சேவையகமற்ற வரைச்சட்டம்(Serverless Framework) ஒருஅறிமுகம்

எந்தவொரு மேககணினியிலும் சேவையகமற்ற பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காக நமக்கு தேவையான அனைத்தையும் இந்த சேவையகமற்ற வரைச்சட்டமானது (Serverless Framework )வழங்குகிறது. இது கட்டமைப்பு, பணிப்பாய்வு தானியிங்கிசெயல் ,சிறந்த நடைமுறைஆகியவற்றை வழங்குகிறது, எனவே நாம் விரும்பினால் அதிநவீன சேவையகமற்ற கட்டமைப்புகளை வரிசைப்படுத்தலாம். இது AWS Lambda, Azure ஆகிய செயலிகள், Googleஇன் மேககணினி செயலிகள் போன்ற பல்வேறு புதிய, நிகழ்வு சார்ந்த இயக்க சேவைகளைப் பயன்படுத்தி கொள்கிறது. நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இயங்குகின்ற மீச்சிறு சேவையால் ஆன பயன்பாடுகளை உருவாக்க இது நம்மை அனுமதிக்கிறது. இந்த தானியங்கி அளவுகள் இயங்கும் போது மட்டுமேயான கட்டணம் நம்மிடம் வசூலிக்கபடும், அதாவது இந்த பயன்பாட்டு பராமரிப்புக்கான குறைந்த செலவுகளை கொண்டது. இதனுடைய குழுவால் எழுதப்பட்ட செருகுநிரல்களின் சிறந்த தேர்வைக் கொண்டு புதிய கட்டளைகளை அல்லது ஏற்கனவே உள்ள கட்டளைகளை தேவையெனில் நாமே உருவாக்கிகொள்ளலாம்.
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்
இது Java, Node.js, Python, C#, Ruby, PHP, Swift, Go, Kotlin, Scala & F #ஆகிய பல்வேறு கணினிமொழிகளை ஆதரிக்கிறது. இதுநம்முடைய சேவையகமற்ற கட்டமைப்பின் முழு வாழ்க்கை சுழற்சியையும் நிருவகிக்கிறது .வழங்குநர் வள மேலாளர்கலின் செயலிகள், நிகழ்வுகள் , அவற்றின் தேவையான ஆதாரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வரிசைப்படுத்த நம்மை அனுமதிக்கின்றது. குறிமுறைவரிகள், செயல்முறைகள் , வளங்கள் ஆகியவற்றை எளிதாக நிர்வகிப்பதற்கான செயலிகளை நாமே தொகுத்திடலாம் . இதுகுறைந்தபட்ச உள்ளமைவு , சாரக்கட்டு ஆகியவற்றை கொண்டது. இது கட்டமைக்கப்பட்ட வெவ்வேறு நிலைகளுக்கான ஆதரவினை அளிக்கின்றது. இது CI/CD பணிப்பாய்வுகளுக்கு உகந்ததாக உள்ளது . இது தானியிங்கிசெயல்பாடு, தேர்வுமுறை , சிறந்த நடைமுறை ஆகியவற்றை கொண்டுள்ளது . இது செருகுநிரல்கள் வழியாக விரிவாக்கக்கூடியது. இது சேவையகமற்ற சேவைகள் , செருகுநிரல்களின் சுற்றுச்சூழல் அமைப்பினை கொண்டுள்ளது .இது MIT எனும் உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.
சேவையகமற்ற வரைச்சட்டம் – நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இயங்குகின்ற மீச்சிறு சேவைகள், நமக்காக தானாக அளவிடுகின்றது அவை இயங்கும் போது மட்டுமே கட்டணம் வசூலிக்கின்ற பயன்பாடுகளை உருவாக்குகின்றது. இது நம்முடைய பயன்பாடுகளைப் பராமரிப்பதற்கான மொத்த செலவைக் குறைக்கிறது, மேலும் தருமதிப்புகளை விரைவாக உருவாக்க நமக்கு உதவுகிறது.
இதனை விரைவாக துவங்கி செயல்படுத்திடுவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு
1. npm வழியாக நிறுவுகை செய்திடுதல்: அதற்கான கட்டளைவரி:
npm install -g serverless
2. நம்முடைய வழங்குநர் நற்சான்றிதழ்களை அமைத்தல்: அவ்வாறு அமைப்பது குறித்த கானொளிகாட்சிகளை காண்டு அதன்படி செயல்படுக
3. ஒரு சேவையை உருவாக்கிடுதல்: ஒரு புதிய சேவையை உருவாக்கலாம் அல்லது இருக்கின்ற சேவைகளை நிறுவுகைசெய்திடலாம்அதற்கான கட்டளைவரிகள்.
# புதிய சேவையகமற்ற சேவை / செயல்திட்டத்தை உருவாக்கிடுதல்
serverless create –template aws-nodejs –path my-service
# புதிதாக உருவாக்கப்பட்ட கோப்பகத்தில் மாற்றிடுதல்
cd my-service
4. ஒரு சேவையை வரிசைப்படுத்துதல்: Serverless.yml இல் நம்முடைய செயலிகள், நிகழ்வுகள் அல்லது வளங்களில் மாற்றங்களைச் செய்திடும்போது இதைப் பயன்படுத்திகொள்க அல்லது சேவையில் உள்ள அனைத்து மாற்றங்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த விரும்பிடும்போதானகட்டளைவரி பின்வருமாறு.
serverless deploy -v
5. செயலியை வரிசைப்படுத்துதல்: AWS இல் நம்முடைய AWS Lambda குறிமுறைவரிகளை விரைவாக பதிவேற்றவும் மேலெழுதவும் இதைப் பயன்படுத்திகொள்க, இது விரைவாக உருவாக்க நம்மை அனுமதிக்கிறது அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
serverless deploy function -f hello
6. AWS இல் செயலியைத் துவங்கிடுதல்: AWS இல் AWS Lambda செயலியைச் செயல்படுத்துகிறது மேலும் பதிவுகளைத் தருகிறது அதற்கான கட்டளைவரிபின்வருமாறு.
serverless invoke -f hello -l
7. நம்முடைய கணினியில் செயலியைத் துவங்கிடுதல்: நம்முடைய வளாக கணினியில் AWS Lambda செயலியைத் துவங்கி பதிவுகளைத் தருகிறது அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
serverless invoke local -f hello -l
8. செயலியின் பதிவுகளைப் பெறுதல்: நம்முடைய முகப்புதிரையில் ஒரு தனியான தாவல்பொத்தானின் திரையைத் திறந்து, இந்த கட்டளையைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட செயலிக்கான அனைத்து பதிவுகளையும் தாரையோட்டம் செய்க. அதற்கான கட்டளைவரிபின்வருமாறு.
serverless logs -f hello -t
9. சேவையகத்தினை அகற்றிடுதல்: நம்முடைய AWS கணக்கிலிருந்து அனைத்து செயலிகள், நிகழ்வுகள் ஆதாரங்களை நீக்குகிறது அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
serverless remove
ஒரு சேவையை நிறுவுகைசெய்வது எவ்வாறு: Github repo ஐப் பதிவிறக்கம் செய்து அதை விரித்துபிரிப்பதன் மூலம் வளாகத்தில் முன்பே தயாரிக்கப்பட்ட சேவையகமில்லாத சேவையை நிறுவுகைசெய்திட இது ஒரு வசதியான வழிமுறையாகும். இதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
serverless install -u github.com/your-url-to-the
இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் github.com/serverless/serverless எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

%d bloggers like this: