அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்

~ ஸ்ரீராம் இளங்கோ

நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு மூன்றாவது நபரை போன்றே காட்சியளிக்கும். அந்த சங்கடத்தை போக்க நீங்கள் பின்வரும் 10 பயன்பாட்டு மென்பொருட்களை நிறுவி பயன்படுத்தலாம்.

பிதொஸ் (Pithos)
நீங்கள் நிறைய பாடல்களை இணையத்தின் மூலமாக கேட்பவர் என்றால் நீங்கள் விண்டோசில் Pandoraவை அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். உண்மையை சொல்ல போனால் Pandora போன்ற ஒரு சிறப்பான மென்பொருள் லினக்சில் இல்லை. இருந்தாலும், Pandora போன்ற மென்பொருட்களில் உள்ள அணைத்து சிறப்பம்சங்களும் இதில் உண்டு.

கேட் (Kate)
HTML போன்ற கணினி மொழிகளை தொகுக்கும் பொது பொதுவான Word மென்பொருட்கள் சிறப்பாக செயல்படாது. அனால் இந்த Kate எடிட்டர் HTML போன்ற மொழிகளையும் எளிதாக தொகுக்க வழி செய்யும். இதில் பல்வேறு அம்சங்களும் உண்டு.

சிம்பிள் ஸ்கேன் (Simple Scan)
ஒரு Scanner ஐ உங்களது கம்ப்யூட்டர் இல் இணைத்த பின், இந்த மென்பொருளை நிறுவினால் ஒரு படத்தை ஸ்கேன் செய்வது இவ்வளவு சுலபமா என்று நீங்களே யோசிப்பீர்கள்விண்டோஸைப் போன்று சலசல என்ற optionகள் இதில் இல்லை.

பாஸ்கெட் நோட்ஸ் (Basket Notes)
நமக்கு தோன்றும் ஒவ்வொரு யோசனைகளையும், நம் வேலைக்கு தேவைப்படும் விசயங்களும் பகுதிவாரியாக தனித்தனியே பிரித்து வைத்து அடுக்கி கொண்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்? இவை அனைத்தையும் செய்ய உங்களுக்கு உதவும் மென்பொருள் தான் பாஸ்கெட் நோட்ஸ்.

ப்ரசெரோ (Brasero)
லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்தும் ஒவ்வொருவரது வாழ்கையிலும் ISO கோப்புகளை CD களாக மாற்றுவது ஒரு அன்றாட நிகழ்வு. இந்த காரியத்தை செய்ய ப்ரசெரோ வை விட சிறந்த மென்பொருள் வேறு எதுவும் கிடையாது.

க்விப்பர்(Gwibber)


நாம் அனைவரும் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துகிறோம். ஒரு நொடியில் ட்விட்டரில் ஆயிரகணக்கான ட்விட்டுகள் தட்டச்சு செய்யபடுகின்றன.இவை அனைத்தையும் ட்விட்டர் தளத்தில் பார்ப்பது ஒரு கடினமான காரியம். ட்வீட்டுகளை முறைபடுத்தி, ஒருங்கிணைத்து இதில் பார்த்து கொள்ளலாம்.

லக்கி பேக்கப் (Lucky Backup)
இன்றைய சூழ்நிலையில் நமது கோப்புகளை CD , DVD களில் பராமரித்து பேக்கப் செய்வது என்பது ஒரு முடியாத காரியம். எனவே, நமது கோப்புகளை நமதுவன்தட்டிலேயோ(Hard Disk) அல்லது இணையதிலோ பேக்கப் செய்யும் வழிமுறைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான, முக்கியமான கோப்புகளை எளிதாக, வேகமாக பராமரிக்க பயன்படும் பல மென்பொருட்களில் இது தலை சிறந்தது.

 

கிளிப் கிராப் (Clip Grab)
இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே கணியத்தில் ஒரு செய்தி குறிப்பு வந்துள்ளது. இருந்தாலும் இதை மறுமுறை சொல்வதில் எந்த தவறும் இல்லை. YouTube போன்ற பல இணையதளங்களில் இருந்து வீடியோ கோப்புகளை எங்களால் பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை என்பது பல லினக்ஸ் பயன்பாட்டளர்களின் கேள்வி. அதற்க்கு விடை அளிக்க உருவாக்க பட்டது தான் இந்த கிளிப் கிராப்.

ஷட்டெர் (Shutter )
நாம் அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் நம் கணினியின் screenshot தேவைப்படும். விண்டோஸ் இல் இதை செய்ய printscreen பொத்தானை அழுத்தி பெயிண்டிற்க்குச் சென்று paste செய்ய வேண்டும். ஆனால் லினக்ஸ் இல் இந்த ஷட்டெரை இன்ஸ்டால் செய்தால் ஒரே ஒரு பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான screenshot ஐ பெறலாம்.

புதுப்புது டெர்மினல்கள்
என்னதான் இன்று GUI பயன்பாட்டு முறை கோலோச்சினாலும், நம் வேலைகளை டெர்மினல் மூலமாக செய்வதில் உள்ள வேகம் அதில் வராது. லினக்ஸ் இயக்கு தளங்களில் இருக்கும் டெர்மினல் சிறப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள பயன்பாடுகள் குறுகியவை. அனால் நீங்கள் இணையத்தில் புதுப்புது டெர்மினல் களை பார்க்கலாம். அவற்றுள் சில Gnome-Terminal,Konsole& Eterm.

இவை தவிர்த்து மேலும் பல்வேறு சிறு சிறு லினக்ஸ் பயன்பாடு மென்பொருட்களும் இணையத்தில் உள்ளன. அவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

ஸ்ரீராம் இளங்கோ

காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.
எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr

மின்னஞ்சல் : sriram.04144@gmail.com

%d bloggers like this: