CudaText எனும் பயன்பாடு

CudaText என்பது Lazarus இல் எழுதப்பட்ட ஒரு குறுக்கு-தள உரை பதிப்பாளர் பயன்பாடாகும். இது ஒரு திற மூல செயல்திட்டமாகும். இது தன்னுடைய இயக்கத்தினை மிக வேகமாகத் துவங்குகின்றது (CPU 0.3 நொடி ~ 30 செருகுநிரல்களுடன், லினக்ஸில் CPU இன்டெல் கோர் i3 3Hz இல்). இது பைதான் துணை நிரல்களான செருகுநிரல்கள், linters, குறியீடு மர பாகுபடுத்திகள், வெளிப்புற கருவிகள் ஆகியவற்றால் விரிவாக்கம் செய்யக்கூடியதாகும் . இது தொடரியல் பாகுபடுத்தி வசதி நிறைந்ததாகும், இது EControl இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது (சில போட்டியாளர்களைப் போல வேகமாக இல்லை என்றாலும்). விண்டோஸ் (x86, x64), லினக்ஸ் (x86, x64, arm, aarch64), மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
குறிப்பு இங்குLazarus என குறிப்பிட்டது அனைத்துதளங்களிலுக்குமான ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகும், இது வரைகலைஇடைமுக காட்சி (GUI) பொருளின், காட்சி அல்லாத பொருளின் பாஸ்கல் நிரல்களை உருவாக்க நம்மைஅனுமதிக்கிறது, மேலும் நம்மால் இயங்கக்கூடியதை உருவாக்க கட்டணமற்ற பாஸ்கல் மொழிமாற்றியைப் பயன்படுத்திகொள்கின்றது அதன் நோக்கம் நிரல்தொடரை ஒரு முறை மட்டும் எழுதுக, பின்னர் அதனை எங்கும் எப்போதும் மொழிமாற்றம் செய்து தொகுத்திடுக என்பதேயாகும்: நம்முடைய மூலகுறிமுறைவரிகளை இந்த லாசரஸுடன் மற்ற எந்தவொரு இயக்க முறைமையிலும் (அல்லது ஒரு குறுக்கு தொகுப்பிலும்) இயக்கி மீண்டும் தொகுத்து, அந்த இயக்க முறைமையில் இயங்கும் ஒரு நிரலாக்கங்களைப் பெற முடியும்என்பதே இதன் சிறப்பாகும்.
இதனுடைய வசதி வாய்ப்புகள்: எண்ணற்ற மொழிகளுக்கான தொடரியல் சிறப்பம்சங்கள் () நடப்பில் 230+இற்குமேற்பட்ட lexers கொண்டுள்ளது. , lexers அனுமதித்தல் செயல்பாடுகள் / இணங்கள் / போன்றவற்றின் அமைப்பு. , குறிமுறை மடிப்பு. , பல தேர்வுகள். , வழக்கமான வெளிப்பாடுகளுடன் கண்டுபிடித்தல் / மாற்றுதல். , JSON வடிவத்தில் உள்ளமைத்தல். lexers-குறிப்பிட்ட கட்டமைப்புகள் உட்பட. , தாவலாக்கப்பட்ட UI. , முதன்மை / இரண்டாம் நிலைக்கு பார்வை பிரித்தல். தாவல்களின் 2/3/4/6 குழுக்களுக்கு சாளரத்தைப் பிரித்தல். , கட்டளை தட்டு, தெளிவற்ற பொருத்தத்துடன். , சிறுவரைபடம். மீச்சிறுவரைபடம். , அச்சிடப்படாத இடைவெளியைக் காட்டுதல். , பல குறியாக்கங்களுக்கான ஆதரவு. , தனிப்பயனாக்கக்கூடிய hotkeys. , வரம்பற்ற அளவிலான கோப்புகளுக்கான பைனரி / ஹெக்ஸ் பார்வையாளர் (10 ஜிபி பதிவுகளைக் காட்டலாம்). , பைனரி கோப்புகளை சரியாக சேமித்தல் ஆகிய வசதிகளை கொண்டது.
HTML / CSS குறியீட்டுக்கான வசதிகள்: HTML, CSS க்கான திறனுடைய தானாக நிறைவுசெய்துகொள்ளுதல். , தாவல் விசையுடன் HTML குறிச்சொற்கள் நிறைவு (துணுக்குகளை சொருகுதல்). , HTML வண்ணக் குறியீடுகள் (#rgb, #rrggbb) அடிக்கோடிட்டுக் காண்பித்தல். ,பதிப்பாளர் பகுதிக்குள் படங்களைக் காண்பி த்தல்(jpeg / png / gif / bmp / ico). , படக் குறிச்சொல், நிறுவனம், வண்ண மதிப்பு ஆகியவற்றின் மீது சுட்டி நகரும்போது உதவிக்குறிப்பைக் காட்டுதல். ஆகிய பல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது
செருகுநிரல்களாக செயல்படுத்தப்பட்ட வசதிகள்: துணை நிரல்கள் மேலாளர், கோப்புகளில் கண்டுபிடித்தல், துணுக்குகள், வெளிப்புற கருவிகள், திட்ட மேலாளர், அமர்வு மேலாளர், மேக்ரோ மேலாளர், எழுத்துப்பிழை சரிபார்ப்பு, FTP குழு, லிண்டர்கள் ஆதரவு (CudaLint), அடைப்புக்குறிகள் சிறப்பம்சமாக, ஜோடி அடைப்புக்குறிக்குச் செல்லவும், அனைத்து நிகழ்வுகளையும் முன்னிலைப்படுத்தவும், வண்ண தேர்வி, தேதி / நேரத்தைச் செருக, HTML / CSS / JS / XML / SQL க்கான வடிவமைப்பாளர்கள், பக்கப்பட்டியில் தாவல்கள் பட்டியல், காப்பு கோப்புகளை உருவாக்குதல், மெனு உள்ளமைவு போன்ற பல்வேறு வசதிகளைகொண்டுள்ளது
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://uvviewsoft.com/cudatext/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: