லினக்ஸின்KDE ,GNOME ஆகியவற்றிற்குஇடையிலான வேறுபாடு

ஒரு தீவிர KDE இன் அடிப்படையிலானPlasma மேசைக்கணினி பயனாளர்கூட, தன்னுடைய அலுவலகப் பணிக்கு மிகமகிழ்ச்சியுடன்GNOME அடிப்படையிலானதைப் பயன்படுத்திகொள்வார். நாம் பாலைவனம் போன்ற பொட்டல்காடான எந்தவொரு பகுதிக்கு அல்லது தனித்த தீவுபோன்ற எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் லினக்ஸின் இவ்விரண்டு வெளியீடுகளில் எந்த வெளியீடு செயல்படுகின்ற மேசைக் கணினியை அல்லது மடிக்கணினியை கையோடு எடுத்துச் செல்வது என்ற பட்டிமன்ற கேள்விக்கெல்லாம் செல்லாமல் , லினக்ஸின் இயக்க முறைமையின் இரண்டுவகை வெளியீடுகளின் சிறப்பியல்புகளையும் மட்டும்இப்போது காண்போம், மேலும் திறமூலமற்ற மேசைக்கணினி இயக்கமுறைமை மாற்றுகளை விட இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்திகொள்ள விரும்பலாம்அல்லவா!. .
தனியுரிமை மாற்றுகளை முயற்சித்தாலும், அவை வேடிக்கையானவை (மெய்நிகர் பணியிடங்களைப் பெறுவதற்கு பத்தாண்டிற்கும் மேலாக ஆனது, மற்றொன்று இன்னும் திரைபடபிடிப்பு செயல்பாட்டைக் கொண்டிருக்கவில்லை).தற்போது GUADEC போன்ற மாநாடுகளில் KDE , GNOME மேம்படுத்துநர்கள் செய்யும் அனைத்து ஒத்துழைப்பிற்கு பின்னரும், இவ்விரண்டிற்கும் இடையே இன்னும் ஒரு பெரிய தத்துவப் பிளவு உள்ளது. என்பது ஏன் தெரியுமா? அவ்வாறான தத்துவப் பிளவும் நல்லதுதான்.என்ற செய்தியை மனதில்கொள்க
ஒரு KDE பயனாளராக, நாம் அதனுடைய ஏராளமான வாய்ப்புகளுக்காகப் பழகிவிட்டோம். அதாவது திரையில் ஏதேனும் ஒரு பொருளின் மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்யும் போது, அது ஒரு கோப்பு, widget அல்லது widgetsகளுக்கு இடையே உள்ள வெற்று இடமாக இருந்தாலும் சரி, நாம் செயல்படுத்திட விரும்புகிறோம் அல்லது அதை நாம் கட்டமைக்க விரும்பு கிறோம் ஏனெனில் அதில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காகவென குறைந்தபட்சம் 10 வாய்ப்புகளாவது இருப்பதைக் காணலாம். நாம் அதை கொண்டு நமது சூழலை சரியாக கட்டமைக்க விரும்புகிறோம். அதை ஒரு “power user” என்பதன் “power” இன் பகுதியாக பார்க்கின்றோம். நாம் பணிபுரியும் விதம் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமானதாக இல்லாவிட்டாலும் கூட, நம்முடைய சூழலை சிறப்பாகச் செயல்பட வைப்பதற்கான வாய்ப்புகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ள விரும்புகிறோ்ம்.
அதற்கு மறுதலையாக GNOME ஆனது பயனாளருக்கு ஒவ்வொரு வலதுபுற சொடுக்குதல்களிலும் டஜன் கணக்கான வாய்ப்புகளை வழங்காது. உண்மையில், அமைப்புகளுக்குள்(Settings) செல்லும் போது கூட GNOMEஆனது எந்தவொரு வாய்ப்பினையும் வழங்காது. உள்ளமைவு வாய்ப்புகளைப் பெற, Tweaks எனப்படும் கருவியைப் பதிவிறக்க வேண்டும், மேலும் சிலவற்றிற்கு நீட்டிப்புகளை நிறுவுகை செய்திட வேண்டும்.
பொதுவாக லினக்ஸ் கணினிகளின்இடைமுக வடிவமைப்பு குறித்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உள்ளது.சிலர், ஒவ்வொரு திருப்பத்திலும் ஏராளமான தேர்வுகள் எளிதாகக் கிடைப்பதைக் கண்டு மகிழ்கின்றனர். வேறுசிலர் அவ்வாறு விரும்புவதில்லை.
KDE Plasma செயல்படுகின்ற மேசைக்கணினியில் உள்ள ஒரு கோப்பில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்திடும்போது திரையின் காட்சி பின்வருமாறு :

GNOME மேசைக்கணினியில் உள்ள கோப்பில்இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானைசொடுக்குதல்செய்யும் போது திரையில் தோன்றிடும் காட்சி பின்வருமாறு :


துணைபட்டியல்கள் உட்பட, KDE Plasma மேசைக்கணினியில் உள்ள ஒரு கோப்பில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்திடும்போது 30க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் நாம் தெரிவு செய்வதற்கு தயாராக உள்ளன. ஏனெனில் நாம் அதனை அவ்வாறு கட்டமைத்திருக்கின்றோம், மேலும் சூழலின் செயல்களுக்காககூட. ஒரு Git களஞ்சியத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன,
அதற்கு மாறாக, GNOME மேசைக்கணினியில் உள்ள கோப்பில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல்செய்யும் போது 11 வாய்ப்புகளைக் மட்டுமே கொண்டுவருகின்றது.
முடிவாக:சில பயனர்கள் முதல் வாய்ப்பில் 29 வெவ்வேறு வாய்ப்புகளிருப்பதால் அவற்றிலிருந்து தங்களுக்குதேவையானவாய்ப்பினை வடிகட்டி தெரிவுசெய்வதற்கு மனரீதியாக ஆர்வமாக இல்லாமல் இருப்பார்கள், அதனால் அவ்வாறானவர்கள் தாங்கள் தேடும் ஒரேயொரு வாய்ப்பினை மட்டும் திரையில் காண்பிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். குறைந்த பட்சவாய்ப்பு இருப்பது பயனாளர்கள் பொதுவான அத்தியாவசிய செயல்களில் மட்டும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. அவ்வாறான அத்தியாவசிய வாய்ப்புகளை மட்டுமே வைத்திருப்பது புதிய பயனா ளர்களுக்கு ஆறுதலாகவும், அனுபவம் வாய்ந்த பயனாளருக்கு மன நிம்மதியாக வும், அனைத்து பயனாளர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்குமல்லவா.
தவறான நெறியங்கள் (Mistake vectors)
லினக்ஸ் “power user” என்ற முறையில், பயனாளர்களில் பலர் தனது பிழைகளுக்கு தானே பொறுப்பு என்ற பழைய பழமொழிக்கு இரையாகி விடுகின்றனர். லினக்ஸ் நமக்கு “dangerous” கட்டளைகளுக்கான அணுகலை வழங்குகிறது அவற்றைப் பயன்படுத்த தேர்வுசெய்தால், முடிவுகளைப் பற்றி புகார் செய்வதற்கான நம்முடைய உரிமையை மறைமுகமாக விட்டுகொடுத்துவிடுகின்றோம் என்பது பழைய புராணக்கதையாகும். பொதுவாக இந்த உணர்வை ஒருபோதும் ஏற்பது சரியன்று, மேலும் முனைமங்களின் தவறுகளைத் தவிர்க்க உதவும் கருவிகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது தவறுகள் திட்டமிடப்படாததுதான் பிரச்சனை. நம்முடைய தவறுகளைத் தவிர்க்க முடிந்தால், அவற்றைச் செய்ய வேண்டாம் என தேர்வு செய்யலாம். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், நாம் திட்டமிடாத போதுகூட, பொதுவாக மிக மோசமான தருணத்தில். தவறுகள் நிகழ்கின்றன.பிழையைக் குறைப்பதற்கான ஒரு வழி நாம்தெரிவுசெய்வதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாகும். நாம் தெரிவுசெய்வதற்கு இரண்டு வாய்ப்புகளுக்கான பொத்தான்கள் மட்டுமே இருக்கும்போது, ஒரேயொரு தவற்றினை மட்டுமே செய்யமுடியும். குறைவான வாய்ப்புகள் இருக்கும்போது என்ன தவறு செய்தோம் என்பதைக் நம்மால் கண்டறிவதும் எளிதானது. ஐந்து பொத்தான்கள் இருந்தால், நான்கு தவறுகள் மட்டுமல்லாது, ஐந்தில் எந்த பொத்தான் தவறில்லாதது ( எதுயெது தவறானது, என்பனபோன்ற ) என தடுமாற வாய்ப்பு அதிகமாகும்
முடிவாக:குறைவான தேர்வுகளுக்கான வாய்ப்புகள் பயனாளர்களுக்கு குறைவான தவறுகளை செய்ய வாய்ப்பளிக்கும்.
பராமரிப்பு
எப்போதாவது ஏதாவது குறிமுறைவரிகளை எழுதியிருந்தால், இந்தக் கதை நமக்கு நன்கு தெரிந்ததாகத் தோன்றலாம்.நம்முடைய குறிமுறைவரிகளில் வேடிக்கையாக சிறிய முன்னேற்றத்திற்கான ஆலோசனை உள்ளது. செயல்படுத்த எளிதான அம்சம் போல் தெரிகிறது; நம்முடைய தலைமையில் குறிமுறைவரிகளில் மாற்றங்களை நடைமுறையில் காணலாம். நாமும் சிறப்பாகச் செய்ய எதுவும் இல்லை, எனவே நாம் நம்முடைய பணிக்குச் செல்வதுநல்லது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, நாம் அம்சத்தைச் செயல்படுத்திவிட்டோம் குறிமுறைவரிகளைமுழுவதுமாக மாற்றியமைத்தால் போதும்.இது ஒரு அசாதாரண மேம்படுத்துநர் கதை அன்று. குறிமுறைவரிகளின்மாற்றங்கள் எதிர்பாராத சிற்றலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது நிகழ்கிறது, மாற்றத்தை செய்வதற்கு முன்நாம் எதிர்பார்க்கவில்லை. வேறு சொற்களிகளில் கூறுவதானால், குறிமுறைவரிகள் விலை உயர்ந்தவை. எவ்வளவு அதிகமாக குறிமுறைவரிகள் எழுதுகின்றோமோ அவ்வளவு அதிகமாக அதனை பராமரிக்க வேண்டும்.நாம் எழுதும் குறிமுறைவரிகள்குறைவாக இருந்தால், குறைவான அளவிலான பிழைகளை மட்டுமே சரிசெய்திட வேண்டியிருக்கும்.
பார்வையாளர்களின் கண்ணோட்டம்
பெரும்பாலான பயனர்கள் தங்களுடைய மேசைக்கணினியை எண்ணிம படக்காட்சியுடன் தனிப்பயனாக்குகிறார்கள். அதற்கு அப்பால், இருப்பினும், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மேசைக்கணினிபைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். எனவே GNOME , KDE ஆகிய இரு வெளியீடுகளின் மேம்படுத்துவர்கள் வழங்கும் மேசைக்கணினிக்கான இயக்கமுறைமைகளானலை பொதுமக்கள் பயன்படுத்திகொள்வனவாகும், இறுதியில் சிறந்த பணிப்பாய்வுகளும் பார்வையாளர்களின் பார்வையில் உள்ளன.
KDE ஐப் பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட பாணியிலும், GNOME ஐப் பயன்படுத்தும் போது வேறுபட்ட பாணியிலும் ஈடுபடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, செயல்கள் வெவ்வேறு இடங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, மேலும் கோப்பு மேலாளர்கள் மெய்நிகர் பணியிடங்களின் தளவமைப்பு ஆகியன வேறுபட்டவைகளாகும். கருவிகளுக்கு தன்னிச்சையான வாய்ப்புகளின் தேர்வுகளை வைத்திருப்பது திற மூலத்தின் ஆடம்பரமாகும். தேர்வு செய்ய வாய்ப்புகள் நிறைய உள்ளன, எனவே நாம் ஒரு மேசைக்கணினி அல்லது மற்றொன்றில் நாம் என்ன செய்கின்றோம் அல்லது நமக்கு பிடிக்கவில்லை என்பதை நியாயப்படுத்த வேண்டியதில்லை. நாம் ஒன்றை முயற்சி செய்து பழக முடியவில்லை எனில் எப்போதும் நாம் மற்றொன்றுக்கு மாறலாம்.
லினக்ஸுடனான குறுமஅளவு
100 வாய்ப்புகளைக் கொண்ட ஒரு கருவியைப் பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும் , ஏனென்றால் நமக்குத் தேவையில்லாத 95 ஐப் புறக்கணித்து, நாம் செய்யும் ஐந்தில் மட்டும்கவனம் செலுத்தலாம். GNOME எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறேமோ, அவ்வளவு அதிகமாக குறுமஅளவின் நன்மைகளைப் புரிந்துகொள்கிறோம். குறைக்கப்பட்ட வடிவமைப்பு சில பயனர்களுக்கு முக்கியமானவற்றில் மட்டும் அதிக கவனம் செலுத்த உதவுகிறது, சிக்கலான பயனாளர் இடைமுகம் (UI) காரணமாக குழப்பமும் தவறுகளைத் தவிர்க்கவும் மற்றவர்களுக்கு உதவுகிறது, மேலும் இது தரக் குறியீட்டைப் பராமரிக்க மேம்படுத்துநர்களுக்கு உதவுகிறது. மேலும் சிலர் அதை விரும்புகிறார்கள்.
பயனர்களுக்கும் மேம்படுத்துநர்களுக்கும் ஒரே மாதிரியான பாடம் உள்ளது, ஆனால் ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று இல்லை. உண்மையில், இந்த கோட்பாடுகள் KDE, GNOME ஐ விட பலவற்றிற்கு பொருந்தும். பயனர் அனுபவம் மேம்படுத்துநர் அனுபவம் ஆகிய ஒவ்வொன்றும் முக்கியமானவை, சில சமயங்களில் சிக்கலான தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, மற்ற நேரங்களில் குறுமஅளவு நன்மையைக் கொண்டுள்ளது

மிகச்சுருக்குமாக கூறுவதெனில் லினக்ஸின் KDE ,GNOMEஆகிய இரண்டு வகைகளிலான திறமூல மேசைக்கணினி இயக்கமுறைமைகளின் வெளியீடுகளை அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், இவ்விரண்டின் பாணிகளும் முக்கியமான நோக்கங்களுக்காகவே இவ்வாறு பிரிந்து செயல்படுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

%d bloggers like this: