புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்

பொதுவாக திறமூலங்களின் வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் நிரலாக்கத்தினை எளிதாக துவங்கலாம், அதிலும் எந்தவொரு நிரலாக்கத்தினையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடங்கலாம் என்பதே தற்போதைய உண்மை நிலவரமாகும். மேலும் தற்போதுகணினி மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதக் கற்றுக் கொள்வதற்காகவென கணினி அறிவியல் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுதான் லினக்ஸ், திறமூலங்கள் ஆகியவற்றின் தற்போதைய திறனாகும் எவரும் சிறிய அளவில் குறிமுறைவரிகளை எளிதாக எழுத கற்றுக்கொள்ளலாம். எவரும் ஏதேனும்ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினால்,அவ்வாறு தொடங்குவதற்கு ஏராளமான அளவில் சிறந்த வழிகாட்டிகள் பலஉள்ளன. இவை எவருக்கும் எப்போதும் உதவ தயாராக இருக்கின்றன
. நிரலாக்க மொழிகளை ஒப்பிடுதல் பொதுவாக பெரும்பாலான நிரலாக்க மொழிகள் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. ஏதேனும் ஒரு நிரலாக்க மொழியில் ஒரு செயலை எவ்வாறு செய்வது என்பதை அறிந்தவுடன், அடுத்தடுத்த நிரலாக்க மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் ஏனெனில் பெரும்பாலும் அவ்வம்மொழிகளின் தொடரியல்களையும் கட்டமைப்புகளையும் கண்டறிவது மட்டுமேயாகும்.
வெவ்வேறு நிரலாக்க மொழிகள் ஒரே செயலை எவ்வாறு செய்கின்றன புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த வழி, அந்த நிரலாக்க மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வதற்காக விளையாட்டு போன்ற எளிய சோதனை செயல் திட்டத்திற்கான குறிமுறைவரிகளை எழுதுவதுதான சிறந்த வழியாகும். அடிக்கடி எழுதும் ஒரு மாதிரி நிரல் “guess the number” எனும் ஒரு எளிய விளையாட்டாகும், இதில் கணினி ஒன்று முதல் 100 வரையிலான எண்ணைத் தேர்ந்தெடுத்து அதை யூகிக்கச் சொல்லும். பல நிரலாக்க மொழிகளில் எண்களை யூகிக்கும் விளையாட்டை எவ்வாறு எழுதுவது என்பதை ஆராய்வதற்கான தொடர் கட்டுரைகள் பலவெளியிட்டுள்ளன அந்த கட்டுரைகளின் வாயிலாக வெவ்வேறு நிரலாக்க மொழிகள் . இந்த “guess the number” எனும் விளையாட்டினை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதற்கான முக்கிய படிமுறைகளை அறிந்துகொள்க.
வெவ்வேறு நிரலாக்க மொழிகள் எவ்வாறு தரவுகளைப் படிக்கின்றன எழுதுகின்றன வெவ்வேறு நிரலாக்க மொழிகள் ஒரே உணர்வில் தரவை எவ்வாறு படிக்கின்றன எழுதுகின்றனவென opensource.com/users/alansmithee எனும் இணையதளமுகவரியிலுள்ள கட்டுரை ஒப்பிடுகிறது. தரவு உள்ளமைவுக் கோப்பிலிருந்து வந்தாலும் அல்லது பயனாளர் உருவாக்கும் கோப்பிலிருந்து வந்தாலும், சேமிப்பக சாதனத்தில் தரவைச் செயலாக்குவது குறிமுறைவரிகளை எழுதுபவர்களுக்கு பொதுவானது. இதில்C, Java, Groovy போன்ற பல பிரபலமான நிரலாக்க மொழிகளால் எடுக்கப்பட்ட பல்வேறு அணுகுமுறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.
புதிய நிரலாக்க மொழியைக் கற்றல் ஒரு புதிய நிரலாக்க மொழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றை ஆராய விரும்பினாலும், நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்வது பற்றிய சிறந்த கட்டுரைகளைOpensource.comஎனும் இணையதளத்தில் காண்க
. WebAssembly இல் ‘Hello World’ எனும் பயன்பாட்டினை எழுதுவது எவ்வாறு WebAssembly என்பது ஒரு இருமநிலைகுறிமுறைவரி வடிவமாகும், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு இணைய உலாவியும் அதன் புரவலர் அமைப்பின் இயந்திரக் குறிமுறை வரிகளில் தொகுக்க முடியும். JavaScript , WebGL உடன், WebAssembly ஆனது இணைய உலாவியில் இயங்குதளத்தின்-சுதந்திரமான பயன்பாட்டிற்கான பயன்பாடுகளை பொருத்துவாயில் செய்வதற்கான தேவையை பூர்த்தி செய்கிறது. WASM-உரையில் வித்தியாசமான Hello Worldஎனும் நிரலை எவ்வாறு உருவாக்குவது என்பதை opensource.com/users/hansic99 எனும் இணையதளமுகவரியிலுள்ள கட்டுரை விளக்குகிறது. Go எனும் நிரலாக்க மொழி மூலம் குறுக்கு தொகுத்தல் எளிதாக்கப்பட்டது உரைநிரலை Goஎனும் நிரலாக்க மொழியின் நிரலாக மாற்றுவதன் மூலம் Goவின் குறுக்கு-தொகுப்பு ஆதரவைக் கற்றுக்கொள்வது பற்றி opensource.com/users/gkamathe எனும் இணையதள முகவரியிலுள்ள கட்டுரை விளக்குகிறது. நம்முடைய செயல்திட்டத்தை ஒருமுறை எழுதி, குறுக்கு-தொகுப்புடன் மற்றொரு சூழலுக்கு தொகுக்கலாம். உரைநிரலிற்கு D நிரலாக்க மொழியைப் பயன்படுத்தலாம் D நிரலாக்க மொழியானது அதன் நிலையான தட்டச்சு , மீப்பெரும்நிரலாக்க திறன்களின் காரணமாக பெரும்பாலும் கணினி நிரலாக்க மொழியாக கருதப்படுகிறது. இருப்பினும், இது மிகவும் பயனுள்ள உரைநிரல் மொழியாகும். பொதுவான உரைநிரலாக்கத்திற்கு D நிரலாக்க மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி opensource.com/users/aberba எனும் இணையதள முகவரியிலுள்ள கட்டுரைவிளக்குகின்றது.
திறமூல சக்தியுடன், நிரலாக்கத்தை எவரும் எளிதாக அணுக முடியும். அதனால் நாம் பணி செய்ய விரும்பும் செயல்திட்டத்தைக் கண்டுபிடித்திடுக, அதுவே நிரலாக்கத்திற்கான நம்முடைய முதல் நுழைவாயிலாக இருக்கட்டும்.

%d bloggers like this: