மேககணினி(cloud) சேவை என்பதன் கட்டமைப்புகள்

தற்போது மேககணினி என்றால் என்ன, அது எப்படி 445 பில்லியன் டாலர் தொழில்துறையாக உருவெடுத்தது என்பது பற்றிய விவாதம் இருப்பதால், நாம்தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் இந்த மேககணினியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப் பது நல்லது அல்லவா.


ஒரு மேககணினியின் பொதுவான கட்டமைப்பானது முன்-பக்கம்,பின்-இறுதி. ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக கருதலாம் –
முன்-பகுதியில் வாடிக்கையாளர் உள்கட்டமைப்பு உள்ளது, அதாவது, மேகக்கணியுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் பயன்பாட்டின் சாதனமும் பயனர் இடைமுகமும். தற்போதையச் சூழலில் திறன்பேசி ,கூகுள் டிரைவ், பயன்பாடு ஆகியவை முன்-பகுதி வாடிக்கையாளர் உள் கட்டமைப்பு ஆகும், அவை Googleஇன் மேகக்கணியை அணுகுவதற்குப் பயன்படுத்தி கொள்ளலாம். பின்-இறுதியில் மேககணியின் உள்கட்டமைப்பு உள்ளது, அதாவது மேககணினியின் சேவையை இயக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப வழிமுறைகள் , இயந்திரங்கள். சேவையாளர்கள், மெய்நிகர் கணினிகள், சேவைகள் சேமிப்பகம் ஆகிய அனைத்தும் மேககணினி உள்கட்டமைப்பால் வழங்கப்படுகின்றன, படத்தில் காட்டப்பட்டுள்ளவாறாக உள்ள.இதனுடைய முழுமையான கட்டமைவை அறிந்துகொள்ள, பின்-இறுதியின் ஒவ்வொரு கூறுகளையும் இப்போது விரைவாக காண்போம்.
பயன்பாடு(Application): இணையம் வழியாக மேகக்கணியுடன் தொடர்பு கொள்வதற்குப் பயனர் அல்லது வணிகநிறுவனம் பயன்படுத்துவதே இந்த பயன்பாடாகும்(app) .
சேவை(Service): மேககணினி வழங்குகின்ற பல்வேறு வகையானஉள்கட்டமைப்பு இந்தக் கட்டுரையில் பல்வேறு வகையான சேவைகளைப் பற்றி விரிவாகப் விவாதிப்போம்.
மேககணினியின் இயக்க நேரம்(cloud Runtime): இயக்கநேரம் ( runtime), செயல்படுத்துதல்(execution) ஆகியவை மெய்நிகர் கணினிகளுக்குக் கிடைக்கின்றன.
தேக்கிவைத்தல்(Storage): அளவிடுதலின் நெகிழ்வுத்தன்மையுடன் பயனர்/ வணிகத் தரவின் கையகப்படுத்தலும் மேலாண்மையும்.
உள்கட்டமைவு(Infrastructure): மேககணினியை இயக்க தேவையான வன்பொருள் , மென்பொருள்.ஆகியவை
பாதுகாப்பும்(security) மேலாண்மையும்(Management): பயனர்/வணிகத் தரவைப் பாதுகாக்க பாதுகாப்பு தொழில்நுட்ப வழிமுறைகளை வைப்பதுடன், அதிக சுமை, சேவை ஆகிய செயலிழப்புகளைத் தவிர்க்க மேககணினி கட்டமைப்பின் தனிப்பட்ட அலகுகளை நிர்வகித்தல்.
1.ஒரு மென்பொருள்சேவையாக (Software as a Service (SaaS)) என்பது மேககணினியின் மாதிரியாகும், இது மென்பொருளையும் பயன்பாடுகளையும் இணையத்தில் சேவையாக வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணம் Google Drive அல்லது Google Workspace. Google இயக்ககத்தில் உள்ள docs, sheets, slides, forms, போன்ற அனைத்து பயன்பாடுகளும் .இந்த மென்பொருட்களின் சேவைகளை இணைய உலாவியைப் பயன்படுத்தி நேரடியாக எங்கிருந்தும் எந்த நேரத்திலும் அணுகலாம் இவை களினால் உருவாக்கப்படும் கோப்புகள் தானாகவே மேகக்கணியில் சேமிக்கப் படும். எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் நம்முடைய ஆவணங்களின் சமீபத்திய பதிப்பை அணுகலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த மென்பொருள் சேவையை பெறுவதற்காக நமக்கென உருவாக்கப்பட்ட நம்முடைய கணக்கில் உள்நுழைவு செய்வது மட்டுமேயாகும். மென்பொருளை சேவை மாதிரியாக வைத்திருப்பதன் நன்மை இதுவேயாகும். நம்முடைய சாதனத்தில் எதையும் நிறுவுகைசெய்வதற்குப் பதிலாக அல்லது நம்முடைய சாதனத்தின் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நேரடியாக மேககணினியில் உள்ள மென்பொருள் பயன்பாட்டை அணுகலாம், இதனால் உள்ளூர்மயமாக்கப்பட்ட மென்பொருளுடன் வரும் பல பொறுப்புகள் நீக்கப்படும். SaaS இல் ‘சேவையை பெறும்போதுமட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது, அதாவது, நமக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் நாம் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். எப்போதும் அதிக சேமிப்பகத்தினை /அல்லது அதிக வசதிகளை அதிக கட்டணத்தை செலுத்தி பெறலாம் அல்லது தேவைகளுக்கு ஏற்ப கட்டணத்தினை செலுத்தி அவ்வசதிகளுக்கான கட்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
SaaS இன் நன்மைகள்: SaaS மிகவும் அளவிடக்கூடியது.‘சேவையை பெறும்போதுமட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நாம் விரும்பியவாறு நமக்கானசேமிப்பகத்தை அதிகரிக்கலாம்/குறைக்கலாம் /அல்லது பயன்பாட்டின் வசதிகளை நமக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்திகொள்ளலாம். எந்தவொரு இயக்க முறைமையுடனும் எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் நிகழ்நேர அணுகல் போன்ற வசதிகளை வழங்குவதால் இது கணிசமாக செலவு குறைந்ததாகும். இது வாடிக்கையாளர் பக்கத்தில் குறைந்த முயற்சியை உள்ளடக்கியது. மென்பொருளை நிறுவுகைசெய்திடுவது அதன்இயக்கத்தை துவக்குவது என குழப்பமான படிமுறைகள் எதுவும் தேவையில்லை. நம்முடைய இணைய உலாவி /அல்லது பயன்பாட்டின் வசதியிலிருந்து கூட இதைப் பயன்படுத்திகொள்ளலாம். மென்பொருளை நிறுவுகைசெய்திடாமல் அல்லது நம்முடைய சாதனத்தில் நிறுவுகைசெய்வதற்கு காத்திருக்காமல் தானாகவே புதுப்பிக்கப்படும்.
2.ஒருஇயங்குதளசேவையாக (Platform as a Service (PaaS)) ஒவ்வொரு தொழில் நுட்பதுவக்கநிலை(Tech.stratup) நிறுவனமும் தங்களுடைய பயன்பாடுகளை மேககணினியில் இயக்குவதற்கு தங்களின் சொந்த உள்கட்டமைப்பை பராமரிக்க தேவையான ஆதாரங்களைக் கொண்டிருக்க தேவையில்லை. பல சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் (குறிப்பாக துவக்கநிலைநிறுவனங்கள்) அனைத்து பின்புல உள்கட்டமைப்பையும் கையாளாமல் மேககணினியில் தங்கள் பயன்பாட்டை புரவலராக செய்ய விரும்புகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில்தான் ஒருஇயங்குதள சேவையின் மாதிரியாக செயல்படுகிறது. Heroku cloud போன்ற நிறுவனங்கள், வன்பொருள் உள்கட்டமைப்புடன் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமல், நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களுடைய பயன்பாடுகளை மேககணினியில் புரவலராக செய்து இயக்குவதற்கு PaaS கட்டமைவுஅடிப்படையிலான மேககணினி தீர்வுகளை வழங்குகின்றன. SaaSஐப் போன்றே, இந்த மாதிரியானது, உள்கட்டமைப்புக் கண்ணோட்டத்தில் அளவிடுதலுடன், பாதுகாப்போடு நமக்குத் தேவையான சேவைகளை மட்டும் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத்தன்மையை அளிக்கின்றது.
