IoT எனும் சுருக்கமானபெயரால் அழைக்கப்பெறுகின்ற பொருட்களுக்கான இணையம்(Internet of Things) என்பது நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒரு தொழில் நுட்பமாகும். வெளிப்புற தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப நாம் இருக்கு இடத்தில், மின்விசிறியின் வேகம், குளிரூட்டியின் வெப்பநிலை ஆகியவற்றினை சரிசெய்தல், ஓட்டுநர்இல்லாத வாகனங்கள், கண்காணிப்பு , பாதுகாப்பு அமைப்புகள், நம்முடைய மின்னஞ்சலுக்கு நேரடியாக மாதாந்திர பட்டியல் களை அனுப்பும் திறன்மிகு மின்சார அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன் பாடுகளை இது உள்ளடக்கியது. நிகழ்நேர சுகாதார கண்காணிப்பு போன்ற பல வசதிகளும் இதில் அடங்கும்.
IoT என்பது மென்பொருளின் மூலம் செயலாக்க திறன்களைக் கொண்ட உணரிகள், செயலூக்கிகள் அல்லது துணைக்கருவிகளுடன் கூடிய மின்னணு சாதனங்களின் வலையமைப்பாக வரையறுக்கப்படுகிறது. இந்த சாதனங்க ளானவை நிகழ்நேரத்தில் இணையம் அல்லது பிற தகவல் தொடர்பு வலை பின்னல்களின் மூலம் பிற அமைப்புகளுடன் தரவை இணைக்கவும், கட்டுப்படுத்தவும், பரிமாறிக்கொள்ளவும் முடியும், மேலும்இது எந்தவொரு செயலின் இறுதி முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்துகிறது.
IoT சாதனங்களுக்கு பைதான் ஏன் தேவை
பைத்தானின் வலிமை ஆங்கிலமொழி போன்ற அதன் தொடரியல், nimble, MicroPython, தகவமைவுகளின் விரிவான நூலகம் ஆகியவற்றில் உள்ளது. இது பல்வேறு IoT சாதனங்களை முன்மாதிரியாக செய்வதற்கும், உருவாக்குவதற்கும் , இயக்குவதற்கும் ஒரு சிறந்த கருவியாகும்.Python அதன் எளிமை, பல்துறைத் திறன் காரணமாக IoT இல் பரவலாகப் பயன்படுத்தி கொள்ளப் படுகிறது.அதன் பிரபலத்திற்கான சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு.
கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் எளிதானது: பைத்தானின் தொடரியல் ஆங்கில மொழியைப் போலவே எளிமையானது. மேலும், MicroPython எனப்படும் பைத்தானின் இலகுவான பதிப்புகூட உள்ளது, இது சிறிய அளவிலான கணினி வளங்களுக்கு மிகவும் பொருத்தமானது. MicroPython என்பது ஒரு சிறிய திறமையான பைதான் 3 நிரலாக்க மொழி செயலாக்கமாகும், இது பைதானில் நிலையான நூலகத்தின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கியது, மேலும் மீ்ச்சிறுகட்டுப்பாட்டாளர்களை, வரையறுக்கப்பட்ட சூழல்களில் நன்கு செயல்பட உகந்ததாக ஆக்குவதற்கு உதவியாக உள்ளது.
குறுக்குத்தள இணக்கத்தன்மை: பைதான் Linux, Windows, MacOS அல்லது Raspberry Pi போன்ற பல்வேறு இயங்குதளங்களில் இணக்கத்தன்மையை உறுதிசெய்கின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பைதானானது இவைகளில் முன்கூட்டியே நிறுவுகைசெய்யப்பட்டே இருக்கின்றது.
தற்போதுள்ள பெரிய சமூககுழு: இது கணிசமான பயனர் சமூக குழுவினைக் கொண்டுள்ளது, இக்குழுவானது கருவிகளின் வளர்ச்சியிலும் IoT இன் மேம்படுத்துதல்களுக்கான ஆதரவிலும் தீவிரமாகப் பங்களிக்கிறது.
இயங்குதன்மை: MQTT, HTTP, BLE , போன்ற பல பிற கணினி மொழிகளுடனும் நெறிமுறைகளுடனும் பைதானானது தடையின்றி ஒருங்கிணைக்கிறது.
அளவிடும்தன்மை: பைத்தானின் தகவமைவின் கட்டமைப்பானவை மிகப் பெரிய அளவிலான அல்லது மிகச்சிறிய அளவிலான IoT பயன்பாடுகளுக்கும் பொருந்துமாறு செயல்படச்செய்கின்றது.
விரிவான நூலக ஆதரவு: இயந்திர கற்றல், ஆழ்கற்றல், அதிக அளவிலவான தரவுஉள்ள பயன்பாடுகள், தரவு பகுப்பாய்வு, தரவு அனுமானம், காட்சிப்படுத்தல் போன்ற பலவற்றிற்கான பரந்த அளவிலான கருவிகளை பைதான் வழங்குகிறது. அதன் மிகப்பெரியஅளவிலான நூலகங்கள், கருவிகள் , கட்டமைப்புகள் மேம்படுத்துதலை மிகவிரைவாகவும் IoT உடன் இணக்கமாகவும் ஆக்குகிறது.
திறமூலம்: பைதான் என்பது ஒரு கட்டற்ற வரைச்சட்ட ஆகும், இது எந்தவொரு கட்டணமும் இல்லாமல் எளிதாகபதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறுக் கிடைக்கிறது.
IoTக்காக பைத்தானைப் பயன்படுத்துதல்
பைதான்ஆனது IoT நிரலாக்கத்திற்கான பல்வேறு தகவமைவுகளை வழங்குகிறது, பல்வேறு கட்டங்களில் IoT இன்மேம்படுத்துதலை எளிதாக்குகிறது. அவ்வாறான IoTஇன் வளர்ச்சிக்கு உதவும் சுமார் 30 தகவமைகளை இப்போது காண்போம்.
Raspberry Pi : MicroPython என்பது Raspberry Pi Pico போன்றஉட்பொதிக்கப்பட்ட வன்பொருளில் நேரடியாக செயல்படுகின்ற முழுமையான பைதான் 3 இன் செயலாக்கமாகும். இது இடைமுகப்புத்தளம் (REPL) , உள்ளமைக்கப்பட்ட கோப்பு அமைவு , USB இன் மூலம் நேரடியாக கட்டளைகளை இயக்கும் திறனை வழங்குகிறது. MicroPython இன் Pico வாயில்ஆனது குறைந்த-நிலை குறிப்பிட்ட சிப்-உடன் தொடர்புகொள்வதற்கான தகவமைவுகளை வழங்குகிறது. மேலும் விவரங்களைhttps://www.raspberrypi.com/documentation/microcontrollers/micropython.html எனும் இணையதளமுகவரியில் காணலாம்
Arduino: Arduino என்பது வன்பொருள் , மென்பொருள் ஆகியஇரண்டையும் உள்ளடக்கிய ஒரு திறமூல தளமாகும், இது ஊடாடும் மின்னணு செயல் திட்டங்களின் விரைவான உற்பத்திசெயலை அனுமதிக்கிறது. Arduino அதன் சொந்த நிரலாக்க மொழியைப் பயன்படுத்திகொள்கிறது, இது C++ ஐப் போன்றது; இருப்பினும், உணர்விகள் , பிற தொட்டுணரக்கூடிய சாதனங்களுடன் ஒருங்கிணைப்பு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு, இதனை(Arduino) பைத்தானுடன் பயன்படுத்தி கொள்ளலாம்.
Firmata நெறிமுறை என்பது கணினியிலிருந்து(PC) Arduino ஐக் கட்டுப்படுத்து வதற்கான நிலையான செயல்முறையாகும். இது ஒரு புரவலர் கணினியில் உள்ள மென்பொருளிலிருந்து மீச்சிறு கட்டுப்பாடுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளை செயல்படுத்துகிறது, இது எண்ணிம, ஒத்திசைவிலானக் உள்ளீடுகளைப் பெறவும் எண்ணிம, ஒத்திசைவிலானக் வெளியீடுகளுக்கு தரவை அனுப்பவும் அனுமதிக்கிறது. Arduinoஐ Python உடன் தொடங்குவதற்கான விவரங்களை, realpython.com/arduino-python/ எனும் இணையதளமுகவரியில் காணலாம்
lm-sensors (லினக்ஸ் கண்காணிப்பு உணரிகள்) என்பது வெப்பநிலை, மின்னழுத்தம்,மின்விசிறியின் கண்காணிப்பு ஆகிய கருவிகள் . இயக்கிகள் ஆகியவற்றினை வழங்குகின்ற கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்.
Lm-sensors எனும் செயல்திட்டத்தில் இருந்து libsensors.so க்கான ctypes பிணைப்புகளுக்கு PySensors என்பதன் பைதான் தகவமைவு பயன்படுத்தப் படுகிறது.மேலும் விவரங்களை pypi.org/project/PySensors/ எனும் இணைய தள முகவரியில் காணலாம்
esptool: இதனை’pip install esptool’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. esptool என்பது Python-அடிப்படையிலான, கட்டற்ற, Espressif SoC இன் ROM துவக்கதரவுஏற்றியுடன் தொடர்புகொள்வதற்கான சுதந்திரமான இயங்குதள மென்பொருளாகும்.Espressif சில்லுகளுடன் பணிபுரியும் கருவிப்பெட்டியில் esptool.py, espefuse.py , espsecure.py ஆகியவை அடங்கும்.
எடுத்துக்காட்டாக, அவைகள் : தற்காலிகநினைவகத்தில் சேமிக்கப்பட்ட இரும தரவினை படித்தல், எழுதுதல், அழித்தல் , சரிபார்த்தல் ஆகிய பணிகளைச் செய்ய முடியும்
MAC முகவரி அல்லது flash chip ID போன்ற சிப்பின் பண்புகள், சிப் தொடர்பான பிற தரவுகளைப் படிக்க முடியும். ஒரு முறை நிரல்படுத்தக்கூடிய efusesஐ படிக்கவும் எழுதவும் முடியும். ஒளிர்வதற்குத் தயாராக இருக்கும் இருமஎண்ணில்(Binary) இயங்கக்கூடிய படங்களை உருவாக்கலாம். இரும எண்ணில்(Binary) படங்களை பகுப்பாய்வு செய்யலாம், ஒன்று சேர்க்க லாம்.ஒன்றிணைக்கலாம்.மேலும் விவரங்களை pypi.org/project/esptool/ எனும் இணையதளமுகவரியில் காணலாம்
pyusb: இதை ‘pip install pyusb’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. pyusbஎன்பது USB சாதனங்களுடனான தொடர்பை எளிதாக்குகிறது. எந்தவொரு பைதான் >= 3.6 சூழலிலும் ctypes மற்றும் முன்பே கட்டமைக்கப்பட்ட USB பின்புலதள நூலகத்துடன் எந்தவொரு கூடுதல் குறி முறைவரிகளும் இல்லாமல் இது செயல்படும் திறன்மிக்கது.மேலும் விவரங் களை pypi.org/project/pyusb/எனும் இணையதளமுகவரியில் காணலாம்
pyserial: இதை ‘pip install pyserial’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. pyserial என்பது தொடர்வரிசையிலான இணையவாயிலின் அணுகலுக்குப் பொறுப்பான பைதான் நூலகமாகும். விண்டோஸ், ஓஎஸ்எக்ஸ், லினக்ஸ், பிஎஸ்டி (எந்தவொரு POSIX-இணக்க அமைப்பும்), ஆகியஅனைத்து தளங்களிலும் இயங்கும் பைத்தானுக்கு அதே இன அடிப்படையிலான இடைமுகத்தை இது வழங்குகிறது. இது voltmeters, oscilloscopes, straingauges, flow meters, actuators, lights போன்ற சாதனங்களுடன் தொடர்வரிசையில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. மேலும் விவரங்களை pypi.org/project/pyserial/எனும் இணையதளமுகவரியில் காணலாம்
pybluez:இதை ‘pip install pybluez2’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. pybluez என்பதும் தொடர்வரிசையிலான இணைய வாயிலின் அணுகலுக்குப் பொறுப்பான பைதான் நூலகமாகும். விண்டோஸ், ஓஎஸ்எக்ஸ், லினக்ஸ், பிஎஸ்டி (எந்தவொரு POSIX-இணக்க அமைப்பும்), ஆகியஅனைத்து தளங்களிலும் இயங்கும் பைத்தானுக்கு அதே இன அடிப்படையிலான இடைமுகத்தை இது வழங்குகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/pybluez2//எனும் இணையதளமுகவரியில் காணலாம்
gpiozero: இதை ‘pip install gpiozero’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. gpiozero என்பது ராஸ்பெர்ரி பையில் உள்ள GPIO சாதனங்களுக்கு நேரடியான இடைமுகத்தை வழங்குகிறது. தொட்டுணரக் கூடிய கணினியுடன் செயலி தொடங்குவதை முடிந்தவரை எளிமையாக்க இடைமுகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த குறிமுறைவரிகளைக் கொண்டு ஒருவர் இதில் விரைவாக உறுப்புகளை இணைக்கலாம். மேலும் விவரங்களை pypi.org/project/gpiozero/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
mraa: இது பைதானிற்கு-இணக்கமான கட்டமைப்பின் GPIO நூலகமாகும். Eclipse Mraa (Libmraa) என்பது Java, Python , JavaScript ஆகிய பிணைப்புகளுடன் கூடிய ஒரு C/C++ நூலகமாகும்
Libmraa இன் பயன்பாடு எந்த குறிப்பிட்ட வன்பொருளுடனும் பிணைக்காது. அட்டையை கண்டறிதல் இயக்க நேரத்தில் செய்யப்படுவதால், ஆதரிக்கப்படும் அனைத்து தளங்களிலும் செயல்படும் கையடக்க குறிமுறை வரிகளை எளிதாக எழுதலாம். இதில் மிகவும் கவர்ச்சிகரமான வசதி என்னவென்றால்,இதில் ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு நூலகம் மட்டுமே உள்ளது. மேம்படுத்துநர்கள் , உணரியின் உற்பத்தியாளர்கள் தங்கள் உணரிகள் , செயலூக்கிகள் ஆகியவற்றினை இணக்கமான வன்பொருளின் மேல் வரைபட மாக்குவதை எளிதாக்குவதும், உயர் மட்ட மொழிகள் , கட்டமைப்புகள் குறைந்த அளவிலான தொடர்பு நெறிமுறைகளை நிர்வகிக்க அனுமதிப்பதும் இதன் குறிக்கோள்ஆகும். மேலும் விவரங்களை github.com/eclipse/mraa/tree/master/examples/python எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
sockets: இதனை ‘pip install sockets’என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. TCP/IP , UDP ஆகியவை தொடர்பு போக்குவரத்தின் அடுக்குகளின் நெறிமுறைகளாகும். sockets தொகுப்பு ஆனது TCP/IP, UDP ஆகிய தொடர்புகளை எளிதாக்குகிறது, இது IoT சாதனங்களில் வலைபின்னலிற்கு பயன்படுகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/sockets/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
paho-mqtt: இதை ‘pip install paho-mqtt’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக.இதில் MQTT அல்லது Message Queue Telemetry Transport Protocol என்பது இரு இயந்திரங்களுக்கிடையிலான (M2M)/ IoT இணைப்புக்காக, குறைந்த கட்டணத்துடன் அதிவேக தரவு பரிமாற்றத்தை செயல்படுத்தும் வகையில் வெளியிடப்படும்/சந்தா பரிமாற்றம் ஆகும்.குறைந்த பட்ச குறிமுறைவரிகளின் பாதை அவசியமாக இருக்கும்போது அல்லது வலைபின்னலில் அலைவரிசை சந்தாவுடன்பயன்படுத்திடுமாறு இருக்கும்போது, தொலைதூர இடங்களுடனான தகவல்தொடர்புகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கின்றது. Poho நூலகக் குறிமுறைவரிகளை வழங்கிய வாடிக்கையாளர் இனத்திற்கு நன்றி செய்திகளை வெளியிடவும், தலைப்புகளுக்கு குழுவினை சேர்க்கவும் , வெளியிடப்பட்ட செய்திகளைப் பெறவும் இந்த பயன்பாடுகளை MQTT தரகருடன் இணைத்துபயன்படுத்தி கொள்ளலாம். கூடுதலாக, இது MQTT சேவையகங்களுக்கு ஒரு முறைமட்டுமான செய்திகளை வெளியிடுவதை எளிதாக்க சில உதவி செயலிகளை வழங்குகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/paho-mqtt/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
smtplib: இந்த நெறிமுறையானது அஞ்சல் சேவையகங்களுக்கிடையில் மின்னஞ்சல்களை அனுப்புதல் , திசைதிருப்புதல் ஆகியவற்றைக் கையாளு கிறது. இது பைத்தானின் நிலையான நூலகத்தின் ஒரு பகுதியாகும். மேலும் விவரங்களை docs.python.org/3/library/smtplib.html/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
asyncio: இதை ‘pip install asyncio’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. asyncio எனும் தகவமைவானது இணை-வழக்கங்களுடன் ஒற்றையான-திரிக்கப்பட்ட ஒரே நேரத்தில் நிரலாக்கத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பை வழங்குகிறது,தொகுப்புகள், பிற ஆதாரங்கள் மூலம் I/O அணுகலை ஒருங்கிணைப்பு செய்தல், வாடிக்கையாளர்களின் வலைபின்னல் சேவையாளர்கள், போன்ற பிற முந்தைய நிலைகளை இயக்குதலை எளிதாக்கு கின்றது. மேலும் விவரங்களை pypi.org/project/asyncio/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
MySQLdb: இதனை ‘pip install MySQL-python’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக..MySQLdb என்பது IoT அமைப்புகளுக்கான தொலைதூர சேமிப்பினை கட்டமைக்க உதவும் பிரபலமான go-toஎனும் தொடர்புடைய தரவுத்தளமாகும். மேலும் விவரங்களை pypi.org/project/MySQL-python/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
SQLite: இது ஒரு இலகுரக வட்டு அடிப்படையிலான தரவுத்தளத்தை வழங்கும் ஒரு C இன் நூலகமாகும், இதைபயன்படுத்தி கொள்வதற்காகவென தனியான தொரு சேவையக செயல்முறை எதுவும் தேவையில்லை இதன் மூலம்,SQL இன் தரமில்லாத மாறுபாடானதரவினைகூட பயன்படுத்தி அணுகலாம். SQLite ஐ IoT மூலம் உள்ளக தரவைச் சேமிக்கப் பயன்படுத்தலாம். sqlite3 தகவமைவிற்கு எதையும் நிறுவுகைசெய்யத் தேவையில்லை. பைதான் 2.5 முதல், இது நிலையானதொரு நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை: docs.python.org/3/library/sqlite3.htmlஎனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Tkinter:இது பைதானின் பல்வேறு வரைகலை பயனர் இடைமுக(GUI) மேம்பாட்டு தேர்வுகளை வழங்குகிறது. பொதுவாக Tkinter ஆனதுஅனைத்து GUI தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்திகொள்ளப்படுகிறது. இது பைதான் வழங்கிய Tk GUI கருவித்தொகுப்பிற்கான நிலையான பைதான் இடைமுகமாகும்.Tkinter உடன் Python என்பது GUI பயன்பாடுகளை உருவாக்குவதற்கான விரைவான மிகவும் நேரடியான அணுகுமுறையாகும். மேலும் விவரங்களை docs.python.org/3/library/tkinter.htmlஎனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Flask: இதனை ‘pip install Flask’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. Flask என்பது http கோரிக்கைகளை உருவாக்க, இணைய பயன்பாடுகளை உருவாக்குவதற்கான எளிய மீச்சிறு கட்டமைப்பாகும். கண் காணிப்பிற்கும் கட்டுப்படுத்தும் சாதனங்களை வழங்கவும் IoT பயன் பாடுகளுக்கு தேவைப்படுகின்ற இணைய அடிப்படையிலான இடைமுகமாக இது பயன்படு கின்றது மேலும் விவரங்களை pypi.org/project/Flask/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
websockets: இதனை ‘pip install websockets” என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. websockets என்பது WebSocketஇன் சேவையகங் களையும் வாடிக்கையாளர்களையும் உருவாக்கிடுவதற்கான ஒரு பைதான் தொகுப்பு ஆகும். இது நிலைத்தன்மை, எளிமை, விரிவாற்றல், செயல்திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது. WebSocket API என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது பயனரின் உலாவிக்கும் சேவையகத்திற்கும் இடையே இருவழி ஊடாடும் தொடர்பு அமர்வை நிறுவுகைசெய்திட அனுமதிக்கிறது. இந்த API ஒரு சேவையகத்திற்கு செய்திகளை அனுப்புகிறது , பதிலுக்காக சேவைய கத்தை சார்ந்திராமல் நிகழ்வு சார்ந்த பதில்களைப் பெறுகிறது. மேலும் விவரங் களை pypi.org/project/websockets/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
requests:இதனை ‘pip install requests’.என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. requests தகவமைவானது HTTP கோரிக்கைகளை அனுப்ப அனுமதிக்கிறது; HTTP கோரிக்கையானது பதில் தரவை (உள்ளடக்கம், குறியாக்கம், இருப்புநிலை போன்றவை) கொண்ட ஒரு ‘பதில் பொருளை’ உருவாக்குகிறது. பல பகுதி கோப்பு பதிவேற்றங்கள், தரவோட்ட பதிவிறக்கங்கள் , இணைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது. உள்ளடக்கத்தின் தானாக மறையாக்கமும் சுருக்குதலும் செயல்படுத்துகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/requests//எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
aiohttp: இதனை ‘pip install aiohttp’ .என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. aiohttp என்பது ஒரு ஒத்திசைவற்ற HTTP வாடிக்கையாளர் அல்லது சேவையாளர் கட்டமைப்பை வழங்குகிறது, இதில் websocketsஇன் ஆதரவும் அடங்கும்.மேலும் விவரங்களை pypi.org/project/aiohttp/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
pushsafer:இதனை ‘pip install python-pushsafer’ .என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. pushsafer என்பதைகொண்டுiOS, Android , Windows ஆகியவை செயல்படுகின்ற சாதனங்களுக்கு (கைபேசி,கணினி), Chrome, Firefox, Opera ,போன்ற உலாவிகளுக்கு நிகழ்நேரத்தில் push அறிவிப்புகளை அனுப்பலாம் , பெறலாம். மேலும் விவரங்களை pypi.org/project/python-pushsafer/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Numpy:இதனை ‘pip install numpy’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. Numpy தொகுப்பானது N-பரிமாண வரிசையுடைய கணினியை செயல்பட உதவுகிறது. கணினியின் தரவுத்தள உள்ளார்ந்த செயலிகளிலிருந்து உணர்வி மொத்த தரவைப் படிக்க இது பெரும்பாலும் IoT இல் பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/numpy//எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Pandas: இதனை ‘pip install pandas’. என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக.Pandas என்பது ஒரு பைதானின் தகவமைவாகும், இது விரைவான, பல்துறைக்குமான வெளிப்படையான தரவு கட்டமைப்புகளை வழங்குகிறது, இது ‘தொடர்புடைய’ அல்லது ‘அடையாளமிடப்பட்ட’ தரவுகளுடன் எளிமையாகவும் வழக்கமானதுபோன்றும் செயல்படும் நோக்கத்துடன் உருவாக்குப்பட்டுள்ளது. பைத்தானில் இயல்பான, நடைமுறை-உலகத் தரவுப் பகுப்பாய்வைச் செய்வதற்கான அடிப்படை உயர்மட்ட கட்டமைப்புத் தகவமைவாக இது இருக்க விரும்புகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/pandas/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Matplotlib: இதனை ‘pip install matplotlib’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக..Matplotlib என்பது பைத்தானில் நிலையான, அசைவூட்டுலுடனான ஊடாடும் காட்சிப்படுத்தல்களை உருவாக்குவதற்கான ஒரு விரிவான நூலகமாகும். மேலும் விவரங்களை pypi.org/project/matplotlib/ எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
JSON:இது தரவு சேமிப்பு தரவுபரிமாற்ற தொடரியல் ஆகும். இது ஜாவாஉரைநிரலின்ட் பொருள்நோக்குகுறிமுறைவரிகளில் எழுதப்பட்டு டுள்ளது.JSON தரவுகளுடன்செயல்படப் பயன்படும் json என்ற நூலகத்தை பைதான் கொண்டுள்ளது. மேலும் விவரங்களை docs.python.org/3/library/json.htmlஎனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Tensorflow: இதனை ‘pip install tensorflow’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக.TensorFlow என்பது உயர் செயல்திறன் கொண்ட எண்ணிம கணினியின் திறமூல மென்பொருள் தொகுப்பாகும். அதன் தகவமைப்புக் கட்டமைப்பானது, கணினிகளின் சேவையகங்களின் கொத்துகள் முதல் கைபேசி, எட்ஜ் சாதனங்கள் வரை நேரியல் அல்லாத தரவுத் தொகுப்புகளைக் கையாளுவதற்கான பரந்த அளவிலான தளங்களில் (CPUகள், GPUகள், TPUகள்) எளிமையான கணினி வரிசைப்படுத்தலை செயல்படுத்திடுகின்றது. மேலும் விவரங்களை pypi.org/project/tensorflow/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Opencv: இதனை ‘pip install opencv-python’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. OpenCV என்பது கணினி பார்வை, இயந்திர கற்றல் உருவப்படசெயலாக்கத்திற்கான ஒரு பெரிய திறமூல நூலகமாகும், மேலும் இது தற்போது நிகழ்நேர செயலிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் விவரங்களை pypi.org/project/opencv-python/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
PyCaret:இதனை ‘pip install pycaret’.’ என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. PyCaret என்பது பைத்தானில் உள்ள ஒரு திறமூல, குறைந்த அளவு குறிமுறைவரிகளுடனான இயந்திர கற்றல் நூலகம். மற்ற திறமூல இயந்திர கற்றல் நூலகங்களுடன் ஒப்பிடும் போது, PyCaret என்பது ஒரு மிகக் குறைந்த-குறிமுறைவரிகளின நூலகமாக திகழ்கின்றது, இது நூற்றுக்கணக்கான குறிமுறைவரிகளை சில வரிகளுடன் மட்டுமே மாற்றியமைத்திடுவதற்காகப் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் விளைவாக, பரிசோதனைகள் கணிசமாக வேகமாகவும் திறமையாகவும் மாறும், இது IoT பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைகிறது. மேலும் விவரங்களை pypi.org/project/pycaret/ எனும் இணையதளமுகவரியில் காணலாம்
LightGBM: இதனை ‘pip install lightgbm’. என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. இது ஏராளமான நினைவக-திறனுடனான விரைவான கணக்கீட்டு சக்தியை வழங்குகிறது பெரிய அளவிலான தரவை கையாளும் திறன் கொண்டது. மேலும் விவரங்களை pypi.org/project/lightgbm/ எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
Azure-CLI: இதனை’pip install azure-cli’என்றவாறான கட்டளைவரியைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடுக. Azure-CLI Azure க்கான பைதான் கருவிகளை வழங்குகிறது.மேலும் விவரங்களைhttps://pypi.org/project/azure-cli/எனும் இணைய தளமுகவரியில் காணலாம்
AWS: வாடிக்கையாளர் சாதனங்கள் AWS IoT, AWS IoT Greengrass core சாதனங்களுடன் பைதான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி பைத்தானுக்கான AWS IoT சாதனத்தினை SDK ஐப் பயன்படுத்தி இடைமுகம் செய்திடலாம். மேலும் விவரங்களை docs.aws.amazon.com/greengrass/v1/developerguide/IoT-SDK.htmlஎனும் இணைய தளமுகவரியில் காணலாம்
IoTக்காக பைத்தானைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்
IoTஇக்காக பைத்தானில் பல்வேறு நன்மைகள் உள்ளன, ஆனால் எந்தவொரு நிரலாக்க மொழியும் குறைபாடற்றது என கண்டிப்பாக கூறமுடியாது. பைதான் மற்ற நிரலாக்க மொழிகளை விட மிகமெதுவாக செயல்படு கின்றது, ஏனெனில் இது மாறும் வகையில் தட்டச்சு செய்யப்பட்டு வரிக்கு வரி இயங்குகிறது என்பதே அதற்கான முதன்மையான காரணமாகும்.
பைத்தானின் முக்கிய வரம்புகள் அதன் இயக்க நேர வேகம், நினைவக மேலாண்மை, ஒத்திசைவு , இணையான ஆதரவுஆகியவைகளாகும். மற்ற கணினிமொழிகளுடன் ஒப்பிடும் போது, இதில்இயக்க நேர வேகம் குறைவாக உள்ளது. பைத்தானின் நினைவகத்தின் அளவு காரணமாக, RAM இல் செயலில் உள்ள பல பொருள்களைக் கொண்ட செயல்திட்டங்கள் பைத்தானைப் பயன் படுத்தி கொள்ளும் போது நிறையசவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பைதான் ஒரு நல்ல சேவையாளர் மொழியாக இருந்தாலும், கைபேசி பயன்பாடுகள் போன்றபிற பயன்பாடுகளுடன் இதுசெயல்புரிவது மெதுவாகவும் அதிக சிரமம் கொடுப்பதாகவும் இருப்பதால்இதனை வாடிக்கையாளர்களால் இது மிகஅரிதாகவே பயன்படுத்திகொள்ளப்படுகிறது.
தற்போது ஏராளமானஅளவில் IoT தொடர்புகள்உருவாகி வருகின்றன, மேலும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருவிகளின் தேர்வு மிகமுக்கி யமாகும். IoT வளர்ச்சியில் பல நிரலாக்க மொழிகள் பயனுள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளன. இருந்தபோதிலும் பல்வேறு IoT சாதனங்களையும் அமைப்பு களையும் முன்மாதிரியாக உருவாக்குவதற்கும், இயக்குவதற்கும் பைதான் தன்னை ஒரு மதிப்புமிக்க கருவியாக நிரூபி்த்துவருகின்றது. அதன் விரைவான வளர்ச்சி வேகம், குறைந்தபட்ச கற்றல் திறன், விரிவான நூலக தொகுப்பு ஆகியவை IoT க்கு இன்றியமையாததாக ஆக்குகின்றன.