பொருத்துபவரின்(Docker) கொள்கலனை( Container) அமைத்தல்

பொருத்துபவர்(Docker) ஆனது பூஜ்ஜிய மேல்நிலையுடன் இலகுரக மெய்நிகராக்க தீர்வை வழங்குகிறது. இது உபுண்டுவில் NGINX என்ற பொருத்துபவரின் கொள்கலண் பயன்பாட்டினைப் பயன்படுத்துவதையும் கோடிட்டுக் காட்டுகிறது.
கொள்கலணாக்குதல்( Containerization)தற்போது மென்பொருள் மேம்பாட்டு சமூகத்தில் மெய்நிகராக்கத்திற்கு மாற்றாக பிரபலமாக உள்ளது. இது மென்பொருளையும் அதன் அனைத்து சார்புகளையும் இயக்க நேர சூழலுடன் இணைக்க (கொள்கலணாக்குதல்) செய்ய உதவுகிறது, அதனால் இது பல்வேறு உள்கட்டமைப்புகளிலும் தளங்களிலும் ஒரே மாதிரியாக இயங்க முடியும். பொதுவாக, பல மெய்நிகர் கணினிகளில் இயங்கும் மென்பொருளைக் காட்டிலும், கொள்கலன் சூழல்களில் இயங்கும் மென்பொருளானது குறைவான கணினி வளங்களைப் பயன்படுத்திகொள்கிறது, ஏனெனில் ஒவ்வொரு மெய்நிகர் கணினிக்கும் அதன் சொந்த இயக்க முறைமையின் நகல் தேவைப்படுகிறது. இந்தக் கட்டுரை மெய்நிகர் கணினியை பொருத்துபவரின் கொள்கலனுடன் ஒப்பிட்டு, பொருத்துபவரின் கொள்கலணாக்குதல் சூழலை எவ்வாறு நிறுவுகைசெய்வது , கட்டமைப்பது என்பதை விளக்குகிறது. இறுதியாக, ஒரு மாதிரி பொருத்துவரின் கொள்கலன் பயன்பாடாக NGINX ஆனதுவரிசைப்படுத்தப் படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் கணினி , பொருத்துபவரின் கொள்கலன் ஆகியவற்றி்ற் கிடையிலான வேறுபாடு
பொருத்துபவர் என்பது ஒரு மென்பொருள் மேம்பாட்டு தளமாகும், இது வெவ்வேறு இயக்க முறைமைகளுடன் ஒரே புரவலர் கணினியில் மெய்நிகராக்கத்தை செயல்படுத்துகிறது. பயன்பாடுகளிலிருந்து உள்கட்டமைப்பைப் பிரிப்பதன் மூலம் மென்பொருள் விநியோகத்தை இது விரைவாக செயல்படுத்துகிறது. பொருத்துபவரின் மெய்நிகராக்கமானது கணினி அளவிலேயே செய்யப்படுகிறது, பொருத்துபவர் கொள்கலன்களைப் பயன்படுத்தி, ஹைப்பர்வைசர்களைப் hypervisors போன்றில்லாமல், VMகளை உருவாக்குகிறது. படம் 1 இல் காட்டப்பட்டுள்ளபடி,

படம் 1
பொருத்துபவரின் கொள்கலன்கள் புரவலரின் இயக்க முறைமையை இயக்குகின்றன. இது பயன்பாட்டின் செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. மேலும், கொள்கலண்கள் மெய்நிகர் கணினிகளை விட மிக குறைவான வளங்களை பயன்படுத்திகொள்வதால், நாம்அதே கணினியின் வளங்களில் அதிக கொள்கலன்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

மெய்நிகர் கணினி (VM) பொருத்துபவர் (Docker)
வன்பொருள்நிலையில் தனிமைப்படுத்தல் OS-நிலையில் தனிமைப்படுத்தல்
மெதுவான துவக்கம் (நிமிடங்களில்) ிரைவா துவக்கம் (வினாடிகளில்)
அதிகநினைவகம்தேவையாகும் (ஜிகாபைட்) VM (KB/ MB) ஐ விட அளவில் மிகவும் சிறியது
VMளை புதிய புரவலர் கணினிகளுக்கு நகர்த்தலாம் கொள்கலன்கள் அழிக்கப்பட்டு மீண்டும் புதியதாககட்டமைக்கப்படுகின்றன
கணினி வளங்கள் அதிக அளவில் தேவையாகும் குறைவான கணினி வளங்கள் தேவை

அட்டவணை -1

ஏன் பொருத்துபவர் பிரபலமானது
பொருத்துபவரானது தற்போது பல்வேறு துறைகளில் பரவலாகப் பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. கொள்கலண்களன் மேம்படுத்துநர்கள் ஒரு நிரலை அதன் அனைத்து தேவைகளுடனும் உள்ளமைவுகளுடனும் சேர்த்து, நூலகங்கள், பிற சார்புகள் உட்பட, ஒரு தொகுப்பாக, இறுதி பயனர்களுக்கு விநியோகிக்க முடியும். பல்வேறு காரணங்களுக்காக பொருத்துவரானது தொழில்நுட்ப உலகில் பிரபலமடைந்து வருகிறது, அவற்றில் சில பின்வருமாறு:
• திறமையான வள பயன்பாடு
• எளிய கட்டமைப்பு
• மேம்படுத்துநரின் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்
• பயன்பாடு தனிமைப்படுத்தலை வழங்குதல்
•விரைவான பயன்பாட்டின் வளர்ச்சி
உபுண்டு/லினக்ஸில் பொருத்துபவரை நிறுவுகை செய்தல்
புதிய புரவலர் கணினியின் அமைவில் பொருத்துபவரின் பொறியை நிறுவுகை செய்திடுக அதற்குமுன், நாம் இதனுடைய களஞ்சியத்தை உள்ளமைக்க வேண்டும். பின்னர் பயனர் களஞ்சியத்திலிருந்து பொருத்துபவரைப் புதுப்பித்து நிறுவுகைசெய்திடலாம். பொருத்துபவரை நிறுவுகைசெய்தல் பயன்பாட்டை இயக்குவதற்கான படிமுறைகள் பின்வருமாறு .
படி முறை1: apt க்கான தொகுப்பு அட்டவணையில் புதுப்பிப்பைச் செய்திடுக, பின்னர் HTTPS காப்பகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொகுதிகளை நிறுவுகை செய்திடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ apt-get -y install apt-transport-https ca-certificates curl
படிமுறை 2: பின்வரும் கட்டளை வரியுடன் பொருத்துபவருக்கான GPG விசையைப் பதிவிறக்கம் செய்திடுக.
$ curl -fsSL download.docker.com/linux/ubuntu/gpg | sudo apt-key add –
படிமுறை 3: பின்வரும் கட்டளைவரியுடன் களஞ்சியத்தை உள்ளமைத்திடுக:
$ add-apt-repository “deb [arch=amd64] download.docker.com/linux/ubuntu $(lsb_release -cs) stable”
படிமுறை 4: நம்முடைய apt தொகுப்பை பதிவிறக்கம் செய்தவுடன், பின்வரும் கட்டளைவரிகளை இயக்குவதன் மூலம் Docker Engine ஐ நிறுவுகைசெய்திடுக:
$ apt-get update
$ apt-get -y install docker-ce
படிமுறை 5: இப்போது நாம் நிறுவுகைசெய்ததைச் சரிபார்த்திடுக. உபுண்டுவின் imageஐ இயக்குகின்ற செயலானது, பொருத்துபவரின் பொறியானது வெற்றிகரமாக நிறுவுகைசெய்யப்பட்டதை உறுதிப்படுத்த நம்மை அனுமதிக்கின்றது அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ Docker pull ubuntu

படம் 2
படம் 2 இல் காட்டப்பட்டுள்ளபடி, Docker மையத்திலிருந்து தேவையான imageஐ பதிவிறக்கம் செய்வதற்கு Docker ஒரு கட்டளையை கொண்டுஇழுக்கிறது.
படிமுறை6: NGINX என்பது இணையசேவை, பல்லூடக தொடரோட்டம், பின்னோக்கு பதிலாளாக்குதல், தற்காலிக நினைவேற்றுதல் நினைவக சுமையை சமப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கட்டணமற்ற மென்பொருளாகும். NGINX ஆனது பொருத்துபவரின் கொள்கலனின் imageஐப் பதிவிறக்கம் செய்திட, பின்வருமாறானள கட்டளைவரியைப் பயன்படுத்துக:
$ Docker container run Nginx
மேலே கூறிய கட்டளைவரியை இயக்கும்போது, பொருத்துபவரின் image களஞ்சியத்தைத் தேடுவதோடு NGINX இன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கம் செய்கிறது. இவ்வாறு, NGINX கொள்கலன் உருவாக்கப்பட்டு, படம் 3 இல் காட்டப்பட்டுள்ள தனியார் bridge வலைபின்னலிற்குள் ஒரு மெய்நிகர் IP ஐப் பெறுகிறது.

படம் 3
பின்வருமாறான கட்டளைவரிகள் தற்போது செயலில் உள்ள கொள்கலன்களின் அனைத்து செயல்களுக்குமான பட்டியலாகும். NGINXஆனது பொருத்துபவரின் கொள்கலன்களின் வெற்றிகரமான வரிசைப்படுத்தலிற்காகஇதனை அணுகலாம்.

கட்டளைகள் (Command) நோக்கம்(Purpose)
$ docker – – version டோக்கரின் பதிப்பைக் கண்டறிய
$ “docker start “container _name” கொள்கலனைத்செயல்படுத்ததொடங்
$ “docker stop “container _name” கொள்கலனை இயக்குவதை நிறுத்த
$ docker kill “container _name” ஒரு கொள்கலனை அழித்திட
$ docker top “container _name” ஒரு கொள்கலனில் இயங்குகின்ற செயல்முறைகளை பட்டியலிட்டிட
$ docker container stats “container _name” CPU , நினைவக பயன்பாட்டை ஒரு கொள்கலன் மூலம் பெற்றிட
docker info கொள்கலன் பற்றிய தகவலைப் பெற்றிட

அட்டவணை 2: வழக்கமான சூழலில் பொருத்துபவரில் அடிக்கடி பயன்படுத்தப்படும் கட்டளைகள் களாகும்

இந்த பயன்பாடானதஎந்தச் சூழலிலும் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்ய, பொருத்துபவரின் கொள்கலணிற்குள் இந்த பயன்பாட்டினையும் அதன் அனைத்து சார்புகளையும் தொகுக்கின்ற ஒரு கொள்கலணாக்குதலிற்கான தளத்தை பொருத்துபவர் வழங்க முடியும். கொள்கலணாக்குதலிற்கான, மென் பொருள் குறிமுறைவரிகளை தொடர்புடைய உள்ளமைவு கோப்புகள், நூலகங்கள் , பிற இயக்க நேர சார்புகள் ஆகியவற்றுடன் தொகுத்து (கொள்கலணாக்குதல்) செய்வதன் மூலம் இந்த சிக்கலை அறவேநீக்குகிறது. எனவே, கொள்கலண்கள் மெய்நிகர் கணினிகளை விட மிகவும் இலகுவானவை, இதன் விளைவாக இந்த பணிகள் முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

 

 

 

 

%d bloggers like this: