சுதந்திர மென்பொருள் தின கொண்டாட்டம் – சென்னை

அன்புடையீர் ,

வணக்கம் .

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு [ fsftn.org ], இந்திய குனூ-லினக்ஸ் பயனர் குழு [ilugc.in] சென்னை மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி குனூ-லினக்ஸ் பயனர் குழு ஆகியவை
இணைந்து, வருகின்ற 22 செப்டம்பர், 2013 சுதந்திர மென்பொருள் தினத்தை சென்னை, அண்ணா
பொறியில் பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (விவேகானந்தா அரங்கம்) கொண்டாட இருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் கட்டற்ற மென்பொருள் (Free Software), காப்புரிமைகள் (Copyrights), திறந்தவன்பொருள் (Open Hardware) பற்றி தொழில்நுட்ப அமர்வுகள் நடத்த உள்ளனர்.

நிகழ்ச்சியின் பகுதியாக யார் வேண்டுமானாலும் நிலையகத்தை (Free software demo stall) நிறுவலாம். சிறந்த நிலையகத்திற்கு ரூ.1000/- பரிசு வழங்கப்படும். நிலையகத்தை நிறுவ இங்கே பதிவு
செய்யவும் fsftn.org/sfd_stall_registration_form

இந்த நிகச்சியில் மாணவர்கள், மென்பொருள் வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஒன்று
கூடி அவர்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இத்துடன் நிகழ்ச்சிக்கான சுவரொட்டியும், நிலையக நிறுவல் போட்டிக்கான சுவரொட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வைப் பற்றிய செய்தியை பரப்பி, எங்களுடன் இணைந்து கொண்டாட கட்டற்ற
மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அனைவரையும் அழைக்கிறது.

நாள்: 22 செப்டம்பர், 2013
இடம்: விவேகானந்தா அரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
நேரம் : 10.00 – 5.00

அன்புடன்,

நிர்வாக குழு

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு.

File:Sfdt6.jpg

%d bloggers like this: