என்றால், open எனும் சொல் முதல் சொல்லாக இருப்பதால், இயல்பான மொழி புரிந்துகொள்கின்ற இயந்திர கட்டளையை ஒரு குறிப்பிட்ட பயன்பாடு திறக்கின்ற செயல்முறையாக வகைப்படுத்துகிறது. கொடுக்கப்பட்ட கட்டளை “search leopard 1 tank blueprint on google”, எனில், முதல் சொல் search என்பதால், அடையாளக்குறி(tokenization) என்பது இணைய தேடல் கட்டளையுடன் தொடர்புடைய அளவுருவை சுட்டிக்காட்டுகிறது. அடையாளக்குறி(tokenization) எந்த அளவுருவுடன் சொற்றொடருடனும் பொருந்தவில்லை எனில், எந்தவொரு செயல்முறையையும் அது செயல்படுத்தாது.
செயல்முறை வகை அடையாளம் காணப்பட்ட பிறகு, இரண்டாவது அடையாளக்குறியீடு(tokenization)செய்யப்படுகிறது. செயல்முறை வகை அடையாளம் காணப்பட்டதும், அதற்கேற்ப செயல்முறை தோரணி(patern),வகையில் , செயல்முறை வகைக்கு ஏதேனும் இரண்டாம் நிலை அளவுருக்கள் தேவையெனில்,அவை அதற்கேற்ப பிரித்தெடுக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, “search black shoes of amazon” என்ற கட்டளை வரியை உள்ளிட்டிருந்தால், இந்தக் கட்டளைவரியின் வழிமுறையானது “search [ CONTENT ] on [ WEB APPLICATION ]”.ஆகும். அதாவது, இயற்கையான மொழியைப் புரிந்துகொள்கின்ற இயந்திரம் ஒரு இணையப் பயன்பாட்டைத் தேட வேண்டும் தொடர்ந்து அந்த இணையப் பயன்பாட்டில் தேடப்படும் உள்ளடக்கத்தைத் தேட வேண்டும். பின்னர் செயல்முறையின் வழிமுறையின்படி, இயற்கையான மொழியைப் புரிந்துகொள்கின்ற இயந்திரமானது இணையப் பயன்பாட்டில் தேடப்படும் உள்ளடக்கம் “search” , “on”, ஆகிய சொற்களுக்கு இடையில் இருப்பதை அறிந்துகொள்கிறது, மேலும் “WEB APPLICATION ” எனும் திறவுகோள் சொல்லானது ஒவ்வொருசொல்லிலும் “on”. என்ற சொல்லுக்குப் பின் வரும் என்பதை அறிந்திருக்கின்றது… இரண்டாவது அடையாளக்குறி(tokenization) சரியான மாறிகள் வடிவமைப்பைக் கண்டறியவில்லை எனில், எந்த செயல்முறையும் செயல்படுத்தப்படாது.
மாறிகள் உள்ளடக்கத்தைப் பிரித்தெடுப்பதற்காக மூன்றாவது அடையாளக்குறி (tokenization) செய்யப்படுகிறது. இந்த அடையாளக்குறி(tokenization) இரண்டாவது அடையாளக்குறியில்(tokenization) கண்டறியப்பட்ட மாறிகளின் குறிமுறைவரிகளைப் பயன்படுத்திகொள்கிறது, மாறிகளைப் பிரித்தெடுக்கிறது, சரியான மாறிகளின் பட்டியலுக்கு எதிராக பிரித்தெடுக்கப்பட்ட மாறிகளை சரிபார்க்கிறது. அவ்வாறு மாறிகள் சரிபார்க்கப்பட்டதும், மாறிகளுடன் தொடர்புடைய செயல்முறைகள் பிரித்தெடுக்கப்பட்டு அதற்கேற்ப செயல்படுத்தப் படுகின்றது. மூன்றாவது அடையாளக்குறி(tokenization) கண்டறியப்பட்ட மாறிகளுக்கான சரியான மதிப்புகள் எதையும் கண்டறியவில்லை எனில், எந்த செயல்முறையும் செயல்படுத்தப்படாது.
இயற்கை மொழியை புரிந்துகொள்கின்றஇயந்திரம் நேர சிக்கல்களைப் புரிந்துகொள்ளுதல்
இயற்கையான மொழிப் புரிந்துகொள்கின்ற இயந்திரத்தின் நேரச் சிக்கலானது மோசமான நிலை, சராசரிநிலை ஆகிய சூழ்நிலைகளில் O(n) இல் உள்ளது, மேலும் நேரச் சிக்கலான O(n – (n – (ci + 1) )) சிறந்த சூழ்நிலையில் உள்ளது. “ci” என்பது தற்போதைய குறிமுறைவரிகளைக் குறிக்கிறது, அங்கு இயந்திரம் எந்த செயல்முறைக்கும் தொடர்புடைய எந்த தோரணி(patern)உடனும் தொடர்புடையஉள்ளீட்டுடன் பொருந்தவில்லை. கொடுக்கப்பட்ட சொற்றொடருக்குள் குறிப்பிட்ட அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கின்றது அடையாளக்குறியின்(tokenization) மூன்று நிலைகளை இயற்கையான மொழியை புரிந்துகொள்கின்ற இயந்திரம் கொண்டிருப்பதால், அந்த சொற்றொடர் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யாத குறிமுறைவரிகளில் உள்ள தகவலின் செயலாக்கத்தை இயற்கை மொழியை புரிந்துகொள்கின்ற இயந்திரமானது பணியைநிறுத்திவிடுகின்றதுஅடையாளக்குறியீட்டு(tokenization) நிலை இயற்கையான மொழி புரிந்துகொள்கின்ற இயந்திரமானது அளவுகோல்களில் திருப்தி அடையவில்லை, இதனால் RAM நினைவக வளங்கள் , CPU செயலாக்க சக்தி ஆகியன தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதில்லை.
படித்திறனின்(Gradient) மாறுதலின் சூத்திரம்
பயன்பாடு இந்த அழகான வரைகலை பயனர் இடைமுக விளைவுகளைக் கொண்டிருப்பதற்காக நாம் உருவாக்கிய தருக்கத்தை ஈவா பயன்படுத்தி கொள்கின்றது. இந்த தருக்கம், படித்திறன் மதிப்பை அடையும் வரை படித்திறனின் மதிப்பை அதிகரிக்கின்ற கூட்டுத்தொகையைப் பயன்படுத்தி படித்திறனின் பொருளை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. வாயிலின் மதிப்பை அடையும் போது, படித்திறன் அதன் அசல் மதிப்பை அடையும் வரை அதன் மதிப்பைக் குறைக்க ஒரு கூட்டுத்தொகை பயன்படுத்தப்படுகிறது. இந்த படித்திறன் ஏற்ற இறக்க சூத்திரத்தை இரண்டு நேரியல் சார்புகளாகவும் விளக்கமளிக்கலாம், அவை ஒவ்வொரு செயலியின் வரம்பு மதிப்பை அடையும் போது பணியானது உடனடியாகத் தொடங்கப்படும். மேற்கூறிய செயலிகள் முறையே y = x + v y = x – v ஆகும், இதில் y என்பது விளைவான படித்திறன் மதிப்பு, x என்பது தற்போதைய படித்திறன் மதிப்பு, v என்பது தற்போதைய படித்திறன் மதிப்பில் இருந்து சேர்க்க அல்லது கழிக்க வேண்டிய மதிப்பு, இதில்x, y , v ஆகியவை பூஜ்ஜியத்தை விட அதிகமாகு்ம்.
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக CC0-1.0 எனும் உரிமத்தின்கீழ் வெளியிடப் பெற்றுள்ளது மேலும் விவரங்களுக்கு ,github.com/CSharpTeoMan911/Eva எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: