டெபியன் நிர்வாகிக்கான கையேடு

 

 

புத்தகத்தைப் பற்றி:

 

இந்தப் புத்தகத்தை எழுதிய ராபேல் ஹெர்ஜாக்(Raphaël Hertzog), ரோலண்ட் மாஸ்(Roland Mas) இருவரும் டெபியன் உருவாக்குபவர்கள். பிரெஞ்சு மொழியில் மிக அதிகமாக விற்பனையான, இவர்களது ‘Cahier de l’admin Debian'(Eyrolles வெளியீடு) என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பே, இந்த ‘டெபியன் நிர்வாகிக்கான கையேடு’ ஆகும். டெபியனை அடிப்படையாகக் கொண்ட வழங்கல்களை உபயோகிக்கும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.  யாவர்க்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இப்புத்தகம், திறமையான, தற்சார்புடைய டெபியன் குனு/லினக்ஸ் நிர்வாகியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும், இன்றியமையாதவைகளை விளக்குகின்றது.

 

நிறுவுதல் மற்றும் அமைப்பை இற்றைப்படுத்துவதிலிருந்து, பொதிகளை உருவாக்குவது மற்றும் கருனியைத் தொகுப்பது வரை, ஒரு தகுதி வாய்ந்த லினக்ஸ் நிர்வாகிக்கு தெரிந்திருக்க வேண்டிய பல்வேறு தலைப்புகளை அலசுவதுடன், மேற்பார்வையிடல், காப்பு நகலாக்கம்(backup) மற்றும் இடம்பெயர்த்தல்(migration), சேவைகளைக் காப்புறுதி செய்ய SELinux அமைவு, தானியங்கு நிறுவுதல்கள், Xen, KVM அல்லது LXC ஆகியவற்றைக் கொண்டு மெய்நிகராக்கம்(virtualization) என மேல்நிலை தலைப்புகளையும் விளக்கத் தவறவில்லை, இப்புத்தகம்.

புத்தகத்தின் அமைப்பு:

புத்தகத்தின் முதல் பகுதி டெபியன் பயனர்கள் எல்லோருக்குமான தலைப்புகளை விவரிக்கின்றது.

 

  • டெபியன் திட்டப்பணி எவ்வாறு வேலை செய்கின்றது மற்றும் அது அளிக்கும் வெவ்வேறு வகையான வழங்கல்கள்
  • பொதி அமைப்பு மற்றும் அது சார்ந்த கருவிகளை (dpkg, APT, …) எப்படி திறம்பட உபயோகிப்பது?
  • debian-installer மூலம் டெபியைனை நிறுவுவது எப்படி?
  • தேவையான ஆவணங்களையும், உதவிகளையும் பெறுவது எப்படி?
  • புதிய சேவைகளை எப்படி நிறுவுவது?
  • நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது?

புத்தகத்தின் இரண்டாம் பகுதி டெபியன் வழங்கி அல்லது அதிகப்படியான பொது கணிணிகளை அமைத்து, அதை நிர்வகிக்கும் அமைப்பு நிர்வாகிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பின்வருவனவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்;-

  • பெரும்பாலும் உபயோகப்படுத்தும் பொதுவான சேவைகளை(Apache, Postfix,OpenLDAP, Samba, NFS, …) எப்படி வடிவமைப்பது?
  • மெய்நிகர் இயந்திரங்களை KVM/Xen/LXC மூலம் அமைப்பது எப்படி?
  • உங்களது வழங்கியைக் காப்புறுதி செய்வது எப்படி?
  • நிறுவுதலை FAI/d-i/simple-cdd-ஐ உபயோகப்படுத்தி தானியங்கச் செய்வது எப்படி?
  • LVM மற்றும் RAID உதவியுடன் உங்களது சேமிப்பை நிர்வகிப்பது எப்படி?
  • மற்றும் பல

பொருளடக்க அட்டவணையைக் காண இங்கே சொடுக்கவும்:

debian-handbook.info/about-the-book/toc/

புத்தகத்தைப் பெற:

debian-handbook.info/get/now/

இப்புத்தகம் டெபியன் பயனர்களுக்கு, “debian-handbook” பொதியை நிறுவுவதின் மூலமும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: debian-handbook.info/about-the-book/

இரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.  மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

[ glug-madurai.org ]

கணியம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

மின்னஞ்சல் : subramani95@gmail.com
வலைப்பதிவு : rsubramani.wordpress.com

 

%d bloggers like this: