ChatGPT: இன்AI மாதிரி-2ஐ- தீம்பொருளாக்குவது எளிது

ChatGPT ஆனது இன்னும் தனித்தனியாக உடைந்து பிரியக்கூடியது அதனால் நாமனைவரும் இதனை மிகக்கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சரியான காரணங்களுக்காக இது நமக்குத் தேவைான அனைத்து தகவலையும் தருகிறது என்று நினைத்து நாம் அதை ஏமாற்றி தவறாக செயல்படுமாறு கூட செயற்படுத்திடலாம், மேலும் அதனுடைய செயல்பாட்டில், பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்படையுமாறுகூடச் செய்திடலாம்.
தற்போதைய நவீன தொழில்நுட்ப சூழலில்செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது இணைய பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான், இது இணையத்தில் பாதுகாப்பு மீறலை கண்டறிகின்றது பாதுகாப்பு தடுப்பை மேம்படுத்தியுள்ளது. இவையனைத்தும் அதனுடைய கருவிகளான chatbot, ChatGPT ஆகியவற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் போட்டின்( bot) அடுத்தடுத்த மோசடிகள் எதிர்பாராத வழிகளில் தீங்குஏற்படுத்தும் அதன் திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன. ChatGPT இல் தாக்குதல் செய்யவிழைபவர்களால் வெற்றிகரமாக விஷமாக்கப்பட்டுள்ளது.
OpenAI ஆனது GPT-3 இன் கட்டமைப்பின் அடிப்படையில் chatbot ,ChatGPT ஆகியவற்றினைக் கொண்டு வந்தது, இது ஒரு பெரிய பல்லடுக்கு மாதிரியானது, பின்தொடர்தல் வினவல்களுக்குப் பதிலளித்தல், தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், தவறான வளாகங்களைத் தகராறு செய்தல் போன்ற பல. ChatGPT ஆனது GPT-3.5 என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்திடு மாறும் உரையாடல்களைத் தொடர்ந்திடுமாறும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது,
AI இன் வளர்ச்சியில் ChatGPT இன் நிலை
இணயபயன்பாட்டில்ChatGPT இன் அறிமுகத்தைத் தொடர்ந்து, பலர் கட்டுரைகளை எழுதுவது முதல் சமூக ஊடக இடுகைகள் ,தலைப்புகளை உருவாக்குவது வரை பல்வேறு பணிகளுக்கு ChatGPT ஐ விரைவாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். உரை உள்ளீட்டின் சூழலையும் பொருளையும் புரிந்துகொள்ள ஆழ் கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி உரையாடல் பாணியில் பொருத்தமான பதில்களை இது வழங்குகிறது. இந்த மாதிரியானது பரந்த அளவிலான தலைப்புகளை சூழ்நிலைகளைப் புரிந்துகொள்கின்றது, ஏனெனில் இது இணைய உள்ளடக்கத்தின் மிகப்பெரிய தரவுத் தொகுப்பில் பயிற்சியளிக்கப்பட்டது.
வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாஆகியநாடுகளில் BlackBerry ஆல் கணக்கெடுக்கப்பட்ட தகவல்தொழிலநுட்பத்துறையில்(IT) உள்ள 1500 எண்ணிக்கையிலான முடிவெடுப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51 சதவீதம்) ChatGPTக்குக் காரணமான மின்வெளி தாக்குதல் ஒரு வருடத்திற்குள் நடக்கும் என கணித்துள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் எழுபத்தைந்து சதவீதம் பேர் ChatGPT ஏற்கனவே மற்ற நாடுகளுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளால் தவறானபயன்பாடு செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்கள் ChatGPT ஆனது “நல்ல” காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்று நம்பினாலும், 73 சதவீதம் பேர் இணைய பாதுகாப்பிற்கு அது ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை உணர்ந்து “மிகவும்” அல்லது “நியாயமாக” கவலையடைந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இரட்டை முனைகள் கொண்ட வாள் என்பதை இது காட்டுகிறது.
மின்வெளி( cyber)பாதுகாப்புத்துறையில் உள்ள பெரும்பாலான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு, தாக்குதல்செய்பவர்கள் தீங்கிழைக்கும் உரைநிரல்களையும் ,நிரலாக்கங்களையும் உருவாக்கியுள்ளதாகதெரியவருகின்றது. உரைநிரல்கள் , தீங்கிழைக்கும் மென்பொருட்கள் ஆகியவற்றினை உளவு, விநியோகம், அத்துமீறல், பாதிப்படையச்செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படலாம்—இவை ஒரு பயனுள்ள இணைய மரணச் சங்கிலியின் நான்கு படிமுறைகளாகும். எனவே, பாதுகாப்பு, இடர் மேலாண்மைத் தலைவர்கள், செயல்பாட்டுச் சூழலில் ChatGPT மாதிரி ஏற்படுத்தும் நடப்பு உலக அபாயங்கள் குறித்து அதிக அக்கறையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஷோடான் போன்ற நிரலாக்கங்களுக்கான உரைநிரல்கள், Nmap க்கான வழிமுறைகள் என்பனபோன்ற பிற ஒத்த நிரல்களும் உளவு உரைநிரல்களில் சேர்க்கப்படலாம். Metasploit கட்டமைப்பிற்கானஉரைநிரல்கள், phishing வலைத்தளங்கள் , பிற வகையான உரைநிரல்கள் , விநியோகத்திற்கான குறிமுறைவரிகள் ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும். அத்துமீறல் என்பது பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற உரைநிரலாகும். சேவை மறுப்பு தாக்குதலுக்கு, எடுத்துக்காட்டாக, High Orbit Ion Canon (HOIC) இற்கான ஒரு செயற்கைஉதவி உரைநிரலை யைஉருவாக்கலாம்.
PowerShell அல்லது bash பாஷ் உரைநிரல்கள் பொதுவாக இலக்கு அமைப்பில் செல்வாக்கு செலுத்தவும் சமரசம் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பயன்பாடுகளுக்கும் குறிமுறைவரிகளையும் உரைநிரல்களையும் உருவாக்குகின்ற திறன் காரணமாக, ChatGPT ஆனது தாக்குதல் நடத்துபவர்களுக்கு தங்கள் தாக்குதல்களை தானியங்குபடுத்தும் ஒரு சிறந்த கருவியாக செயல்படுகிறது. ஒரு நகரத்தில் உள்ள தெருவில் இணைக்கப்பட்ட அனைத்து இணயபட படிப்பு கருவிகளையும் கண்டுபிடிக்க, ஷோடான் தொடரியல் ஒன்றை ChatGPTயிடம் கேட்டபோது, அதைக் கண்டுபிடிக்க அது முன்பு மறுத்துவிட்டது. இருப்பினும், இது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே தேவை என்று குறிப்பிட்டபோது, முன்பு கொடுக்க மறுத்த குறிமுறைவரிகளை உருவாக்கி வழங்கிவிட்டது
AI தகவமைவு விஷமாக்கப்பட்டதை வெளிப்படுத்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் சேவையகங்களின் பாதிப்புகளைக் கண்காணிக்க ஷோடான் தொடரியல் கோரப்பட்டது, உடனடியாக அதனை வழங்கியது.
மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில், தீம்பொருள் குறிமுறைவரிகள் அல்லது இணைய பாதுகாப்பு கருவிகளுக்கு எதிரானவை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிட வேண்டாம் என்று ChatGPT கற்பிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது.
எவ்வாறாயினும், நம்முடைய வினவல்களை மாற்றுவதன் மூலம், இந்தப் பயிற்சியைச் சமாளிக்கவும், தீங்கிழைக்கும் அல்லது ஆபத்தான குறிமுறைவரிகளை உருவாக்க ChatGPT ஐ கட்டாயப்படுத்தவும் முடியும். இது சில நேரங்களில் உடனடி பொறியியல் என்று குறிப்பிடப்படுகிறது. ‘‘hacking’ அல்லது நேரடியாக malwares எழுதுவது தொடர்பான கேள்விகளுக்கு ChatGPT பதில் அளிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே அதன் உள்ளீடுகளை விஷமாக்குவது அதைச் செய்ய கட்டாயப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ChatGPT இன் வினவல்களை விஷமாக்குவது, இனவெறி அல்லது புண்படுத்தும் நகைச்சுவைகளை எழுதுவதற்கு அல்லது தீம்பொருள் பிற நெறிமுறையற்ற மின்வெளி செயலிகளுக்கான குறிமுறைவரிகளை எழுதுவதற்கும் உதவக்கூடும். இது ChatGPT இன் மேம்படுத்துநர்களுக்கும் பயனர்களுக்கும், சமூகத்திற்கும் பெரும் சவாலாக உள்ளது. ChatGPTயின் சாத்தியமான அபாயங்களையும் வரம்புமீரல்களையும் குறித்து விழிப்புடன் இருப்பதும், அதை பொறுப்புடனும் நெறிமுறையுடனும் பயன்படுத்துவது முக்கியமான செயலாகும். தீங்கு விளைவிப்பதையும் பொய்யான வெளியீடுகளையும் குறைக்க, மனிதக் கருத்துகளிலிருந்து (RLHF) வலுவூட்டல் கற்றலைப் பயன்படுத்தி ChatGPT பயிற்றுவிக்கப்படுகிறது, ஆனால் அது சரியானதன்று, இன்னும் வேறுசில தவறுகளைச் செய்யலாம் அல்லது மனிதஉழைப்பைசுரண்டலாம். எனவே, நினைவூட்டதூண்டுதலின் பொறியியல் எச்சரிக்கையுடனும் மரியாதையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் நேர்மறையான நன்மை பயக்கும் பயன்பாடுகளுக்கு மட்டுமே. ChatGPT ஆனது கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், சமையல் குறிப்புகளைப் பரிந்துரைப்பதற்கும், குறிப்பிட்ட பாணியில் பாடல் வரிகளை எழுதுவதற்கும், குறிமுறைவரிதகளை உருவாக்குவதற்கும், போன்ற பலவற்றிற்கும் உதவுமாறுசெய்திடலாம், ஆனால் அது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கோ அல்லது அவர்களின் உரிமைகளை மீறுவதற்கோ பயன்படுத்தக் கூடாது.

%d bloggers like this: