SPPAS என்பது பிரான்சின் Aix-en-Provence இல் உள்ள Laboratoire Parole et Langage இன் பிரிஜிட் பிகி என்பவரால் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகின்ற அறிவியல்ஆய்விற்கான ஒருகணினி மென்பொருள் தொகுப்பாகும்.
இது திறமூலக் குறிமுறைவரிகளுடன் கட்டணமில்லாமல்க் கிடைக்கிறது, .
மிக முக்கியமாகஇது ஒரு அறிவியல் ஆய்விற்கான மென்பொருளாகும்
SPPASஆனது ஒருதிறமூலக்கருவியாகவும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்டுகின்ற திறன்மிக்கதாகவும் அமைந்து, தனிப்பயனாக்கக்கூடிய தானியங்கி சிறுகுறிப்பு , ஒலி கானொளி காட்சிகளுகளுக்கான பகுப்பாய்வு தீர்வுகளை வழங்குகிறது.
தற்போதைய சூழலில் உரையாடலின் தானியங்கி சிறுகுறிப்புகள், எந்த வகையான சிறுகுறிப்பு தரவுகளின் பகுப்பாய்வு , சிறுகுறிப்பாக செய்யப்பட்ட கோப்புகளை மாற்றுதல் ஆகியவற்றில் எளிமையான பயன்பாடு மொழியியலாளர்களுக்கு வேறு எந்த கருவியும் தற்போது பயன்பாட்டில் இல்லை எனும் குறையை இதுதீர்வுசெய்கின்றது. இது நமக்குத் தேவையான சிறுகுறிப்புகள் அல்லது பகுப்பாய்வுகளைநாமே கற்பனை செய்யலாம், மீதமுள்ளவற்றை SPPAS செய்கிறது!
SPPAS மென்பொருள் கருவி நம்பகமானது: ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள வசதிகளை இந்த பயன்பாடானது மிகச்சரியாக செய்கிறது. பயனர் தவறுகளை அல்லது எதிர்பாராத வழிகளில் மென்பொருளைப் பயன்படுத்துவதை இது பொறுத்துக்கொள்கின்றது: அந்தச் சமயங்களில் பிழைச் செய்தியுடன் கூடிய பிழை அடையாளங்காட்டி மட்டும் திரையில்காண்பிக்கின்றது. நாம் எதிர்பார்க்கப்படும் சுமை , தரவு அளவின் கீழ், தேவையான பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு அதன் செயல்திறன் போதுமானதாக உள்ளது.
• SPPAS கணினியில் நிறுவுகைசெய்யப்பட்டுள்ளதால் நம்முடைய corpus ஆனது இணையத்தில் மாற்றப்படாது. இது புள்ளிவிவரங்கள் எதுவும் சேகரிப்ப தில்லை, மேலும் தனிப்பட்ட தரவு எதுவும் சேகரிக்கப்படுவதில்லை.
• பிழைகளை சரிசெய்தல், அதன் அமைப்புகளை செயல்பாட்டில் வைத்திருத்தல், தோல்விகளை ஆய்வு செய்தல், தளங்களில் சரிபார்த்தல், புதிய பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு மாற்றியமைத்தல், புதிய வசதிகளைச் சேர்த்தல் கடைசியாக ஆனால் புதிய மொழி வளங்களைச் சேர்த்தல், ஆவணங்களைப் இணையதளங்களையும் தொடர்ந்து புதுப்பித்தல் ஆகிய பணிகளைசெய்கின்றது.
• SPPAS ஒரு திறமூல தொகுப்பு ஆகும். மென்பொருள் கருவியின் மூலக் குறிமுறைவரிகலைநாமே திருத்தலாம், அதை மாற்றியமைத்திடலாம், தொடர்ந்து அதை மீண்டும் மறு விநியோகம் செய்திடலாம்.
சிறுகுறிப்பு: பதிவுசெய்யப்பட்ட ஒலி அதன் எழுத்திலக்கண நகல்(போலி) /அல்லது கானொளிகாட்சிலிருந்து SPPAS தானாகவே சிறுகுறிப்புகளை உருவாக்குகிறது.
பகுப்பாய்வு: SPPAS சிறுகுறிப்பு செய்யப்பட்ட கோப்புகளின் பகுப்பாய்வுக்கு உதவுகிறது: புள்ளிவிவரங்கள், கோரிக்கைகள், கோப்புகளைகாணவும் திருத்தவும் அனுமதிக்கின்றது
கோப்பமைவினை மாற்றியமைத்தல் : SPPAS சிறுகுறிப்பு செய்யப்பட்ட கோப்புகளை பரந்த அளவிலான xra, TextGrid, eaf, trs.ஆகிய வடிவங்களிலிருந்து / வடிவங்களாக மாற்றியமைத்திட உதவுகின்றது: ..
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக GPLv3 எனும் அனுமதியின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்,sppas.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.