உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம்

இயந்திரங்களுடன் மனித படைப்பாற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம், உருவாக்க எதிரி வலைபின்னல்கள் (Generative Adverserial Networks(GANs)), புத்தாக்க செநு(AI) ஆகியவை ஒருகலைஞரின் வெளிப்பாடுகளை மறுவடிவமைப்பு செய்திடு வதற்காக அதன் எல்லைகளைத் விரிவுபடுத்திடுகின்றன. ஆனால் இவற்றில்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல ஆபத்துகளும் உள்ளன.
உருவாக்கஎதிரி வலைபின்னல்கள் (generative adversarial networks (GANs)) ஆனவை செயற்கை நுண்ணறிவு துறையில், புதியதொரு கண்டுபிடிப்பாக படைப்பாற்றலில் புரட்சியை ஏற்படுத்துகின்ற சாத்தியக்கூறுகளுடன் தனித்து நிற்கின்றன: . இந்த அமைப்புகள் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரின் கற்பனையை ஒரே மாதிரியாகக் கைப்பற்றி, ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், ஆய்வுசெய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவித்தொகுப்பை வழங்குகின்றன.
புத்தாக்க செநு(Creative AI)
புத்தாக்க AI என்பது செயற்கை நுண்ணறிவு, கலைஞரின் வெளிப்பாடு ஆகியவை ஒருங்கிணைந்து வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகும். இது இசை, கவிதை முதல் ஓவியங்கள், சிற்பங்கள் வரை ,நாவலின்அசல் படைப்பு ஆகிய அனைத்தின் வெளியீடுகளையும் புத்தாக்கத்துடன் உருவாக்குகின்ற திறன்மிக்க பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும். புத்தாக்க AI அதன் துவக்க நிலையில் இருக்கும்போதே, படைப்பு செயல்முறைகளை மறுவரையறை செய்வதற்கும், கலைஞரின் கருவிகளுக்கான தடையில்லாத சுதந்திரமான அணுகலை முறைபடுத்துவதற்கும், கலைஞர்களின் ஆய்வின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
புத்தாக்க செநு(AI) இன் ஒரு முக்கிய வசதி, பரந்த அளவிலான தரவுகளிலிருந்து அது கற்றுக்கொள்ளும் திறனில் உள்ளது. ஏற்கனவே உள்ள கலைப்படைப்புகள், இசைகளின் கலவைகள், இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், கலைஞர்களின் புத்தாக்கத்தை நிருவகிக்கும் வடிவங்கள், பாணிகள், நுட்பங்கள் ஆகியவை பற்றிய நுண்ணறிவுகளை இந்த புத்தாக்க செநு(AI)இல் பெற முடியும். இந்த அறிவானது அடிப்படையில் மகிழ்ச்சியளிக்கின்ற உண்மையான புதிய உள்ளடக்கத்தை உருவாக்கிடுவதற்காக உதவுகின்றது.
எடுத்துக்காட்டாக, செநு(AI)-ஆல்இயக்கப்படும் இசையமைப்புக் கருவிகளைகொண்டு பயனாளரின் விருப்பத்தேர்வுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாணியின் அடிப்படையில் தனித்துவமான மெல்லிசைகளையும் பாடல்களையும் உருவாக்க முடியும். இதேபோன்று, செநு(AI)-ஆல் இயங்கும் எழுத்து உதவியாளர்களை கொண்டு, கவிதைகள், உரைத்தொகுப்புகள் , நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகள் போன்ற ஆக்கப்பூர்வமான உரை வடிவங்களை, பயனாளரின் அறிவுறுத்தல்கள் , உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்க முடியும்.
வெறுமனே உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு அப்பால், படைப்பாற்றல் செயல்முறையை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் இந்த புத்தாக்க செநு(AI)ஐ பயன்படுத்தி கொள்ளலாம். முடிந்தஅளவு பாடல்களை ஓவியமாக வரைவதற்கு செநு(AI) உதவியாளரைப் பயன்படுத்தும் ஒரு ஓவியரை அல்லது ஒரு பாடலை புத்தாக்க செநு(AI) உடன் இணைந்து செயல்படும் ஒரு இசைக்கலைஞரை கற்பனை செய்து பார்த்திடுக. இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு படைப்பாளியுடன் செநு(AI) ஆனது ஒரு கூட்டாளியாக செயல்படுகிறது, உத்வேகம் அளிக்கிறது, முடிந்தஅளவு திறன்களை விரிவுபடுத்துகிறது, படைப்புத் தொகுப்புகளை கடந்துவிரிந்துசெல்கிறது.
புத்தகாகசெநு(AI)இல் முடிந்தஅளவுதிறன்களுக்கான நன்மைகள் பன்மடங்கு உள்ளன. இருப்பினும், புத்தாக்க செநு(AI) இன் வளர்ச்சி நெறிமுறையானது புதிய கவலைகளையும் எழுப்புகிறது. இந்த புதியவகை செநு(AI)ஆல்-உருவாக்கப்பட்ட படைப்புகளின் உரிமை, பதிப்புரிமை, படைப்பு வெளியீடுகளில் செநு(AI) சார்பு பிரதிபலிக்கும் சாத்தியம் , உ.யிருள்ளமனித கலைஞர்களின் வாழ்வாதாரத்தில் செநு(AI) இன் தாக்கம் குறித்து சிலகேள்விகளும் நம்மனதில் எழுகின்றன.
இந்த சவால்களை வழிநடத்த நல்லதொரு சிந்தனையும் , நுணுக்கமான அணுகுமுறையும் தேவையாகும். புத்தாக்க செநு(AI) இன் பயன்பாட்டில் நேர்மை , வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த நெறிமுறையுடனான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். கூடுதலாக, செநு(AI) இன் செயல் மனிதனின் செயலை மாற்றுவதற்கு பதிலாக,செநு(AI) ஆனது மனிதனுடன் ஒத்துழைப்புசெய்து மனிதனின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகக் கருதப்பட வேண்டுமே தவிர, மனிதனின் செயலை மாற்றியமைத்திடக்(தவிர்க்க)கூடாது.
புத்தாக்கசெநு(AI) இன் முக்கிய பண்புகள்
புத்தாக்க செநு(AI)ஆனது பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது, ஆனால் சில முக்கிய பண்புகள் அதன் திறன்களை வரையறுக்கின்றன.
தரவுகளிலிருந்து கற்றல்: ஏற்கனவே உள்ள கலைப்படைப்புகள், இசை , இலக்கியம் உட்பட, செநு(AI) அமைப்புகளை கொண்டு பரந்த அளவிலான தரவுகளை பகுப்பாய்வு செய்திடலாம். இந்த தரவு வடிவங்களானவை, பாணிகள், நுட்பங்கள் ஆகியவற்றினை அடையாளம் காண பயன்படுத்தி கொள்ளப்படு கின்றன,பின்னர் புதியசிறுகதை, நாவல் ஆகியவற்றின் அசல் படைப்பு வெளியீடுகளை உருவாக்க பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது.
புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்குதல்: இசை, கவிதை, ஓவியங்கள் , உட்பட பல்வேறு ஊடகங்கள் மட்டுமல்லாது நிரலாக்ககுறிமுறைவரிகளையும் தனித்துவமான, புதுமையான கலைப் படைப்புகளையும் புத்தாக்க செநு(AI)ஆல் உருவாக்க முடியும். இயந்திர கற்றல் வழிமுறைகள் , தருக்கங்கள்,GANs. போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் இதை அடைய முடியும்.
படைப்பாற்றலை மேம்படுத்துதல்: ஆக்கப்பூர்வமான செயல்முறையை மேம்படுத்தவும் விரிவாக்கவும் புத்தாக்கசெநு(AI)ஆனது மிகசக்தி வாய்ந்த கருவியாக செயல்படுகின்றது. இது புதிய பரிந்துரைகளை வழங்கலாம், மாறுபாடுகளை உருவாக்கலாம் , படைப்பாற்றலின் தொகுப்புகளை சமாளிக்கலாம், புதிய ஆலோசனைகள், வாய்ப்புக்கூறுகளை ஆராய்வதில் கலைஞர்களுக்கு உதவலாம்.
பயனர் விருப்பங்களை ஏற்றுக்கொள்ளுதல்: பல ஆக்கப்பூர்வமான புத்தாக்க செநு(AI) அமைவுகளை பயனர் விருப்பத்தேர்வுகளுக்கும் பாணிகளுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கலாம்.
சுதந்திரமான புத்தாக்கம்: புத்தாக்கசெநு(AI) ஆனது படைப்புக் கருவிகளை மிகவும் எளிதாகஅணுகக்கூடியதாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் ஆக்குகிறது, இது முன்கூட்டியே கலைப் பயிற்சி இல்லாத நபர்களைகூட கலைஉலகில் பங்களிக்க அனுமதிக்கிறது.
உருவாக்க எதிரிவலைபின்னல்கள்(GANs): GAN என்பது ஒரு வகை இயந்திர கற்றல் மாதிரியாகும், இது ஒரு zero-sum விளையாட்டில் ஒருவருக்கொருவர் போட்டியிடும் இரண்டு நரம்பணுபினையங்களைக் கொண்டுள்ளது. இதன் பொருள் ஒரு பிணையத்தின் இலாபம் மற்றவொரு பிணையத்தின் இழப்பாகும்.
ஒரு GAN பின்வருமாறு செயல்படுகிறது.
உருவாக்குபவர்: படங்கள், உரை அல்லது இசை போன்ற புதிய தரவை உருவாக்குவதற்கு இந்த வலைபின்னலே பொறுப்பாகும். இது ஒரு சீரற்ற உள்ளீட்டில் தொடங்குகிறது ,உண்மையானதாக தோன்றும் ஒன்றை உருவாக்க தன்னுடைய அறிவைப் பயன்படுத்திகொள்கிறது.
பாகுபடுத்துபவர்: இந்த வலைபின்னலே தான் பெறும் தரவு உண்மையானதா அல்லது உருவாக்குபவரால் உருவாக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்புடையதாகும். இது உண்மையான , போலியான(Deepfake) தரவுகளை வேறுபடுத்தி பாகுபடுத்திட முயற்சிக்கிறது.
போட்டி:உருவாக்குபவரும் பாகுபடுத்துபவரும் தொடர்ந்து கற்றுக்கொண்டு தம்முடைய செயலைமேம்படுத்துகின்றனர். உருவாக்குபவர் மிகவும் இயல்பான தரவை உருவாக்க முயற்சிக்கிறது அதன்மூலம், பாகுபடுத்துபவரின் செயலை முட்டாளாக்குகிறது, அதே சமயம் பாகுபடுத்துபவர் போலிகளைக் கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்க முயற்சிக்கின்றது.
ஒருங்கிணைப்பு: காலப்போக்கில், உருவாக்குபவரும் பாகுபடுத்துபவரும் சமநிலையை அடைகின்றன, அந்நிலையில் உருவாக்குபவரால் உண்மையான தரவுகளிலிருந்து பிரித்தறிய முடியாத தரவை உருவாக்க இயலுகின்றது.
GANsஆல் என்ன செய்ய முடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு.
இயல்பான படங்களை உருவாக்குதல்: GANs ஆனவை நடப்பில் இல்லாத பொருட்கள், வரலாற்று நபர்கள் அல்லது கற்பனை உயிரினங்கள் ஆகியவற்றின் உயர்தர படங்களை உருவாக்குகின்றன.
உயர்தரப் படங்கள்: GANsஆனவை குறைந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றைக் கூர்மையாகவும் தெளிவாகவும் காட்டுகின்றன.
புதிய கலை வடிவங்களை உருவாக்குதல்: GANsஆனவை புதிய இசை, கவிதை அல்லது ஓவியங்கள் ஆகியவற்றினை உருவாக்குகின்றன.
தனிப்பயனாக்கும் பட்டறிவுகள்: தனிப்பயனாக்கப்பட்ட இசை இயக்க பட்டியல்களை உருவாக்குதல் அல்லது அவர்கள் ஆர்வமாக இருக்கின்ற பொருட்களை பரிந்துரைப்பது போன்ற தனிப்பயனாக்கப்பட்ட பட்டறிவுகளை GANsஆனவை பயனர்களுக்கு உருவாக்குகின்றன.
கலை, வடிவமைப்பு , உள்ளடக்க உருவாக்கம் ஆகியவற்றில் GANs இன் பயன்பாடுகள்
GANs இன் பயன்பாடுகள் ஆக்கப்பூர்வமான களங்களின் பரந்த ஒளிக்கதிர் ஆனது பரந்து விரிந்து, மாற்றியமைக்கின்ற வாய்ப்புகளை வழங்குகின்றது.
காட்சிக் கலைகளும் வடிவமைப்பும்: காட்சிக் கலைகளின் துறையில், அதிசயதக்க, உயிரோட்டமான படங்களை , கலைப்படைப்புகளை உருவாக்குவதன் மூலம் GANsஆனவை புதியஅலைகளை உருவாக்கியுள்ளன. அவை ஓவியங்கள், sketches, ஆகியவற்றினை முற்றிலும் புதிய பாணிகளில் வேறுபட்டக் கலைப்படைப்புகளை மீண்டும் உருவாக்க முடியும். கலைஞர்களும் வடிவமைப்பாளர்களும் புதிய அழகியகாட்சிகளை ஆராய்வதற்கும், புதுமையான காட்சிக் கருத்துகளை உருவாக்குவதற்கும், பாரம்பரிய கலை வடிவங்களின் எல்லைகளைத் தாண்டி சென்று விரிவடைவதற்கும் GANsஐ பயன்படுத்தி கொள்கின்றனர்.
புதியபாணியும் உருவாக்க வடிவமைப்பும்: GANs பதிய பாணியிலும் தயாரிப்பு வடிவமைப்பிலும் பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளன, இது புதிய ஆடை வடிவமைப்புகள், கட்டமைப்புகள், பாணிகளை உருவாக்க உதவுகிறது. வடிவமைப்பாளர்கள் வழக்கத்திற்கு மாறான வடிவங்களை, பொருட்களா . வடிவங்களை பரிசோதிக்க இந்த வலைபின்னல்களைப் பயன்படுத்திகொள்கின்றனர், இது வழக்கமான வடிவமைப்பு செயல்முறைகளின் மூலம் கருத்தினை அரித்து அழிக்கப்படாத புதுமையான படைப்புகளுக்கு வழிவகுக்கின்றது.
இசையமைப்பும் , இசைஉருவாக்கமும்: இசையமைப்பு கூட GANsஇன் தாக்கத்தை கண்டுள்ளது. இந்த வலைபின்னல்களைகொண்டு நாம் விரும்பியவாறுபல்வேறு வகைகளில் இசையமைக்க முடியும், இசை பாணிகளை நகலெடுக்கலாம், புதிய மெல்லிசைகள், harmonies, தாளங்களை உருவாக்கலாம். இசையமைப்பாளர்கள் செநு(AI)- இசையமைப்பாளர்கள் உடன் இணைந்து புதிய இசை உலகை ஆராய்ந்திடமுடியும், மேலும் ஊக்கமளிக்கும் வியப்பளிக்கின்றவகையிலான பாடல்களை உருவாக்குகின்றனர்.
கதைஎழுதுதல் , கதைகூறுதல்: GANsஆனவை உரை, முழு கட்டுரைகளை,சிறுகதைகள் நாவல்கள் ஆகியவற்றினையும் உருவாக்குவதன் மூலம் இலக்கிய உலகிலும் நுழைந்துள்ளனர். உருவாக்கப்பட்ட உரையின் ஒத்திசைவு, சூழலியல் ஆகியன வேறுபட்டாலும், இந்த அமைப்புகள் எழுத்தாளர்களுக்கு ஒரு தொடக்க புள்ளியை வழங்குகின்றன, ஆலோசனைகளைத் தூண்டுகின்றன அல்லது மாறுபட்ட சிறுகதைகளை ,நாவல்களைஉருவாக்க உதவுகின்றன.
GANsக்கு நம்பமுடியாத ஆற்றல் இருந்தபோதிலும், GANsஆனவை பல்வேறு நெறிமுறைக் கவலைகளையும் எழுப்புகின்றன, குறிப்பாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை குறித்து. நம்பத்தகுந்த போலிகளை(deepfakes) உருவாக்குவதில் இந்த அமைப்புகள் மிகவும் திறமையானவையாக இருப்பதால்,போலிகள் அல்லது தவறான தகவல் போன்ற தவறான பயன்பாட்டைத் தடுக்க நெறிமுறை ,வழிகாட்டுதல்கள், பொறுப்புமிகுந்த பயன்பாடு ஆகியவற்றின் தேவை இதன்மூலம் அதிகரித்து வருகிறது.
செநு(AI)-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தில் நெறிமுறை, பதிப்புரிமைக் கவலைகள்: செநு(AI)-ஆல்உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் எழுச்சி அதனுடன் முடிந்தஅளவுஅதன்திறன்களின் அலைகளை கொண்டு வருகிறது. இருப்பினும், இது குறிப்பிடத்தக்க நெறிமுறைக் கவலைகளையும் எழுப்புகிறது
சொத்துரிமை பதிப்புரிமை: செநு(AI)-உருவாக்கிய எந்தவொரு உள்ளடக்கத் திற்கான பதிப்புரிமை யாருக்கு சொந்தமானது? இது செநு(AI)-ஐ உருவாக்கியவரா, செநு(AI) ஐத் தூண்டிசெயல்படுத்திடும் பயனரா அல்லது செநு(AI)வா?
செநு(AI) மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் படைப்பாளர்களுக்கு சரியான பண்புக்கூறை , இழப்பீட்டை எவ்வாறு உறுதி செய்வது?
தற்போதுள்ள பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் போன்ற உள்ளடக்கத்தை செநு(AI) ஆல் உருவாக்கும் போது, பதிப்புரிமை மீறலுக்கான சாத்தியத்தை நாம் எவ்வாறு நிவர்த்தி செய்வது?
ஏற்கனவே உள்ள படைப்புகளால் ஈர்க்கப்பட்ட கலைத்திறனை உருவாக்குவது அல்லது பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை ஒத்த உரையை உருவாக்குவது போன்ற, தற்போதுள்ள பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில் செநு(AI) உள்ளடக்கத்தை உருவாக்கும் போது, அது நியாயமான பயன்பாடு , வழித் தோன்றல் படைப்புகளின் எல்லைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
சார்பும் பாகுபாடும்: செநு(AI)இன் மாதிரிகள் உரை, குறிமுறைவரிகளின் பெரிய தரவுத் தொகுப்புகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன, அவை ஏற்கனவே உள்ள சார்பினை, பாகுபாடுகளைப் பிரதிபலிக்கவும் ஊதிப்பெருக்கவும் செய்கின்றது. இது செநு(AI)-ஆல்உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு வழிவகுக்கலாம், இது சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஒரு சார்புடையதாக அல்லது பாகுபாடுஉடையதாக ஆகின்றது.
செநு(AI) மாதிரிகளில் உள்ள சார்புநிலையை நாம் எவ்வாறு குறைப்பது மேலும் செநு(AI)-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் நியாயமானதுதான் பக்கச்சார்பற்றதுதான் என்பதை எவ்வாறு உறுதி செய்வது?
வெளிப்படைத்தன்மையும் பொறுப்புத்துறத்தலும்: பல செநு(AI) மாதிரிகளின் உள்ளக செயலிகள் சிக்கலானவை ,யாரும் காணமுடியாதவை, அதனால் அவை தம்முடைய உள்ளடக்கத்தை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்வதும் அறிந்துகொள்வதும் மிகவும் கடினமான செயலாகும். இந்த வெளிப்படைத்தன்மை இல்லாமை அவை உருவாக்குகின்ற உள்ளடக்கத்திற்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது மிகக்கடினமாகும்.
செநு(AI) மாதிரிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் , அவை பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் எவ்வாறு?
தவறான தகவலும் பிறழான தகவலும் : இயல்புநிலையாக தோற்றமளிக்கும் போலியான செய்திக் கட்டுரைகள், கானொளிகாட்சிகள் போன்ற பிற வகையான உள்ளடக்கங்களை உருவாக்க இந்தசெநு(AI) பயன்படுத்தப்படலாம். இது பொதுவான சுதந்திரமான உரையாடலின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
செநு(AI) ஆல் உருவாக்கப்படும் தவறான தகவலையும் பிறழான தகவல்களின் பரவலை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது?
பணி இடமாற்றம்: செநு(AI) ஆனது, எழுதுதல், வடிவமைத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் உட்பட, தற்போது மனிதர்களால் செய்யப்படும் பல்வேறு பணிகளையும் தானியங்குபடுத்தும் திறன் கொண்டது. இது பணிஇடப்பெயர்வு பணியாளர்களின் பணியிழப்பு போன்ற மீதான தாக்கத்தை பற்றிய கவலைகளை எழுப்புகிறது.
பணிகளை ஒழிப்பதை விட புதிய பணிகளை உருவாக்கசெநு(AI)பயன்படுகிறது என்பதை எவ்வாறு உறுதி செய்வது?
தனியுரிமையும் ஒப்புதலும்: உள்ளடக்கத்தை உருவாக்க செநு(AI)ஐப் பயன்படுத்து வது தனியுரிமை உரிமைகளை மீறுகின்ற தொரு செயலாகும். எடுத்துக்காட்டாக, செநு(AI) இன் உருவாக்கத்திலான போலி(deepfake)எனும் தொழில்நுட்பத்தினை கொண்டு, ஒருவரின் உருவமைப்பை மற்றொரு நபரின் உருவமைப்பில் ஏற்றி இயல்பான கானொளிகாட்சிகளை போன்றுகூடஉருவாக்க முடியும்.
இது தனிநபர்களின் உருவப்படங்களை அல்லது குரலொளிகளை அவர்களின் அனுமதியின்றியும் ஒப்புதலின்றியும் தவறாகப் பயன்படுத்துதல் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.
இந்த சவால்களுக்கு சில முடிந்தஅளவு தீர்வுகள்கூடஉள்ளனஅவை பின்வருமாறு:
செநு(AI) இன் வளர்ச்சி , பயன்பாட்டிற்கான நெறிமுறை வழிகாட்டுதல்களையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குதல்
செநு(AI) மாதிரிகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் அதிகரித்தல்
செநு(AI) இன் திறன்களை , வரம்புகளைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பித்தல்
செநு(AI) இல் சார்புநிலையைக் குறைப்பதற்கான ஆய்வில் முதலீடு செய்தல்
செநு(AI) ஆல் பாதிக்கப்படக்கூடிய படைப்புத் தொழில்களின் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவதற்கான வழிமுறைகளை ஆதரித்தல்
புத்தாக்க செநு(AI)இல் GANsஇன் எதிர்காலம் மகத்தான வாக்குறுதியைக் கொண்டுள்ளது. பல்வேறு களங்களில் சிக்கலான, பல மாதிரியான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் உருவாக்குவதற்கும் அவற்றின் திறனை மேம்படுத்துவதன் மூலம், இந்த வலைபின்னல்களை மேலும் செம்மைப்படுத்துவதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. GAN தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், மேலும் ஊடாடும் , கூட்டான பணி கருவிகளுக்கு வழிவகுக்கலாம், நிகழ்நேரத்தில் செநு(AI) உடன் ஈடுபடுவதற்கு படைப்பாளிகளுக்கு அதிகாரமளித்து, எதிர்பாராத புதிய உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகின்றது
முடிவாக, பல்வேறு துறைகளில் கலையின் வெளிப்பாடு, புதுமைக்கான புதிய பாதைகளைத் திறக்கும், புத்தாக்க செநு(AI) இன் துறையில் ஒரு அற்புதமான பாய்ச்சலை உருவாக்கஎதிரி வலைபின்னல்கள் பிரதிபலிக்கின்றன. சவால்கள் தொடர்ந்தாலும், GAN மனித படைப்பாற்றலை அதிகரிக்கவும், படைப்பாற்றல்  செயல்முறையை மறுவடிவமைக்கவும் செய்கின்ற திறனை மறுக்க முடியாதது, புத்தாக்க துறையில் திறன் என்ன என்பதை மறுவரையறை செய்ய செநு(AI) ஆனது மனிதனின் புத்தி கூர்மையுடன் கைகோர்த்து ஒத்துழைக்கின்ற ஒரு சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது.

 

 

%d bloggers like this: