Flatpak உடன் Linux இல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல் 

அனைத்து கணினி பயன்பாடுகளும் பல்வேறு சிறிய கோப்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை தமக்கான பணிகளை ஒன்றிணைந்து  செய்வதற்காக ஒருதொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அவை “பயன்பாடுகள்(apps)”, பட்டியலில் அல்லது மேசைக்கணினியில் வண்ணமயமான உருவப்பொத்தான்களாக வழங்கப்படுவதால், நம்மில் பெரும்பாலானோர் பயன் பாடுகளை ஒற்றையான, கிட்டத்தட்ட உறுதியான செயலாக நினைக்கிறோம். மேலும் ஒரு விதத்தில், அவைகளை அவ்வாறு நினைப்பது ஆறுதலாக இருக்கின்றது, ஏனென்றால் அவைகளை கொண்டு குறிப்பிட்ட பணியை செய்து சமாளிக்க முடியும். ஒரு பயன்பாடு உண்மையில் நூற்றுக்கணக்கான சிறிய நூலகமும்  கணினி முழுவதும் சிதறிய வளங்களையும்கொண்ட கோப்புகளின் கலவையாக இருந்தால்,அந்த பயன்பாடு எங்கே? எனத்தேடவேண்டியுள்ளது அதனுடைய இருத்தலிற்கான நெருக்கடி ஒருபுறம் இருக்க, ஒரு பயன்பாட்டிற்கு நூலகத்தின் ஒரு பதிப்பு தேவைப்படும் நிலையில் மற்றொரு பயன்பாடு வேறொரு பதிப்பைக் கோரும்போது என்ன நடக்கும்?  ஒன்றுக்கொன்ற குழப்பமாக திகைத்து நிற்கவேண்டியதுதான்

தற்போது மேககணினி உலகில், கொள்கலண்கள்(containers) மென்மேலும் பிரபலமடைந்து வருகின்றன, ஏனெனில் அவை பயன்பாடுகளுக்கான தனிமைப் படுத்தலையும் ஒருங்கிணைப்பையும் வழங்குகின்றன. பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து கோப்புகளையும் “container” இல் நிறுவுகைசெய்திடலாம். அந்த வகையில், அதன் நூலகங்கள் மற்ற பயன்பாடுகளின் வழியில்குறுக்கிடாமல் அதிலிருந்து விலகி இருக்கின்றன, மேலும் அது ஆக்கிரமித்துள்ள நினைவகமானது மற்றொன்றின் நினைவக இடத்தில் தரவுகளை கசியவிடாது. எல்லாமே ஒரு ஒற்றையான, ஏறக்குறைய உறுதியான ஒன்றைப் போலவே உணர்ந்துகொள்கிறது. இவ்வாறான சூழலில் லினக்ஸின் மேசைக்கணினியில், Flatpak ஆனது, அவவாறான பணியைசெய்வதற்கான ஒரு குறுக்குவழி விநியோகமாகும், இதுdaemon இல்லாத, பரவலாக்கப்பட்ட பயன்பாட்டு விநியோக அமைப்பினை போன்ற தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

லினக்ஸில் Flatpak ஐ நிறுவுகைசெய்தல்: நம்முடைய  லினக்ஸ் கணினியில் ஏற்கனவே Flatpak நிறுவப்பட்டிருக்கலாம். இல்லையெனில்,  தொகுப்பு மேலாளரிடமிருந்து அதை நிறுவுகைசெய்திடலாம்: அதற்காக Fedora, Mageia , போன்ற லினக்ஸ் விநியோகங்களில் பின்வரும் கட்டளைவரியை பயன்படுத்திடுக:

$ sudo dnf install flatpak

Elementary, Mint, போன்றபிற டெபியன் அடிப்படையிலான விநியோகங்களில் பின்வரும் கட்டளைவரியை பயன்படுத்திடுக :

$ sudo apt install flatpak

இந்நிலையில் Flatpak  எங்கு கிடைக்கும் என சந்தேகம் எழும் நிற்க Flatpak ஆனது SlackBuilds.org எனும் இணையதளத்தின்Slackware இலிருந்து கூடகிடைக்கிறது.

Flatpak இன்repoவைத் தேர்ந்தெடுத்திடுக: நம்முடைய விநியோகத்தின் மென்பொருள் மையத்தில் (Softwareon GNOME போன்றவை) Flatpak களஞ்சியத்தைச் சேர்ப்பதன் மூலம் நாம் ஒரு பயன்பாட்டை Flatpak ஆக நிறுவுகை செய்திடலாம். Flatpak என்பது ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பு, அதாவது மென்பொருளை உருவாக்கும் எவரும் தங்கள் சொந்த களஞ்சியத்தை புரவலராக செய்யலாம். இருப்பினும், நடைமுறையில், Flathubis என்பது Flatpak வடிவமைப்பில் உள்ள பயன்பாடுகளின் மிகப்பெரியதும் மிகவும் பிரபலமானதுமான தொகுப்பாகும். GNOME SoftwareorKDE Discover க்கு Flathub ஐ சேர்க்க, flatpak.org/setup க்குச் சென்று நம்முடைய விநியோகத்திற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து  அதனுடைய படிமுறை#2 இல் கூறியவாறு துவங்கிடுக அல்லது Flatpakrepofile ஐப் பதிவிறக்கம்செய்திடுக. நம்முடைய வலைபின்னலைப் பொறுத்து, நம்முடைய மென்பொருள் மையம் Flathub அல்லது மற்றொரு Flatpak களஞ்சியத்துடன் ஒத்திசைக்க சில நிமிடங்கள் ஆகலாம். அதுவரை அமைதியாக காத்திருந்திடுக. Flathub இல் நிறைய மென்பொருள்கள் உள்ளன, ஆனால்  கணினியில் எத்தனை Flatpak களஞ்சியங்கள் உள்ளன என்பதற்கு வரம்பு எதுவும்இல்லை, எனவே நாம் முயற்சி செய்ய விரும்பும் மென்பொருளைக் கண்டறிந்தால், புதிய களஞ்சியத்தைச் சேர்க்க பயப்பட வேண்டாம்.

நாம் முனையத்தில் பணிபுரிய விரும்பினால், நேரடியாக பின்வருகின்ற flatpakஇன் கட்டளைவரிகளின் மூலம் களஞ்சியங்களைச் சேர்க்கலாம்:

$ flatpak remote-add –if-not-exists flathub \ flathub.org/repo/flathub.flatpakrepo

ஒரு பயன்பாட்டை நிறுவுகைசெய்தல் நம்முடைய மென்பொருள் மையத்தில் Flatpak களஞ்சியத்தைச் சேர்த்திருக்கும் வரை, நாம் வழக்கம் போல் பயன்பாடுகளின் மூலம் உலாவரலாம்.

கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்ற இந்த பயன்பாட்டை தெரிவுசெய்து சொடுக்குதல்  செய்து, அதனுடைய விவரங்களை படித்தறிந்துகொண்டபின், நாம் தயாராக இருக்கும்போது Installஎனும்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

முனையத்தில் flatpaks நிறுவுகைசெய்தல் நாம் முனைமத்தில் பணிபுரிய விரும்பினால், Flatpak ஐ ஒரு முதன்மையான தொகுப்பு மேலாளராகக் கருதலாம். Flatpakஇன் தேடல் கட்டளையைப் பயன்படுத்தி  பயன்பாட்டைத் தேடலாம்:

 

$ flatpak search paint

 

Name    Description             Application ID

 

CorePaint  A simple painting tool       org.cubocore.CorePaint

 

Pinta    Edit images and paint digitally   com.github.PintaProject.Pinta

 

Glimpse   Create images and edit photographs org.glimpse_editor.Glimpse

 

Tux Paint  A drawing program for children   org.tuxpaint.Tuxpaint

 

Krita    Digital Painting, Creative Freedom org.kde.krita

 

Kritaஎனும் வரைகலைபயன்பாட்டினை Flatpak நிறுவுகையுடன் நிறுவுகைசெய்தல் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:

$ flatpak install krita

இவ்வாறு நிறுவுகைசெய்யப்பட்டதும்,  கணினியில் உள்ள அனைத்து பயன்பாடுகளுடன் நம்முடைய பயன்பாட்டு பட்டியின் அல்லது செயலிகளின் பட்டியின் திரையில் பயன்பாடுகள் தோன்றும்.

முடிவாக  Flatpak ஆனது பதிப்பு முரண்பாடுகளை நீக்குவதன் மூலம் பயன்பாடுகளை நிறுவுகைசெய்வதை பயனாளருக்கு எளிதாக்குகிறது. ஒரு சுயமான-புரவலராக செய்யப்பட்ட தளத்திலும் அல்லது Flathub போன்ற இனத்தில் ஒரே ஒரு தொகுப்பு வடிவமைப்பை இலக்காகக் கொண்டு மேம்படுத்துநர்களுக்கு மென்பொருளை விநியோகிப்பதை அவை எளிதாக்குகின்றன.

%d bloggers like this: