விண்டோ இயக்கமுறைமைகளில் செயவ்படும் பயன்பாடுகளை பயன்படுத்திகொள்வதற்காக உதவிடும்ReactOS எனும் இயக்கமுறைமை

நாம் அதிகம்நம்பக்கூடிய திறமூல சூழலில் நமக்குப் பிடித்த விண்டோ இயக்கமுறைமை பயன்பாடுகளும் இயக்கிகளையும் செயல்படுவதை கற்பனை செய்து பார்த்திடுக. அதுதான் ReactOS என்பதன் அடிப்படைநோக்கமாகும்! உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது, போல, நம்முடைய சொந்த தனிப்பட்ட திறன்களை மிக உயர்ந்த புதிய நிலைக்கு உயர்த்த இந்த ReactOS ஆனது உதவுகின்றது. குறிமுறைவரிகளையும் விண்டோ இயக்கமுறைமையின் உள்ளமைப்புகளையும் பற்றி அறிய விரும்பினால், ஒரு சிறந்த உண்மையான தள பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியாது. புத்தகக் கோட்பாட்டிலிருந்து நடைமுறை வாழ்க்கைக்குச் செல்வதற்கான சாத்தியத்தை இந்த ReactOS இல் காணலாம். சிறந்த பல்வேறுமென்பொருள் நிறுவனங்கள் ReactOS இன் பணிவாய்ப்புகளை வழங்க இது முக்கிய காரணமாகும்.
ReactOS என்பது ஒரு இயக்க முறைமையாகும், விண்டோஇயக்கமுறைமையில் செயல்படுகின்ற எந்தவொரு மென்பொருளையும் இந்த ReactOSதுனையுடன் இயக்க முடியும் ReactOS ™ என்பது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் NT குழு இயக்க முறைமைகளுக்காக (NT4, 2000, XP, 2003, Vista, 7) எழுதப்பட்ட பயன்பாடுகளுடனும் இயக்கிகளுடனும் இணக்கமான தரமான திறமூல இயக்க முறைமையை உருவாக்கிடுவதற்கான ஒரு முயற்சியாகும். இது, தற்போது விண்டோஸ் சர்வர் 2003 இணக்கத்தன்மையில் கவனம் செலுத்தி யிருந்தாலும், விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் NT வெளியீடுகளுடன் பொருந்தக்கூடிய தன்மையை எப்போதும் கண்காணிக்கிறது.
ReactOS என்பது விண்டோஇயக்கமுறைமை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதொரு கட்டணமற்ற கட்டற்ற (திறமூல) இயக்க முறைமையாகும், விண்டோ இயக்கமுறைமையில் செயல்படுகின்ற தற்போதைய பயன்பாடுகள் இயக்கிகள் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது மேலும் தற்போதைய மேலாதிக்க நுகர்வோர் இயக்க முறைமைக்கு மாற்றாக உள்ளது. இது WINE போன்ற லினக்ஸில் கட்டப்பட்ட மற்றொரு போர்வையன்று. இது WINE உடன் போட்டியிட முயற்சிக்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை; உண்மையில், ReactOS இன் பயனாளர் பயன்முறை பகுதி கிட்டத்தட்ட முற்றிலும் WINE அடிப்படையிலானது மேலும் கடந்த காலங்களில் இவ்விரு அணிகளும் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளன. ReactOS என்பது “இன்னுமொரு இயக்கமுறைமை (OS)” அன்று. இது வேறு எந்த மாற்று இயக்கமுறைமை போன்ற மூன்றாவது இயக்குபவராக இருக்க முயற்சிக்கவில்லை. பொதுமக்கள் தங்களுடைய கணினியில் ஏற்கனவே லினக்ஸ் இயக்கமுறைமை நிறுவுகை செய்து பயன்படுத்தி கொண்டிருந்தால் அந்நிறுவுகையை நீக்கம் செய்து அதற்கு பதிலாக இந்த ReactOSஐ நிறுவுகைசெய்து பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது; விண்டோ இயக்கமுறைமை போன்றேசெயல்படும்இதில் அதனுடைய அனைத்து பயன்பாடுகளையும் செயல்படுத்தி பயன்பெறலாம் மிமுக்கியமாக விண்டோ இயக்கமுறைமைக்கு மாற்றீட்டை விரும்பும் விண்டோ இயக்கமுறைமையின் பயனாளர்களுக்கு ReactOSஆனது ஒரு மாற்றாகும்.
ReactOS தற்போது Alpha தரத்திலான இயக்க முறைமையாகும். இதன் பொருள் ReactOS மிக விரைவான மேம்படுத்துதலில் உள்ளது அதனால் இதனை பயன் படுத்தி கொள்ளும்போது சில சிக்கல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியிருக்கும். வெவ்வேறு செயல்கள் இதில் சரியாக செயல்படாமல் போகலாம், அது வன்தட்டில் உள்ள தரவை சிதைக்கலாம். மெய்நிகர் இயந்திரத்தில் அல்லது முக்கியமான தரவுகள்எதுவும் இல்லாத கணினியில் இதனை பரிசோதித்து பார்த்திடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது! ReactOSஇன் அமைப்பை உருவாக்க, இதனுடைய கட்டமைப்பு சூழலை (RosBE) பயன்படுத்த அறிவுறுத்தப் படுகிறது. விண்டோ, யுனிக்ஸ்/ஜிஎன்யு-லினக்ஸ் ஆகியவற்றிற்கான புதுப்பித்த பதிப்புகள் இதனுடைய பதிவிறக்கப் பக்கத்திலிருந்து கிடைக்கின்றது:
மாற்றாக ஒருவர் Microsoft Visual C ++ (MSVC) பதிப்பு 2015+ ஐப் பயன்படுத்தலாம். MSVC உடனான கட்டமைப்பு Visual Studio or Microsoft Visual C++என்பதில் உள்ளடங்கியுள்ளது:
இருமங்கள்(Binaries): ReactOS ஐ உருவாக்க கட்டமைப்பு கோப்புகளை கட்டமைக்க கோப்பகத்தில் கட்டமைக்க வேண்டும். நம்முடைய கணினியைப் பொறுத்து configure.cmd அல்லது configure.sh ஐத் தேர்ந்தெடுத்திடுக. நாம் விரும்பும் modules ஐ உருவாக்க ninjaவின் <modulename> ஐ இயக்குக அல்லது அனைத்து modules உம் உருவாக்க ninjaஐ இயக்குக.
துவக்கக்கூடிய imagess: துவக்கக்கூடிய குறுவட்டு imageஐ உருவாக்க, கட்டும் கோப்பகத்திலிருந்து ninjaவின் துவக்க குறுவட்டினை இயக்குக. இது bootcd.iso என்ற கோப்பு பெயருடன் ஒரு CD imagesஐ உருவாக்குகின்றது. துவக்கக்கூடிய imagesஇன் புதிய இரும(Binari) கட்டமைப்புகளை “Daily builds” எனும் பக்கத்திலிருந்து எப்போதும் பதிவிறக்கம் செய்யலாம்.
நிறுவுகைசெய்தல்: இயல்பாக, ReactOS தற்போது FAT16 அல்லது FAT32 நினைவக பகிர்வின் செயலில் (துவக்கக்கூடிய) பகிர்வாகக் கொண்ட ஒரு கணினியில் மட்டுமே நிறுவ முடியும். ReactOS நிறுவப்பட வேண்டிய பகிர்வு (இது துவக்கக்கூடிய பகிர்வாக இருக்கலாம்) FAT16 அல்லது FAT32 ஆக வடிவமைக்கப்பட வேண்டும். ReactOS அமைப்பு தேவைப்பட்டால் பகிர்வுகளை வடிவமைக்க முடியும். 0.4.10 உடன் தொடங்கி, BtrFS கோப்பு முறையைப் பயன்படுத்தி ReactOS ஐ நிறுவுகைசெய்திட முடியும். ஆனால் இதை ஒரு பரிசோதனை வசதியாக கருதுக, இதனால் FAT அமைப்பில் தூண்டப்படாத பின்னடைவுகள் காணப்படலாம். துவக்கக்கூடிய குறுவட்டு விநியோகத்திலிருந்து ReactOS ஐ நிறுவ, காப்பக உள்ளடக்கங்களை பிரித்தெடுத்திடுக. பின்னர் குறுவட்டு imageஐ செயல்படுத்திடுக, அதிலிருந்து கணினியின் இயக்கத்தை துவக்கிடுக, அதன்பின்னர் திரையில் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றிடுக. மேலும்இதனை நிறுவுகை செய்வது தொடர்பான விவரங்களுக்கு “ReactOS இன் “Installing ReactOS” Wiki எனும் இணையதள பக்கத்தைப் பார்வையிடுக

ReactOS இன் குறிமுறைவரிகள் GNU GPL 2.0 இன் கீழ் உரிமம் பெற்றது. மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்கும் github.com/reactos/reactos/  எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

%d bloggers like this: