பிரபலமான சிறந்த ஒருதிறமூல IDEஐ எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு IDE என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் என்பது, நிரலாக்கம் செய்வதற்கான அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான கருவிகளை வழங்குகின்ற பயன்பாடுகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாகும். இது பொதுவாக ஒரு மூலக் குறிமுறைவரி களின் திருத்தி, இயந்திரமொழிமாற்றி அல்லது மொழிபெயர்ப்பாளர், பிழைத்திருத்தசெயலி , செயல்திட்ட மேலாளர், பதிப்புக் கட்டுப்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் , வரைகலை பயனர் இடைமுகம் என்பனபோன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை உள்ளடக்கியதாகும். மென்பொருள் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிரலாளர்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக ஒரேயொரு பயன்பாட்டின் வாயிலாக, அவ்வணைத்து பணிகளுக்குமான ஒருங்கிணைந்த இடைமுகத்தை வழங்குவதன் மூலம் நிரலாளர்கள் தமக்குத் தேவையான நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளை எழுதுவது, அதனை பரிசோதிப்பது, பின்னர் இறுதியில் அதனை செயல்படுத்தி பயன்படுத்துவது ஆகிய பணிகளை எளிதாக்கும் வகையில் இந்த IDEகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. Visual Studio Code, Eclipse, IntelliJ IDEA, PyCharm ஆகியவை திறமூலIDE களின் சில பிரபலமானவைகளாகும்.
நிரலாக்கத்திற்காக IDEஐ ஏன் பயன்படுத்த வேண்டும்?
ஒரு IDE ஐப் பயன்படுத்துவது என்பது எந்தவொரு மேம்படுத்துனருக்கும் நிரலாக்கம் செய்திடும்போது பல்வேறு வழிகளில் பெரிதும் பயனளிக்கின்ற வசதியாகும்.
உற்பத்தித்திறன்: IDEகள் பலதரப்பட்ட கருவிகளையும் வசதிகளையும் வழங்குகின்றன, அவை மேம்படுத்துநர்களுக்கு குறிமுறைவரிகளை மிகவும் திறமையாக எழுத, பரிசோதிக்க , பிழைத்திருத்தம் செய்திட பேருதவியாய் திகழ்கின்றன. அதன்மூலம் நிரலாளர்கள் தங்களுடைய நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தலாம், மேலும் இம்மேம்படுத்துநர்கள் தங்களுடைய நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளின் தர்க்கம், செயல்பாடு ஆகியவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்த அனுமதிக்கின்றது, மாறாக அவர்கள் நிரலாக்கத்தின் வளர்ச்சி செயல்முறையின் விவரங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
நிலைப்புத்தன்மை: பல IDEகள் உள்ளமைக்கப்பட்ட மாதிரிபலகங்களும் மரபுகளுடனும் வருகின்றன, அவை மேம்படுத்துநர்களுக்கு தங்களுடைய நிரலாக்கத்தில் நிலையான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குறிமுறைவரிகளை எழுத உதவுகின்றன. இது காலப்போக்கில் codebase ஐப் பராமரிப்பதையும் புதுப்பிப்பதையும் எளிதாக்குகின்றது.
பிழைத் தடுப்பு: IDEகள் பெரும்பாலும் குறிப்பிட்ட கணினிமொழியினுடைய இலக்கணத்தின் சிறப்பம்சமாக்குதல், குறிமுறைவரிகளை நிறைவு செய்தல் , நிகழ்வுநேரப் பிழைச் சரிபார்ப்பு என்பன போன்ற வசதிகளை உள்ளடக்கியுள்ளன, அதனால் இவ்வசதிகளானவை மேம்படுத்துநர்கள் தங்ளுடைய நிரலாக்கத்தினை சிக்கலாக மாறுவதற்கு முன்பு பிழைகளை கண்டு பிடித்துச் சரிசெய்ய உதவுகின்றன.
ஒத்துழைப்பு: பெரும்பாலான IDEகள் பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளன, இது மேம்படுத்துநர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் கூட்டாக பணியாற்றுவதையும் குறிமுறைவரிகளை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதையும் எளிதாக்குகின்றது.
கற்றல்: IDEகள் பெரும்பாலும் விரிவான ஆவணங்களை , பயிற்சிகளை வழங்குகின்றன, இவை புதிய மேம்படுத்துநர்களின் நிரலாக்க மொழிக்கும் அல்லது கட்டமைப்பிற்கும் சிறந்த ஆதாரமாக விளங்குகின்றன.
தனிப்பயனாக்கம்: பல IDEகள் ஆனவை மேம்படுத்துநர்கள், செருகுநிரல்களைச் சேர்ப்பது அல்லது அகற்றுவது, தனிப்பயன் மாதிரிபலகங்களை உருவாக்குவது , இடைமுகத்தின் தளவமைப்பு, செயல்பாட்டை மாற்றுவது. என்றவாறு தங்களுடைய விருப்பப்படி நிரலாக்கச்சூழலைத் தனிப்பயனாக்க அனுமதிக்கின்றன
இவ்வாறான IDEகளானவை நிரலாளர்கள் மிகவும் திறமையாகவும் திறம்படவும் செயல்பட உதவுகின்றன, மேலும் எந்தவொரு மென்பொருள் உருவாக்குநருக்கும் உற்பத்தித்திறனைப் பராமரிக்க இன்றியமையாத கருவியாக இருக்கின்றன.
ஒவ்வொரு மேம்படுத்துநரும் தமக்கு பொருத்தமான மிகச்சரியான IDEயைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய காரணிகள் பின்வருமாறு
சரியான IDE ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் போது, நாம்கருத்தில் கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன.
கணினி(நிரலாக்க) மொழிகள்: நாம் பணிபுரியும் நிரலாக்க மொழியைகுறிப்பிட்ட IDE ஐ ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்திகொள்க.ஏனெனில் தற்போது நடப்பு பயன்பாட்டில் உள்ளவைகளில் பெரும்பாலான IDEகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்டதொரு கணினி மொழியை மட்டும் சார்ந்து செயல்படுமாறு கட்டமைக்கப் பட்டிருக்கின்றன, ஆயினும் மற்றவை ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு கணினிமொழிகளை ஆதரிக்கின்றன.
தள ஆதரவு: நாம் பயன்படுத்திகொண்டுவருகின்ற இயங்குதளத்தை கருத்தில் கொண்டு, அந்த இயங்குதளத்துடன் இணக்கமான IDE ஐ தேர்வு செய்திடுக.
வசதிவாய்ப்புகளும், கருவிகளும்: வெவ்வேறு IDEகள் வெவ்வேறு வசதிவாய்ப்புகளையும் கருவிகளையும் வழங்குகின்றன. பிழைத்திருத்தம், பதிப்புக் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பு, குறிமுறைவரிகளின் மறுசீரமைப்பு போன்ற நம்முடைய செயல்திட்டத்திற்குத் தேவையான குறிப்பிட்ட வசதிவாய்ப்புகளைக் கவணத்தில்கொள்க.
தனிப்பயனாக்குதல்: சில IDEகள் மிகவும் தனிப்பயனாக்கக்கூடியவை, மற்றவை மிகவும் கடினமானவை. நம்முடைய குறிப்பிட்ட தேவைகளுக்கு எளிதாக வடிவமைக்கக்கூடிய குறிப்பிட்ட IDE தேவையா என்பதைக் கவனத்தில் கொள்க.
சமூககுழு ஆதரவு:செயலில் உள்ள ஒரு பெரிய சமூககுழுவுடன்கூடிய IDE ஐத் தேடிடுக, இது ஏராளமான ஆதாரங்கள், பயிற்சிகள் ஆதரவுகள் கிடைப்பதை உறுதி செய்கின்றது.
பிற கருவிகளுடன் ஒருங்கிணைப்பு: ஏற்கனவே பரிசோதனை கட்டமைப்புகள், அமைப்புகளை உருவாக்குதல் அல்லது பிற நூலகங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்திடும்போது, அவற்றுடன் தடையின்றி ஒருங்கிணைக்கக்கூடிய IDE ஐத் தேடிடுக.
செலவு: IDE இன் விலை , அது நம்முடைய வரவுசெலவுதிட்டத்திற்கு பொருந்துமா என்பதைக் கவனத்தில்கொள்க. சில IDEகள் கட்டணமற்றவை கட்டற்றவை திறமூலமானவை, மற்றவை வணிக ரீதியானவை.
கற்றல் வளைவு: நிரலாக்கத்திற்கு புதியவராக இருந்தால், செங்குத்தான கற்றல் வளைவுடன் கூடிய IDE ஐ பரிசீலிக்க விரும்பலாம், ஏனெனில் இது மிகவும் விரிவான கருவிகளையும் வசதிகளையும் வழங்குகின்றது.
தனிப்பட்ட விருப்பம்: இறுதியாக, நம்முடைய தனிப்பட்ட விருப்பத்தை கருத்தில் கொள்க, ஏனெனில் ஒரு மேம்படுத்துபவருக்கு சிறப்பாக செயல்படும் IDEஆனது மற்றொரு மேம்படுத்துநருக்கு சரியாக செயல்படாது எனும் ஒரு கருத்துகூட உண்டு என்பதையும் கவணத்தில் கொள்க.
நமக்கான சிறந்த IDE என்பது நம்முடைய குறிப்பிட்ட தேவைகள் , விருப்பத் தேர்வுகள், நாம் பணிபுரியவிரும்புகின்ற நிரலாக்க மொழிகளையும் கருவிகளையும் பொறுத்ததுஆகும். அதாவது சிறந்த IDE இன் தேர்வு பயனர்களின் குறிப்பிட்ட தேவைகள், விருப்பத்தேர்வுகள் அவர்கள் பணிபுரியும் நிரலாக்க மொழிகளைப் பொறுத்தது ஆகும் என்பதை நினைவில் கொள்க.
இதற்காக பல IDE களை முயற்சித்து, நமக்கு மிகவும் வசதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுமிகவும் நல்லது.
1.Visual Studio Code,2.Eclipse,3.IntelliJ IDEA,4.Code::Blocks,5.PyCharmஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ள மிகவு்ம் பிரபலமான IDE கள்ஆகும்
இந்த பட்டியல் காலப்போக்கில் மாறலாம் ,வெவ்வேறு மேம்படுத்துநர்கள் தங்கள் அனுபவம், அவர்கள் பணிபுரியும் நிரலாக்க மொழிகள் , IDEகளில் அவர்கள் தேடும் குறிப்பிட்ட வசதிவாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தத்தமது சொந்த விருப்பங்களைக் கொண்டிருக்கலாம்.
1Visual Studio Code (VS Code)
VS Code எனச்சுருக்கமாக அழைக்கப்பெறும் இது மிகவும் பிரபலமான IDE களில் ஒன்று. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது , மேம்படுத்துநர் களின் பெரிய , செயலில் உள்ள ஒருசமூககுழுவினைக் கொண்டுள்ளது. இது விண்டோ, லினக்ஸ் , மேக் ஆகிய இயக்கமுறைமைகளுக்காக Electron கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. இதனுடைய முக்கிய வசதிகள் பின்வருமாறு:
உள்ளுணர்வுடனான பயனாளர் இடைமுகம்: இது ஒரு சுத்தமான , நவீன பயனாளர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது, இது வழிசெலுத்திடவும் தனிப்பயனாக்கவும் எளிதானது.
பிழைத்திருத்தத்திற்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவு: மேம்படுத்துநர்கள் தங்களுடைய குறிமுறைகளின் மூலம் செல்லவும், இடைவெளிகளை அமைக்கவும் ,மாறிகளின் நிலையை ஆய்வு செய்யவும் அனுமதிக்கின்ற உள்ளமைக்கப்பட்ட பிழைத்திருத்த கருவியை உள்ளடக்கியது.
குறிமுறைவரிகளை திருத்தம்செய்தல்: இது VS Codeபல கணினி மொழிகளுக்கான இலக்கணத்தில் சிறப்பம்சப்படுத்தல், குறிமுறைவரிகளை நிறைவு செய்தல் , IntelliSense (ஒரு திறன்மிகுகுறிமுறைவரிகளின் நிறைவு செய்திடும் வசதி) போன்ற சக்திவாய்ந்த குறிமுறைவரிகளின் திருத்தம் செய்தல் ஆகிய வசதிவாய்ப்புகளை வழங்குகிறது.
உள்ளமைக்கப்பட்ட Git ஒருங்கிணைப்பு: இது Git உடன் உள்ளமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது, அதனால்இது மேம்படுத்துநர்கள் கூட்டாக பணியாற்றுவதையும் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் குறிமுறைவரிகளைப் பகிர்ந்துகொள்வதையும் எளிதாக்குகிறது.
விரிவாக்கமும் தனிப்பயனாக்கமும்: இது மிகவும் நீட்டிக்கக்கூடியது , தனிப்பயனாக்கக்கூடியது; அதனால் பல்வேறு நிரலாக்க மொழிகள் , கட்டமைப்புகளுக்கான கூடுதல் செயலியையும் ஆதரவையும் வழங்குவதற்கு IDE இல் சேர்க்கக்கூடிய செருகுநிரல்களின் நீட்டிப்புகளின் ஒரு பெரிய நூலகம்கூட இதில் உள்ளது.
VS Code ஆனது பல இயங்குதள ஆதரவையும் கொண்டுள்ளது, செயலில் உள்ள ஒரு பெரிய சமூககுழுவினை கொண்டுள்ளது இது கட்டற்றது கட்டணமற்றது
இது VS Code ஒரு சக்திவாய்ந்த , பல்துறை IDE ஆகும், இது மேம்படுத்துநர்கள் மிகவும் திறமையாகவும் திறனுடனும் செயல்பட உதவுகின்றது. இது அதன் செயல்படுகின்றவேகம், நெகிழ்வுத்தன்மை , பரந்த அளவிலான கருவிகளுடனும் சேவைகளுடனும் ஒருங்கிணைக்கின்ற திறனுக்காக நன்கு பிரபலமாாக அறியப்படுகிறது.
சமீபத்திய பதிப்பு: 1.74
இணையமுகவரி(URL): code.visualstudio.com/
ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்: விண்டோ 7 அல்லது அதற்குப் பிந்தையவை, OS X 10.10 அல்லது அதற்குப் பிந்தையது, லினக்ஸின் அனைத்து பதிப்புகளிலும் இணையத்தில் நேரடியாக விரைவான திருத்தங்களுக்கு vcode.devஐப் பயன்படுத்திகொள்ளலாம்.
2.Eclipse
பல்வேறு நிரலாக்க மொழிகளுக்கும் தளங்களுக்கும் மேம்படுத்துநர்களால் Eclipse எனும் IDE ஆனது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஜாவா அடிப்படை யிலான IDE ஆகும், இது பல்வேறு மொழிகளிலும் நிரலாக்கத்தை உருவாக்கப் பயன்படுகிறது. இது மிகவும் நீட்டிக்கக்கூடியது , தனிப்பயனாக்கக் கூடியது. இதனைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:
அனைத்து இயக்கமுறைமைகளுடனான இணக்கத்தன்மை: இது விண்டோ,லினக்ஸ் , மேக் உள்ளிட்ட பல்வேறு இயக்கமுறைமைகளில்நன்கு இயங்குகிறது, இது பலதரப்பட்ட மேம்படுத்துநர்களுக்கு அணுகக்கூடியதாக அமைகிறது.
விரிவாக்கம்தனிப்பயனாக்குதல்: இது பல்வேறு நிரலாக்க மொழிகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் கூடுதல் செயலியையும் ஆதரவையும் வழங்கிடுவதற்காக இந்த IDE இல் சேர்க்கக்கூடிய செருகுநிரல்களின், நீட்டிப்புகளின் ஒரு பெரிய நூலகத்தைக் கொண்டுள்ளது.
ஜாவா மேம்பாட்டிற்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவு: இது ஜாவா மேம்பாட்டிற்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவைக் கொண்டுள்ளது, இதில் குறிமுறைவரிகளின் நிறைவு, மறுசீரமைப்பு , பிழை சரிபார்ப்பு போன்ற பல்வேறு வசதிகளும் உள்ளடக்கமாக கொண்டுள்ளது, இது ஜாவா எனும் கணினிமொழியின் மேம்படுத்துநர்களுக்கு பிரபலமான தேர்வாக அமைகிறது.
பல்வேறுகணினி மொழிகளுக்கான ஆதரவு: ஜாவா மட்டுமல்லாது, சி++, பைதான் , போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு கணினி மொழிகளில் நிரலாக்க மேம்பாட்டை இது ஆதரிக்கிறது, இது பல்வேறு செயல்திட்டங்களில் பணிபுரியும் மேம்படுத்துநர்களுக்கு பல்துறைத் தேர்வாக அமைகிறது.
உள்ளமைக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பு: இது Git, SVN போன்ற பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு உள்ளமைக்கப்பட்ட ஆதரவை வழங்குகிறது, இது மேம்படுத்துநர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் குறிமுறைவரிகளில் ஒத்துழைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் எளிதாக்குகிறது.
இந்த கட்டணமற்ற கட்டற்ற IDEஆனது மேம்படுத்துநர் களின் பெரிய , செயலில் உள்ள ஒரு சமூககுழுவினைக் கொண்டுள்ளது
இந்தEclipse ஆனது ஒரு சக்திவாய்ந்த, பல்துறை IDE ஆகும், இது மேம்படுத்துநர்கள் மிகவும் திறமையாகவும் திறம்படவும் பணி செய்ய உதவுகின்றது, மேலும் இது ஒரு பரந்த அளவிலான மேம்பாட்டு செயல் திட்டங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றது.
சமீபத்திய பதிப்பு: 4.23
இணையமுகவரி(URL): www.eclipse.org/
ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்: macOS, Windows, Linux
3.IntelliJ IDEA
இது JetBrains ஆல் உருவாக்கப்பட்டது, IntelliJ IDEA முதன்மையாக ஜாவா எனும் கணினிமொழியின் நிரலாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது, ஆயினும் இது பைதான், ஸ்கலா , கோட்லின் போன்ற பிற கணினிமொழிகளையும் ஆதரிக்கிறது. IntelliJ IDEA இன் சில முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
மேம்பட்ட குறிமுறைவரிகளின் பகுப்பாய்வு: IntelliJ IDEA ஆனது நிகழ்வுநேரத்திலான பிழைகள், வழக்கமான பிழைகள் , செயல்திறன் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்யக்கூடிய சக்திவாய்ந்த குறிமுறைவரிகளின் பகுப்பாய்வு இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
உள்ளுணர்வுடன் வழிசெலுத்தல்: இது codebase என்பதன் மூலம் விரைவான எளிதான வழிசெலுத்தலுக்கான வகுப்பு படிநிலை, அழைப்பு படிநிலை , கட்டமைப்பு பார்வை. என்பன போன்ற பல்வேறு கருவிகளை வழங்குகிறது,
மறுசீரமைப்பு: இது, மறுபெயரிடுதல், நகர்த்துதல் , கையொப்பங்களை மாற்றுதல் போன்ற பரந்த அளவிலான மறுசீரமைப்பு வாய்ப்புகளை வழங்குகிறது, இது மேம்படுத்துநர்கள் மிகவும் பராமரிக்கக்கூடியதும் படிக்கக்கூடியதுமான குறிமுறைவரிகளை எழுத உதவுகின்றது.
பிழைத்திருத்தம்: இது ஒரு சக்திவாய்ந்த பிழைத்திருத்தக் கருவியை வழங்குகிறது, இது மேம்படுத்துவர்களை குறிமுறைவரிகளின் மூலம் நிரலாக்கத்தில் அடியெடுத்து வைக்கவும், நிரலாக்கத்தின் நிறுத்தம் செய்திடும் புள்ளிகளை அமைக்கவும், மாறிகளின் நிலையை ஆய்வு செய்யவும் அனுமதிக்கிறது.
பதிப்புக் கட்டுப்பாட்டுக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவு: IntelliJ IDEA ஆனது Git, SVN , Mercurial உள்ளிட்ட பல்வேறு பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளை ஆதரிக்கிறது, இது மேம்படுத்துநர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து குறிமுறைவரிகளைப் பகிர்ந்துகொள்வதை எளிதாக்குகிறது.
இந்த திறமூல IDE ஆனது செருகுநிரல்கள் நீட்டிப்புகளின் ஆதரவு கொண்டது, தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகமும் செயலில் உள்ள ஒரு பெரிய சமூககுழுவையும் கொண்டுள்ளது.
இது ஒரு சக்திவாய்ந்த, பல்துறை கருவியாகும், இது மேம்படுத்துநர்கள் மிகவும் திறமையாகவும் திறனுடனும் செயல்பட உதவுகின்றது, மேலும் ஜாவா எனும் கணினிமொழியின் நிரலாக்கமேம்பாட்டுடன் , பிற கணினி மொழிகளுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக திகழ்கின்றது.
சமீபத்திய பதிப்பு: 2022.3.1 எனும் சமூககுழுவின் பதிப்பு
இணையமுகவரி(URL): www.jetbrains.com/
ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்: macOS, Windows , Linux
4.Code::Blocks
Code::Blocks என்பது C, C++ , Fortran ஆகிய கணினிமொழிகளுக்கான அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுகின்ற குறுக்கு-தள IDE ஆகும். இதன் முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
பல்லடுக்கு இயந்திரமொழிமாற்றியின் ஆதரவு: இது GCC, MSVC , Digital Mars.Digital Mars.Digital Mars. உட்பட பல இயந்திரமொழிமாற்றிகளை ஆதரிக்கிறது.
உள்ளமைந்த பிழைத்திருத்தவசதி: மேம்படுத்துநர்கள் தங்கள் குறிமுறைவரிகளின் மூலம் மேலும் தொடர்ந்து செல்லவும், நிறுத்தும் இடங்களை அமைக்கவும் , மாறிகளின் நிலையை ஆய்வு செய்யவும் இது ஒரு உள்ளமைக்கப்பட்ட பிழைத்திருத்த வசதியை உள்ளடக்கியுள்ளது.
தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகம்: வண்ண செயல்திட்டங்கள், முக்கிய பிணைப்புகள் , தளவமைப்புகளை மாற்றுவதற்கான வாய்ப்புகளுடன், மேம்படுத்துநரின் தேவைகளுக்கு ஏற்றவாறு IDE தனிப்பயனாக்கிகொள்ளலாம்.
தொடரியலை தனிப்படுத்தல்: இது பல கணினிமொழிகளுக்கான தொடரியல் சிறப்பம்சத்தை வழங்குகிறது, இது குறிமுறைவரிகளை படிக்கவும் எழுதவும் எளிதாக்குகிறது.
குறிமுறைவரிகளை நிறைவுசெய்தல்: இது குறிமுறைவரிகளின் நிறைவு செய்திடும் வசதியை வழங்குகிறது, இது மேம்படுத்துநர்களுக்கு குறிமுறைவரிகளை மிகவும் திறமையாக எழுதவும் பிழைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றது.
செயல் திட்ட மேலாண்மை: இது ஒரு செயல்திட்ட மேலாண்மை அமைப்பை வழங்குகிறது, இது மேம்படுத்துநர்கள் தங்கள் செயல்திட்டத்தில் உள்ள கோப்புகளை ஒழுங்கமைக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.
இந்த கட்டணமற்ற கட்டற்ற IDE ஆனது ஒரு பெரிய , செயலில் உள்ள சமூககுழுவினையும் கொண்டுள்ளது.