PaaS இன் நன்மைகள் மேககணினியின் உள்கட்டமைப்பைக் கையாள்வதில் எந்தத் தொந்தரவும் இல்லை. நம்முடைய பயன்பாட்டை அவர்களின் மேககணினியில் புரவலாக செய்யும் நிறுவனத்திற்கு அயலகசேவைபெறுதலை செய்கின்றானர். இது நம்முடைய பயன்பாட்டு மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியில் மட்டுமே கவனம் செலுத்த உதவுகிறது. PaaS அளவிடக்கூடியது. நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய சேமிப்பகத் தேவைகள், கூடுதல் சேவைகள் ஆகியவற்றை அதிகரித்துகொள்ளலாம் அல்லது குறைத்து கொள்ளலாம். நாம் அமைக்கும் பாதுகாப்பு அளவுருக்கள் நம்முடைய சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே. மேககணினியின் பாதுகாப்பு நம்முடைய மேககணினி சேவை வழங்குநரால் கையாளப்படுகிறது. மேககணினியில் தங்கள் பயன்பாடுகளை புரவலராக செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும், குறிப்பாக தங்கள் சொந்த உள்கட்டமைப்பை உருவாக்க முடியாத துவக்கநிலை நிறுவனங்களுக்கு இது நேரத்தையும் செலவையும் சேமிக்கஉதவுகின்றது.
3.உள்கட்டமைவு ஒரு சேவையாக (Infrastructure as a Service (IaaS)) என்பது PaaS ஐ விட ஒரு படி ஆழமாக செல்கிறது, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான சுயாட்சியை வழங்குகிறது. IaaS மாதிரியில்,மேககணினி சேவை வழங்குநர், மேககணினியின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான கட்டுப்பாட்டை நமக்கு வழங்குகின்றார். எளிமையாகச் சொன்னால், தனிப்பட்ட சேவையகங்கள் , மெய்நிகர் கணினிகள், சேவையகங்களில் இயங்கும் இயக்க முறைமைகள், அலைவரிசைகளை(bandwidths) அமைத்தல், நம்முடைய சொந்த பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குதல் மிகுதி எல்லாவற்றிலும் நம்முடைய நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு மேககணினி உள்கட்டமைப்பை உருவாக்குதலிற்கான நம்முடைய சொந்த மேககணினி சூழலை நாமே வடிவமைக்கலாம். . Amazon AWS , Google Compute Engine ஆகியவை இந்த IaaS மாதிரிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்த மாதிரியானது வழங்குகின்ற வன்பொருளின் மீதான சுயாட்சியைக் கருத்தில் கொண்டு, இதனை வன்பொருள் ஒரு சேவையாக (HaaS) என்றும் குறிப்பிடப்படுகிறது.
IaaS இன் நன்மைகள் ‘சேவையை பெறும்போதுமட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியில் சிறுமணி நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளது. எத்தனை VMகளை இயக்க வேண்டும், எவ்வளவு காலம் இயக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்திடலாம். குறிப்பிட்ட மணிநேரத்திற்கு கூட அதாவது வெறும் ஒரு மணிநேரமட்டும் போதும் என கட்டணம் செலுத்தலாம். மிகவும் அளவிடக்கூடியது, இது அதன் மையத்தில் ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது. நம்முடைய நிறுவனத்தின் இருப்பிடத்தில் சேவையாளர்களை தொட்டுணரக் கூடியவகையில் பராமரிக்கவேண்டிய தொந்தரவு எதுவும் இல்லாமல் உள்கட்டமைப்பில் உள்ள அனைத்தின் மீதும் முழுமையான சுயாட்சியையும் கட்டுப்பாட்டினையும் வழங்கின்றது. பெரும்பாலான நிறுவனங்கள் பணி நேரம், பாதுகாப்பு , எந்தநேரத்திலும் தொடர்ச்சியாக(24/7) நேரடியாக வாடிக்கையாளர் ஆதரவை உத்தரவாதம் செய்கின்றன, இது அவ்வாறான நிறுவனங்களுக்கு மிகவும்இன்றியமையாததாக இருக்கின்றது.
4.சேமிப்பகம் ஒரு சேவையாக (Storage as a Service (StaaS)) தற்போது Google Drive, OneDrive, Dropbox , iCloud ஆகியவை இந்த வகையான சேவையக துறையில் உள்ள சில பெரிய பெயர்பெற்ற நிறுவனங்களாகும் இவை தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு சேமிப்பகத்தை சேவையாக வழங்குகின்றன. StaaS ஒலிப்பது போன்று இதுமிகஎளிமையானது. நம்முடைய சாதனங்கள் மூலம் நிகழ்நேரத்தில் அணுகக்கூடிய மேகக்கணியில் சேமிப்பகம் மட்டுமே நமக்குத் தேவை என்றால், இந்த StaaS மாதிரியைத் தேர்வுசெய்திடலாம். பல நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுடைய தரவை பிற்காப்பு செய்வதற்கு இந்த சேவை மாதிரியைப் பயன்படுத்தி கொள்கின்றனர்.
StaaS இன் நன்மைகள் உள்ளமைக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்புகளின் உதவியுடன் நிகழ்நேரத்தில் நம்முடைய தரவை மிகவும் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் அணுகலாம். எந்தவொரு இயக்க முறைமையிலும் எந்த வகையான சாதனத்தின் மூலமாகவும் நம்முடைய தரவை அணுகலாம். நம்முடைய கோப்புகளை எவ்வாறு உருவாக்குவது, திருத்துவது , நீக்குவது எனவும் நிகழ்நேரத்தில் நம்முடைய தரவைபிற்காப்பு செய்திடலாம். நம்முடைய சேமிப்பகத்தை நமக்கு எவ்வாறு தேவைப்படுகின்றதோஅதை அளவிடலாம். இது ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது.
5.எதையும்/எல்லாவற்றையுமொரு சேவையாக (Anything/Everything as a Service (XaaS)) என்பது IaaS, PaaS, SaaS , StaaS ஆகியவற்றின் கலப்பினப் பதிப்பாகும், சேவை மாதிரியின் எதையும்/எல்லாவற்றையும் ஒரு சேவையாக வழங்கிறது, மேலும் இது விரைவில் மேககணினி சமூகத்தில்அனைத்தையும் இழுத்து இந்த சேவையை பெறுமாறு செய்துகொள்ளபோகிறது. ஒவ்வொரு வாடிக்கை யாளருக்கும் மிகவும் மாறுபட்ட தேவைகள் இருப்பது சாத்தியம், அவை அனைத்தினுடைய வெவ்வேறு மாதிரிகளின் கலவையாக( mishmash) இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அடுக்குகளில் இருந்து சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த தனிப்பயன் வாய்ப்பாக ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியை உருவாக்க முழுமையான சுயாட்சி வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளருக்கு அவர்களின் சொந்த விதிமுறைகளில் மேககணினியைப் பயன்படுத்த முழு சுதந்திரம் வழங்குவதன் பலனாகும் .
XaaS இன் நன்மைகள் நாம் விரும்புவதை, எவ்வாறு விரும்புகின்றோமோ அவ்வாறே நாம் விரும்புவதைமட்டும் தேர்ந்தெடுத்திடும் வாய்ப்பு இதில் உள்ளது. ஒரு அடுக்குகளாலான அமைப்பில் முன்னறிவிக்கப்பட்ட எந்த அடிப்படைக் கட்டணத் தையும் செலுத்தாமல் நமக்குத் தேவையானதை மட்டும் செலுத்திடலாம். நம்முடைய உள்கட்டமைப்பு, இயங்குதளம் , செயலியை சிறுமணி அளவில் தேர்ந்தெடுத்திடலாம். சரியான முறையில் பயன்படுத்தினால், XaaS ஆனது நம்முடைய பயன்பாட்டை மேககணினியில் புரவலராக செய்வதற்கு அதிக நேரத்தினையும், செலவும் செய்திடாமல் , மிகுந்த பயனுள்ள முறையாக இருக்கும்.
6.செயலிஒரு சேவையாக (Function as a Service (FaaS)) சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு அதன் அனைத்து செயலிகளையும் பயன்படுத்தாமல் PaaS இன் நன்மைகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, cron jobs போன்ற தூண்டுதல் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய, சேவையில்லாத கணினியில் இயங்குவதற்கு ஒரு குறிமுறைவரி அல்லது செயலி மட்டுமே தேவைப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்கங்களின் பதிவிறக்கங்கள் நிகழும் தருணத்தில் ஒரு அறிவிப்பை அனுப்பும் இணையதள போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பை வாடிக்கையாளர் உருவாக்க விரும்பலாம். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்காக, மேககணினியில் குறிப்பிட்டதொரு குறிமுறைவரிகளை இயக்க வேண்டும், அது ஒரு தூண்டுதலைச் செயல்படுத்துவதைச் சரிபார்த்து செயல்படுத்திடும். PaaS மாதிரியைப் பயன்படுத்துவது விலை உயர்ந்த தீர்வாக இருக்கும். இங்குதான் செயலிஒரு சேவையாக(FaaS) எனும் மாதிரி உதவிக்கு வருகிறது. Heroku போன்ற பல நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட குறிமுறைவரி அல்லது செயலியை மட்டும் புரவலராக செய்ய FaaS ஐ வழங்குகின்றன, அது முழுசெயலிக்கு பதிலாக பதில் செயல்இல்லாத ஒரு தூண்டுதலின் மீது மட்டுமே செயல்படுகிறது.
FaaS இன் நன்மைகள் குறிமுறைவரிகளில் குறிப்பிட்ட செயலியை செயல்படுத்தும் எண்ணிக்கைக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். குறிமுறைவரிகளை புரவலராக செய்வதற்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படாது. இது PaaS இன் அனைத்துப் பொறுப்புகளையும் நீக்கி, அதன் அனைத்துப் பலன்களையும் நமக்கு வழங்குகிறது. எந்த வகையிலும் அடிப்படை உள்கட்டமைப்புக்கு நாம் பொறுப்பாகமாட்டோம். எனவே, மெய்நிகர் கணினிகளின் பராமரிப்பு பற்றி கவலைப்படாமல் நம்முடைய குறிமுறைவரிகளைப் பதிவேற்றலாம். FaaS நமக்கு சுறுசுறுப்பாகசெயல்படுகின்ற திறனை வழங்குகிறது, அதாவது, செயலியின் குறிப்பிட்ட குறிமுறைவரி களை மட்டும் செயல்படுத்திடுகின்றது.
7சங்கிலிதொகுப்பு இயங்குதளம் ஒரு சேவையாக (Blockchain Platform as a Service (BPaaS)) சங்கிலி தொகுப்பு எனும் மிகப்பெரும் புயலானது சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையை தாக்கியுள்ளது. AI , தரவு அறிவியல் தொடர்பான தொழில்நுட்பங்களால் இது மிகக் குறைந்த அளவில் விஞ்சும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக திகழ்கின்றது. சங்கிலிதொகுப்பினை மிகவும் கவர்ச்சிகரமானதாக்குவது அதன் திறந்த-பேரேட்டு கட்டமைப்பு, பாதுகாப்பு, அளவிடுதல் , வெளிப்படைத்தன்மை ஆகியவைகளாகும். வங்கி, தேர்தல் அமைப்புகள், சமூக ஊடகங்கள் போன்ற பல பயன்பாடுகளுக்கு இந்த வசதிகள் மிகவும் அவசியமாகும். இத்தகைய பரந்த அளவிலான பயன்பாடுகளுடன், இந்த தொழில்நுட்பத்தின் தேவைகளை குறிப்பாகப் பூர்த்தி செய்யும் மாதிரியுடன் மேககணினியில் அத்தகைய தயாரிப்புகளை புரவலராக செய்வது மிகவும் அவசியமாகிறது. இங்குதான் BPaaS நமக்கு உதவிக்கு வருகிறது. இன்று பல நிறுவனங்கள், Amazon AWS, Microsoft Azure போன்ற பெரிய பெயர்பெற்ற நிறுவனங்கள் உட்பட, குறிப்பாக மேககணினியில் சங்கிலிதொகுப்பு அடிப்படையிலான பயன்பாடுகளை புரவலராக செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு BPaaS தீர்வுகளை வழங்குகின்றது.
BPaaS இன் நன்மைகள் திறனுடைய ஒப்பந்தங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் தனிப்பயன் மொழிகளுக்கான ஆதரவு போன்ற சங்கிலிதொகுப்பானது தொழிற்துறையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது. API பாளங்களை வழங்குவதன் மூலம் Ethereum போன்ற முன்னுதாரனமான சங்கிலிதொகுப்புகளுடன் ஒருங்கிணைப்புகளை ஆதரிக்கிறது. சங்கிலிதொகுப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியில் பயன்படுத்தப்படும் தனிப்பயன் தரவுத்தளங்களை ஆதரிக்கிறது. ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் வசதி, அளவிடுதல், பாதுகாப்பு , அணுகல் எளிமை ஆகியவற்றுடன் இது மேகக்கணியின் அனைத்து நன்மைகளையும் கொண்டுள்ளது.

 

 

 

%d bloggers like this: