அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என கவலைப்பட வேண்டாம்; அதற்கான தீர்வுகள் நிறைய உள்ளன. பொதுவாக நாம் அனைவரும் 2G / 3G இலிருந்து Wi-Fi எனும் அருகலைக்கு மேம்படுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த பிரச்சினையும் உடன்துவங்கிவிட்டது. .தனிப்பட்ட கைபேசியில் 2 ஜி / 3 ஜி இணைப்பைக் காட்டிலும் அருகலை அதிக செலவு குறைந்ததாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரேயொருஅருகலை மோடத்தில் 32 சாதனங்கள்வரை நாம் இணைத்து பயன்டுத்திகொள்ள முடியும், அவ்வாறு இணைத்த பின்னரும் ஒரே ஒரு இணைப்பின் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானதாகும். என்ன ஒரு ஆச்சரியம் இந்த திறன்பேசிகளின் சகாப்தத்தில், மின்னல் வேகமான இணைய இணைப்புகளை நாம் விரும்புகிறோம், இதன்மூலம் இணையத்தில் உலாவரலாம், கானொளிகளை இணையத்தில் ஓடச் செய்யலாம், இணையத்தில் திரைப்படங்களை ப் பார்க்கலாம், அதிசயமான வரைகலை மூலம் உயர் அளவிலான விளையாட்டுகளைப் பதிவிறக்கலாம், இணையத்தில் பல்லூடகவிளையாட்டுகளை விளையாடலாம் எப்போதும் சமூக ஊடகங்களில் நேரடியாக இணைந்திருக்க முடியும். ஆகிய இவ்வாறான பணிகள் அனைத்தும் அருகலையின் வாயிலாக எந்தவித தயக்கமும் இல்லாமல் நிறைவேற்ற முடியும், மேலும் இது கைபேசிகளில் 2 ஜி / 3 ஜி இணைப்பைவிட மலிவானது . ஆனாலும் அருகலை மோடம்களும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அதாவது ஒரு சில நேரங்களில் அவை குறைந்த சமிக்ஞையை வழங்குகின்றன. இதனால் நம்முடைய சாதனங்களில் மெதுவான இணைய வேகத்தை எதிர்கொள்கிறோம். இது நிகழ்வதற்கான காரணங்களும் அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்பதற்கான தீர்வுகளும் பின்வருமாறு.
காரணம் 1: – அருகலைமோடம் அதிக வெப்பமாதல். அருகலைமோடம்கள் இணைய சமிக்ஞைகளை கம்பியில்லா சமிக்ஞை களில் மாற்றி அவற்றை நம்முடைய வீட்டில் பரப்பும் பொருள் மட்டுமேயாகும். ஒருசில நேரங்களில் நாம் பல நாட்கள் தொடர்ந்து அருகலை வழிசெலுத்திகளைபயன்பாட்டில் வைத்திருக்கும்போது, அளவிற்கு அதிகமாக பயன்படுத்திகொண்டேயிருப்பதால் அவை வெப்பமடைகின்றன, இதனால் அருகலை சமிக்ஞை களை பரப்புவதற்கான அவற்றின் செயல்திறன் குறைகிறது.
தீர்வு 1: – இதற்காக கவலைப்பட வேண்டாம். இதற்கு ஒரு நேரடியான எளிய தீர்வு உள்ளது. நமக்கு அருகலை தேவையில்லை என்று நினைக்கும் போதெல்லாம் அருகலை மோடத்தின் செயலை நிறுத்தி வைத்திடுக. அதாவது நாம் இரவில் தூங்கச் செல்லும்போதும், நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதும், (அப்போது வீட்டில் யாரும் இருக்கப் போவதில்லை), மோடத்தின் செயலை நிறுத்தி வைத்திடுக.. இந்த செயலானது அதன் செயல்திறனை அதிகரிக்கும், மேலும் நாம் வருங்காலத்தில்இந்த சிக்கலை எதிர்கொள்ள மாட்டோம்.
காரணம் 2: – அருகலை மோடத்தை தவறான இடத்தில் வைப்பது. பெரும்பாலான நேரங்களில், பொதுமக்கள் தங்களின் பயன்பாட்டிற்கான மோடம்களை மெதுவாக தளவாடங்கள், சுவர்கள் அல்லது பிற பொருட்களால் சூழப்பட்ட இடத்திற்குள் வைக்கிறார்கள் அல்லது அவர்கள் திசைவியை வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில் வைப்பதால் அருகலைWi-Fi சமிக்ஞை வலிமை குறைகிறது, இதனால் இணைய வேகம் குறைகிறது.
தீர்வு 2: – நம்முடைய வீட்டின் மையப் பகுதியில் அருகலை திசைவியை வைக்க வேண்டும், அதன்வாயிலாக இது வீடுமுழு வதும் சமஅளவிலான அருகலை சமிக்ஞையை வழங்க உதவுகிறது. எந்த வொரு தளவாடங்கள், சுவர்கள் அல்லது அதைச் சுற்றியுள்ள வேறு எந்த பொருட்களாலும் சூழப்பட்ட இடத்திற்குள்ளும் திசைவியை வைப்பதைத் தவிர்த்திடுக. மின்கம்பிகள், கணினி கம்பிகள், மைக்ரோவேவ், பேபி மானிட்டர்கள் , ஆலோசன் விளக்குகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்குமாறு வைத்திடுக. இந்த கம்பிகள் மற்றும் அலைகள் வானொலி வரவேற்பில் தலையிடக்கூடும். அருகலைWi-Fi சமிக்ஞை வலிமையை அதிகரிக்க இந்த முறை பெரும்பாலான நேரங்களில் உதவும்.
காரணம் 3: – அருகலைஇணைப்பு ஆண்டெனாவின் நிலை. நம்முடைய வீட்டில் இரட்டை ஆண்டெனா அருகலை திசைவி வைத்திருந்தால், இந்த தீர்வு கண்டிப்பாக நமக்கானதாகும். நம்முடைய சாதனத்தை அருகலை ஆண்டெனா நம்முடைய திசைவி உமிழும் சமிக்ஞைல்களைப் பிடிக்க முடியாத வகையில் வைத்திருக்கும்போது. பின்வரும் தீர்வைப் பின்பற்றிடுக
தீர்வு 3: – இதற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது, இது வும் நம்முடைய இணைய வேகத்தை பாதிக்கும் ஒரு காரணிஎன நாம் ஒருபோதும் யூகிப்பதில்லை. பரவாயில்லை நம்முடைய வீட்டில் இரட்டை ஆண்டெனா அருகலை திசைவி வைத்திருந்தால் திசைவியின் ஒரு ஆண்டெனாவை செங்குத்தாகவும், மற்றொன்றை கிடைமட்டமாகவும் மாற்றிஅமைத்திடுக, இதனால் நம்முடைய சாதனம் எந்த நிலையிலும் சமிக்ஞைகளைப் பிடிக்க முடியும். இதனை தொடர்ந்த அருகலை சமிக்ஞை வலிமை அதிகரிப்பதை நாம் காணலாம்
காரணம் 4: – பாதுகாப்பு மீறல். வழிசெலுத்திகள் மூலம் இணைய அணுகலுக்கான கடவுச்சொற்களை அமைக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். திசைவியின் பாதுகாப்பு தொகுப்பினைத் தேர்ந்தெடுப்பதில் பாதுகாப்பு தேர்வு உள்ளது. அது WEP WPA WPA2 WPA / WPA2 ஆக இருக்கலாம், வேறொருவர் நமக்குதெரியாமல் நம்முடைய அருகலையைப்(Wi-Fi ) பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கலாம், இதன் விளைவாகவும் இணைய வேகம் குறைகிறது.
தீர்வு 4: – WEP / WPA2 ஐ விட WEP மிகவும் குறைவான பாதுகாப்பாக இருப்பதால் நாம் WEP இலிருந்து WPA / WPA2 ஆக மாற வேண்டும். நாம் பாதுகாப்பு தொகுப்பினை மாற்றும்போது, எல்லா பயனாளர்களும் கடவுச்சொல்லை மீண்டும் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நம்முடைய கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றியமைத்துகொள்க. இந்த வழிமுறையில் அருகலை சமிக்ஞையின் வலிமையை அதிகரிக்க உதவும் என்பதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது.
காரணம் 5: – இணைக்கக்கூடிய சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல். பல்வேறு மோடம்கள் ஒரே நேரத்தில் 32 சாதனங்கள் வரை ஆதரிக்கின்றன. அவ்வாறு அதிகபடியான சாதனங்கள் ஒரேயொரு மோடத்துடன் இணைப்பதால் அவை இணையஇணைப்பிற்காக கிடைக்கும் அலைவரிசையை பிரிக்கின்றன.
தீர்வு 5: – அவ்வாறு பிரிப்பது இல்லை. தேவையான சாதனங்களை இணைப்பது ஒரு திசைவியுடன்மட்டுமே அதனால் அவ்வாறு நமக்கு தேவைப்பட்டால் திசைவியின் அமைப்புகளில் தேவையானஅளவிற்கு இணைப்புகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரித்து கொள்க.
காரணம் 6: – சமிக்ஞைகளின் குறுக்கீடு. நம்முடைய வீட்டின் இதர பணிகளில் உள்ள சாதனங்களின் அதிர்வெண் குழுவில் உள்ள பல சாதனங்களிலும் அதே அதிர்வெண் உள்ளன , எ.கா. புளூடூத் ஹெட்செட்டுகள், கம்பியில்லா தொலைபேசிகள், குழந்தைகளின் மானிட்டர்கள், மைக்ரோவேவ் போன்றவை. அவை அனைத்தும் அருகலை திசைவியின் சமிக்ஞைகளில் தலையிடுகின்றன. இதனால் இந்தஅலைவரிசையினுடைய செயல்வேகம் குறைகிறது. இந்த சிக்கலுக்கான தீர்வு அதிர்வெண் இசைக்குழு வேறுபாட்டிற்குக் கீழே உள்ளது
தீர்வு 6: – நம்முடைய திசைவி அதன் அமைப்புகளிலிருந்து இயங்கும் சேனலை மாற்ற வேண்டும். புதிய மாதிரி வழிசெலுத்திகள் 5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்திலும் இயங்க முடியும். அருகலை சமிக்ஞை வலிமையை அதிகரிக்க இந்த முறை நிச்சயமாக நமக்கு உதவும்
காரணம் 7: – குறைந்த அலைவரம்பு. திசைவிகள் பழையதாக ஆக, அவை சமிக்ஞைகளை வெளியிடுவதில் அவற்றின் செயல்திறன் குறைகின்றது. இது சாதாரணமான வழக்கமான நிகழ்வுதான்
தீர்வு 7: – திசைவியை(Router) புதியதாக மாற்றியமைத்திடுவதற்காகள் ISP இடம் கோரலாம், அல்லது ஒரு அருகலை சமிக்ஞை பெருக்கியை வாங்கி நம்முடைய வீட்டில்இணைத்து அமைத்திடலாம், இது தவிர்க்க முடியாமல் நம்முடைய அருகலை திசைவியின் சமிக்ஞைகளின் வலிமையை அதிகரிக்கும்.
காரணம் 8: – பயன்பாடுகள் ஏராளமானஅளவிலான அலைவரிசையை உட்கொள்கின்றன. நம்முடைய சாதனத்தில் நமக்கு தெரியாமல் ஏராளமான பயன்பாடுகள் இருக்கலாம், அவை பின்னணியில் இயங்கினாலும் நம்முடைய சாதனங்களின் அலைவரிசையை உட்கொண்டிருக்கலாம், இதன் விளைவாக இணைய வேகம் குறைகின்றது.
தீர்வு 8: – நம்முடயை சாதனங்களில் அவ்வாறான பயன்பாடுகளைத் தேடி, அவற்றை அறவே நீக்கம் செய்திடுக அல்லது அவைகளின் அமைப்புகளை மாற்றியைமத்திடுக. , எடுத்துக்காட்டாக. பயன்பாடுகள் தானாகவே புதுப்பிப்பைத் தேடுவதை நிறுத்துக.