இது ஒரு சக்திவாய்ந்த, பல்துறை IDE ஆகும், இது மேம்படுத்துநர்கள் மிகவும் திறமையாகவும் திறம்படவும் செயல்பட உதவுகின்றது, மேலும் C, C++ , Fortran ஆகிய கணினிமொழிகளின் நிரலாக்க திட்டங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றது.
சமீபத்திய பதிப்பு: 20.03
இணையமுகவரி(URL): www.codeblocks.org/downloads/
இயக்க முறைமைகள்: விண்டோ7 அல்லது அதற்குப் பிந்தையது, OS X 10.10 அல்லது அதற்குப் பிந்தையது, லினக்ஸின் அனைத்து பதிப்புகள்
5.PyCharm
PyCharm என்பது JetBrains ஆல் உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான திறமூல IDE ஆகும், இது குறிப்பாக பைதான் மேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய வசதிகள் பின்வருமாறு:
தொடரியல் சிறப்பம்சப்படுத்துதல் , குறிமுறைவரிகளை நிறைவு செய்தல்: என்பனபோன்ற மேம்பட்ட குறிமுறைவரிகளின் திருத்திடுகின்ற வசதிகளை இந்த PyCharmஆனது வழங்குகிறது, இது மேம்படுத்துநர்களுக்கு குறிமுறைவரிகளை மிகவும் திறமையாக எழுதவும் பிழைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றது.
பிழைத்திருத்தமும் பரிசோதனையும்: இதில் உள்ளமைக்கப்பட்ட பிழைத்திருத்தக் கருவி உள்ளது, இது மேம்படுத்துநர்கள் தங்கள் குறிமுறைவரிகளின் மூலம் மேலும் செல்லவும், இடைவெளிகளை அமைக்கவும் மாறிகளின் நிலையை ஆய்வு செய்யவும் அனுமதிக்கிறது. மேம்படுத்துநர்களை சிறியஅளவிலான பரிசோதனைகளை இயக்கவும் பிழைத்திருத்தவும் அனுமதிக்கின்ற உள்ளமைக்கப்பட்ட பரசோதனைக் கருவியும் இதில் உள்ளடங்கியுள்ளது.
ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கருவிகள்: மேம்படுத்துநர்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகி்ன்ற source code editor, compiler, debugger, visual layout editor போன்ற பலதரப்பட்ட ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கருவிகளை PyCharm ஆனது வழங்குகிறது.
பதிப்புக் கட்டுப்பாட்டுக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவு: Git, SVN , Mercurial உள்ளிட்ட பல்வேறு பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளை PyCharm ஆனது ஆதரிக்கிறது, இது மேம்படுத்துநர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் குறிமுறைவரிகளை ஒத்துழைப்பிற்காக பகிர்ந்து கொள்வதை எளிதாக்குகிறது.
தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகம்: வண்ணசெயல் திட்டங்கள், முக்கிய பிணைப்புகள் , தளவமைப்புகளை மாற்றுவதற்கான வாய்ப்புகளுடன், மேமபடுத்துநரின் தேவைகளுக்கு ஏற்றவாறு இந்த IDEஐ தனிப்பயனாக்கி கொள்ளலாம்.
இந்த கட்டணமற்ற கட்டற்ற IDE ஆனது அனைத்து தளங்களுடனும் இணக்கத்தன்மையுடன் , ஒரு பெரிய , செயலில் உள்ள சமூககுழுவினையும் கொண்டுள்ளது.
சமீபத்திய பதிப்பு: 2022.3.1
இணையமுகவரி(URL): www.jetbrains.com/pycharm/download/
இயக்க முறைமை: விண்டோ 7 அல்லது அதற்குப் பிந்தையது, OS X 10.10 அல்லது அதற்குப் பிந்தையது, லினக்ஸின் அனைத்து பதிப்புகள்
மற்ற குறிப்பிடத்தக்க திறமூல IDEகளில் Atom (retired), Sublime Text, NetBeans, Visual Studio and Android Studioஆகியவை அடங்கும்.

%d bloggers like this: