Grouping
MySQL-இல் Grouping எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பின்வரும் படத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் . அதாவது ஏதோ ஒரு விதத்தில் ஒரே மாதிரியான தகவல்கள் group செய்யப்பட்டு மதிப்புகள் வெளிப்படுத்தப் படுகின்றன .
Mysql- ல் உள்ள ஒருசில grouping functions- ஐப் பின்வருமாறு காணலாம் .
Group functions
Query-43
ஒரு் column- ல் உள்ள மதிப்புகளில் MIN() என்பது மிகச்சிறிய மதிப்பிணையும் , MAX() என்பது மிகப்பெரிய மதிப்பிணையும் , SUM() என்பது அனைத்து மதிப்புகளின் கூட்டுத் தொகையையும் , AVG() என்பது அதன் சராசரி மதிப்யையும் வெளிப்படுத்துகிறது . இவை பின்வருமாறு .
select min(salary),max(salary) from employees;
select sum(salary),avg(salary) from employees;
Query-44
மேற்கூறிய அதே functions- ஐ date மற்றும் characters- ன் மீதும் செலுத்தலாம் . இது பின்வருமாறு .
Query-45
COUNT() என்பது அதற்குள் * ஐப் பெற்றிருப்பின் அந்த table- ல் உள்ள rows- ன் எண்ணிக்கையையும் , அதற்குள் ஏதேனும் ஒரு் column- ஐப் பெற்றிருப்பின் null மதிப்பிணைத் தவிர்த்துவிட்டு அந்த columnபெற்றுள்ள rows- ன் எண்ணிக்கையையும் வெளிப்படுத்தும் .
Grouping rows
Query-46
GROUP BY என்பது group functions- ஐப் பயன்படுத்தும் queries- ல் மட்டுமே காணப்படும் . அதாவது SELECT list- ல் காணப்படும் group functions தவிர மற்ற அனைத்து columns- ம் GROUP BY- ஐத் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் . உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தின் ஒவ்வொரு department- லும் ஒருவர் வாங்கும் அதிக பட்ச சம்பளத்தைத் தெரிந்துகொள்ள , SELECT- ல் department, max(salary) என எழுதிவிட்டு பின்னர் GROUP BY- ஐத் தொடர்ந்து department எனக் குறிப்பிட வேண்டும் . அப்போதுதான் அதிகபட்ச சம்பளம் ஒவ்வொரு department- க்கும் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிப்படுத்தப்படும் .
select department,max(salary) from organisation group by department;
Query-47
group functions- ஐ நாம் order by– ல் கொடுத்து , தகவல்களை ஏறுவரிசையிலோ அல்லது இறங்குவரிசையிலோ முறைப்படுத்திப் பார்க்கவும் முடியும் .
select department,max(salary) from organisation group by department order by max(salary);
Query-48
group functions- ஐ நாம் condition- ல் கொடுத்து , அதனடிப்படையில் நாம் தகவல்களைப் பெறவும் முடியும் . பொதுவாக WHERE- ஐத் தொடர்ந்து conditions- ஐக் குறிப்பிடுவோம் அல்லவா ? ஆனால் group functions- ஐ condition- ஆகப் பயன்படுத்தும் போது மட்டும் WHERE- க்கு பதிலாக HAVING எனக் கொடுக்க வேண்டும் .
select department,min(salary) as sal from organisation group by department having sal>8500;
—-
து. நித்யா
இவர் cognizant நிறுவனத்தில் Data Warehouse Testing-ல் பணியாற்றி வருகிறார்.
மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com