இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!

பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க இதன் குழு திறந்த மூல ஒத்துழைப்பு தளம் டுலீப் (Tuleap) பயன்படுத்தியுள்ளது. மேலிருக்கும் மூடியை எடுத்துப் பார்த்தால் லினக்ஸ், அப்பாச்சி, மைஎஸ்கியூஎல் (MySQL) மற்றும் பிஹெச்பி (PHP) அடுக்கு உள்ளே உள்ளது. “நாங்கள் சோர்ஸ்ஃபோர்ஜ், கிட்லாப் மற்றும் டுலீப் ஆகியவற்றை பயன்படுத்தி மதிப்பீடு செய்தோம். இறுதியாக, எங்கள் மதிப்பீட்டு அளவுகோல்படி டுலீப் மிகவும் பொருத்தமானது என நாங்கள் கண்டறிந்தோம்,” என்கிறார் அமித் சாவன்த், தொழில்நுட்ப தயாரிப்பு மேலாளர்.

100 நாட்களுக்குள் 70 திட்டங்களை ஈர்த்துள்ளது

டிஜிலாக்கர் மற்றும் அரசு இணையசந்தை உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முக்கிய திட்டங்களில் சில ஏற்கனவே இந்த தளத்தை பயன்படுத்துகின்றன. எண்ணிம இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ‘அரசாங்க செயலிகள் அபிவிருத்திக்கு நிரல்களை திறந்த மூலமாக வெளியிடுவது’ என்று இந்திய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் முடிவு செய்தது. இந்தக் கொள்கை ஓபன்ஃபோர்ஜ்-க்கு ஒரு திடமான அடித்தளத்தை வழங்கியது. சமூக பங்களிப்புடன், இத்தளத்தின் முக்கிய நோக்கம், ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை அரசாங்கத் துறைகளுக்கு அறிமுகப்படுத்துவதுதான்.

இது பற்றி ஜக்மீத் சிங் எழுதிய முழுக் கட்டுரை இங்கே

%d bloggers like this: