நம்முடைய சொந்த webfonts எனும் இணையஎழுத்துருவை செயல்படுத்தி பயன்பெறலாம்

பெரும்பாலும் கணினி பயனர்கள் பலருக்கு கணினியின் எழுத்துருக்களானவை ஒரு மர்மமாகவே விளங்குகின்றன . உதாரணமாக, ாம் ஒரு ஆவணத்தினை கணினியிலுள்ள ஏதேனுமொரு பயன்பாட்டினை கொண்டு வடிவமைத்தபின்னர் அதனை வேறு இடத்திற்கு கொண்டுசென்ற அச்சிடமுயலும்போது அந்த அச்சுபொறியால் அறிந்தேற்ப செய்த Arial போன்ற எழுத்துருக்களை கொண்டு அச்சிடுவதை காணலாம் ஏனெனில் அந்த குறிப்பிட்ட அச்சுப்பொறியில் நம்முடைய பயன்பாட்டில் வடிவமைத்திருக்கும் எழுத்துரு இல்லை அதனால் அந்த அச்சுப்பொறியானது தனக்குதெரிந்த எழுத்துருவைகொண்டு செயல்படுகின்றது ? இதனைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன: அதாவது சிறப்பு எழுத்துருக்களை வேர்டு பயன்பாட்டிலிருந்து அச்சுப்பொறிக்கு கொண்டுசெல்லும்போதும் , PDF போன்ற கையடக்கஆவணமாக உருமாற்றம் செய்திடும்போதும் அதனோடுகூடவே நாம் பயன்படுத்திய நம்முடைய சொந்த எழுத்துருக்களை கொண்டுசெல்லுமாறு வடிவமைத்திடுவது அவற்றுள் ஒரு வழிமுறையாகும் இணையத்தில் கூட ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு எழுத்துருவை அறிந்தேற்பு செய்து பயன்படுமாறு செய்திருப்பார்கள் ஆயினும் இவ்வாறான பிரச்சினையை சரிசெய்திடுவதற்காக நமக்கு CSS பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருந்தால்போதும், பொதுவாக பின்வருமாறான அறிவிப்பை காண நேரலாம்: .

h1 { font-family: "Times New Roman", Times, serif; }

இது Times
New Roman
எனும்
ஒரு குறிப்பிட்ட எழுத்துருவை வரையறுக்கும் வடிவமைப்பாளரின் முயற்சியாகும்
, குறிப்பிட்ட கணினியில் இந்த டைம்ஸ் நியூ ரோமன் எனும் எழுத்துரு நிறுவப்பட்டிருந்தால் இவ்வாறான அறிவிப்பை செய்யத் தேவையில்லை . இது உரைக்கு பதிலாக ஒரு வரைகலை குறியீட்டைப் பயன்படுத்துவதை விட சிறப்பாக இருக்கிறது, ஆனால் இது இன்னும் மோசமான, எழுத்துரு அல்லாத நிருவாகத்தின் முறையற்ற செயல்முறையாகும், இருப்பினும், இணையதளத்தினை பயன்படுத்த ஆரம்பித்த முந்தைய நாட்களில் இவ்வாறாகத்தான் தீர்வுசெய்யப்பட்டுவந்தது.

அதன்பின்னர் பின்னர் இணைய எழுத்துரு( webfonts) எனும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தது மேலும் இன்த எழுத்துருக்களை மேலாண்மை செய்திடும் பணியானது வாடிக்கையாளர் கணினியிலிருந்து சேவையகணினிக்கு இடம்பெயர்ந்துவிட்டது. அதாவது வலைத்தளங்களில் உள்ள எழுத்துருக்கள் அனைத்தும் சேவையககணினியால் வாடிக்கையாளர் கணினிக்கு வழங்கப்பட்டு எழுத்துருக்களின் பிரச்சினை தீர்வு செய்யப்பட்டன, பயனாளரின் கணினியில் குறிப்பிட்ட ஒரு எழுத்துரு இருந்தால் மட்டுமே பயனாளரால் இணையஉலாவலை எளிதாக மேற்கொள்ளமுடியும் எனும் பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிட்ட எழுத்துருவைக் இணைய உலாவியானது தன்னுடைய இணைய உலாவலுக்காகத்தேடிக்கண்டுபிடிக்கத் தேவையில்லை. கூகுள் போன்ற வழங்குநர்கள் கூட கட்டற்ற உரிமம் பெற்ற எழுத்துருக்களை இணைய உலாவலுக்காக வழங்குகின்றனர், இவ்வாறான எழுத்துருக்களை இணைய வடிவமைப்பாளர்கள் தாம் கட்டமைத்திடும் இணையதளத்தில் கொண்டுவருவதற்காக ஒரு எளிய CSS விதியைமட்டும் தாங்கள் வடிவமைத்திடும் இணைய தளங்களில் சேர்த்தால் போதும்.
இந்த வசதியை கொண்டுவருவதற்காக செலவேதும் செய்யத் தேவையில்லை இது கட்டணமற்றதாகும் கூகுள் போன்ற முக்கிய தளங்கள்கூடஇவ்வாறான கட்டணமில்லாத இணைய எழுத்துருக்களை கொண்டுவர உதவுகின்றன இல்லையென்றாலும் பரவாயில்லை நாமே நம்முடைய சொந்த இணையஎழுத்துருவை உருவாக்கி பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும் .இது ஒரு எளிமையான CSS விதிமுறையைப் பயன்படுத்துவது போலவும் எளிது அதைவிட நம்முடைய எழுத்துருவை கொண்டு இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்தினையும் மேலேற்றம் செய்திடும்போது அதனோடு இதற்கான எழுத்துருவை ஒவ்வொருமுறையும் தேடிபிடித்திட அதிகநேரம் செலவழிக்காமல் நம்முடைய சொந்த எழுத்துருவாக இருப்பதால் மிகவிரைவாக இணையபக்கத்தின் மேலேற்றம் செய்து நம்முடைய இணையதளமானது மிகவேகமாக இயங்குவதை காணமுடியும்

இதற்காக முதலில் கட்டற்ற உரிமம் பெற்ற எழுத்துருவாக இருக்கின்றதாவென சரிபார்த்திடவேண்டும் பொதுவாக தற்போது பயன்பாட்டிலுள்ள எல்லா எழுத்துருக்களும் இலவசமாக இருப்பதால் மென்பொருளின் கட்டற்ற உரிமங்களைப் பற்றி சிந்திக்கவோ அல்லது கவனிப்பதற்கோ நமக்கு நேரமும் காலமும் போதுமானதாகஇல்லை இவைகளுள் எவை கட்டற்றவை என எவ்வாறு நாமறிந்துகொள்வது என்ற குழப்பம் வேறு நம்முடைய மனதில் எப்போதும் அலைகழித்துகொண்டே இருக்கலாம். நிற்க பொதுவாக மைக்ரோசாப்ட், ஆப்பிள், போன்ற நிறுவனங்களிடமிருந்து நாம் கணினியை வாங்கிடும்போது Arial, Verdana, Calibri, Georgia, Impact, Lucida and Lucida Grande, Times and Times New Roman, Trebuchet, Geneva, போன்ற பல்வேறு எழுத்துருக்களையும் உட்பொதிந்தே வழங்கிடுவார்கள் இவைகளை நாம் பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால்மறுவிநியோகம் மட்டும் செய்திடமுடியாது என்ற செய்தியைமனதில் கொள்க அதனால் இவ்வாறான எழுத்துருக்களை நம்முடைய இணையதள பக்கத்திற்கான எழுத்துருவாக இணைய சேவையகத்திற்கு பதிவேற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் கட்டற்ற எழுத்துருக்களான Font Library, Omnibus Type போன்றவை மட்டுமல்லாது கூகுள் ,அடோப் போன்றவைகள்கூட இந்த தடைகளை தகர்த்தெறிந்து விட்டன .இவ்வாறு கட்டற்ற எழுத்துருவிற்காக TTF, OTF, WOFF, EOT போன்ற பல பொதுவான எழுத்துருக்களின் கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தமுடியும் Sorts Mill Goudy எனும் இணையஎழுத்துருவானது WOFF என சுருக்கமாக அழைக்கப்படும் இணைய திறந்த எழுத்துருவடிவமைப்பு(Web Open Font Format) மொஸில்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது) பதிப்பினை உள்ளடக்கியதை நம்முடைய சொந்த இணைய எழுத்துருவாக பதிவேற்றம் செய்தவதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் மற்ற வடிவமைப்புகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றி செயல்படுத்திடமுடியும் நாம் உருவாக்கி வடிவமைத்த நம்முடைய இணைய எழுத்துருவை

scp
GoudyStM-webfont.woff seth@example.com:~/www/fonts/

எனும்
கட்டளைவரிவாயிலாகநம்முடைய
இணையச்சேவைய
ளர்
பகுதிக்கு பதிவேற்றம் செய்திடுக
இது
cPanel
எனும்
வரைகலை மேலேற்றும் கருவி
அல்லது இதேபோன்ற இணையகட்டுப்பாட்டு
பலகத்தின் வாயிலாக மேலேற்றம்
செய்கின்றது தொடர்ந்து

 1. @font-face {

   font-family: "skfont"; 
   src: url("../fonts/GoudyStM-webfont.woff"); 
  } எனும் கட்டளைவரிகளின் வாயிலாக நம்முடையஇணையபக்கத்தின் CSSஇன் ஒரு @font-face விதியை
   சேர்த்திடுக  தொடர்ந்துநம்மால் படித்து புரிந்துகொள்ளுமாறு இதற்கான பெயரை அமைத்துகொள்க 
  அதன்பிறகு இதனை அழைத்து மேலேற்றுவதற்காக 

h1
{ font-family: "
skfont",
serif; }

என்றவாறு வழங்கப்பட்ட CSS இனத்தில் குறிப்பிட்டு அழைத்திடுக இதன்பிறகு நம்முடைய 
எழுத்துருவானது நம்முடைய இணையதளத்தினை மேலேற்றம் செய்திடும்போது தானாக விரைவாக 
மேலேற்றம் ஆவதை காணலாம்
%d bloggers like this: