பக்கங்கள்
உங்கள் தளத்தின் (பதிவுகள் அல்லாத) தனிப்பட்ட பக்கங்களை பார்வையிட, சேர்க்க, மாற்றியமைக்க, நீக்க இந்த மெனு உதவும்.
இந்த மெனுவில்
பக்கங்களைச் சுருக்கமாக நிரந்தரமான பதிவுகள் எனலாம். அதிலும் Content உங்கள் விருப்பம். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை (About me) அதில் தரலாம். அந்த Content எப்படி தளத்தில் உள்ளிடப்பட வேண்டும் என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
உங்கள் Dashboard-ல் Pages எனும் இணைப்பைக் கிளிக்கினால் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு Window வரும்.
உங்கள் பக்கங்களை திருத்திய வரிசைப்படி காட்டும் பகுதியே இது. இதில் பக்கத்தின் தலைப்பு (Title), எழுதியவர் (Author), பதிவில் இடம்பெற்ற மறுமொழிகளின் எண்ணிக்கை (No. of comments), பதிவின் தற்போதைய நிலை (Status), திருத்தியமைக்கப்பட்ட தேதி (Date) ஆகியவை அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அட்டவணை வடிவில் அமைந்த பட்டியலில் ஒவ்வொரு பதிவின் கீழும் கீழ்கண்ட தேர்வுகள் (Options) இருக்கும். அது குறித்து விரிவாக…
ஏற்கனவே இவற்றை நாம் பதிவுகளிலும் கண்டுள்ளோம் என்பது நினைவிருக்கிறதா? அதே செயல்முறைகள்தான் இங்கேயும். ஒரு சிறு நினைவூட்டலாக எடுத்துக் கொள்ளுங்கள்
தொகு (Edit) : முழுமையாக (அல்லது வசதியாக) தொகுக்க உதவும் தேர்வு இது
விரைவாக தொகு (Quick edit) : சில குறிப்பிட்ட விடயங்களை மட்டும் (Date, Title, Author, etc ) தொகுக்க உதவும் தேர்வு இது.
குப்பை (Trash) : வழக்கமாகப் பயன்படுத்தும் நீக்குதலுக்கான (Delete) தேர்வு இது. (முழுப் பக்கத்தையுமே நீக்கிவிட முடியும்!)
பார் (view) : மாற்றங்கள் முடிந்த பின்னரோ, பதிவிடும் முன்னரோ, பதிவிட்ட பின்னரோ பக்கத்தைப் (Preview) பார்வையிட உதவும் தேர்வு இது.
முக்கியமான குறிப்பு:
- பக்கங்களில் பதிவுகளைப் போல Tags, Categories இடம்பெறாது என்பதை நினைவில் கொள்க.
புதிய பதிவிட:
Add new post என்ற தேர்வினை Posts-மெனுவில் தேர்ந்தெடுப்பதன் மூலமாக நாம் புதிய பதிவினை வெளியிடலாம். இந்த இணைப்பில் நாம் எழுதுவதற்கு ஓர் வெற்றிடம் தரப்படும். அதில் எளிதாக நம்முடைய கருத்துக்களை எழுதலாம். நமக்கு விருப்பமான எதையும் எழுதலாம். அவற்றை முறையாக வகைப்படுத்தினால், தேடுபொறிகளில் எளிதில் அகப்படும். அதாவது உங்கள் கருத்துக்களின் உள்ளடக்கத்தை வகைப்பிரிக்க (Categories) வேண்டும். அதோடு வகைச்சொற்களையும் (Tags) இட வேண்டும்.
உதாரணத்திற்கு,
நீங்கள் கணியம் என்ற தலைப்பில் பதிவெழுதினால், அதை மின்னிதழ்கள், மாத இதழ்கள் என வகைப்படுத்தலாம். கணியம், மற்றும் பதிவின் முக்கியச் சொற்களை வகைச்சொற்களாகத் தரலாம்.
புதிய
பக்கம் (Add new Page):
Add new page என்ற தேர்வினை Pages-மெனுவில் தேர்ந்தெடுப்பதன் மூலமாக நாம் புதிய பதிவினை வெளியிடலாம். இந்த இணைப்பில் நாம் எழுதுவதற்கு ஓர் வெற்றிடம் தரப்படும். அதில் எளிதாக நம்முடைய கருத்துக்களை எழுதலாம். நமக்கு விருப்பமான எதையும் எழுதலாம். அவற்றை வகைப்படுத்த வேண்டியதில்லை. நிரந்தரமான எந்த பதிவையும் பக்கமாக்கலாம். அடிக்கடி பயன்படுத்தப்படும் பக்கம் “ஆசிரியர் குறிப்பு” (About Author) ஆகும்.
- பதிவோ, பக்கமோ, அவற்றை Draft ஆக சேமித்து எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்பதையும் மறவாதீர்.
பதிவெழுத கூடுதல் வசதிகள்:
வெறுமனே எழுதினால் நமக்கே சலிப்பு தட்டக்கூடும். அதை வண்ணமயமாக, வித்தியாசப்படுத்திக் காட்டினால், படிப்பவருக்கும் உவப்பு ஏற்படும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
WordPress-ல் நமக்கு அதற்கான அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கின்றன. பொதுவாக MS-Word –ல் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான வசதிகளை இங்கேயும் பயன்படுத்த முடியும். அவற்றைப் பற்றி சுருக்கமாக இங்கே…
Bold, Italic, Underline உள்ளிட்ட எளிய வசதிகள் முதற்கொண்டு, எழுத்தின் அளவு, நிறம், மேற்கோள்கள் (Blackquotes), பத்தி இசைவுகள் (Paragraph alignments), வரிசை முறைகள் (Bullet, Ordered List), உள்பட பல வசதிகளும் உள்ளன.
பொதுவாக பதிவெழுதும் பகுதி இருவேறு விதமான பகுதிகளாக இருக்கும். அவை,
- Visual
- Text
- Visual என்பது சாதாரணமாக நாம் எழுதும் பகுதி.
- Text என்பது கூடுதலாக HTML மொழியை எழுத வாய்ப்பளிக்கும் பகுதி. இதில் embed கூட செய்ய இயலும். இப்பகுதியில் முழுக்கவே HTML –ஐ பயன்படுத்தி பதிவெழுதலாம். HTML பரிச்சயமுள்ளவர்கள் மட்டும் முயன்று பார்க்கலாம்.
இதுதவிர கூடுதலாக படங்கள் (Images), காணொளிகள் (Videos) முதலானவற்றையும் இணைக்கும் வசதியும் உண்டு. அதற்கு Add Media என்கிற வசதியை உபயோகப்படுத்தலாம். வீடியோ-வை உள்ளிட நாம் Premium user ஆக வேண்டும் மற்றபடி pdf-ஐக் கூட நாம் சாதாரணமாக உள்ளிடலாம்.
- நமக்கு 3 GB கொள்ளளவுகொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில்ஒரேமுறையில் 1 GB அளவுகோப்புகளைஉள்ளிடலாம்.