நேரடி ஒளிபரப்பின்(Live Streaming) பயன்கள்

தற்போது இணையத்தின் துனையுடன் கல்வி,பணிமேம்பாடு, பொருட்களை கொள்முதல்செய்தல், பொழுதுபோக்கு தகவல் தொடர்பு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்ளுதல் என்பன போன்ற வரம்பற்ற வசதிவாய்ப்புகளை பெறுகின்றஅளவிற்கு நம்முடைய வாழ்க்கைவசதி மிக மேம்பட்டுவருகின்றது அதிலும் நாம் என்ன செய்யவேண்டுமென நினைக்கின்றோமோ அதனை எந்தநேரத்திலும் எந்தவிடத்திலிருந்தும் இணையத்தின் வாயிலாக செயற்படுத்தி பயன்பெறமுடியும் என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டோம். அவ்வாறன தற்போதைய தொழில்நுட்பவளர்ச்சியினால் உயர்ந்துள்ள இவ்வுலகில் இணையத்தின் வாயிலாக குறிப்பிட்டதொரு செயல்நடை பெறும்போதே அதாவது நிகழ்நிலையிலேயே அதனை நேரடிஒளிபரப்பு (Live Streaming)எனும் புரட்சிகரமான வசதியின் வாயிலாக காட்டியாக காணும் நிலைக்கு தற்போது நாம் முன்னேறி யுள்ளோம். இணையபடப்பிடிப்புகருவி ,திறன்பேசி, இதரசாதனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த வசதியானது வியாபார அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுமாறு செயல்படுத்தப்படுகின்றது இந்த நேரடி ஒளிபரப்பு எனும் வசதியானது மிகவும் ஆச்சரியமூட்டும் பிரபலநிகழ்வாக உலகில் தனிநபரொருவர் எந்த இடத்தில் இருந்தாலும் கிடைக்குமாறான சிறப்பு தன்மைகொண்ட ஒளிபரப்பாக இது விளங்குகின்றது ஒரு வியாபார நிறுவனம்அல்லது தனிநபர் பற்றிய செய்திகளை விவரங்களை குறிப்பிட்ட தொகுப்பான மக்களுக்கு அவர்கள் அருகில் இல்லை யென்றாலும் அவர்களை சென்றடையுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட நிகழ்வில் குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட குழுவான நபர்கள் கலந்து கொள்ள முடியவில்லை யென்றாலும் அல்லது ஒருபகுதி நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வது மிகுதிநிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் இந்த நேரடிஒளிபரப்பின் வாயிலாக அந்த நிகழ்வு முழுவதும் கலந்து கொண்டவாறு செயல்பட இந்த வசதி உதவுகின்றது இந்த நேரடிஒளிபரப்பு என்பது கானொளிகாட்சி மட்டுமே என தவறாக எண்ணவேண்டாம் இதன்வாயிலாக நேரடியாக பங்குகொண்டு குழுவிவாதம் செய்து முக்கியமான பிரச்சினைகளுக்கு தேவையான தெளிவா ன முடிவை எடுக்கமுடியும் இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக தொழில்நுட்ப சாதனங்களும் அதற்கான செலவுகளும் அதிகமாக ஆகுமோ என பயப்படவேண்டாம் இதற்காக உள்ளமைந்த மைக்ரோ போனுடன் கூடியவெப்கேமிரா, என்கோடர், எளிதாகஅணுககூடிய இணையஇணப்பு, நம்பதகுந்த நேரடிஒளிபரப்பு தளம் ஆகியவை மட்டும்போதுமானவையாகும். இவை யனைத்தும் நம்முடைய திறன்பேசியில் இருந்தால் திறன்பேசியேபோதுமானதாகும்.மேலும் விவரங்களுக்கு obsproject.com/ எனும் இணையபக்கத்திற்கு செல்க.

%d bloggers like this: