எளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்

படத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம் (Grayscale image) மற்றும் வலது பக்கம் இருப்பது கருப்பு வெள்ளை அல்லது இருமப் படம் (Black and white or binary Image).

படத்தைப் பதிவு செய்யும் வழிமுறைகள்

படத்தைப் பதிவு செய்யும் வழிமுறைகள்

கருப்பு வெள்ளை அல்லது இருமப் படங்கள் 

நாம் பொதுவழக்கில் கருப்பு வெள்ளைப் படங்கள் என்று சொல்பவை தொழில்நுட்ப ரீதியாக சாம்பல் அளவீட்டுப் படங்களே. தொழில்நுட்பப்படி கருப்பு வெள்ளைப் படங்களில் படவலகுகள் கருப்பு அல்லது வெள்ளை என்ற இரண்டே வண்ணங்களில் தான் இருக்க முடியும். கருப்பு வண்ணத்தை பூச்சியம் என்றும் வெள்ளை வண்ணத்தை ஒன்று என்றும், ஆக இரண்டே எண்களில் குறிப்பிடுவதால் இவற்றை இருமப் படங்கள் என்கிறோம். 

இருமப் பட தளவணி (matrix)

இருமப் பட தளவணி (matrix)

சாம்பல் அளவீட்டுப் படங்கள்

இப்படவலகுகளில் வெள்ளை நிறம் தொடங்கி வெளிர் சாம்பல், கரிய சாம்பல், கருப்பு ஆக சாம்பல் நிறத்தின் எல்லா வண்ணச் சாயல்களும் (colour shades) இருக்கும். இவற்றில் கருப்பு வண்ணத்தை பூச்சியம் என்றும் வெள்ளை வண்ணத்தை 255 என்றும் குறிப்பிடுகிறோம். ஆனால் இருமப் படங்களைப் போலல்லாமல், இடையிலுள்ள 1 முதல் 254 எண்களால் வெளிர் சாம்பல், கரிய சாம்பல் ஆகிய பல வண்ணச் சாயல்களும் இங்கே சாத்தியமாகும். இதன் விளைவாக சாம்பல் நிறத்தின் வெவ்வேறு சாயல்களையும் குறிப்பிட முடியும்.

வண்ணப் படங்கள்

வண்ணப்படத்தின் மூன்று முதன்மை வண்ணங்கள்

வண்ணப்படத்தின் மூன்று முதன்மை வண்ணங்கள்

வண்ணப் படங்கள் என்பது மூன்று முதன்மை வண்ணங்களின் கலவையால் உருவாக்கப்பட்ட படங்களாகும் – அதாவது, சிவப்பு, பச்சை மற்றும் நீலம். இந்த வண்ணங்களில் ஒவ்வொன்றும் தனித்தனி தடங்களாக (channels) பிரித்து சேமிக்கப்படும். 

சிவப்பு, பச்சை மற்றும் நீலம் - தளவணிகள்

சிவப்பு, பச்சை மற்றும் நீலம் – தளவணிகள்

ஆகவே ஒரு வண்ணப் படம் சிபநீ (RGB) படம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு படவலகும் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆக மூன்று மதிப்புகள் கொண்ட தளவணிகளால் (matrix) குறிப்பிடப்படுகிறது. 

நன்றி

  1. Image types – Electronic Wings
  2. Black and White Image Representation in Binary – learnlearn
  3. Digital Image Processing Rgb Color Model by Angelina
  4. A three-dimensional RGB matrix.

இத்தொடரில் அடுத்த கட்டுரை: வண்ண அடிப்படைகள் (Color basics)

வண்ண மாதிரிகள் (Color models). கணினியில் சிபநீ வண்ண மாதிரி (RGB color model). வண்ண வகை, செறிவு நிலை, மதிப்பு (Hue, Saturation and Value – HSV). வண்ண வகை, செறிவு நிலை, வெளிர் அளவு (Hue, Saturation and Lightness – HSL). பின்புலத்தின் ஒளிபுகுதன்மை (Transparent background).

ashokramach@gmail.com

%d bloggers like this: