மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம்

மேககணினியில் தரவு மேலாண்மை
தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் முக்கியமானவை என்பதால், மேககணினியில் சேமிக்கின்ற தரவை நிர்வகிப்பதற்கான மிகச்சரியான உத்தியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதனோடு மிகப்பொருத்தமான மேககணினி சேவை வழங்குநரையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேககணினியில் தரவு மேலாண்மை என்பது மேககணினியில் தரவை நிர்வகிப்பதற்கான துவக்க முதல் இறுதிவரையிலான செயல்முறை ஆகும், சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை. மேககணினியின் சூழலில் தரவின் வகை, தரவின்அளவு .தரவின் தன்மையை நிர்வகிப்பது இதில் அடங்கும். நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன தரவுகளுக்காக பொது மேககணினியில் சூழல்களைப் பயன்படுத்தும் போது, தரவு வெளிப்புற தரவு மையத்தில் சேமிக்கப்படுவதால், அவை சரியான உத்தியைக் கொண்டிருக்க வேண்டும். பொது மேககணினிகள் இயல்பாகவே பல்வகை குத்தகைதாரர்கள்; எனவே, தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் மிகமுக்கியமானதாகும். ஒரு நல்ல தரவு உத்தியானது போக்குவரத்தில் உள்ள தரவையும் நிலையாக உள்ள தரவையும் குறிக்கிறது.
மேகக்கணியில் தரவு நிர்வாகத்தின் முக்கிய வசதிகள்
மேகக்கணியில் தரவு மேலாண்மை பின்வரும் நன்மைகளை வழங்குகிறது.
சேகரித்தல்/தன்மயமாக்குதல்: பல்வேறு மூலங்களிலிருந்து (தரவுத்தளங்கள், கோப்புகள், நிகழ்வநேரத் தரவு போன்றவை) தரவை பதிவிறக்கம் செய்யக் கூடிய இணைப்பிகள்/APIகளின் கிடைக்கின்ற தன்மை. தரவை தெளிவாக்குதல் .விடுபட்ட தரவை கையாளுதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
ஒருங்கிணைப்பும் மாற்றமும்: தரவை வரைபடமாக்குதல் பிற தரவுகளுடன் ஒருங்கிணைக்கும் திறன்.
சேமித்தல்: திறமையான முறையில் சரியான வடிவத்தில் தரவைச் சேமிக்கும் திறன்.
மீட்டெடுத்தல்: பயனாளர்களால் தரவைப் படித்தல்/மீட்டெடுத்தல்
பாதுகாப்பு: செயல்படாத தரவு, போக்குவரத்தில் உள்ள தரவு ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பான முறையில் தரவைச் செயலாக்கும் திறன்
தனியுரிமை: முக்கியமான தரவை மறைத்துவைத்திருக்கும் திறன்.
பிற்காப்பம் மீட்பும்:தானியங்கியான பிற்காப்பினை மீட்பினை வழங்கும் திறன்.
மீப்பெரும்தரவு மேலாண்மை: மேகக்கணியில் சேமிக்கப்பட்ட தரவின் சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்ள நல்ல மீப்பெரும் தரவை வழங்குதல்.
தர மேலாண்மை: மேகக்கணியில் உள்ள தரவின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த உள்ளமைக்கப்பட்ட அல்லது பயனாளரால் வரையறுக்கப்பட்ட தரச் சோதனைகள்.
பரம்பரை(Lineage):காலப்போக்கில் தரவுகளின் மூலத்தையும் ஓட்டத்தையும் கண்காணிக்கின்ற செயல்முறையும் திறனும் ஆகும்.
அட்டவணை:கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளின் பட்டியலை பராமரிக்கின்ற திறன்.
மேககணினிதரவு மேலாண்மை உத்தியை உருவாக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்
நிறுவனங்கள் தங்களுடைய தரவை மேககணினியில் சேமிக்கும்போது சரியான தரவின் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை உத்திகளைக் கொண்டிருக்க வேண்டும். பொது மேககணினிகளின் சவால்கள், வாய்ப்புகள் ஆகிய இரண்டையும் வழங்குகின்றன. தெளிவான உத்தியைக் கொண்ட நிறுவனங்கள் மேககணினி சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடையலாம். அவ்வுத்தியை உருவாக்கும் போது அவர்கள் பின்வரும் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சேமிப்பதற்கான செலவுகள்: சரியான சேமிப்பக வடிவமைப்பைத் தேர்வு செய்திடுக (பொருள் சேமிப்பு/குமிழ் (blob)சேமிப்பு, குறைந்த தாமத சேமிப்பு, காப்பக சேமிப்பு, வட்டு சேமிப்பு, நாடா சேமிப்பு, கோப்பு முறைமைசேமிப்பு, உள்ளடக்க விநியோக சேமிப்பு, சேமிப்பக நுழைவாயில்கள்/இடைத்தரகர்கள் போன்றவை).
தரவு உள்நுழைவு/வெளியேறுதலுக்கான செலவுகள்:
பொதுவாக மேககணினியில்சேவைகளுக்கு உள்நுழைவுச் செலவுகள் இருக்காது, ஆனால் இதற்கு நேர்மாறாக வெளியேறுதலுக்கான செலவுகள் இருக்கும்.
விகித வரம்புகள்: ஒரே நேரத்தில் அணுகுவதற்கான வரம்பு, தரவைப் படிக்க/எழுத கோரிக்கைகளைச் செயலாக்கும் திறன் .
பாதுகாப்பு: இணையத்தைப் பயன்படுத்தி தரவு பரிமாற்றப்படும் செய்யப்படும் போதெல்லாம், சாத்தியமான பாதுகாப்பு ஆபத்து உள்ளது. பாதுகாப்பான பாதையைப் பயன்படுத்தி தரவு மாற்றப்படுவதை உறுதிசெய்திடுக. தனிப்பபபட்ட தரவு பரிமாற்ற தேவைகளுக்கு தனிப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்திடுக.
அளவிடுதலும் தேவைகளும்: தேவையைப் பொறுத்து, தரவுத்தளங்களை மாறுகின்ற வகையில் அளவிடும் திறன் .
தரவு கோரிக்கைகள்/தேவைகளைப் பூர்த்தி செய்தல்:செந்தர தரவு அணுகல்/API அடிப்படையிலான வழிமுறைகளை வழங்குகின்ற திறன்.
பெயர்வுத்திறன்:ஒருமேககணினி சேவை வழங்குநரிடமிருந்து மற்றொரு மேககணினி சேவை வழங்குநருக்கு மாறிகொள்கி்ன்ற திறன்
மேககணி தரவு மேலாண்மைக்கான கட்டமைப்பு
தங்களுடைய தரவு சேமிப்பு, செயலாக்கத் தேவைகளுக்காக மேககணினி சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது, நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தை மேம்படுத்த ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தரவுச் செயலாக்கம் முக்கியமானது என்பதால், தரவுப் பாய்வும் செயல்முறையும் தானியக்கமாக இருக்க வேண்டும். தரவு ஓட்டங்கள் தூண்டப்பட்டு, முன் வரையறுக்கப்பட்ட இடைவெளியில் இயக்க திட்டமிடப்பட வேண்டும். மேலும், செயலியின் பயன்பாட்டின் எளிமை , மீள்தன்மை உள்ளமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேகக்கணியில் தரவின் தீர்வு செயல்திறன் கண்காணிப்பு,ம் பல்வேறு நிபந்தனைகளுக்கு எச்சரிக்கை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நவீனமேககணினியின் தரவு மேலாண்மை நுட்பங்கள்
அறிவார்ந்த தரவுஒட்டங்களை உருவாக்க AI, ML ஆகியவை இன்று பயன்படுத்தப் படுகின்றன. AI ஆனது இயங்குகின்ற மீப்பெரும் தரவு, நுண்ணறிவு அமைப்புகள் அமைப்புமுறைகளை( schema)புத்திசாலித்தனமாக ஊகிக்கவும், தரவு கண்டுபிடிப்பை அனுமதிக்கின்றது , தானியங்கி தரவு தர சோதனைகளை செய்யவும் உதவுகின்றது. AI இயங்கும் தரவு மேலாண்மை தீர்வுகள், சொற்களஞ்சியம், அறிவார்ந்த வரைபடங்கள், பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகள், வழிகாட்டப்பட்ட வழிசெலுத்தல் தானியங்கி தரவு பரம்பரை ஆகியவற்றிற்கும் உதவுகின்றது.
பிற புதுமையான தீர்வுகளில், தனிநபர் அடிப்படையிலான தரவு அணுகலும் இதிலடங்கும், இதில் தரவுப் பொறுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், தரவுத் தர வல்லுநர்களும், நிர்வாகிகளும் உள்ளனர்.
முடிவுரைநம்பகமான, சூழ்நிலை , தரமான முதன்மை தரவை வழங்குவது தரவு மேலாண்மைக்கு அடிப்படையாகும். தரவு கண்காணிப்பு, சுயமாக-சரிசெய்தல், சுதந்திரமாக-பிரச்சினைக்கு தீர்வுசெய்தல், திறன்மிகு திட்டமிடல், அளவிடக்கூடிய வள ஒதுக்கீடு ஆகியவை மேககணினியில் மாறுகின்ற தரவு மேலாண்மை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன. பயனுள்ள தெளிவான தரவுகளை வழங்குகின்ற தரவு சந்தை, மேககணினியி்ன் தரவு நிர்வாகத்தின் எதிர்காலமாகும்.

%d bloggers like this: