பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management (PMM)) எனும்கருவி

PMM என சுருக்குமாக அழைக்கப்பெறும் பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management) என்பது நம்முடைய MySQL, MongoDB அல்லது PostgreSQL ஆகியதரவுதள நிகழ்வுகளைக் கண்காணிக்க உதவுகின்ற ஒரு திறமூலக் கருவியாகும்.
இதன்உதவியுடன்நீண்ட காலமாக தரவுத்தளங்களைப் பயன்படுத்திகொண்டுவரும் அவ்வாறான சேவையாளர்களின் உள்ளுறுப்புகளைப் கண்காணித்து, அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முயற்சித்திடுக. MySQL இன் செயல்திறன் அமைப்புமுறைகள் தகவல்அமைப்புமுறைகள் ஆகியவற்றிற்குப் பின்புலத்தில் உள்ள பொறியாளர்கள் , உறுதியான தகவலை வழங்குகின்றனர். பின்னர் அமைவு முறைகள் சேவையாளரின்முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட பார்வையாளர்களுடன் வந்தன. அந்த அமைவுமுறைகளின் வருகைக்கு முன், தரவுத்தள நிகழ்வைப் பற்றிய சிறுமணித் தகவலைப் பெற எளிதான வழி எதுவும் இதுவரைையில் இல்லை.
ஆனால் அட்டவணைப்படுத்தப்பட்ட காட்சிகளில் ஒரு புள்ளியில் உள்ள தகவலைப் காண்பது, எனும் செயலானது ஒரு சேவைாளரின் நிலையைக் கண்டறிவதற்கான, போக்குகளின் மையத்தினை அல்லது விரைவான பார்வையை அனுமதிக்காது. பொதுவாக வரைபடத்தில் ஒரு போக்கினைக் கண்டறிவது அல்லது வரம்பை எட்டும்போது விழிப்பூட்டல்களை அனுப்புவது இன்றியமையாதது ஆகும். PostgreSQL , MongoDB ஆகியவற்றில் உள்ளவர்களுக்கும் இதே பிரச்சனை இருந்துவந்தது. நல்ல செய்தி என்னவென்றால், இம்மூன்று தரவுத்தளங்களுக்கும் PMMஎனும் திறமூல தீர்வு ஒன்று உள்ளது, அதை நிறுவுகைசெய்திடுவதும பயன்படுத்திடுவதும மிகவும் எளிதாகும்.
இந்த PMM என்பதில் மிகவும் புதியவராக இருப்பவர்கள் இதனுடைய கண்காணிப்பு அளவீட்டை ((PMM) எவ்வாறு அமைப்பது , பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வது முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகும். அதை மிகமகிழ்ச்சியுடன் பயன்படுத்துகின்ற பலரும் உ்ள்ளனர், அதனுடன் சில கணங்கள் மட்டுமே பணிபுரிந்தாலும். ஒரு தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்ட வரைகலை தகவல்களை வழங்குகின்ற எதையும் நிறுவுகைசெய்வதில் பலருக்கும் இயல்பான தயக்கம் உருவாகிவிடுகின்றன அதாவது திறமூல தரவுத்தளங்கள் வருவதற்கு முன்பே தனியுரிமை தரவுத்தளங்களுக்கான பிற கண்காணிப்பு மென்பொருளை உள்ளமைக்கும் முயற்சியில் இந்த தயக்கம் வேரூன்றியுள்ளது.
TL;DR என்பது PMM ஐ நிறுவுகைசெய்து பயன்படுத்துவதை எளிதானதாக ஆக்குகின்றது. இதனுடைய ஆவணங்கள் நன்கு எழுதப்பட்டு, விரிவானதாக உள்ளது. இந்த மென்பொருளைப் பெறுவதற்கும் நிறுவுகைசெய்வதற்கும் எளிதான செயலாாக அமைந்துள்ளது. .
சோதனை செயல்
பழைய மடிக்கணினிகளில் புதிய செயலிகளை முயற்சிக்க விரும்புவோர் உபுண்டு 20.04 LTS இன் புதிய நகலை நிறுவுகைசெய்திடலாம். அடுத்து, தொடர்ந்து செயல்படுவதற்காக இதற்கானPMM ஆவணத்தைப் படித்திடுக.
முன்நிபந்தனை
PMM ஐ நிறுவுகைசெய்வதற்கான முன்நிபந்தனை Docker ஆகும், இது முழு நிறுவுகைக்கான மிகவும் தீவிரமான பகுதியாகும். அதிர்ஷ்டவசமாக உபுண்டு (apt) க்கான தொகுப்பு மேலாண்மை மென்பொருள் இதை மிகவும் எளிதாக்குகிறது.
PMM இன் கண்காணிப்பு ஆனது, அளவீட்டு சேவையகத்தை நிறுவுகைசெய்கிறது
PMM சேவையகத்தை நிறுவுகைசெய்வது APT தொகுப்பு மேலாளருடன் நன்கு தெரிந்தவர்களுக்கு எளிதானது. PMM சேவையகத்துடன் இணைப்பதற்கான URLகளை வழங்கும் வெளியீட்டில் கவனம் செலுத்திடுக. இதன், முகவரிகள் 127.0.0.1:443/,https://192.168.1.209:443/ , ,172.17.0.1:443/. ஆகும்
முதலில்PMM முகப்புத்திரையில் உள்நுழைவுசெய்திடுக (இயல்புநிலை கணக்கு, கடவுச்சொல் aadmin ,admin).வெற்றிகரமான உள்நுழைவுக்குப் பிறகு, PMM ஒரு முகப்புத்திரையைக் காண்பிக்கின்றது.
இந்த நேரத்தில், PMM ஆனது அடிப்படை அமைப்பு, புள்ளிவிவரங்களைச் சேகரிக்கப் பயன்படுத்தும் தரவுத்தளத்தை மட்டுமே கண்காணித்து வருகிறது
தரவுத்தள வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள் தரவுத்தள நிகழ்வுகளை கண்காணிக்கிறார்கள், மீண்டும் வாடிக்கையாளர்கள் தொகுப்பு மேலாளருடன் நிறுவுகைசெய்வது என்பதுஎளிதாகும். அடுத்துபின்வருமாறான கட்டளைவரிகளுடன்வாடிக்கையாளரை சேவையகத்துடன் பதிவு செய்திடுக:
$ sudo pmm-admin config –server-insecure-tls –server-url=https://admin:admin@127.0.0.1
தரவுத்தள சேவையகத்தை உள்ளமைப்பதே இறுதி படிமுறைகளாகும். , PMM இன் MySQL நிறுவுகைசெய்யப்படுகின்றது, மேலும் புள்ளி விவரங்களைச் சேகரிப்ப தற்காக ஒரு கணக்கு உருவாக்கப்படுகின்றது. இறுதியாக, வாடிக்கையாளர் தரவுத்தள நிகழ்விலிருந்து தகவல்களைச் சேகரிக்கின்றார் அதற்கான கட்டளைவரிபின்வருமாறு:
$ sudo pmm-admin add mysql –username=pmm –password=pass –query-source=perfschema
PostgreSQL, MongoDBஆகியவற்றிற்கு, தரவுத்தளங்களின் பெயர்களை கண்காணிக்க விரும்பும் அந்தந்த நிகழ்விற்கு மாற்றிடுக.
தற்போது கண்காணிக்கப்பட்ட முனைமங்களின் எண்ணிக்கை 2 இற்குமேல் அதிகரித்திருப்பதை காணலாம்.
PPM சேவையகம் என்ன செய்கிறது என்பதைப் பற்றிய பல்வேறு பார்வையாளர்களுக்கான அணுகலை நமக்கு வழங்குகிறது. தொடர்ந்து சேவையகத்தின் ஒட்டுமொத்த நிலையை காணலாம்.
பொதுவான MySQL இன் முகப்புத்திரையானது கணினியின் ஒட்டுமொத்த நிலையைக் காண்பிக்கிறது.
சுருக்கமாக
பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management) என்பது MySQL, MongoDB அல்லது PostgreSQL ஆகிய தரவதளங்களின் நிகழ்வுகளைக் கண்காணிக்கும் ஒரு திறமூலக் கருவியாகும். இதனை நிறுவுகை செய்வது மிகஎளிதானது , இதனை பயன்படுத்தி கொள்பவர்களுக்கு இது தேவையானவாறு சேவையகங்களைப் பற்றிய சிறந்த நுண்ணறிவை வழங்குகிறது.

%d bloggers like this: