உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super Computing Conference) ஜூலை மாதம் ஜெர்மெனியில் உள்ள பிரான்க்புரட் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் அதிவேக கணினியின் பட்டியலை லிப்னக் (LINPACK) என்ற அளவுகோள் கொண்ட சிறந்த 500 திட்டங்ங்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் சீனாவின் மீத்திறன் கணினியான (Super Computer) தியான்கே-2 (Tianhe-2) தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

தியான்கே 2

தமிழில் பால்வழி என்ற மீத்திறன் கணினி 33.86 ஐம்மதிப்பு புள்ளிச் செயல்பாடுகள் (PetaFLOPS) கொண்டது. அதாவது ஒரு வினாடியில் 33,860 ட்ரில்லியன் கணித்தல்களைச் செய்யக்கூடியது. இதனை சன் யாட் சென் என்ற பல்கலைகழகமும், யுவன்சு (Guangzhou) மாவட்டத்தின் நிர்வாகக்குழு ஒத்துழைப்புடன் 1300 பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இம்மீத்திறன் கணிணியானது 3.12 மில்லியன் ப்ராசசர் இணைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் கட்டமைப்பு இன்டெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐவி பிரிட்ஜ் மற்றும் சியோன் பி ஆகிய கம்ப்யூட்டர் சில்லுகள் பயன்படுத்தப்டுகிறது. இது முற்றிலும் லினக்ஸ் (LINUX) இயங்குதளத்தில் செயல்படுகின்றது. இதில் மேம்படுத்தல்களை மேற்கொள்வதன் முலம் தியான்கே-2 54.9 ஐம்மதிப்பு புள்ளிச் செயல்பாடு வரை அதிகரிக்க முடியும்.

லினக்ஸ் வகை இயங்குதளமான கைலின் மூலம் இயக்கபடவிருக்கும் தியான்கே-2 மீத்திறன் கணினி, இதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணினியாக இருந்த அமெரிக்காவின் டைட்டான் மீத்திறன் கணினியை போல் ஏறத்தாழ இரண்டு மடங்கு வேகமுடையது. அமெரிக்க சக்திவளத்துறையினரால் பயன்படுத்தப்படும் டைட்டான் மீத்திறன் கணினியின் உச்சபட்ச செயற்பாட்டுத் திறன் 17.59 ஐம்மதிப்பு புள்ளிச் செயல்பாடு ஆகும். தியான்கே-2 மீத்திறன் கணினியானது குவான்சு நகரிலுள்ள தேசிய மீத்திறன் கணினி நிர்வாகத்தில் நிறுவப்பட்டு தென்சீனாவின் கல்வி மற்றும் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மாநாட்டில் இடம்பெற்ற சுமார் 500 மீத்திறன் கணினிகளில்  485 கணினிகள் லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது.

மீத்திறன் கணினிகளில் 97 சதவிகிதம் லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தபடுகிறது. மீதம் உள்ள 3 சதவிகிதம் யுனிக்ஸ் (UNIX) மற்றும் விண்டோஸ் முலம் இயங்குகின்றது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற அமெரிக்கா 233 கணினிகள் கொண்டு முதல் இடத்திலும், ஐரோப்பிய நாடுகள் 141 கணினிகள் கொண்டு இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா தொடர்ந்து முதல் இடத்தை பிடித்தாலும் 3 புதிய கணினிகளுடன் 61 கணினிகளிலிருந்து 37 ஆக குறைந்துள்ளது. 11 கணினிகளுடன் இந்தியா இடம் பெற்று உள்ளது. இதில் 79 வது இடத்தை இந்திய அறிவியல் கழகத்திலுள்ள மீத்திறன் கணினி பிடித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ஒபாமா உலகின் அதிவேக கணினியை தயாரிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். இதன் படி சீனாவின் தியான்கே-2 யை விட ஆற்றல் உடையதாக இருக்கும் என்றும் 2025 ஆம் ஆண்டின் மீத்திறன் கணினியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

லினக்ஸின் பயன்பாடுகளில் சில:

  1. நாசா (NASA) தனது திட்டங்களில் லினக்ஸ் பயன்படுத்துகிறது . (எ-டு. காட்டு விமான பயணங்கள், விண்வெளி பொறியியல் பணிகள் மற்றும் காலநிலை ஆராய்ச்சி)
  2. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
  3. பங்கு சந்தை (Stock Markets)
  4. ரோபாட்டிக்ஸ்
  5. தகவல் தொடர்பு சேவைகள்

சிந்துஜா சுந்தராஜ்,

கட்டுரை ஆசிரியர்,

கட்டற்ற மென்பொருள் வன்பொருள் இயக்கம்

புதுச்சேரி

தொடர்புக்கு:- sindhuja0505@gmail.com

%d bloggers like this: