புதிய பயன்பாட்டு குறிமுறைவரிகளை எழுதுவதற்கான சில சிறந்த நடைமுறைகள்

உயர் செயல்திறன் கொண்ட பயன்பாட்டுக் குறிமுறைவரிகளை எழுதுவதற்கான சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம், வணிகநிறுவனங்கள் ஒரு மென்மையான பயன்பாட்டு அனுபவத்தையும், பயனாளர்களின் மகிழ்ச்சியையும் பெறமுடியம் அதனோடு எண்ணிம தளத்தில் தற்போதைய போட்டித்தன்மையுடன் கூடிய நிலையில் தாங்கள் செல்கின்ற வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
இன்றைய எண்ணிம யுகத்தில், எந்தவொரு வணிகநிறுவனத்தின் வெற்றிக்கும் சிறப்பாக செயல்படும் செயலி மிக முக்கியமானகருவியாகும். அவ்வாறான செயலியுடனான எந்தவொரு நவீன பயன்பாட்டையும் உருவாக்குவதற்கு குறிமுறைவரிகள் எழுதுவது என்பது இன்றியமையாத செயலாகும், மேலும் நாம் எழுதும் குறிமுறைவரிகள் நன்கு கட்டமைக்கப்பட்டதாகவும், மேம்படுத்தப் பட்டதாகவும் திறமையானதாகவும் இருப்பதை உறுதிசெய்வது மிகமுக்கியமாகும். மோசமாக எழுதப்பட்ட குறிமுறைவரிகளின்மூலம், மெதுவாக நினைவகத்தில் பதிவேற்றுதல், செயலிழப்புகள் , பயனாளர் எதிர்பார்ப்பில்ஏமாற்றம் போன்ற சிலகுறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
எந்த செயலியின் செயல்திறனும் குறிமுறைவரிகள் எவ்வளவு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது என்பதால், பயன்பாடு சீராக இயங்குவதையும், விரைவாக நினைவகத்தில் பதிவேற்றப்படுவதையும், சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதையும் உறுதிசெய்ய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமான செயலாகும். நாம் ஒரு சிறந்த அனுபவமுள்ள மேம்படுத்துநராக இருந்தாலும் அல்லது குறிமுறைவரிகளை உருவாக்கத்தில் துவக்கநிலையாளராக இருந்தாலும், இந்தக் கட்டுரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சிறந்த நடைமுறைகளை பின்பற்றிடுமாறு கோரப்படுகின்றது
பொதுவாக குறிமுறைவரிகளை ஒரு நிலையான, பராமரிக்கக்கூடிய முறையில் இருப்பதற்கு தக்கவாறு எழுதப்படுவதை உறுதி செய்வதே இந்த குறிமுறைவரிகளின் செந்தரநிலைகளை செயல்படுத்துவதன் நோக்கமாகும், இது குழு உறுப்பினர்களிடையே எளிதாக ஒத்துழைக்க அனுமதிக்கிறது பிழைகளையும் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. குறிமுறைவரிகளின் செந்தரநிலைகளானணவை குறிமுறைவரிகளின் மறுபயன்பாடு, பிழைத்திருத்தத்தை எளிதாக்குதல். பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவுகின்றன. பயன்பாட்டின் எதிர்கால மேம்பாட்டிற்காகவும் பராமரிப்பிற்காகவும் மேலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், தெளிவு, வாசிப்புத்திறன் ,தரநிலைப்படுத்தல் ஆகியவற்றுடன் குறிமுறைவரிகள் எழுதப்பட்டிருப்பதை அவை உறுதி செய்கின்றன. கூடுதலாக, இந்த செந்தரநிலைகள் குறிமுறைவரிகள் மதிப்பாய்வுகளை எளிதாக்குகின்றன, மேம்படுத்துதலிற்கான நேரத்தை குறைக்கின்றன நல்ல நிரலாக்க நடைமுறைகளை செயல்படுத்துகின்றன.
பயன்பாடுகளுக்கு தெளிவான ,திறமையான குறிமுறைவரிகளை எழுதுவதற்கான காரணங்கள்
வாசிப்புத்திறன்: தெளிவான குறிமுறைவரிகளானவை படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிதானவை. குறிமுறைவரிகள் தெளிவாக இருக்கும்போது, பிற மேம்படுத்துநர்கள் அதன் நோக்கத்தை விரைவாக புரிந்துகொண்டு எதிர்காலத்தில் அதை எளிதாகப் பராமரிக்க முடியும். மேம்படுத்துநர்கள் பிழைகளை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்வதையும் தெளிவான குறிமுறைவரிகள் எளிதாக்குகின்றன.
பராமரிப்பு: தெளிவான குறிமுறைவரிகளை எழுதுவது பயன்பாட்டைப் பராமரிக்க எடுத்துகொள்கின்ற நேரத்தை குறைக்கிறது. தெளிவான குறிமுறைவரிகளைப் பயன்படுத்துகின்ற பயன்பாடு, பிழையின்றி, நீண்ட காலத்திற்குப் பராமரிக்க எளிதாக இருக்கின்றது, இது மேம்படுத்துநர்களுக்கு நிறைய நேரத்தையும் வளங்களையும் சேமிக்கஉதவுகின்றது.
விரிவாக்கத்தன்மை: குழப்பமான குறிமுறைவரிகளை விட தெளிவான குறிமுறைவரிகள் விரிவாக்கம்செய்யக்கூடியது. மேம்படுத்துநர்கள் தெளிவான குறிமுறைவரிகளைக் கொண்டு ஒரு பயன்பாட்டிற்கு விரைவாகவும் திறமையாகவும் புதிய வசதிகளைச் சேர்க்கலாம். மேலும், தேவையெனில் குறிமுறைவரிகளின் மறுவடிவமைப்பு செயலையும் எளிதாக்குகிறது.
பிழைத்திருத்தம்: திறமையான குறிமுறைவரிகள் பயன்பாடுகளை பிழைத்திருத்தம் செய்வதை எளிதாக்குகிறது, மேலும் குறிமுறைவரிகள் பிழைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்கிறது.
செயல்திறன்: திறமையான குறிமுறைவரிகள் பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்திடுகின்றதும். தெளிவான , திறமையான குறிமுறைவரிகளை எழுதுவது நினைவக கசிவுகள் , செயல்திறன் சிக்கல்களைத் தவிர்க்க உதவுகின்றது, இதன் விளைவாக விரைவாகசெயல்படக்கூடியதும் , பதிலளிக்கக்கூடியதுமான பயன்பாடு கிடைக்கின்றது.
ஒரு பயன்பாட்டை உருவாக்கத் தொடங்குவதற்கு முன் நாம் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
நாம் எந்தவொரு பயன்பாட்டினை உருவாக்க முனைவதற்கு முன், அந்த பயன்பாட்டிற்கு தேவையான வலுவான அடித்தளத்தை அமைப்பது மிகமுக்கியமாகும். முதலில் நாம் அதுகுறித்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
பயன்பாட்டின் நோக்கம்: குறிப்பிட்டசிக்கலை தீர்வுசெய்திடுகின்ற நம்முடைய பயன்பாட்டின் செயல்பாடானது ,பயனர்களுக்கு அது சேர்க்கும் மதிப்பைப் பற்றிய தெளிவான புரிதலை அளிக்கின்றது.
இலக்கு பார்வையாளர்கள்: பயனாளர்களின் தேவைகளையும் ,வாய்ப்புகளையும் பூர்த்தி செய்கின்ற பயன்பாட்டை உருவாக்கவேண்டுமெனில் இலக்கு பார்வையாளர்களை நன்கு அறிந்துகொள்க.
இயங்குதளம்: பயன்பாட்டின் நோக்கத்திற்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பொருத்தமான தளத்தை (iOS அல்லது Android) தேர்வு செய்திடுக.
போட்டியாளர்கள்: போட்டியாளர்களின் பலம், பலவீனம், ஆகியவற்றினை நன்கு தெரிந்து கொண்டு அதனடிப்படையில் அவர்களிடமிருந்து நம்மை எவ்வாறு வேறுபடுத்திக் கொள்ளமுடியும் என்பதைக் கண்டறிய அவ்வாறான போட்டியை நன்கு ஆய்வுசெய்திடுக.
தொழில்நுட்பத் திறன்கள்: பயன்பாட்டை உருவாக்கத் தேவையான நிரலாக்க மொழிகள், கருவிகள் ,கட்டமைப்புகள் ஆகியவற்றுகளுடன் நன்கு பழக்கப்படுத்திக் கொள்க அல்லது அதற்கு உதவுவதற்கான நிபுணர்களை நியமிப்பதைக் கருத்தில் கொள்க.
செலவுகள்: பயன்பாட்டினைவடிவமைத்தல், உருவாக்குதல், ,சந்தைப்படுத்தல் உள்ளிட்ட செலவுகள் பற்றிய தெளிவான ஆலோசனையைப் பெற்றிடுக.
சந்தைப்படுத்தல் உத்தி: பயன்பாட்டை விளம்பரப்படுத்தவும் இலக்கு பார்வையாளர்களை அடையவும் சந்தைபடுத்திடும் உத்தியைத் திட்டமிடுக.
பயனர் அனுபவம்: தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் பயனர் நட்பினை ,ஈர்க்கக்கூடிய பயன்பாட்டை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்திடுக.
பரிசோதனை: பயன்பாடானது பிழையில்லாமல் இருப்பதையும் பல்வேறு சாதனங்களில் சீராக இயங்குவதையும் உறுதிசெய்ய முழுமையாகபரிசோதித்திடுக.
வெளியீட்டிற்குப் பிந்தைய ஆதரவு: வெளியிடப்போகின்ற புதிய பயன்பாடானது எளிதான பிழைத்திருத்தங்கள், பயன்பாட்டு புதுப்பிப்புகள் ,பயனர் கருத்துகள் உட்பட வெளியீட்டிற்குப் பிந்தைய ஆதரவு கொண்டிருக்குமாறு ,பராமரிப்புக்கான செயல்திட்டத்தினை சரிபார்த்துகொள்க.
குறிமுறைவரிகள் எழுதுவதற்கான சிறந்த நடைமுறைகள்
தற்போதைய நவீன காலச்சூழலில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி கொண்டே வருவதால், கைபேசி பயன்பாடுகள் நம்முடைய அன்றாட வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டன. விரைவாக ,பதிலளிக்கக்கூடிய பயன்பாடுகளை பயனாளர்கள் அதிகளவில் கோருவதால், பயன்பாடு திறமையாக செயல்படுவதை மேம்படுத்துநர்கள் உறுதிப்படுத்துவது அவசியமாகும். சிறந்த பயன்பாட்டின் செயல்திறனுக்கான குறிமுறைவரிகளை எழுதுவது, கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்தமைவாகும்.
திறமையான குறிமுறைவரிகளின் நுட்பங்களைப் பயன்படுத்துவது உயர் செயல்திறன் கொண்ட பயன்பாடுகளை உருவாக்குவதில் முக்கியமானசெயலாகும். மிகவும் பயனுள்ள நுட்பங்களில் ஒன்று பயன்பாட்டின்சார்புகளைக் குறைப்பதாகும். பயன்பாட்டில் உள்ள பிற கூறுகள் ,செயல்பாடுகளை நம்பியிருக்கும் கூறுகள் ,செயல்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, பயன்பாட்டை விரைவுபடுத்த எளிய ,சுருக்கமான குறிமுறைவரிகளின் தொடரியலை பயன்படுத்திடுக.
வள பயன்பாட்டை மேம்படுத்திடுதல்
மிகச்சிறப்பாகச் செயல்படும் பயன்பாட்டை உருவாக்குவதற்கு வள மேம்படுத்தல் ஆனது மற்றொரு முக்கிய காரணியாகும். மேற்செலவினைக் குறைக்க, பயன்பாட்டின் நினைவகப் பயன்பாட்டை நிர்வகிப்பது இதில் அடங்கும். முன் கூட்டியே பல்வேறு வளங்களை ஒதுக்குவதைத் தவிர்ப்பது ஒரு சிறந்த நடைமுறையாகும். மாறாக, தேவையின் அடிப்படையில் மாறும் வகையில் வளங்களை ஒதுக்கிடுக. மேலும், நினைவக கசிவை தவிர்க்க, பயன்பாட்டிற்குப் பிறகு வளங்களை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமான செயலாகும்.
தரவுத்தள அணுகலை மேம்படுத்துதல்
தரவுத்தள அணுகல் என்பது பயன்பாட்டினுடைய மேம்பாட்டின் முக்கிய வசதியாகும். சரியான தரவுத்தள கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், மேம்படுத்துநர்கள் தங்கள் பயன்பாடுகள் செயல்திறனுக்காக உகந்ததாக இருப்பதை உறுதிசெய்ய முடியும். தேவையற்ற தரவுத்தள வினவல்களின் எண்ணிக்கையைக் குறைத்திடுக, வினவல்களை விரைவுபடுத்திடுக அட்டவணை இணைப்புகளைக் குறைத்திடுக அட்டவணைப்படுத்தலைப் பயன்படுத்திடுக.
பல்லிழைஇணைப்புப் பயன்படுத்துதலை உறுதிசெய்தல்
பல்லிழை இணைப்புஎன்பது பலஇழைகளின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்யும் ஒரு நுட்பமாகும். இந்த நுட்பம், குறிப்பாக சிக்கலான பணிகள் அல்லது பெரிய தரவுத் தொகுப்புகளுடன் பணிபுரியும் போது, பயன்பாட்டின் வினைத்திறனை மேம்படுத்த உதவுகிறது. பல்லிழைஇணைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், பின்னணிப் பணிகள் தொடர்ந்து இயங்கும்போது, பயனர் தொடர்புகளுக்குப் பயன்பாடு தொடர்ந்து பதிலளிப்பதை மேம்படுத்துநர்கள் உறுதிசெய்ய முடியும்.
திறமையான குறிமுறைவரிகளுடனான கருவிகளை ஏற்றுக்கொள்க
எழுதப்பட்ட குறிமுறைவரிகள் சிறந்த செயல்திறனுடன் பயன்பாட்டை உருவாக்குவதை உறுதிசெய்வதில் இவை மிகமுக்கியமானவைகளாகும். இந்தக் கருவிகள் குறிமுறைவரிகளின் தொடரியலை மேம்படுத்தவும், செயல்திறன் தடைகளை அடையாளம் காணவும், குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்யவும் தொடர்ச்சியான குறிமுறைவரிகள் பகுப்பாய்வை இயக்கவும் உதவுகின்றன. சில பயனுள்ள குறிமுறைவரிகளின் கருவிகளில் நிலையான பகுப்பாய்விகள், செயல்திறன் விவரக்குறிப்பு கருவிகள் ,குறிமுறைவரிகளின் தேர்வுமுறை கருவிகள் ஆகியவை அடங்கும்.
திறன்மிக்ககுறிமுறைவரிகளின் கருவிகளைப் பின்பற்றுதல்
திறன்மிக்ககுறிமுறைவரிகளின் கருவிகளானவை சிக்கலான பணிகளை சிறிய, மேலும் நிர்வகிக்கக்கூடிய அலகுகளாக பிரிப்பதை உள்ளடக்கியது. இந்த அணுகுமுறை மேம்படுத்துநர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுகிறது, இது விரைவான பயன்பாட்டு மேம்பாட்டிற்கும் சிறந்த செயல்திறனுக்கும் வழிவகுக்கிறது. திறன்மிக்ககுறிமுறைவரிகளின் கருவிகளைப் பயன்படுத்துவது, பயன்பாட்டின் சிறிய கூறுகளில் கவனம் செலுத்தவும், அவற்றை அடிக்கடி பரிசோதிக்கவும் ,புதிய வசதிவாய்ப்புகளை மேலும் தடையின்றி ஒருங்கிணைக்கவும் குழுக்களுக்கு உதவுகிறது.
சுருக்கமாக கூறுவதெனில், சிறப்பாகச் செயல்படும் பயன்பாடுகளுக்கான குறிமுறைவரிகளை எழுதுவதற்கு, திறமையான குறிமுறைவரிகளின் நுட்பங்கள், வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துதல், திறமையான தரவுத்தள அணுகல், பல்லிழைஇணைப்பையன்படுத்துதல் ,பயனுள்ள குறிமுறைவரிகளின் கருவிகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேம்படுத்துநர்களிடையே ஒத்துழைப்பு, அடிக்கடியான பரிசோதனை ஒருங்கிணைப்பு, ,மீண்டும் செயல்படுத்திடுவதற்கான பயன்பாட்டின் மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மேம்பட்டு முறையைப் பின்பற்றுவதும் இதில் அடங்கும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், மேம்படுத்துநர்கள் வேகம் ,வினைத்திறனுக்கான பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர் செயல்திறன் கொண்ட பயன்பாட்டினை உருவாக்க முடியும்.
சரியான நிரலாளரின் கூட்டாளரைத் தேர்ந்தெடுத்திடும் வழிமுறை
பயன்பாட்டு மேம்பாட்டிற்கான சரியான தொழில்நுட்ப கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிகரமான பயன்பாட்டை உருவாக்குவதற்கான இன்றியமையாத அம்சமாகும். அவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய படிமுறைகள் பின்வருமாறு.
செயல்திட்டத்தின் தேவைகளைத் தீர்மானித்திடுக: பயன்பாட்டின் வசதிவாய்ப்புகள், செலவு ,காலவரிசை உட்பட, அதன் மூலம் எதை அடைய விரும்புகின்றோம் என்பதை வரையறுத்திடுக. இந்த அளவுருக்களை வரையறுப்பது ஒரு தொழில்நுட்ப கூட்டாளரிடம் தேட வேண்டிய ,திறன்களை அடையாளம் காண உதவும்.
அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் தேடிடுக: தொழில்நுட்பக் கூட்டாளருக்கு நம்முடைய பயன்பாடு போன்ற பயன்பாடுகளை உருவாக்குவதில் அனுபவமும் நிபுணத்துவமும் இருக்க வேண்டும். அவர்களின் முந்தைய பணியைப் புரிந்துகொள்ள அவர்களின் செயலகபணி ,வாடிக்கையாளர் சான்றுகளைச் சரிபார்த்திடுக. அவர்களின் நிபுணத்துவத்தின் அளவை மதிப்பிடுவதற்கு அவர்களின் கடந்தகால செயல்திட்டங்களைப் பார்வையிடுக.
தகவல்தொடர்பு திறன்களில் கவனம் செலுத்திடுக: தொழில்நுட்ப கூட்டாளர்களுடன் பணிபுரியும் போது தகவல்தொடர்பு மிகவும் முக்கியமானதாகும். தெளிவான தகவல்தொடர்பு திறன் கொண்ட ஒரு கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்து, பல்வேறு வாய்ப்புகளின் (மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேருக்கு நேர் சந்திப்புகள்) மூலம்தொடர்புகொள்ள முடியும்.
தொழில்நுட்பத் திறன்: நிரலாக்க மொழிகள், பயன்பாட்டு மேம்பாட்டு கட்டமைப்புகள் ,பிற மேம்பாட்டுக் கருவிகளில் தேர்ச்சி உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்பத் திறன்களை தொழில்நுட்பக் கூட்டாளர் பெற்றிருக்க வேண்டும். கைபேசி பயன்பாட்டு மேம்பாட்டின் சமீபத்திய போக்குகளையும் ,தொழில் நுட்பங்களையும் அவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
நம்பகத்தன்மையை மதிப்பிடுக: நம்பகமான ,தரமான பணியை வழங்குவதில் உறுதியாக இருக்கின்ற ஒரு தொழில்நுட்ப கூட்டாளரைத் தேர்வு செய்திடுக. அவர்கள் ஒப்புக்கொண்ட ,காலக்கெடுவைப் பின்பற்றுவதை உறுதிசெய்திடுக.
செலவு ,மதிப்பை மதிப்பிடுக: தொழில்நுட்ப கூட்டாளரைத் தேர்ந்தெடுக்கும்போது பயன்பாட்டின் மேம்பாட்டிற்கான செலவு மட்டுமே தீர்மானிக்கும் காரணியாக இருக்கக்கூடாது. அவர்கள் வழங்கும் மதிப்பு ,நம்முடைய செலவின் வரம்புகளுக்குள் தரமான முடிவுகளை வழங்குவதற்கான அவர்களின் திறனைக் கவனித்திடுக.
சுருக்கமாககூறுவதெனில், பயன்பாட்டு மேம்பாட்டுத் தேவைகளுக்கு சிறந்த தொழில்நுட்ப கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவை. இருப்பினும், இந்தப் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெற்றிகரமான ,பயனுள்ள பயன்பாட்டை உருவாக்க உதவுகின்ற நம்பகமான ,அனுபவம் வாய்ந்த மேம்படுத்துநரைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்துகொள்க.
இறுதியாக சிறப்பாகச் செயல்படும் பயன்பாட்டிற்குக் குறிமுறைவரிகள் எழுதுவதற்கு உத்தி ரீதியான திட்டமிடல் ,சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துதல் ஆகியன தேவையாகும். செயல்திறன் அளவீடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அதற்கேற்ப குறிமுறைவரிகளை மேம்படுத்திடுக. தகவமைப்புதிறன், விரிவாக்கத்திறன்,குறிமுறைவரிகள் மறுபயன்பாடு ,திறமையான தரவு சேமிப்பகம் போன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது செயல்திறனை பெரிதும் மேம்படுத்தி பயனர் அனுபவத்தை மேம்படுத்துகின்றது. பயன்பாட்டின் செயல்திறனைத் தொடர்ந்து பரிசோதித்து கண்காணிப்பது, மேம்படுத்தல் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிய உதவும். மேலும், தொழில்நுட்பத்தில் புதுப்பிப்புகள் ,முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்வதன் மூலம், பயன்பாட்டின் சமீபத்திய ,மிகவும் திறமையான நடைமுறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய முடியும். இறுதியாக, குறிமுறைவரிகளை எழுதுவதில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது, பயன்பாட்டின் செயல்திறன், அளவிடுதல் ,பயன்பாட்டினை கணிசமாக மேம்படுத்தும்.

%d bloggers like this: