எளிய தமிழில் VR/AR/MR 17. AR சாதன வகைகள்

காட்சித்திரைகள்

விமானி முன்னால் நிமிர்ந்து பார்க்குமிடத்தில் உள்ள கண்ணாடியிலேயே (Head Up Displays – HUD) முக்கியமான (Critical) தகவல்கள் காட்டப்படும். விமானத்தை செலுத்தும்போது விமானியறைக்குள்ளேயே (cockpit) பார்த்துக்கொண்டிராமல் வெளியே விமானம் செல்லும் திசையில் பார்க்க உதவுகிறது.

இதில் ஒரு மாற்றமாகத் தலைக்கவசத்தில் பொருத்திய காட்சித்திரைகளும் உண்டு. இவை வான்பறப்பியல் (aviation) போன்ற சில தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

முப்பரிமாண ஒளியுருவக் காட்சிகள் (Holographic displays)

சமீப காலங்களில் ஸ்டார் வார்ஸ் (Star wars) மற்றும் அயர்ன் மேன் (Iron man) தொடர்களில் பிரபலமடைந்துள்ள இந்த வகைக் காட்சிகள் விண்வெளியில் முப்பரிமாண வடிவப் பொருட்களை உருவாக்க ஒளியின் விளிம்பு வளைவைப் (diffraction) பயன்படுத்துகின்றன. பயனர்கள் இவற்றைக் காண எந்தத் தலையணியும் அணியத் தேவையில்லை என்பது இவற்றின் மிகப்பெரிய வசதிகளில் ஒன்றாகும். 

ஒளியியல் வழி ஊடுருவும் காட்சி (Optical see through)

ஒளியியல் மற்றும் காணொளி வழி ஊடுருவும் காட்சிகள்

ஒளியியல் மற்றும் காணொளி வழி ஊடுருவும் காட்சிகள்

திறன் கண்ணாடிகள் (Smart glasses) பெரும்பாலும் ஒளியியல் வழி ஊடுருவும் காட்சித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. உண்மையான சுற்றுச்சூழல் பயனரின் கண்களுக்கு முன்னால் உள்ள அரை ஒளிபுகு (half-transparent) கண்ணாடிகள் மூலம் தெரியும். கணினி உருவாக்கிய படங்களை இந்தக் கண்ணாடிகள் பிரதிபலிப்பதால் உண்மையான சுற்றுச்சூழலின் மேல் இவை தெரியும். இவ்வாறு ஒளியியல் மூலமாக இரண்டும் சேர்ந்த ஊடுருவும் காட்சியாகத் தெரிகிறது. 

காணொளி வழி ஊடுருவும் காட்சி (Video see through)

தலையணிகள் (Headesets) பெரும்பாலும் காணொளி வழி ஊடுருவும் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. உண்மையான சுற்றுச்சூழல் படக்கருவிகளால் காணொளியாக எடுக்கப்படுகிறது. பின்னர் கணினி உருவாக்கிய படங்களை இதன்மேல் சேர்த்து திரையில் காண்பிக்கப்படுகிறது.

திறன்பேசி (Handheld or mobile) AR

திறன்பேசியில் பார்க்கும் AR ஒருவகை காணொளி வழி ஊடுருவும் காட்சிதான் (Video see through). திறன்பேசிகள் பலரும் அணுகக்கூடியதாக உள்ளன. மேலும் இவற்றுக்கு AR காட்சிகள் உருவாக்கும் கருவிகளும் கட்டற்ற திறந்தமூலமாகக் கிடைக்கின்றன என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதன்மூலம் அதிநவீன AR காட்சிகள் யாவரும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.

நன்றி

  1. Video​ versus​ ​optical​ ​see-through​  augmented​ ​reality​  systems​ [Kiyokawa​ ​ 2000]

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தொழில்துறை மற்றும் உற்பத்தியில் AR

தொழிற்சாலை திட்டமிட (factory planning) மிகை மெய்ம்மை (AR). அங்கீகரித்த மாதிரியுடன் ஒப்பிடுதல். தொலை உதவி (remote assistance) மூலம் பிரச்சனையைத் தீர்த்தல் (trouble shooting). புதிய தயாரிப்பு உருவாக்குதல் (new product development).

ashokramach@gmail.com

%d bloggers like this: