புதிய சூழலில் நம்முடைய பயன்பாடு எவ்வாறு செயல்படும் என கணினியின் பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்த விழையும் நிரல்தொடராளர்கள் அல்லது புதியவர்கள் அனைவரும் தங்களுடைய அனுபவத்தை வளர்த்து கொள்ளவும் புதிய செயல்திட்டத்தை செயல்டுத்தி வெவ்வேறு சூழல்களில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் அறிந்து கொள்ளவும் விழைபவர்களுக்கு GNOME Boxes எனும் கட்டற்ற பயன்பாடானது ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது மேஜைக்கணினியில் தங்களுடைய புதிய செயல்திட்டத்தினை modeling, testing, development ஆகிய பணிகளுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் தரவுமையத்தில் தங்களுடைய சேவையாளர் கணினியில் தேவையானவாறு வன்பொருட்களின் திறனை மேம்படுத்தி கொள்ள பயன்படுத்தி கொள்ளமுடியும் ஒரு எளிய GNOME பயன்பாட்டினை கொண்டு view, access, manage ,remote virtual systems ஆகிய பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் தற்போது GNOME Boxes இன் 3.32.0.2 பதிப்பு நாம் பயன்படுத்தி கொள்வதற்காக கிடைக்கின்றது இதனை நிறுவுகை செய்தவுடன் இதன்முகப்புதிரையானது பின்வருமாறு தோன்றிடும்
இதில் திரையின் மேலே இடதுபுற ஓரத்திலுள்ள New எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
முதன்முதல் நாம் இதனை பயன்படுத்திடுவதால் Create a Boxஎனும் உரையாடல் பெட்டி திரையில் விரியும் அதில்Continue. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் திரையில் இயல்புநிலையிலுள்ள இயக்கமுறைமைகளின் பட்டியலுடன் Create a Boxஎனும் உரையாடல் பெட்டி திரையில் விரியும் தேவையெனில் வேறு இயக்கமுறைமகளை பதிவிறக்கம் செய்து இந்த பட்டியலில்சேர்த்து கொள்க பின்னர் தேவையான இயக்கமுறைமையை தெரிவுசெய்து சொடுக்குக இங்கு படத்தில் Fedora 30 Workstation எனும் இயக்கமுறைமை தெரிவுசெய்யப்பட்டுள்ளது
அடுத்து தோன்றிடும் திரையானது சரிபார்ப்பு திரையாகும் இதில் System,Memory, Disk properties ஆகியவை போதுமானதாக இருக்கின்றதா வென சரிபார்த்திடுக .தொடர்ந்து இதில் Customize எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் விரியும் திரையில் Memory ,Disk sizes ஆகியவைகளை தேவையானவாறு மாற்றியமைத்து கொள்க
அதனைதொடர்ந்து அனைத்தும் போதுமானதாக சரியாக இருக்கின்றது எனில் திரையின் மேலே வலதுபுறமூலையில் Create எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மெய்நிகர் கணினி பெட்டியொன்று உருவாகி இயங்க துவங்குவதற்கு தயாராகி விடும் அப்போது நாம் தெரிவுசெய்த இயக்கமுறைமைஇதில் நிறுவுகை செய்து நாம் பயன்படுத்த பின்வரும் படத்திலுள்ளவாறு தயாராகவிடும்
இந்த மெய்நிகர் பெட்டிக்கு ஒரு பெயரிட்டு கொள்க GNOME Boxes ஆனது ஒப்பிடும்போது மிகஎளியதாகும் ஆயினும் hardware, network devices, CPU ஆகியவைகளை நமக்கு தேவையானவாறு கட்டமைவுசெய்வதில் மிகமேம்பட்டதாக அதாவது virt-managerஎனும் கருவி போன்று விளங்குகின்றது